• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

'இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்' - அமெரிக்கா எச்சரிக்கை

Recommended Posts

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-49220986

Location: Nationwide, Sri Lanka.

Event: In acknowledgment of upcoming holidays, the U.S. Embassy reminds American citizens of the current Level 2 Travel Advisory (Exercise Increased Caution). Terrorists may attack with little or no warning, targeting tourist locations, transportation hubs, markets, shopping malls, government facilities, hotels, clubs, restaurants, places of worship, parks, major sporting and cultural events, educational institutions, airports, hospitals, and other public areas.

Actions to Take:

– Be aware of your surroundings when traveling to tourist locations and crowded public venues.

– Follow the instructions of local authorities.

– Monitor local media for breaking events and adjust your plans based on new information.

– Enroll in the Smart Traveler Enrollment Program (STEP) to receive Alerts and make it easier to locate you in an emergency.

– Follow the Department of State on Facebook and Twitter.

– Review the Crime and Safety Report for Sri Lanka.

– U.S. citizens who travel abroad should always have a contingency plan for emergency situations. Review the Traveler’s Checklist..

https://lk.usembassy.gov/security-alert-u-s-embassy-colombo-sri-lanka-8/

Share this post


Link to post
Share on other sites

சனாதிபதி தேர்தலுக்கு முன்னராக இன்னுமொரு தாக்குதல் நடந்தால்..... கோத்தா தான் அடுத்த சனாதிபதி 😞 

 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் தவறான செய்தி; அமெரிக்கா அரசு தான் ஏற்கனவே வழங்கிய பயண அறிவுறுத்தலை ஞாபகப்படுத்தி உள்ளது; அவ்வளவு தான்.  அதை விட உல்லாச பயணிகள் வருகை எதிர் பார்த்ததை விட வேகமாக மீள் எழுந்து உள்ளது. Jetwing குழுமம் மட்டுமே ஆவணி மாதத்துக்கு 100,000 அதிகமான அறைகளை விற்று உள்ளது.  இது எமது புலம்பெயர் ஈழ போராளிகளுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கும்.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்று விட்டது. எனினும் உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு எவரும் தயாரில்லை. விழுந்தாலும் மீசையில் மண் முட்டவில்லை என்று கூறுவதற்கு எல்லோரும் தயாராக இருக்கின்றனரே தவிர, நாட்டின் பொருளாதாரம் மந்தமாகி வருகிறது. 
 
வர்த்தகத்துறை பாதிப்படைந்துள்ளது. சுற்றுலாத்துறை ஸ்தம்பிதமாகிவிட்டது என்று கூறுவதற்கு எவரும் தயாரில்லை.
 
இந்நிலைமை மிகவும் ஆபத்தானது. அதிலும் யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்குக் கிழக் குத் தமிழர் தாயகத்தில் பொருளாதார வீழ்ச்சி என்பது மிகவும் மோசமாக உள்ளது
பிரபலமான வர்த்தகர்கள் சடுதியான வீழ்ச்சிக்கு உட்பட்டுள்ளனர். 
 
தவிர, வரட்சி நிலை காரணமாக விவசாயம் உள்ளிட்ட அத்தனை துறைகளும் வடக்குக் கிழக்கில் தாழ்நிலையில் உள்ளது.
 
இந்நிலைமைக்கு மேலாக, தொழில் புரிபவர்கள் வினைத் திறனுடனும் நுட்பத்துடனும் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு எல்லாத் துறைகளிலும் கடுமையாக உச்சரிக்கப்பட்டு வருகிறது.
 
இதன்காரணமாக தொழிலாளர்களை தென் பகுதியில் இருந்து வரவழைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற புதிய தொழில் முறை கலாசாரம் வடபகுதியில் மேலோங்கியுள்ளது.
 
எங்களிடம் உச்சமான திறன் வெளிப்பட வில்லை என்று குற்றம் சாட்டுவோர்; எங்கள் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் வேலை நேரத்தில் தொலைபேசியில் நேரத்தைச் செலவிடுகின்றனர் என்ற குற்றத்தை வெளிப்படையாகவே முன்வைக்கின்றனர்.
 
இந்நிலைமையானது இரண்டு இடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது வேலை செய்கின்ற நேரத்தில் தொலைபேசியுடன் காலத்தைக் கழிக்கின்றபோது, குறித்த வேலை பாதிப்படைவதுடன் குறித்த நபரும் தனது நாளாந்த செலவை அதிகரித்துக் கொள்கின்றார்.
 
எனவே தெலைபேசிக்கும் அதன் வழியான இணையத்தளச் செயற்பாடுகளுக்கும் நம் இளைஞர் சமூகம் அடிமையாகிவிட்டது என்ற நிலைமை உருவாகி வருவதை நாம் உணர முடிகிறது.
 
ஆக, பொருளாதார வீழ்ச்சி நம்மைச் சூழ்ந் திருக்கும்  அதேநேரம் தொலைபேசித் தொடர் பாடலுக்கான செலவு உட்பட, பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை கட்டாயம் கொள்வனவு செய்தல், பெறுமதியான மோட்டார் சைக்கிள்களை லீசிங் முறையில் பெற் றுக் கொள்ளுதல் என்பன வாழ்க்கைச் செலவைக் கடுமையாக உயர்த்தும்.
 
