Jump to content
nunavilan

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்!!

Recommended Posts

Image may contain: 1 person, sitting
No photo description available.
Image may contain: sky, tree, plant, house and outdoor
Boopal Chinappa

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்!!

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்......... புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர் இறக்கிறார்கள். இவற்றை கண்டுபிடிக்க முறையான வசதிகள் அங்கே இல்லை. MRI போன்றவற்றின் மூலமான பரிசோதனைக்கு கொழும்புக்கு தான் செல்ல வேண்டியுள்ளதாக இருக்கின்றது. மக்கள் வறுமையில் உள்ளார்கள் இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கொழும்புக்குச் சென்று வைத்தியம் செய்ய முடியும்? இதற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

நாங்கள் ஒரு MRI மெசினை வாங்கிக் கொடுப்போம். அதுபற்றி நீயே விசாரித்து ஒழுங்குகளை செய் என்றார். அதன்படி நான் MRI பற்றிய விபரங்களை எங்கே வாங்கலாம், விலை, எப்படி ஸ்தாபிப்பது பற்றிய விவரங்களை சேகரித்து உறுதி செய்தேன். ஜெர்மனியில் வாங்குவதாக முடிவு செய்தேன். வறுமையில் இருக்கும் வடபகுதி மக்களுக்காகத்தான் இதைச் செய்யத் தூண்டியது.

இதுபற்றி நடைமுறைப்படுத்த ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இருதய வைத்திய நிபுணரின் உதவியை நாடினேன். அவரும் ஒரு நல்ல சமூக சேவையாளர் எனக்கு நன்கு தெரிந்தவர். அவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.

ஒரு நாள் நானும் இன்னொரு நண்பரும் இதுபற்றி கலந்துரையாட சென்றிருந்தோம். எல்லா தகவல்களையும் அவருக்கு தெரிவித்தேன். அவரும் பாராட்டினார். அந்த இடத்திலேயே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பாக இருந்த டாக்டருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 30 நிமிடங்கள் வரை சம்பாஷணை நடந்தது. நங்களும் அதை கேட்டு கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரால் தரப்பட்ட தகவல்கள்.......... ஜப்பான் அரசு எங்களுக்கு இந்த உபகரணங்களுடன் கூடிய, ஒரு நவீன கட்டிடத்துடன் கூடிய, ஒரு நிலையத்தை( Fully equipped ) கட்டி அமைத்து தரப்போகிறார்கள். இது எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது. ஆகையால் நீங்கள் இதற்காக முயற்சி செய்ய தேவையில்லை என்றும் சொன்னார். ஏனெனில் நீங்கள் வாங்கித் தந்தால் அதன் பராமரிப்பு மற்றும் சேவை செய்யும் செலவுகளை அரசு ஏற்காது. அதற்கு பெரும் தொகை செலவாகும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இது ஒரு யானையை வாங்கி கொடுப்பது போன்றது. அதைப் பராமரிப்பது மிகவும் கடினமானது என்ற உவமையையும் இரு டாக்டர்களும் நகைச்சுவையாக தெரிவித்தார்கள். இது ஐந்து வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த விடயம்.

இப்பொழுது....... கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக ஒரு இராப்போசன விருந்து அவுஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். இசை நிகழ்ச்சியுடன் கூடிய நல்ல உணவுடன் நடைபெற்றது, உண்டு ம்கிழ்ந்தோம்.

இந்த நிதி சேகரிப்பு எதற்காக என்று அங்கே போன பின்புதான் எனக்கு தெரியவந்தது. MRI equipment வாங்குவதற்கு 130 மில்லியன் ரூபாய்கள் சேர்ந்துவிட்டது. இன்னும் 12 மில்லியன் ரூபாய்கள் மட்டும் தேவைப்படுவதாகவும் அதை சேகரித்து தரும்படி தற்போதைய வைத்தியசாலை அதிகாரியான அவரின் நண்பரான ஒரு டாக்டர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்கள். இந்த நிதியை இலங்கை அரசிடம் கொடுத்து அரசு மூலமாக MRI மெசினை வாங்கப்போவதாக என்ற தகவலையும் தெரிவித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற பேச்சின் போது.........

