Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இது தான் ! அவசரப்படத்தேவையில்லை என்கிறார் சம்பந்தன் !


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 

sampanthan.jpg

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். அதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெக்க முடியும்"  என்றார்.

https://www.virakesari.lk/article/61938

 

ஆட்சிமாற்றம் மூலம் தமிழர்கள் எதிர்பார்த்த விடயங்கள் கிட்டவில்லை - சுமந்திரன்

"ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthSumanthiran.jpg

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

"ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம். 

ஆனால், ஏதும் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம், கைதிகள் விடுதலை என்பவற்றில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது. முழுமை பெறாதபோதும் அதை முடிவுறுத்தும் தறுவாய்க்கு வந்துள்ளோம். அதேபோன்று இடம்பெறாத விடயங்களும் உண்டு" என்றார்.

https://www.virakesari.lk/article/61939

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுய மரியாதை உள்ள அரசியல் தலைவர்கள், தாம் அளித்த வாக்குறிதியை நிறைவேற்ற முடியாவிட்டால் தமது பதவிகளை துறக்கவேண்டும். அவ்வாறு  செய்யும்  பொழுது அது எமது இன எதிரிகளுக்கும், அடுத்த தலைமுறை தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஒரு மக்கள் சார்ந்த முக்கிய செய்தியை, அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க உதவுகின்றது. 

அந்த பண்பு உங்களிடம் இல்லாத காரணத்தால் இன்று தமிழர் அரசியல் நிலைமை பல படிகள் பின்னோக்கி சென்று, ஒரு அரசியல் அழிவை சந்திக்கும்  நிலையில் உள்ளது.  அந்த நிலமையை  தவிர்க்க, உங்கள் மக்கள் மீது உங்களுக்குள்ள விசுவாசத்தை நிரூபிக்க, நீங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பதவியை துறப்பதே தமிழன் அரசியலுக்கு  நன்மையாக இருக்கும்.  

""ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம். 

ஆனால், ஏதும் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம், கைதிகள் விடுதலை என்பவற்றில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது. முழுமை பெறாதபோதும் அதை முடிவுறுத்தும் தறுவாய்க்கு வந்துள்ளோம். அதேபோன்று இடம்பெறாத விடயங்களும் உண்டு" என்றார்."

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தா தரப்பை தமிழர் ஆதரிப்பரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்க்ஷவும் தமிழ் ஊடகங்களுக்குத்  தாராளமாகப் பேட்டிகள், செவ்விகள், செய்திகள் வழங்குகின்றனர்.

இது தேர்தல் காலம். வழமையாக அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசும் சமயம். மஹிந்தவும் கோட்டாபயவும் என்ன விதிவிலக்கா? அவர்களும் தம்பாட்டில் வாக்குறுதிகளை அள்ளி வீசத்தானே செய்வர்...?

தங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் இரண்டு வருடங்களில் தீர்வு என்கின்றார் மஹிந்தர். இது ஒன்றும் புதிய வாக்குறுதியல்ல.. ஆறு மாதங்களுக்கு முன்னர் "காலைக்கதிர்" நாளிதழுக்கு அவர் கூறிய செய்திதான்.

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு இரண்டு வரு டங்களில் தீர்வு என்ற அவரது வாக்குறுதியை இலகுவாக நம்புவதற்குத் தமிழர்கள் தயாரில்லை என்பதுதான் நிலைமை. அப்படி அவர்கள் நம்பாமல் இருப்பதற்குப் பல நியாயங்கள் உண்டு.

2005 நவம்பரில் முதன்முதலாகத் தாம் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த போது மஹிந்த  வழங்கிய வாக்குறுதிகளைத் தமிழர்கள் மட்டுமல்லர், முழு நாடுமே அறியும். ஒரே ஒருமுறை ஜனாதிபதியானதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்று தொடங்கி, அச்சமயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் வழங்கிய வாக்குறுதிகள் பலப்பல.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அப்போது மஹிந்த ராசபகஷவை நம்பி "யதார்த்தவாதி' என்று தமது மாவீரர் தின உரையில் அவரைப் புகழ்ந்துரைக்கத் தவறவில்லை.

