Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

காஷ்மீர் பதற்றம்: மெஹபூபா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

à®à®à®¿à®¤à¯ லà¯à®©à¯, à®®à¯à®¹à¯à®ªà¯à®ªà®¾ à®®à¯à®à®ªà¯à®à®¿ மறà¯à®±à¯à®®à¯ à®à®®à®°à¯ à®à®ªà¯à®¤à¯à®²à¯à®²à®¾

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார்.

ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்படும். ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட பின்னர் ட்வீட் செய்த ஒமர் அப்துல்லா, "காஷ்மீரில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால், அல்லாவின் அருளால் நல்லதே நடக்கும் என்று நான் வலிமையான நம்புகிறேன். அனைவரும் அமைதி காக்கவும், பாதுகாப்புடன் இருக்கவும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @OmarAbdullah
 

To the people of Kashmir, we don’t know what is in store for us but I am a firm believer that what ever Almighty Allah has planned it is always for the better, we may not see it now but we must never doubt his ways. Good luck to everyone, stay safe & above all PLEASE STAY CALM.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @OmarAbdullah

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 2 இவரது @OmarAbdullah
 

While I’ve been focused on Kashmir I must add a word for people in Kargil, Ladakh & Jammu. I’ve no idea what is in store for our state but it doesn’t look good. I know many of you will be upset by what unfolds. Please don’t take the law in to your own hands, please stay calm.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் 2 இவரது @OmarAbdullah

இரண்டாவதாக பின்னர் ட்வீட் செய்த அவர், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நன்மை பற்றி கவலைப்படாதவர்கள்தான், இங்கு வன்முறை செய்வார்கள். ஆனால் நான் நம்பிக்கையை இழக்கத் தயாராக இல்லை" என்றும் கூறியுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 3 இவரது @OmarAbdullah
 

Violence will only play in to the hands of those who do not have the best interests of the state in mind. This wasn’t the India J&K acceded to but I’m not quite ready to give up hope yet. Let calm heads prevail. God be with you all.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் 3 இவரது @OmarAbdullah

மேலும் பிர் பஞ்சல் மற்றும் செனாப் பள்ளத்தாக்கில் வாழும் மக்களை நினைத்தால் கவலையாக உள்ளது என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகள் வகுப்புவாத வன்முறை முயற்சிகளால் எளிதாக பாதிக்கப்படலாம். அரசாங்கம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு 4 இவரது @OmarAbdullah
 

I’m especially concerned about the people living in the Pir Panchal & Chenab Valley regions. These areas have been very susceptible to attempts at communal violence. I hope the Govt has taken adequate precautions to ensure no communal trouble breaks out.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் 4 இவரது @OmarAbdullah

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள மெஹபூபா முஃப்தி, "காஷ்மீரில் அமைதிக்காக போராடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வீட்டுச்சிறையில் இருப்பதை பார்க்கும்போது எவ்வளவு முரணாக உள்ளது. மக்களும் அவர்களின் குரல்களுக்கும் இங்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த காஷ்மீரில் நிலவும் இந்த அடக்குமுறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @MehboobaMufti
 

How ironic that elected representatives like us who fought for peace are under house arrest. The world watches as people & their voices are being muzzled in J&K. The same Kashmir that chose a secular democratic India is facing oppression of unimaginable magnitude. Wake up India

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @MehboobaMufti

காஷ்மீரின் இந்த நிலையை கொண்டாட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு இதன் விளைவுகள் தெரியவில்லை என்றும் மெஹ்பூபா கூறியுள்ளார்.

மேலும் வாஜ்பேயி பாஜக தலைவராக இருந்தபோதிலும், "காஷ்மீர் மக்களைப் புரிந்துகொண்டு அவர்களின் அன்பை பெற்றார். இன்று அவர் இல்லாததை நாங்கள் அதிகம் உணர்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

காஷ்மீரில் என்ன நடக்கிறது?

 • இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது 10,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்படுவதாக ஜூலை 26 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சக ஆணையின் நகல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இது அச்சத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கியது. ஆனால், இது வழக்கமான நடைமுறை என்றும் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறியது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
 • ஜம்மு - காஷ்மீரில் ஏற்கனவே 10,000 கூடுதல் காவல் படையினர் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 25,000 படையினரை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, இந்திய அரசால் உத்தரவிடப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்றவற்றில் மிகப்பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாம் என்ற அச்சம் அங்கு நிலவிய சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பின் 35-ஏ பிரிவு மற்றும் 370 வது பிரிவை ரத்து செய்ய பா.ஜ.க அரசு முயல்வதாக தகவல்கள் பரவின.
 • அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை கேட்டுக்கொண்டது.
 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரிக்க பா.ஜ.க அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கை அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்தார்.
 • பதற்றம் அதிகரித்த நிலையில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேகரிக்க தொடங்கினர்.
 • காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்படப் போவது கிடையாது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.
 • இப்படியான சூழலில், காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் கொத்து எறி குண்டுகளை வீசி, இந்தியா தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உள்பட இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயல்வதாவும், தங்கள் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் கூறும் இந்தியா, இந்தச் சூழ்நிலைகளில் பதில் தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியது.
 • இந்தியா உடனான மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான 'பார்டர் ஏக்ஷன் டீம்' படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் என்று இந்திய அரசால் கூறப்படுபவர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் தாங்கள் கூறியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/india-49231103

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில் பாகிஸ்தானும்... தனது பதிலடியை கொடுக்கும் என்றே நினைக்கின்றேன்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆக தமிழின அடிப்படையில் இந்தியா ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து,  தமிழ் இனம் என்ற உணர்வின் கீழ் தமிழ்நாட்டில் தேசிய எழுச்சி வரக்கூடாது என்பதனால் முடித்தும் வைத்துவிட்டது.  இவ்வளவு கவனமாக இருக்கும்  கொள்கை வகுப்பாளர்கள் இந்துத்தவ எழுச்சியை தமிழ்நாட்டிலும்,     அதன் மூலம் ஈழத்தமிழர் மத்தியிலும் உருவாக்கினால் ஒன்றில் தமிழர்களுக்கு இந்துத்துவ அடிப்படையில் ஒரு தீர்வு வரும் அல்லது முழு இலங்கையும் இந்துத்துவ கலாச்சார நாடாக மாறும்.   இந்தியாவின் இந்துத்துவ கொள்கையை முன்னெடுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களை தமிழர்களின் அரசியலை தலைமைதாங்க வைப்பது நல்லது போலிருக்கு😁  
  • மிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம்! இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது (அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா? எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது!😊)
  • இவளுக இம்சை தாங்க முடியல  
  • அமைதியாக வாழ்ந்துவரும் எமது உயிருக்கு உலை வைக்காதீர்கள்- கோப்பாய் மக்கள் கோரிக்கை    29 Views யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரியில் தற்போது கொரோனா  தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து  பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால் இம்முறை நாடுமுழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவரும் காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்பினை காட்டாமல் அமைதியாக இருந்தோம். குறித்த பகுதியை சுற்றியுள்ள  அயல் கிராமங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும், அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கும்  ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில்  ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நின்மதியாக வீதிகளில் நடமா முடியலவில்லை பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம். மனிதபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு  எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வை  சீரழித்துவிட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடிhக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்தவகையில் 1.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேனாதவாறு சுற்றுவட்டாரத்தில்  பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் தொடர்பினை பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் 2.தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை தடுத்தல் 3.மேலும் சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும். 4.மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில்  இருந்து உடனடியாக இந்த தனிமைப்படுத்தல் நிலையத்ததை அகற்ற வேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது. https://www.ilakku.org/அமைதியாக-வாழ்ந்துவரும்-எ/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.