Current MRI equipment was donated by India which is neither Srilankan standard nor Australian standard.

இந்தியா அன்பளிப்பாக வழங்கிய, தற்பொழுது உள்ள மெசின் இலங்கைத் தரத்திலும் இல்லை மற்றும் அவுஸ்திரேலிய தரத்திலும் இல்லை என்றார். மிகவும் தரம் இல்லாதது.

இது என்னை அதிர்ச்சியடைய வைத்தது.......... 200 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து ஒரு MRI machine வாங்கித் தருவதாக 5 வருடங்களுக்கு முன்பு தெரிவித்தபோது தந்த தகவல்களுக்கு என்ன நடந்தது? ஜப்பான் அரசு ஏன் அதை செய்யவில்லை? அல்லது இலங்கை அரசு அதை தங்கள் பகுதிகளுக்கும் மாற்றிவிட்டதா? அப்படியாயின் பொறுப்பான வைத்திய அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்தினார்களா? தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு என்ன செய்தார்கள்? இவற்றை தற்போதைய வைத்தியசாலை அதிகாரி நடந்ததை தெரிவித்தால் மக்கள் அறிந்து கொள்வார்கள். இப்படி இந்த தரமில்லாத MRI மூலமாக பரிசோதனை செய்வது எதிர்காலதில் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

MRI - Magnetic resonance imaging 
Cost: $1.2m

யப்பான் அரசு....... உலகத்தில் உயர்ந்த வைத்திய தொழில்நுட்பம் உடைய நாடு. வெறும் கட்டிடத்தை மாத்திரம் கட்டிக் கொடுத்து விட்டு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஏன் அந்த கட்டிடத்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கட்டினார்கள்? அதற்கு ஏன் உபகரணங்களை பொருத்தவில்லை? என்ன நடந்தது? 20- 30 கோடிகளில் சொகுசு வாகனங்கள் பெற்று உல்லாச வாழ்க்கை வாழும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவற்றுக்காக என்ன செய்தார்கள்? கேவலம் தமிழரின் நிலை இதுதான்.

வைத்தியர்களுக்கு உடலுக்கு உள்ளே இருக்கும் நோயைக் கண்டுபிடிக்கும் மூன்றாவது கண் நிச்சயமாக இல்லை. தற்காலத்தில் நோய்களை கண்டுபிடிக்கும் உபகரணங்கள் இல்லாத வைத்திய முறை தரமில்லாத, உயிரைப் பறிக்கும் வைத்தியம் என்பதுதான் யதார்த்தம். ஆகையால் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்து வைத்தியர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். ஒரு சில புலம்பெயர் வைத்தியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயபடுகிறார்கள் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். உங்கள் விளம்பரத்துக்காக செயல்படாதீர்கள்.

நிலைமை இப்படி இருக்கையில்........ ஆஸ்திரேலியா, லண்டன், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் டாக்டர்கள், நீங்கள் கடந்த பத்து வருடங்களாக பெரிய விளம்பரங்களுடன் திரும்பத் திரும்ப யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிதிசேகரிப்பு, விழாக்கள் போன்றவை செய்தீர்கள். அப்படியானால் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?

கடந்த பத்து வருட கால உங்களுடைய நடவடிக்கைகளும் மற்றும் பிரச்சாரங்களின் படியும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை இன்று உலக தரத்தில் முதலாம் தரத்தில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

Share this post

Link to post
Share on other sites

இதை வாசிக்க விசர் வருகுது. 
வெளிநாட்டிலிருந்து தமிழர் பிரதேசங்களுக்கு வரும் நிவாரணங்கள்,உதவிகள் எல்லாவற்றையும் சிங்களம் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றது.
ஒழுங்கான தமிழ் அரசியல்வாதிகள் இருந்தால் இதெல்லாம் நடக்குமா?