ஆகையால் வாழ்க்கைச் செலவைச் சிக்கன மாக ஆக்கிக் கொள்வது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டை உடனடியாக அமுலாக்க வேண்டும். இது மிகவும் அவசியமானதாகும்.
 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ampanai said:

இந்த விளக்க படத்தில் இருந்தே  உல்லாச பியயாண துறை வளர்ச்சி பாதையில் சேல்வது தெளிவாகிறது.

Share this post


Link to post
Share on other sites

"இலங்கையின் பாதுகாப்பு தொடர்பிலான எமது செய்தி வழமையானது "

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையானது தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வழமையான அறிவுத்தல்தான் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் 

us.JPG

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்ததுடன், இதன் காரணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.

67470991_893581577666806_356519559441678

எனினும் இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் குறித்த செய்தி தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/61911

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்கனும் பிச்சைப் பாத்திரத்துடன் இலங்கையில் நடமாடத் தொடங்கியுள்ளான்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 8/3/2019 at 6:48 PM, ampanai said:

உலக பொருளாதார மந்த நிலையை நோக்கி வேகமாக போகின்றது. 
சீன - அமெரிக்க பொருளாதார யுத்தம் இதற்கான முக்கிய காரணியாக உள்ளது. 

அத்துடன், ஹாங்கொங்கில் தொடரும் போராட்டம் மற்றும் ஜப்பான் - தென் கொரியா வர்த்த சீர்குலைவு, ஜம்மு-காஸ்மீர் பிரச்சனை என பல முகங்கள் இலங்கை வரும் உல்லாச பிராணிகளின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் 

மீண்டும் தை மாத எண்ணிக்கை அளவிக்ரு உல்லாச பிராயாணிகள் வர சில மாதங்கள் இல்லை சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை, அந்த துறையில் முதிலீடு செய்தவர்கள் பொறுமையாக இருக்கமுடியாது. 
அவர்களுக்கு சலுகைகளை வழங்கும் நிலையில் அரசும் இல்லை.  

Share this post


Link to post
Share on other sites

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை தொடர்பில் வகுக்கப்பட்ட இலக்குகளில் குறைந்தது 2020ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலமாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கும் இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு பின்னதாக வலுவிழந்துள்ளது.

கடந்த கால தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கையின் 2025ஆம் ஆண்டுக்கான இலக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், நடைமுறை அதற்கு நேர்எதிராகவே இருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களில் இலங்கைக்குள் வருகின்ற சுற்றுலா பயணிகளும் வருமானமும் அதிகரித்துள்ளபோதிலும் அந்தநிலையில் கடந்த சில மாதங்களில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுளள்து. இதிலிருந்து மீட்சி பெறுவதற்கு குறைந்தது 6-12 மாதங்களாவது ஆகக்கூடும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதபட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையில் மட்டுமல்ல வருமானத்திலும் அதிரிப்பை ஏற்படுத்த முடியாது.

http://www.tamilmirror.lk/business-analysis/இலங்கையின்-பொருளாதாரமும்-இழுபறி-அரசியலும்/145-236287

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு !

கொழும்பிலுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் வெளி­யிட்ட பயண எச்­ச­ரிக்­கையை தவ­றாகப் புரிந்துகொண்டு, சில ஊடக நிறு­வ­னங்­களும், தனி­ந­பர்­களும் மற்­றொரு பயங்­க­ர­வாதத் தாக்­குதல் குறித்து பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக  அர­சாங்­கத்தின் தேசிய ஊடக மையம் தெரி­வித்­துள்­ளது.

மற்­றொரு பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்த வதந்தி முற்­றிலும் தவ­றா­னது என்று நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் அந்த மையம் குறிப்­பிட்­டுள்­ளது.

68604366_2373485582923748_15889484012679

 

67470991_893581577666806_356519559441678

அதே­வேளை, அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்­று­முன்­தினம் தமது டுவிட்­டர் பக்­கத்தில் வெளி­யிட்­டுள்ள பதிவு ஒன்றில், அமெ­ரிக்க தூத­ர­கத்தின் இந்த பயண எச்­ச­ரிக்கை வழக்­க­மான ஒன்றுதான் என குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கை குறித்த எமது பாது­காப்பு அறி­விப்பின் மீது ஊட­கங்­களும் மற்­ற­வர்­களும் கவனம் செலுத்­து­வதை நான் புரிந்து கொள்­கிறேன்.

குறிப்­பி­டத்­தக்க விடு­மு­றைகள் மற்றும் பெரிய பொது நிகழ்வு காலத்தில், நல்ல நடை­மு­றை­களைப்பற்றி, இங்கு பய­ணிக்கும் மக்களுக்கு நாங்கள் நினைவூட்டுவது வழக்கமானது என்று அவர் அதில் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/62033

Share this post


Link to post
Share on other sites

The True Cost of your Trip to Sri Lanka | A sharp new short film from 47 Roots explaining the ethical pitfalls of a holiday to Sri Lanka - and how to avoid them.

If you've got 4 mins, do check it out. And if you know anyone who is considering a visit to Sri Lanka in the near future, please share!

SLC's Campaign Director

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this