Sign in to follow this  
nunavilan

சுதுமலை பிரகடன நாள் இன்று!

Recommended Posts

சுதுமலை பிரகடன நாள் இன்று!

67434466_2522227591174885_82619472197126
“எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கானதீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.”

- வே. பிரபாகரன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொதுநிலைப்பாடொன்றுக்கு தற்போது முன்வந்திருப்பது வடக்கு – கிழக்கு தமிழ் சமூகத்துக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ்ச் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இரண்டு பிரதான வேட்பாளர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? அவ்வாறு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்ச் சமூகத்தின் சார்பாக முன்வைக்க வேண்டிய நிபந்தனைகள் எவை? இவ்வாறான விடயங்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவதற்காக ஆறு தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில ஒன்றாகச் சந்தித்துக் கொண்டன. இச்சந்திப்பானது இக்கட்சிகளாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒன்றல்ல... யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே தமிழ்க் கட்சிகளுடன் பல தடவை தொடர்பு கொண்டு கலந்துபேசி ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடைக்குக் கொண்டு வந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவையே அந்த ஆறு கட்சிகளுமாகும். மேற்படி கூட்டுச் சந்திப்பில் பங்கேற்று கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டவர்கள் சி.வி. விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோராவர். ஒரேயொரு கட்சி பொது உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளாமல் வெளியேறி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) அந்தக் கட்சி! எனவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐந்து கட்சிகளால் மட்டுமே பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வர முடிந்திருக்கிறது. இந்த ஐந்து கட்சிகளின் தலைவர்களும் முன்னொரு வேளையில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற ஒரே குடையின் கீழ் செயற்பட்டவர்களாவர். ஆகவே பிளவடைந்து போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மீண்டும் ஒன்றுசேர்ந்து விட்டதென்று அவசரப்பட்டு நினைத்து தமிழர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளக் கூடாது! பல வருடங்களாக ஆளுக்கொரு திசையில் சிதறுண்டு கிடந்த இக்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் விடயத்திலாவது பொது இணக்கப்பாடொன்றுக்கு இப்போது முன்வந்திருப்பதை முதலில் பாராட்டியாக வேண்டும்.ஆனாலும் இந்தப் பாராட்டுக்குரியவர்கள் இக்கட்சிகளின் தலைவர்களல்லர்! யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் பிரதிநிதிகளையே முதலில் பாராட்டியாக வேண்டும். எவ்வாறிருந்த போதிலும் கடந்த வார சந்திப்பைப் பொறுத்தவரை இக்கட்சிகளின் தலைவர்கள் ‘இன்றைய அரசியல் நிலைவரத்தின் சூழ்நிலைக் கைதிகள்’ என்றும் கூற முடியும். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதனால் இத்தலைவர்களால் நீண்ட காலத்துக்கு ஆளுக்கொரு திசையில் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே வடக்கு, கிழக்குத் தமிழ்ச் சமூகம் இக்கட்சிகள் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றது. 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான இவர்களது 'உறங்கு நிலை' குறித்து தமிழர்கள் மிகவும் சலிப்படைந்திருக்கிறார்கள். ‘அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள்’ என்ற வெறுப்பு முத்திரை தமிழ் அரசியல் தலைவர்கள் மீது குத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்கையில், இக்கட்சிகள் தமிழ்ச் சமூகத்துக்கு சாக்குப் போக்குக் காட்டுவதற்காவது பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம்.பொதுநிலைப்பாடொன்றுக்கு வர முடியாமல் போயிருப்பின், இனிமேல் வரப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும் இக்கட்சிகளால் தமிழ் மக்கள் முன்பாக முகம் கொடுக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விடும் என்பதுதான் உண்மை! ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்து, கோரிக்கைகளை உள்ளடக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்நிலைப்பாட்டை ஜனாதிபதித் தேர்தல் வரை இக்கட்சிகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமா? இல்லையேல் களநிலைவரத்துக்கு ஏற்றபடி நிபந்தனைகளில் நெகிழ்வுத் தன்மையுடன் மாற்றங்கள் செய்யப்படுமா? இல்லையேல் ஒருசில கட்சிகள் இணக்கப்பாட்டில் இருந்து வெளியேறி விடுமா? இவையெல்லாம் பொதுவாக எழுகின்ற வினாக்கள்! இக்கட்சிகள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் (கோரிக்கைகள்) சாத்தியப்பாடுடவையா அல்லது இன்றைய காலத்துக்குப் பொருத்தப்பாடுடவையா என்பதெல்லாம் வேறு விடயங்கள். ஆனால் குறைந்த பட்சம் இந்த ஐந்து கட்சிகளாவது எதிர்வரும் காலத்தில் இணக்கப்பாட்டுடன் ஒருமித்து செயற்பட வேண்டுமென்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஏனெனில் தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான பிளவுகளும் முரண்பாடுகளும் தமிழ் மக்களை அதிகம் சலிப்படைய வைத்திருக்கின்றன என்பதை இக்கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்துக்கு அப்பால் முக்கியமாக ஆராயப்பட வேண்டிய மற்றொரு விடயம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகளும் முன்வைத்துள்ள முன்நிபந்தனைகளை இருபிரதான வேட்பாளர்களில் எவர் ஏற்றுக் கொள்ளப் போகின்றார்? தவிர்க்க முடியாமல் எழுகின்ற வினா இது! தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் உள்ளடங்கியுள்ள அம்சங்களில் அதிகமானவை பெரும்பான்மை இனத்துக்கு ‘ஒவ்வாமை’ தரக் கூடியவையாகும்.இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு முன்வருகின்ற துணிச்சல் மிக்க வேட்பாளர் எவருமே இருக்கப் போவதில்லை. அவ்வாறு எந்த வேட்பாளராவது இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்வாரானால், அவர் அரசியலில் தனக்குரிய புதைகுழியை தோண்டிக் கொள்வதற்கு ஒப்பான செயல் அதுவாகும். இவ்வாறான விஷப்பரீட்சைக்கு எந்தவொரு வேட்பாளரும் செல்லப் போவதில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக இருக்கப் போகிறது என்பது புரியாததொரு மர்மம்! https://www.thinakaran.lk/2019/10/22/ஆசிரியர்-தலைப்பு/42433/தமிழ்-அரசியல்-கட்சிகளின்-அடுத்த-கட்ட-நகர்வு-எது