  • Like 1
  • Sad 2

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

இதை வாசிக்க விசர் வருகுது. 
வெளிநாட்டிலிருந்து தமிழர் பிரதேசங்களுக்கு வரும் நிவாரணங்கள்,உதவிகள் எல்லாவற்றையும் சிங்களம் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றது.
ஒழுங்கான தமிழ் அரசியல்வாதிகள் இருந்தால் இதெல்லாம் நடக்குமா?

புலம்பெயர் தமிழர்கள் தமது நிதியை நன்கு திட்டமிட்டு செலவழித்தால்  பாரிய பொருளாதார  அபிவிருத்திகளை கண்டு இருக்கலாம் ஆனால் பொருளாதார விழிப்புணர்வு அற்ற ஒரு சமூகத்தில் இதெல்லாம் சாத்தியம் இல்லை.

எம்மால் முடிந்து 60 லட்சம் கொடுத்து பிரான்சில் அசைவம் அடிப்பது

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Dash said:

 நான்  சமூகத்தை ஒரு நாளும் குறை சொல்ல மாட்டேன்.
காரணம் இலங்கையிலிருந்து புலம்பெயந்த எல்லோரும்  அந்தந்த நாட்டு சட்டங்களை மதித்து நடக்கின்றோம் அல்லவா? இதற்கு என்ன காரணம்? அந்தந்த நாட்டு  ஜனநாயக அரசியலமைப்பும் அதற்கேற்ப சட்டங்களும் தான் காரணம்.. இதே போல் இலங்கையிலும் இருந்தால் மக்களும் அதற்கேற்ப சட்டம் ஒழுங்குடன் வாழ்வார்கள். விடுதலைப்புலிகள் காலத்தில் மக்கள் சட்டத்தை கடைப்பிடித்தார்கள் என்பது நல்ல உதாரணம். அவர்கள் காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் கூட பவ்வியமாகத்தான் இருந்தார்கள். 
தமிழ்மக்கள் வெளிநாடுகளில் அகதியாக போய் வாழலாம் உழைக்கலாம் என்று வழிகாட்டியவர்களும் உந்த தமிழ் அரசியல்வாதிகள் தான்.
முன்னாள் வெளிநாட்டு தூதுவர் செல்வி.நாகநாதனை தெரிந்தவர்களுக்கு தமிழ் அகதிகளின் ஆரம்ப வரலாறு தெரிந்திருக்கும்.

உந்த ஊத்தைவாளி அரசியல்வாதிகள் ஒழுங்கான அரசியல் செய்திருந்தால் ஊரிலை சண்டையே/ஆயுதப்போராட்டமே வந்திருக்காது.

Share this post

Link to post
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் கூறுவதும் சரி தான்; ஆனால் எமது சமுதாயத்தில் இருக்கும் தவறுகளை நாம் மறைக்க முடியாது;

இதுக்கு தாயகத்தில் உள்ளவர்கள், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இருவரும் குற்றவாளிகள்

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

முன்னர் பலமுறை இதுபோன்ற வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது நான்  கூறிய அதே விடயத்தையே இங்கும் தெரிவிக்க விரும்புகிறேன். சமுக நலன் சார்ந்த பொதுவிடயங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்களின் பெயர் அடையாளம் என்ன என்பதும் மறைக்கப்படவேண்டுமென்ற அவசியம் இல்லை. 

ஏமாற்று பேர்வழிகள், குற்றவாளிகள், போலிவேடதாரிகள், அரசியலில் மோசடி செய்பவர்கள் என பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனாலும் பெயர் குறிப்பிடாத இது போன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. இதுவிடயத்தில் ஏதாவது செய்ய எண்ணும் நலன் விரும்பிகள் அல்லது தொழில்சார் வல்லுனர்கள் யாராவது இந்த சேவையை பொறுப்பேற்று  முன்னெடுத்துச் செல்வதற்கும் இதுவிடயத்தில் யார் யாரை தொடர்புகொண்டால் சிறந்த முறையில் சேவையாற்ற முடியம் என்பதை தெரிந்து கொள்ளவும் வேண்டியபோது சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்வதற்கும் அது போன்ற தகவல்கள் நிச்சயமாக பயன்படும். 

