Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

IMG_8502.JPG

பாறுக் ஷிஹான் -FAROOK SIHAN-
 முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது
என்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

முஸ்லீம்கள் இந்த நாட்டில் உயிர் வாழக்கூடிய சந்தர்ப்பம் இல்லாத மாபெரும் பிரச்சினை இருந்து வருகின்றது.திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என சில பெண்களும் படித்தவர்களும் முயன்று வருகின்றனர்.முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்றுவது தான் பிரச்சினையா? என்பதை கேட்க விரும்புகின்றேன்.இந்த நாட்டில் சுமார்  20 இலட்சம் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.இதில் சிலரே திருமண சட்டத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.ஆனால் இதுவரைக்கும் றூற்றாண்டு காலமாக  முஸ்லீம்கள் இச்சட்டத்தின் அடிப்படையிலே திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த முஸ்லீம்  திருமண சட்டத்தை மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

நாம் முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற கூடாது அதில் கை வைக்க கூடாது   என்பதை நீண்ட காலமாக எமது கட்சியின் நிலைப்பாடாகவே  தெரிவித்து வருகின்றோம்.இச்சட்டத்தில் நாம் கை வைப்பதற்கு அனுமதிப்போம் ஆனால் அதை வலுவிழக்க செய்வதற்கு துணைபோவதற்கு ஆளாவோம்.1951 ஆண்டு இறுதியாக இச்சட்டம் இறுதியாக  திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் இச்சட்டத்தை திருத்த முற்பட்டால் பல்வேறு காரணங்களை முன்வைத்து இறுதியாக முஸ்லீம் திருமண சட்டம் தேவையா என கேட்பார்கள்.

இவையெல்லாம் இனவாதிகளின் நிகழ்ச்சி ஆகும்.இவ்வாறான இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த முஸ்லீமும் அடிபணிய வேண்டாம் என கூற விரும்புகின்றோம்.முஸ்லீம் திருமண சட்டத்தில் எவரும் குறிப்பான முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட கூடாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம்.இந்த சட்டத்தில் ஏதாவது சேர்ப்பதென்றாலோ மாற்றம் செய்வதென்றாலோ உலமாக்களுக்கு மாத்திரமே உரிமை உண்டு.உலமா சபைக்கு உரிமை உண்டு.ஆனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட கூடாது என்பது தான் எமது நிலைப்பாடாகும்.


எனவே தான் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்காக ஸ்ரீலங்கா  பொதுஜன  பெரமுன கட்சிக்கு எமது கட்சி ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது.  எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்க கூடிய மிகப்பெரும்  சக்தியாக ஸ்ரீலங்கா  பொதுஜன  பெரமுன கட்சி உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.அது மட்டுமல்ல சிங்கள மக்களில் பெரும்பாலானோர் இக்கட்சியுடன் இணைந்துள்ளனர்.

இதனால் முஸ்லீம் சமூகமாகிய நாம் பெரும்பான்மை 4மூகத்தோடு  இணக்க அரசியலை மேற்கொள்ள வேண்டும்.இதனால் தான் எமது கட்சியும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளதை தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.இக்கட்சியுடன் இணைகின்ற போது பல கோரிக்கைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.அதில் முஸ்லீம்களின் பாதுகாப்பு கல்முனை பிரச்சினை மௌலவி ஆசிரியர் நியமனம்   முஸ்லீம் நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கின்ற போது பெரும்பாலாக முஸ்லீம்களை நியமித்தல் தேசிய மட்ட பிரச்சினைகளை முன்வைத்தே இணைந்துள்ளோம்.

இதனை அவர்கள் பெரும்பாலும் ஏற்றுள்ளனர்.இதனை எழுத்து மூலம் எழுதி கொடுத்துள்ளோம்.முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைகளை அவர்கள் நிராகரிக்கவில்லை.அந்த அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி இணைந்துள்ளோம்.இது ஏனைய கட்சிகளுக்கு எடுத்து காட்டு.அவர்களும் இவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு இணைய வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கின்றேன். என்றார்.

https://www.madawalaenews.com/2019/08/up.html

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது . மத முறைப்படி பள்ளிவாசலிலோ, கோவிலிலோ, தேவாலயத்திலோ  திருமணம் செய்வது அவரவர் நம்பிக்ககை சார்ந்த விடயம்  அதற்கு சட்ட அங்கீகாரம் இருக்கக்கூடாது. திருமண சட்டம் என்றால் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இதை அமுல் செய்வதே முறையானது. 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • (எம்.ஆர்.எம்.வஸீம்) இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் 05 ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொவிட் 19ஐ கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பாராட்டப்பட்டது. முறையான திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் கொவிட் 19ஐ முறியடித்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடுகளினதும் கொவிட் 19 நிலைமைகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருடனான இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆசியான் நாடுகள் இலங்கையுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை பாராட்டிய சபாநாயகர், எதிர்காலத்திலும் இலங்கை இந்த நல்லுறவை பேணுவது தொடர்பில் வலியுறுத்தினார். இதேவேளை, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மலேசிய தூதுவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் பாராளுமன்ற அமர்வுகளில் பார்வையாளராக கலந்துகொள்ளுமாறு குறித்த தூதுவர்கள் இதன்போது இலங்கையிடம் கோரிக்கை விடுத்தனர்.  இந்த கோரிக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பான எழுத்துமூல அழைப்பிதழை இலங்கை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தனர். இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டன் யாங் க்தாய், வியட்நாம் தூதுவர் பாம் தி பிச் நொகோக், இந்தோனேசிய தூதுவர் குஸ்டி நுரா அர்தியாசா, தாய்லாந்து தூதுவர் ச்சுலமணி சார்ட்சுவன், மியன்மார் தூதுவர் ஹான் து ஆகியோர் ஆசியான் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர் https://www.virakesari.lk/article/91079
  • மத்தியானம் ஓசி பிஸ்கெட்டும் இலவச படிப்பும் தந்த சிலோன் தமிழ் பள்ளிக்கூடங்கள்  ஒற்றுமையாக வாழ்வதின் நன்மைகளை சொல்லி கொடுக்கவில்லை அதன் பிழை இப்போ இப்படி கதைக்க வைக்குது .
  • வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார் .   இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,  மேலும் பொதுமக்கள் கை,கால்கள் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும்.மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும். என இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/91082
  • (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு ( The Catholic Expression ) என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளது.  இன்று நண்பகல் 12.30 மணியளவில் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களின் போது நீதி நிர்வாகத்தின் போது மறைக்கப்பட்ட காரணிகள் குறித்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சிரந்த.ஆர்.அன்டனி அமரசிங்க தெரிவித்துள்ளார்.  https://www.virakesari.lk/article/91097
  • (நா.தனுஜா) 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.  அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை முதலீட்டுச்சபையின் ஊடாக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இக்காலப்பகுதியில் 9,462 முதலீட்டு விண்ணப்பங்களை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருக்கிறது.  அவற்றில் வடமாகாணத்தை மையப்படுத்தியதாக வெறுமனே 100 திட்டங்களுக்கான முதலீடுகளே காணப்பட்டதுடன் தற்போது முதலீட்டுச்சபையினால் அனுமதியளிக்கப்பட்ட 22 திட்டங்கள் மாத்திரமே வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்தது. எனினும் அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி அவற்றில் 10 திட்டங்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையை மைப்படுத்தியதாக அமைந்திருக்கின்றன. https://www.virakesari.lk/article/91098
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.