ஆனால், மக்களுக்கு வாக்குறுகி அளித்து ஏமாற்றுவதுதான் அரசியல்வாதிகளின் யதார்த்தப் போக்கு என்பதை எவரும் அப்போது உய்த்துணர்ந்திருக்கவில்லை. அதைத் தான் உறுதிப்படுத்தினார் மஹிந்தர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து, அதன் அடிப்படையில் ஆட்சிப் பீடம் ஏறிய மஹிந்தர், அந்த முறைமையைமேலும் உறுதிப்படுத்தும் அரசியல் வேலைகளைத்தான் செய்தார். தனது வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் தாம் தொடர்வதற்கான ஏற்பாடுகளை நிலைப்படுத்தினார்.  இப்போது அவரும், அவரது சகோதரர் கோட்டாபய ராசபகஷவும் தீர்வு குறித்துப் பேசுகின்றார்கள்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படை ஏற்பாடுகளை - உயிர்ப்பான சரத்துக்களை - அடியோடு நிராகரித்து விட்டு அவர்கள் "13 பிளஸ்" குறித்துப் பேசுவது மிக மிக வேடிக்கையாகும்.

தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகியனவே அதிகாரப் பகிர்வின் மிகமிகப் பிரதான விடயங்கள். அவற்றை அடியோடு நிராகரித்துவிட்டு அதிகாரப் பகிர்வு குறித்து அவர்கள் பேசுகின்றமை அரசியல் கோமாளித்தனமின்றி வேறில்லை.

வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்கனவே உயர்நீதிமன்றம் மூலம் துண்டாக்கச் செய்து, பிளக்கப் பண்ணி விட்டாயிற்று. அவற்றை மீளச் சட்டரீதியாக இணைக்கும் அதிகாரம் கொழும்பு அரசுக்கு இருந்தும் அது, இப்போதைக்கு அதைச் செய்யப் போவதேயில்லை என்பது திண்ணம்.

மாகாணங்களுக்குப் பகிர வேண்டிய 13  ஆவது திருத்தத்தின் கீழ் பகிர்வதற்கு இணங்கி இலங்கை அரசு சட்டமாக்கியது காணி அதிகாரப் பகிர்வாகும்.

அவ்வாறு காணி அதிகாரம் மாகாணங்களுக்கு பகிரப்பட்டு விட்டதாக அரசமைப்பில் இப்போது எழுதப்பட்டிருந்தாலும் அரசு அதனை நடைமுறைப்படுத்தவே இல்லை. அந்தக் காணிப் பகிர்வு அதிகாரத்தை மாகாணங்களுக்கு விட்டு வைக்கும் எண்ணம் தமக்கு அடியோடு இல்லை என்பதை கோட்டாபய ராசபகஷ ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.

காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அது குந்தகமாகி விடும் எனப் புதுஅரசியல் வியாக்கியானத்தை வேறு, கோட்டாபய முன் வைத்து வருகின்றார்.

இந்தச் சூழலில் கோட்டா - மஹிந்த அணி அதிகாரத்துக்கு வந்தால் காணி அதிகாரம், இணைப்பு ஏதும் சாத்தியப்படப் போவதில்லை என்பது தெளிவு.

பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரை அது, முழு மாகாணத்துக்கும் வழங்கப்படுகின்றமையை மஹிந்த - கோட்டா தரப்பு ஏற்கவே இல்லை. "சமூகப் பொலிஸ்' (Community Police) என்ற அடிப்படையில் கிராம ரீதியாக ஒரு  செரீப் தலைமையில் சில குழுக்கள், குழுக்களாக மாகாணத்தின் கீழ் பொலிஸ் இயங்கலாம் என்பதுதான் அவர்களின் தீர்மானம். அதாவது மாகாணங்களின் கீழ் வலுவான ஒரு பொலிஸ் கட்டமைப்பு அமைவதற்கு அவர்கள் இடமளிக்கமாட்டார்களாம்.

இத்தகைய கொள்கைச் சீத்துவத்தில் அமையும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தரப்பை இத்தேர்தலில் தமிழர்கள் ஆதரிப்பது என்பது துர்லபமே. அது பெரும்பாலும்
சாத்தியமேயற்றதுதான்.(காலைக்கதிர் - நமது பார்வை 12-08-2019)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2019 at 1:26 AM, ampanai said:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். அதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெக்க முடியும் என்றார்.