  • தேடிச்சென்று சந்திக்கமாட்டோம் என்ற மார்தட்டல் காண்மின்களோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ்க் கட்சி கள் உடன்பட்டு ஒப்பமிட்ட 13 அம்சக் கோரிக்கைகள் பற்றிய எதிர்ப்பிரசாரம் தென்பகுதியில் சூடு பிடித்துள்ளது. ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு 13 அம்சக்கோரிக்கைகளை முன்வைப்பது ஏதோ தனிநாட்டுக் கோரிக்கைக்கானது போல பிரசாரங்கள் முழங்கத் தொடங்கியுள்ளன. சுருங்கக்கூறின் இனவாதத் தீயை மூட்டி எரித்து இந்த நாட்டை அழித்துக்கட்டுகின்ற முயற்சிகள் நடக்கின்றன எனலாம். நிலைமை இதுவாக இருக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேடிச் சென்று அவர் களுக்குப் பின்னால் ஓடிப்போய் சந்திக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. நல்லது தொழுதுண்டு பின்செல்லாப் பண்பாடு நம் தமிழினத்துக்குரியது என்ற வகை யில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கலாம். ஆனால் இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு எப்போது எடுத்தது என்பதுதான் கேள்வி. ஐந்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் சார்பில் 13 அம்சக்கோரிக்கை களை முன்வைப்பது என்று இணங்கிக் கொண்டன. இவ்வாறு உடன்பட்ட 13 அம்சக்கோரிக்கை யுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களைச் சந்திப்பதென்றும் இந்தச் சந்திப்பில், ஒப்பமிட்ட ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாகப் பங் கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் புளொட் அமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைத் தனித்தனியாகச் சந்தித்தன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்களை அல்லது அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர் களைச் சந்திப்பதாகத் தீர்மானம் இருந்த போதிலும் அதுபற்றி எந்தக் கருசனையும் கொள்ளாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனித்தனியாகச் சந்திப்பு நடந்தது. இதை நாம் கூறும்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாம் கதைக்கவில்லை என்று கூறலாம். ஆனால் அது நம்பக்கூடிய உண்மை அல்ல. தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுட னான சந்திப்பில் கதைக்கப்பட்ட விடயம் என்ன என்பது பற்றி தமிழரசுக் கட்சியோ அல்லது புளொட் அமைப்போ எதையும் வெளிப்படுத்த வும் இல்லை. நிலைமை இதுவாக இருக்கையில், இப்போது ஜனாதிபதி வேட்பாளர்களை வலிந்து சென்று சந்திக்க மாட்டோம். எங்களின் ஆத ரவு தேவை என்றால் - தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்றால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்களைத் தேடி வந்து சந்திக்கட்டும் எனக் கூட்டமைப்புக் கூறியுள்ளது. இங்குதான் ஓர் உண்மை வெளிப்படுகிறது. அதாவது ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாக ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்திப்பதை தமிழரசுக் கட்சி விரும்பவில்லை. எனவே பிரதமர் ரணிலுடன் தனியாகச் சந்தித்த பின்பு, ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சந்திப்பதற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் மூலம் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் தேடிச் சென்று சந்திப்பதும் சமயோசித நடவடிக்கையே. ஆனாலும் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றுசேர்வதா? அதைக் தடுக்கவே பின்சென்று சந்திக்கோம் என்ற மார்தட்டல். http://valampurii.lk/valampurii/content.php?id=19574&ctype=news
  • "அப்படிப்பட்டவர்கள் எப்படி இந்தியா தடை செய்த கோட்பாடுகளை ஒன்றிணைந்து கைச்சிட்டனர் என்பது தான் கேள்வி. பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தகோரிக்கையும் இந்தியாவின் கண்காணிப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது."  இந்தியாவை மீறி கூட்டமைப்பு மற்றும் தமிழர் கட்சிக்கள் தமிழர் நலம் சார்ந்து மட்டும் முடிவுகளை எடுத்தால் மட்டுமே இனத்திற்கு விடிவு !
  • தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிக்க வேண்டும் அஸ்கிரிய பீடம் கோரிக்கை வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிக்க வேண்டும் என அஸ்கிரிய பிரிவின் செயற்குழு உறுப்பினர் கொடகம மங்கள தேரர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன அவரிடம் ஆசீர்வாதம் பெற சென்றபோதே தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.      குறித்த யோசனையை தனிப் பட்ட ரீதியாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.   நாட்டை பிளவுபடுத்துவதற்கான வேலைகளை அவர்கள் மேற்கொள்கின்றார்கள் என்பது நன்கு புலப்படுவதன் காரணமாக இதனை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிக்க வேண்டும்.   இது தொடர்பில் வேட்பாளர்கள் பகிரங்கமாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என அஸ்கிரிய பிரிவின் செயற்குழு உறுப்பினர் கொடகம மங்கள தேரர் தெரிவித்துள்ளார்.         http://valampurii.lk/valampurii/content.php?id=19582&ctype=news  
  • அண்ணனுக்கு நினைவு நாள் அஞ்சலிகள்!!!