• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பரியாரி

திருட வந்த மளிகை கடையில் கொள்ளையன் செய்த வேலையால் கடலூரில் பரபரப்பு

Recommended Posts

திருட வந்த மளிகை கடையில் கொள்ளையன் செய்த வேலையால் கடலூரில் பரபரப்பு

In இந்தியா     August 3, 2019 8:26 am GMT     0 Comments     1655     by : Yuganthini

shop-720x450.jpg

‘உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா?’ என்று மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் கடலூர் பிரதான வீதியருகில் மளிகை கடையொன்றை நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் திகதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் வந்து வழக்கம்போல கடையை திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அரிசி, கோதுமை மாவு, கடலை மாவு மூட்டைகளை கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு, கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மந்தாரக்குப்பம் பொலிஸார், கடையை பார்வையிட்டனர்.

அப்போது கடையிலுள்ள கல்லா பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில், ‘உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா? அதுக்குதான் இந்த குரங்கு வேலை’ என எழுதப்பட்டிருந்தது.

இதன் ஊடாக கடந்த 1ம் திகதி இரவு, ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர் நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது.

வழக்கமாக ஜெயராஜ்,  கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், கல்லா பெட்டியில் பணம் இல்லை. இது கொள்ளையனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், கடை உரிமையாளருக்கு கடிதம் ஊடாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான்.

இந்நிலையில் கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கர் அங்கே கிடந்தது. அதில் கொள்ளையனின் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால் அதைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/திருட-வந்த-மளிகை-கடையில்/

Share this post


Link to post
Share on other sites

ம். கஸ்டப்பட்டதற்கு பலனில்லை என்றால் யாருக்கென்றாலும் கோபம் வரும் தானே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this