அடை மழையே என்றாலும் நம்ம தலை கொப்பிலக்கார்  இந்த வயதிலும் மக்கள் மக்கள் என்று அழுவுது ஓநாய் போல் அப்ப தமிழனுக்கு இந்த முறையும் பட்டை நாமாம் தான் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By ampanai
   Editorial / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை -எஸ்.நிதர்ஷன்
   தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை தங்களிடம் வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவே, இந்த அரசாங்கத்துகு கடந்த நான்கு வருடங்களாக தங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், ஆனால் அவ்வாறான தீர்வுக்கு பல முயற்சிகள் நடந்த போதிலும் அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் நீங்கள் ஒரு பிரதமராக அல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக அல்லாமல் முக்கியமான கட்சித் தலைவராக எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சி நிலைப்பாடு என்னவெனவும் வினவினார்.
   யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போது, எம்.ஏ.சுமந்திரன்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
   இது குறித்து அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இதுகால வரைக்கும் ஒரு பிரதமரும் இங்கு வந்ததில்லை. ஆனால் பிரதமராக ரணில் விக்கிரமிங்க வந்திருக்கின்றார் என்று நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்கள். இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டமானது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டமாக அமைகிறது என்றார்.
   இந்த பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்கின்ற போது, அரசில் இவர்கள் இருந்தாலும் கூட எதிர்க்கட்சியில் நாங்கள் இருக்கின்ற போது, எங்களுடன் கலந்தாலோசித்து, எங்களுடைய முன்மொழிவுகளைப் பெற்று செய்வது இதில் உள்ள விசேச தன்மையாகும். முன்னைய காலத்தில் இது நடந்திருக்கவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.
   இன்றைக்கு பிரதமர் இங்கே வந்திருக்கிற கால சூழ்நிலையில், நாட்டிலே ஒரு தலைவரைத் தெரிவு செய்கிற தேர்தலை அண்மித்த காலப் பகுதியாகக் கருதப்படுகிறது. அதைக் குறித்து தான் பலருடைய கவனங்களும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்று இன்னமும் அறிவிக்காத இந்தச் சந்தர்ப்பத்திலே, இன்றைக்கு பிரதமரை யாழ்ப்பாணத்தில் வைத்து, இந்த விடயம் சம்பந்தமாக சில கருத்துகளைச் சொல்வதற்கான கடைசி சந்தர்ப்பமாக இதை நான் கருதுகிறேன் எனவும், அவர் தெரிவித்தார்.
   பொருளாதார நன்மைகள் பொருளாதார திட்டங்கள் எங்களுடன் கலந்தாலோசித்து, இப்பொழுது நடைபெறுகிறது என்று நான் சொன்னேன். ஆனால், இவற்றை நாங்களே தீர்மானித்து நாங்களே அமுல்படுத்தக் கூடிய ஓர் ஆட்சி உரிமை எங்களுடைய கையில் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான், எங்களுடைய அபிலாசையாக தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கிறதெனவும், அவர் கூறினார்.
   எங்களுடைய தலைவிதியை நாங்களே நிர்ணயிக்கக் கூடிய விதத்திலே எங்களுடைய அதிகாரம் எங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த அபிலாசையாக இருந்த வந்திருக்கிறது. நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலே கடந்த நான்கு வருடங்கள் செயற்பட்ட போது, பொருளாதார நன்மை எங்களுக்கு இப்படியாக கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக எங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு ஒரு தீர்வு கிட்டுவதற்கு சந்தர்ப்பமாகக் கருதி தான் இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனவும், அவர் கூறினார்.
   இந்த நாட்டினுடைய தலைவராவதற்கு பலர் இப்பொழுது முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் இலங்கையை ஒரு நாடாக வைத்திருக்கவும் இலங்கையினுடைய இறைமையை பாதுகாப்போம் என்றும் பல வாக்குறுதிகளைக் கொடுத்தவர்களாக பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான பல பேச்சுகளில் இன்றைக்கு ஈடபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
   ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைக்கு ஒரு கட்சித் தலைவராக பிரதமராக அல்ல ஜனாபதி வேட்பாளராக அல்ல. ஒரு முக்கிய கட்சித் தலைவராக உங்களிடத்தே நாங்கள் கேட்கவிருப்பது, எங்களுடைய அரசியல் அபிலாசை குறித்து உங்கள் கட்சி நிலைப்பாடு என்ன வெனவும், அவர் வினவினார்.
   ஏனென்றால் கடந்த நான்கு வருடங்களாக, நாங்கள் ஆதரவு நீங்கள் தலைமை தாங்கி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பல படிமுறைகள் நடந்திருந்தும், அதை இறுதி செய்ய முடியாமல் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலையிலே, இன்றைக்கு நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.
   இந்த நிலையில், எங்களுடைய மக்களுக்கு தீர்மானமாக உங்களுடைய கட்சியின் நிலைப்பாட்டை நீங்கள் அறிவிக்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.
   http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/எங்களுடைய-அபிலாசைகளுக்கு-உங்கள்-நிலைப்பாடு-என்ன/71-236827
  • By ampanai
   கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