பெயர்குறிப்படப்படும்போது அவர்களை அறிந்தவர்கள் நண்பர்கள் இது பற்றி சந்திக்கும் இடங்களில்  அவர்களை விசாரிக்கவும் வாய்ப்புண்டு. மோசடிகளை செய்பவர்களாயிருந்தால் தமது பெயர் வெளிகொண்டுவரப்பட வாய்ப்பு உண்டு என்பதால் தவறு செய்ய பயப்படுவார்கள். தவறு செய்தவர்களை யாரென்று தெரிந்தும் அவர்களை அடையாளம் காட்டாமல் பாதுகாப்பதும் ஒரு தவறுதான். 

Edited by vanangaamudi

Share this post

Link to post
Share on other sites
On 8/8/2019 at 1:36 AM, vanangaamudi said:

சமூக ஊடகங்களில் இருந்து பகிரப் படும் செய்திகள் இப்படித் தான் இருக்கும்! எழுதுபவர் உண்மையை எழுதக் கூடும். ஆனால், இங்கே நாட்டின் சட்டங்கள் எதுவும் மீறப்பட்டிருப்பதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லையென நினைக்கிறேன். சட்டம் மீறப்படாத போது பெயர்களைக் குறிப்பிட்டு எழுதினால் மானநஷ்ட வழக்குப் போட்டுத் தீட்டி விடுவார்கள் அல்லவா? அதனால் தான் இப்படி ஒழித்து மறைத்து எழுதுவது. நீங்கள் சொல்வது போல இது போன்ற சமூக வலைத் தள குமுறல்களால் பயன்கள் அதிகம் இல்லைத் தான். 

Share this post

Link to post
Share on other sites
On ‎8‎/‎8‎/‎2019 at 1:36 AM, vanangaamudi said:

முன்னர் பலமுறை இதுபோன்ற வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது நான்  கூறிய அதே விடயத்தையே இங்கும் தெரிவிக்க விரும்புகிறேன். சமுக நலன் சார்ந்த பொதுவிடயங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்களின் பெயர் அடையாளம் என்ன என்பதும் மறைக்கப்படவேண்டுமென்ற அவசியம் இல்லை. 

ஏமாற்று பேர்வழிகள், குற்றவாளிகள், போலிவேடதாரிகள், அரசியலில் மோசடி செய்பவர்கள் என பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனாலும் பெயர் குறிப்பிடாத இது போன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. இதுவிடயத்தில் ஏதாவது செய்ய எண்ணும் நலன் விரும்பிகள் அல்லது தொழில்சார் வல்லுனர்கள் யாராவது இந்த சேவையை பொறுப்பேற்று  முன்னெடுத்துச் செல்வதற்கும் இதுவிடயத்தில் யார் யாரை தொடர்புகொண்டால் சிறந்த முறையில் சேவையாற்ற முடியம் என்பதை தெரிந்து கொள்ளவும் வேண்டியபோது சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்வதற்கும் அது போன்ற தகவல்கள் நிச்சயமாக பயன்படும். 

பெயர்குறிப்படப்படும்போது அவர்களை அறிந்தவர்கள் நண்பர்கள் இது பற்றி சந்திக்கும் இடங்களில்  அவர்களை விசாரிக்கவும் வாய்ப்புண்டு. மோசடிகளை செய்பவர்களாயிருந்தால் தமது பெயர் வெளிகொண்டுவரப்பட வாய்ப்பு உண்டு என்பதால் தவறு செய்ய பயப்படுவார்கள். தவறு செய்தவர்களை யாரென்று தெரிந்தும் அவர்களை அடையாளம் காட்டாமல் பாதுகாப்பதும் ஒரு தவறுதான். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும், புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்!

