Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

vellore lok sabha election voting started

வேலூர் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. வாக்களிக்க மக்கள் ஆர்வம்.

வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கான லோக்சபா தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் சார்பில் எஸ்.தீபலட்சுமி, உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டுள்ளனர்.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இத்தேர்தலில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு பணிகளில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு ஊழியர்கள் 210 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்..

வேலூர் தேர்தலுக்காக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜன் தலைமையில் சுமார் 1,600 வீரர்கள், 12 கம்பெனியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 3,937 தமிழக போலீஸார், 400 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரைர நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/vellore-lok-sabha-election-voting-started-359155.html

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆக தமிழின அடிப்படையில் இந்தியா ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து,  தமிழ் இனம் என்ற உணர்வின் கீழ் தமிழ்நாட்டில் தேசிய எழுச்சி வரக்கூடாது என்பதனால் முடித்தும் வைத்துவிட்டது.  இவ்வளவு கவனமாக இருக்கும்  கொள்கை வகுப்பாளர்கள் இந்துத்தவ எழுச்சியை தமிழ்நாட்டிலும்,     அதன் மூலம் ஈழத்தமிழர் மத்தியிலும் உருவாக்கினால் ஒன்றில் தமிழர்களுக்கு இந்துத்துவ அடிப்படையில் ஒரு தீர்வு வரும் அல்லது முழு இலங்கையும் இந்துத்துவ கலாச்சார நாடாக மாறும்.   இந்தியாவின் இந்துத்துவ கொள்கையை முன்னெடுக்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களை தமிழர்களின் அரசியலை தலைமைதாங்க வைப்பது நல்லது போலிருக்கு😁  
  • மிக ஆழமாக புளொட்டின் செயல்களை ஆராயும் தீவிரம் மிக நல்ல விடயம்! இதே தீவிரத்துடன் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான நரபலி நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நல்லது (அட, மறந்து விட்டேன், புலிகள் செய்த சகோதரப் படுகொலை இந்திய றோவின் சதியல்லவா? எய்தவனிருக்க அம்பை விமர்சிக்கவே கூடாது!😊)
  • இவளுக இம்சை தாங்க முடியல  
  • அமைதியாக வாழ்ந்துவரும் எமது உயிருக்கு உலை வைக்காதீர்கள்- கோப்பாய் மக்கள் கோரிக்கை    29 Views யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரியில் தற்போது கொரோனா  தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து  பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால் இம்முறை நாடுமுழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவரும் காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்பினை காட்டாமல் அமைதியாக இருந்தோம். குறித்த பகுதியை சுற்றியுள்ள  அயல் கிராமங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும், அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கும்  ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில்  ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நின்மதியாக வீதிகளில் நடமா முடியலவில்லை பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம். மனிதபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு  எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வை  சீரழித்துவிட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடிhக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்தவகையில் 1.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேனாதவாறு சுற்றுவட்டாரத்தில்  பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் தொடர்பினை பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் 2.தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை தடுத்தல் 3.மேலும் சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும். 4.மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில்  இருந்து உடனடியாக இந்த தனிமைப்படுத்தல் நிலையத்ததை அகற்ற வேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது. https://www.ilakku.org/அமைதியாக-வாழ்ந்துவரும்-எ/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.