   கட்சி ஆதரவளார்களை தெளிவூட்டும் வகையிலான தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பட்டிருப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.
   களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
   அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
   கோத்தாபய ரஜபக்ச நான் தமிழ் மக்களின் ஆதரவின்றி வெற்றி பொறுவேன் என்று தெரிவித்துள்ளார் இது சாத்தியமான விடயமாக நீங்கள் பார்க்கின்றீர்களா?
   அதற்கு பிறகு அவர் சொல்லியிருக்கின்றார் அவ்வாறு சொல்லவில்லை என்று அவ்வாறு சொன்னாரா? இல்லையா? என்று எனக்கு தெரியாது நேற்றைய உரையில் கூறியுள்ளார் தமிழ் மக்களுக்கு அபிலாசைகள் இருக்கின்றது அதனையும் நான் நிறைவேற்றுவேன் என ஏதோ சொல்லியிருக்கின்றார். அவர் தமிழ் மக்களின் ஆதரவின்றி நிச்சயமாக வெல்லமுடியாது ஆதனால்தான் முதலில் அவர் அவ்வாறு கூறியிருந்தாலும் தற்போது அவரின் நிலைப்பாட்டை மாற்றியமைத்துள்ளார் போல் தெரிகின்றது.
   ஜக்கிய தேசியக்கட்சி சார்பாக சஜித், கருஜெயசூரிய இருவரில் யார் போட்டியிட்டால் யார் கோத்தாபய  ராஜபக்சவை எதிர்த்து வெற்றிபெறுவார் என நினைக்கின்றீர்கள் ?
   ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை தீர்மானிப்பது அது உட்கட்சி விவகாரம் ஆகும் இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது ஆனபடியால் அதில் தாக்கல் செலுத்தும் படியான கருத்துக்களை நாங்கள் தெரிவிக்க முடியாது.
   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பீர்களா இல்லையா?
   நாங்கள் யாரை ஆதரிப்பது யாரை ஆதரிக்காமல் விடுவது  யாரையும் ஆததரிப்பதா என்ற எந்த தீர்மானமும் இன்னும் எடுக்கவில்லை.
   அவ்வாறென்றால் மஹிந்த அரசாங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை கொண்டு வந்ததாக நீங்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தீர்கள். ஆகவே நீங்கள் மஹிந்த சார்பான கோத்தாபய ராஜபக்சவை ஆரதரிக்க முடியுமா இல்லையா என தற்போது அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கமுடியாதா?
   அழுத்தம் திருத்தமாக நாங்கள் சரியான நேரத்தில் சரியான ஒரு கருத்தினை வெளியிடுவோம் அந்த நேரம் இப்போதில்லை .
   உங்களது கோரிக்கைகளுக்கு கோத்தபாய ராஜபக்ச ஆதரவளித்தால் ஆதரவு வழங்குவீர்களா?
   நான் ஏற்கனவே சொன்னது போன்று ஆதரவு வழங்குவதா? இல்லையா என்ற தீர்மானங்கள் எல்லாவற்றிக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கட்டும் எல்லா கட்சிகளும் தங்களின் கொள்கைகளை முன்வைக்கட்டும் நாங்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனும் பேசுவோம் அதன் பின்னர் நிதானமான ஒரு முடிவினை நாங்கள் எடுப்போம். 
   கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் மனோகணேசன், தயாகமகே உடன் உலங்கு வானூர்தியில் வந்து அரசாங்கத்தின் முடிவினை அறிவிக்கும் போது தங்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு ஏற்பட்டது இது திட்டமிடப்பட்ட சதி என நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
   இதனை  திட்டமிட்டசதியாக நான் பார்க்கவில்லை மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அதனை சிலர் உண்ணாவிரதமாக வடிவமைத்திருந்தார்கள் அவர்களிடத்தில் போய் நிலைப்பாட்டை கூறினேன் அவ்வாறு கூறவேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது அதனையே நான் மேற்கொண்டேன். ஆந்த சூழ் நிலையை தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தியிருக்கலாம் என்னைப்பற்றி நாங்கள் சிந்திக்கப்போவதில்லை எங்களுக்கு இருக்கின்ற பொறுப்பினை நாங்கள் நிறைவேற்றுவோம். அவளவுதான்  என இதன்போது பதிலளித்தார்.
   https://www.virakesari.lk/article/62472
  • By ampanai
   தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

   ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து உரையாடினர்.
    
   குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், 1994 ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச் செயலாகும் எனவும் தெரிவித்தார்.
   எனவே தற்போது ஆராயப்பட வேண்டிய விடயம் யாதெனில், மக்கள் ஆணையை மீறுகின்ற இந்த நடவடிக்கையிலே பங்குபெறுவதா என்பதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில் தேர்தல் நடைமுறையானது நியாயபூர்வமானதா என்பதுமேயாகும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
   மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதன் விளைவாக பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசியலமைப்பிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன ஆனால் தற்போது அவை அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளது. 
   1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பிற்பாடு கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் விளைவாக பல்வேறு தீர்வு திட்டங்கள் முன்மொழியப்பட்டன ஆனால் அவற்றுள் எதுவும் முன்னெடுத்து செல்லப்படவில்லை.
   எனவே தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
   https://www.virakesari.lk/article/62483
  • By ampanai
   ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தென்பகுதி தீவிரமாகியுள்ளது. ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றிவிட்டால் எல்லாம் சரியாக வரும் என்பது தென்பகுதி சார்ந்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் நினைப்பாகும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தெரிவுப் பிரச்சினைகளுக்குச் சிங்கள அரசியல் கட்சிகள் முகங்கொடுத்துள்ளன.   இதில் மகிந்த ராஜபக்­ தரப்பின் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்­வை நிறுத்துவதென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது.  ஏதேனும் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டாலன்றி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்­ என்பதில் மாற்றுத் தெரிவு இல்லை.   மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதிருக்கின்ற கேள்வி. முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஆர். பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய தேசிய முன்னணிக் குள் வலுத்து வருகிறது. அதேநேரம் சபாநாயகர் கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தகைமை கொண்டவர் என்ற கருத்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கவே செய்கிறது. எனினும் இந்த இரண்டு தெரிவுகள் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  முகம் சுழிப்பவராக இருக்கின்ற வகையில், ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட்டால் என்ன என்று அவர் எண்ணுவதாகவும் பொருள் கொள்ளலாம்.   எதுஎவ்வாறாயினும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்படாவிட்டால், மூன்று முக்கிய புள்ளிகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவர் என அறுதியிட்டுக் கூற முடியும். இவ்வாறு போட்டியிடுகின்ற மூவரில் சஜித் பிரேமதாசவும் ஒருவர் என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும். இவ்வாறு சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் பட்சத்தில் அவ ருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசியும் இருக்கும்.   எதுஎவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் யாரும் போட்டியிடலாம். யாரும் வெற்றி பெறலாம்.   ஆனால் ஜனாதிபதியாக யார் வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமாட்டார். தமிழ் மக்களுக்கு உரிமையை வழங்க மாட்டார் என்பது மட்டும் நிறுதிட்டமான உண்மை.    நான் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று எவர் கூறினாலும் அவர் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் என்பதுதான் உண்மை.  இந்த உண்மையைப் புரிந்து கொண்டு தமிழ் மக்கள் செயற்படுவது இங்கு முக்கியமானது. மாறாக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தால், ஏமாற்றம்தான் தமிழ் மக்களுக்கு மிச்சமாக இருக்கும்.   http://valampurii.lk/valampurii/content.php?id=19223&ctype=news
  • By ampanai
   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
   இந்தக் கலந்துரையாடலில் உத்தேச ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை கூடிய விரைவில் ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது. 
   அதனடிப்படையில் உத்தேச கூட்டணிக்கான யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்யடி திருத்தங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் யாப்பை முழுமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
   https://www.virakesari.lk/article/62333
   ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், கூட்டணி குறித்து சஜித் 
   ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமைய கூட்டணி அமைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச , வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காது கூட்டணி அமைப்பது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். 
   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித்துக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
   அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 
   ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று எனக்கும் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
   அந்த செய்தி 100 வீதம் உண்மையானது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமைய கூட்டணி அமைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். இதனையே ஜனநாயக தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளும் அதனையே கோருகின்றன. எமது தனிப்பட்ட கருத்தும் அதுவாகவே இருக்கிறது. அவ்வாறு செய்யதால் மாத்திரமே நாம் உத்தேசித்துள்ள அரசியல் கூட்டணி உதயமாகும். 
   அதே போன்று வேட்பாளர் யார் என்பதை அறிவித்ததன் பின்னர் பல கட்சிகள் முக்கிய அரசியல்வாதிகள் என பலரும் எம்முடன் இணைந்து வெற்றிக்கான கூட்டணியொன்று அமைவது உருதியானதாகும். போலியான பிரசாரங்களை ஊடகங்களுக்கு விடுக்காது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டு கூட்டணிக்கான ஒப்பந்த்தைத முன்னெடுக்கும் பணிகளே சிறந்ததாகும் என தெரிவித்தார்.
   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித்துக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
   அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 
   ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று எனக்கும் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
   அந்த செய்தி 100 வீதம் உண்மையானது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமைய கூட்டணி அமைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். இதனையே ஜனநாயக தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளும் அதனையே கோருகின்றன. எமது தனிப்பட்ட கருத்தும் அதுவாகவே இருக்கிறது. அவ்வாறு செய்யதால் மாத்திரமே நாம் உத்தேசித்துள்ள அரசியல் கூட்டணி உதயமாகும். 
   அதே போன்று வேட்பாளர் யார் என்பதை அறிவித்ததன் பின்னர் பல கட்சிகள் முக்கிய அரசியல்வாதிகள் என பலரும் எம்முடன் இணைந்து வெற்றிக்கான கூட்டணியொன்று அமைவது உருதியானதாகும். போலியான பிரசாரங்களை ஊடகங்களுக்கு விடுக்காது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டு கூட்டணிக்கான ஒப்பந்த்தைத முன்னெடுக்கும் பணிகளே சிறந்ததாகும் என தெரிவித்தார்.
   https://www.virakesari.lk/article/62337
 • Topics