jafna-teaching-hospital-690x500.jpg

30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அழிந்துபோன இலங்கையின் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் செய்யும் முயற்சிகள் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றன என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சிறு உதாரணம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்……… புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர் இறக்கிறார்கள். இவற்றை கண்டுபிடிக்க முறையான வசதிகள் அங்கே இல்லை. MRI போன்றவற்றின் மூலமான பரிசோதனைக்கு கொழும்புக்கு தான் செல்ல வேண்டியுள்ளதாக இருக்கின்றது. மக்கள் வறுமையில் உள்ளார்கள் இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கொழும்புக்குச் சென்று வைத்தியம் செய்ய முடியும்? இதற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

jaffna-teaching-hospital-2.jpg

நாங்கள் ஒரு MRI மெசினை வாங்கிக் கொடுப்போம். அதுபற்றி நீயே விசாரித்து ஒழுங்குகளை செய் என்றார். அதன்படி நான் MRI பற்றிய விபரங்களை எங்கே வாங்கலாம், விலை, எப்படி ஸ்தாபிப்பது பற்றிய விவரங்களை சேகரித்து உறுதி செய்தேன். ஜெர்மனியில் வாங்குவதாக முடிவு செய்தேன். வறுமையில் இருக்கும் வடபகுதி மக்களுக்காகத்தான் இதைச் செய்யத் தூண்டியது.

இதுபற்றி நடைமுறைப்படுத்த ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இருதய வைத்திய நிபுணரின் உதவியை நாடினேன். அவரும் ஒரு நல்ல சமூக சேவையாளர் எனக்கு நன்கு தெரிந்தவர். அவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.

mri-scane.jpg

ஒரு நாள் நானும் இன்னொரு நண்பரும் இதுபற்றி கலந்துரையாட சென்றிருந்தோம். எல்லா தகவல்களையும் அவருக்கு தெரிவித்தேன். அவரும் பாராட்டினார். அந்த இடத்திலேயே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பாக இருந்த டாக்டருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 30 நிமிடங்கள் வரை சம்பாஷணை நடந்தது. நங்களும் அதை கேட்டு கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரால் தரப்பட்ட தகவல்கள்………. ஜப்பான் அரசு எங்களுக்கு இந்த உபகரணங்களுடன் கூடிய, ஒரு நவீன கட்டிடத்துடன் கூடிய, ஒரு நிலையத்தை( Fully equipped ) கட்டி அமைத்து தரப்போகிறார்கள். இது எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது. ஆகையால் நீங்கள் இதற்காக முயற்சி செய்ய தேவையில்லை என்றும் சொன்னார். ஏனெனில் நீங்கள் வாங்கித் தந்தால் அதன் பராமரிப்பு மற்றும் சேவை செய்யும் செலவுகளை அரசு ஏற்காது. அதற்கு பெரும் தொகை செலவாகும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இது ஒரு யானையை வாங்கி கொடுப்பது போன்றது. அதைப் பராமரிப்பது மிகவும் கடினமானது என்ற உவமையையும் இரு டாக்டர்களும் நகைச்சுவையாக தெரிவித்தார்கள். இது ஐந்து வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த விடயம்.

இப்பொழுது, கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக ஒரு இராப்போசன விருந்து அவுஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். இசை நிகழ்ச்சியுடன் கூடிய நல்ல உணவுடன் நடைபெற்றது, உண்டு ம்கிழ்ந்தோம்.

இந்த நிதி சேகரிப்பு எதற்காக என்று அங்கே போன பின்புதான் எனக்கு தெரியவந்தது. MRI equipment வாங்குவதற்கு 130 மில்லியன் ரூபாய்கள் சேர்ந்துவிட்டது. இன்னும் 12 மில்லியன் ரூபாய்கள் மட்டும் தேவைப்படுவதாகவும் அதை சேகரித்து தரும்படி தற்போதைய வைத்தியசாலை அதிகாரியான அவரின் நண்பரான ஒரு டாக்டர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்கள். இந்த நிதியை இலங்கை அரசிடம் கொடுத்து அரசு மூலமாக MRI மெசினை வாங்கப்போவதாக என்ற தகவலையும் தெரிவித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற பேச்சின் போது,

Current MRI equipment was donated by India which is neither Sri Lankan standard nor Australian standard.

