Jump to content

இலங்கையில் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டியது கஞ்சா பயன்பாடு


Recommended Posts

இன்று எமது ஊர்ப்புதின செய்தியாக அதிகம் காணப்படுவது போதைப்பொருள் பற்றிய செய்திகள். இது தடை செய்யப்பட்ட ஒரு பாவனைப்பொருளாக இருப்பதால் இதில் உள்ள மோகம் அதிகமாக உள்ளது.

நாளாந்தம் கைதுகள். இலஞ்சம்... 

இதை கனடா போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாட்டு புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அத்துடன், மக்களும் பாதுகாப்பான பொருட்களை வாங்கி சட்ட ரீதியாக  முறையில்,  இவற்றை நுகர முடிகின்றது. 

எல்லாவற்றிற்கும் மேலாக, அரச திறைசேரியை நிரப்ப இது உதவுகின்றது. 

கனடா 

1923-ஆம் ஆண்டில் அந்நாட்டில் கஞ்சா வைத்திருப்பது குற்றசெயலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடாநாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஐப்பசியில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது. ஜி7 நாடுகளில் கஞ்சாவை உற்சாக பயன்பாடுக்கு அனுமதிக்கும் முதல் நாடு என்ற பெயரை கனடா பெற்றுள்ளது.

இதன் மூலம், கனடா பல ஜி7 நாடுகளிலும் தனது தொழில் திறமையை ஒரு முதலீட்டாக பயன்படுத்தி, வேலை வாய்ப்புக்கள், புதிய மருந்து வகைகள் என்பனவற்றை உருவாக்கி வருகின்றது. பல முதலீட்டாளர்களும் இலட்சாதிபதிகள் ஆகியுள்ளார். கனேடியர்கள் 2018இல் 5 பில்லியன்கள் டாலர்களை இதற்கு செலவு செய்துள்ளனர். இதனால் நாடு ஒரு படி நோக்கி முன்னேறி உள்ளது. 
 

இலங்கை 

இந்த நாடு கூட இதை ஒரு படிப்பினையாக எடுத்து இதில் உள்ள அனுகூலம் பிரதிகூலங்களை ஆராய்ந்து பார்க்கலாம். இதனால் நாடும் ஒரு அபிவிருத்தி பாதியில் செல்லும். உல்லாச பிரயாண துறையும் ஒளிக்கும். 

முதலில் மருத்துவ தேவைகளுக்கு இவற்றை பாவிக்க / வளர்க்க அனுமதி அளிக்கலாம். படிப்படியாக மற்றைய வகைகளையும் ஆராய்ந்து அனுமதி அளிக்கலாம். 

மூலம் : சுய ஆக்கம் / தொகுப்பு 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கனடாவும் அதன் கஞ்சா நிறுவனங்களும் பொருளாதாரமும் !

MW-HP269_cannab_20190812175102_NS.jpg?uuid=4703ad50-bd4b-11e9-b81d-9c8e992d421e

 

MW-HP271_cannab_20190812185616_ZH.jpg?uuid=63f9848a-bd54-11e9-9f57-9c8e992d421e

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.