 • Posts

  • புளொட் இல் ஆயுத கம்யூனிச தன்மை என்பது, அதி உயர் தலைமை பீடம், தன்னைக்கு கீழே உள்ள படித் தலைமைகள்,   அதி உயர் தலைமை பீடத்தின் விருப்புக்கே ஏற்ப நடந்தால் சரி என்றவாறே தலைமைத்துவத்தை வழங்கி இருக்கிறார்கள். இது புளொட் இல் மேலிருந்து, கீழாக அடித்த தலைமை வரை பரவி உள்ளது. பொதுவான, ஆயுத கம்யூனிச அமைப்புகளின் அனுபவமாகும்.  கமெரூஜ் (Khmer Rouge) இந்த அனுபவமும் இதுவே. சீனாவின் மாசே தூங் இன் கீழும் இது நடைபெற்றது, ஆனால் அளவில் பெரியதாலும், வேறு எதிர்க்க கூடிய சக்திகள் இல்லாததாலும்   தப்பி விட்டது. அதாவது, ஓர் பொதுவிதி வைத்து  அமைப்பை நடத்தவில்லை.    இதில் பிரச்னை என்னவென்றால், தனிப்பட்டவர்களின் whims and fancies, கொள்கைகளாக வருவது. இதுவே khemer rouge யிலும் நடந்தது. பின்பு, social experiments என்று சொல்லி, முழு சமூகத்தையும் கிராமத்துக்கு குடி பெயர்த்து, விவசாயம் என்று தொடங்கி, பஞ்சம் வரை வந்து, நிறுத்தாமல் எதிர்த்தவர்களை (அதாவது தமது இனத்தவரையே), இனப்படுகொலையில் என்று முடிந்தது.           
  • I Want A Lie A Die Maima Azhaga Vaippa Mai  
  • விடுதலை என்று கிளம்பி தங்களை தாங்களே நரபலி ஆடியுள்ளார்கள் போதாக்குறைக்கு சகோதரப்படு கொலைகளையும் ஒருவித சைக்கோ தனத்துடன் தொடக்கி வைத்தவர்கள் .இந்த கொலைகளில் பாதி  கொலைகளை சிங்கள ஆமி மீது செய்து இருந்தால் சிங்களவன் கண்டிக்கு மேல் வராமல் ஒதுங்கியிருப்பான் .
  • புதியதோர் உலகம் படித்ததில் இருந்தும், தீப்பொறியினரின் கட்டுரைகளில் இருந்தும் அவர்கள் மாற்றுக் கருத்துக்களை மதித்ததாக அறியவில்லை. சித்தாந்தங்களின் பின்னால் போன புளட் அமைப்பினர் கூட மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கமுடியாமல் இருந்தது தமிழர் அடிப்படையில் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்றுதான் காட்டுகின்றது. வளர முன்னர் தாங்களே அழிந்திருப்பார்கள். சிங்களப் படைகளுக்கும் போரிடவேண்டிய தேவை இருந்திருக்காது!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.