Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி மாவட்டத்தில் 7900 குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 7900 குடும்பங்கள்  வறட்சியினால் பாதிப்பு

 

கிளிநொச்சி மாவட்டத்தில் 7947 குடும்பங்களை சேர்ந்த 27564பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. 

kili.jpg

அதனடிப்படையில்  நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் வறட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சியில் - 3001 குடும்பங்களை சேர்ந்த 10454 பேர்.

கண்டாவளையில் - 757 குடும்பங்களை சேர்ந்த3009 பேர்.

பூநகரியில் 3693 குடும்பங்களை சேர்ந்த 12629 பேர்.

பச்சிலைப்பள்ளியில் 496 குடும்பங்களை சேர்ந்த 1472 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களிற்கு கரு்த்து தெரிவித்திருந்தார். 

மேற்குறிப்பிட்ட வகையில் தற்போது வறட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அதனை உறுதிப்படுத்தியிருந்தார். இதேவேளை வறட்சியினால் நீர்நிலைகளின் நீர்மட்டம் விரைவாக குறைவடைந்துள்ளதாகவும், மக்கள் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்த வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த வறட்சி தொடரும் பட்சத்தில் மோசமான நிலை ஏற்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார். 

இதேவேளை வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மெற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைக்கப்பெற்று அவ்வந்த பிரதேச செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

 குறித்த நிதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் இதன்போது ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/61910

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் நம்பாமல் மக்கள் தங்களுக்காக தாங்களே முயற்சிகளில் ஈடுபடல் வேண்டும் 
குளங்களை தூர் வார வேண்டும் 
ஒவ்வொரு துளி மழையையும் சேகரிக்க வேண்டும் 
மரங்களை நடால் வேண்டும் 

இப்படியான முயற்சிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். 

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவளுக இம்சை தாங்க முடியல  
    • அமைதியாக வாழ்ந்துவரும் எமது உயிருக்கு உலை வைக்காதீர்கள்- கோப்பாய் மக்கள் கோரிக்கை    29 Views யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரியில் தற்போது கொரோனா  தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து  பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால் இம்முறை நாடுமுழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவரும் காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்பினை காட்டாமல் அமைதியாக இருந்தோம். குறித்த பகுதியை சுற்றியுள்ள  அயல் கிராமங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும், அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கும்  ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில்  ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நின்மதியாக வீதிகளில் நடமா முடியலவில்லை பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம். மனிதபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு  எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வை  சீரழித்துவிட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடிhக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்தவகையில் 1.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேனாதவாறு சுற்றுவட்டாரத்தில்  பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் தொடர்பினை பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் 2.தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை தடுத்தல் 3.மேலும் சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும். 4.மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில்  இருந்து உடனடியாக இந்த தனிமைப்படுத்தல் நிலையத்ததை அகற்ற வேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது. https://www.ilakku.org/அமைதியாக-வாழ்ந்துவரும்-எ/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.