இந்தியா அன்பளிப்பாக வழங்கிய, தற்பொழுது உள்ள மெசின் இலங்கைத் தரத்திலும் இல்லை மற்றும் அவுஸ்திரேலிய தரத்திலும் இல்லை என்றார். மிகவும் தரம் இல்லாதது.

இது என்னை அதிர்ச்சியடைய வைத்தது, 200 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து ஒரு MRI machine வாங்கித் தருவதாக 5 வருடங்களுக்கு முன்பு தெரிவித்தபோது தந்த தகவல்களுக்கு என்ன நடந்தது? ஜப்பான் அரசு ஏன் அதை செய்யவில்லை? அல்லது இலங்கை அரசு அதை தங்கள் பகுதிகளுக்கும் மாற்றிவிட்டதா? அப்படியாயின் பொறுப்பான வைத்திய அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்தினார்களா? தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு என்ன செய்தார்கள்? இவற்றை தற்போதைய வைத்தியசாலை அதிகாரி நடந்ததை தெரிவித்தால் மக்கள் அறிந்து கொள்வார்கள். இப்படி இந்த தரமில்லாத MRI மூலமாக பரிசோதனை செய்வது எதிர்காலதில் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

MRI – Magnetic resonance imaging Cost: $1.2m

யப்பான் அரசு……. உலகத்தில் உயர்ந்த வைத்திய தொழில்நுட்பம் உடைய நாடு. வெறும் கட்டிடத்தை மாத்திரம் கட்டிக் கொடுத்து விட்டு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஏன் அந்த கட்டிடத்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கட்டினார்கள்? அதற்கு ஏன் உபகரணங்களை பொருத்தவில்லை? என்ன நடந்தது? 20- 30 கோடிகளில் சொகுசு வாகனங்கள் பெற்று உல்லாச வாழ்க்கை வாழும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவற்றுக்காக என்ன செய்தார்கள்? கேவலம் தமிழரின் நிலை இதுதான்.

வைத்தியர்களுக்கு உடலுக்கு உள்ளே இருக்கும் நோயைக் கண்டுபிடிக்கும் மூன்றாவது கண் நிச்சயமாக இல்லை. தற்காலத்தில் நோய்களை கண்டுபிடிக்கும் உபகரணங்கள் இல்லாத வைத்திய முறை தரமில்லாத, உயிரைப் பறிக்கும் வைத்தியம் என்பதுதான் யதார்த்தம். ஆகையால் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்து வைத்தியர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். ஒரு சில புலம்பெயர் வைத்தியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயபடுகிறார்கள் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். உங்கள் விளம்பரத்துக்காக செயல்படாதீர்கள்.

நிலைமை இப்படி இருக்கையில், ஆஸ்திரேலியா, லண்டன், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் டாக்டர்கள், நீங்கள் கடந்த பத்து வருடங்களாக பெரிய விளம்பரங்களுடன் திரும்பத் திரும்ப யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிதிசேகரிப்பு, விழாக்கள் போன்றவை செய்தீர்கள். அப்படியானால் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?

கடந்த பத்து வருட கால உங்களுடைய நடவடிக்கைகளும் மற்றும் பிரச்சாரங்களின் படியும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை இன்று உலக தரத்தில் முதலாம் தரத்தில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

By: Boopal Chinappa

https://www.torontotamil.com/2019/08/03/jaffna-teaching-hospital-and-diaspora/

Share this post

Link to post
Share on other sites

இந்த செய்தியில் பணிப்பாளரில் தவறு உள்ளது போல் தெரியவில்லை, அரசு தான் திட்டத்தில் ஏதோ மாற்றம் செய்து ஜப்பானின் MRI கருவியை பொருத்தவிடாது செய்துள்ளது போல தெரிகிறது.
முயற்சி திருவினையாக்கட்டும்.

Share this post

Link to post
Share on other sites

இங்கே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரி. சத்தியகமூர்த்தி வேறு ஒரு திரியில் விளக்கமளித்துள்ளார்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...