Jump to content

யாழ்.பேருந்து நிலையத்தில் மோதல்: நடத்துனர் படுகாயம் – மூவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்.பேருந்து நிலையத்தில் மோதல்: நடத்துனர் படுகாயம் – மூவர் கைது

In இலங்கை     August 3, 2019 10:00 am GMT     0 Comments     1144     by : vithushan

jaffna-bus.jpg

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை.

அதனால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு கூடிய இ.போ.ச. சாரதிகள், நடத்துனர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஆதரவாக நின்றனர்.

அதனால் வியாபாரிகள் சிலர் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும் சேர்ந்து கடைகளுக்குள் இருந்த கம்பிகள், கத்தரிக்கோலை எடுத்து வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரையும் நடத்துனரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த நடத்துனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://athavannews.com/யாழ்-பேருந்து-நிலையத்தில/

Link to comment
Share on other sites

On 8/3/2019 at 4:03 PM, பரியாரி said:

பேருந்து நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை.

யாழ் பேரூந்து நிலையத்தை சுத்தி இருக்கிற தற்காலிக / ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையா அகற்ற வேணும்.

இருக்கிற பிரச்சினைகளுக்குள்ள இவன்களின்டை நாட்டாமை தேவையற்றது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.