• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

ஜெயம் ரவியின் கோமாளி டிரெய்லருக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு!

Recommended Posts

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
 
இதில் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பின் கண்விழிக்கிறார் ஜெயம் ரவி. இத்தனை ஆண்டுகாலமாக கோமாவில் இருந்ததை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க டிவியில் வீடியோ ஒன்றை போட்டு காட்டுகிறார்கள்.
அதில்  “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோ ஒளிபரப்பாகிறது. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.
 
இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். இதனை அடுத்து இந்த காட்சியை நீக்கமாறும் ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


இதற்கு விளக்கம் அளித்துள்ள இப்படத்தின் இயக்குநர் பிரதீப்,
“நான் தீவிர ரஜினி ரசிகன், ரஜினியின் லிங்கா படம் வெளியானபோது நான் பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறேன். இந்த படம் அனைவருக்கும் படம் பார்த்த திருப்தியை கொடுக்கும். ரஜனி சார் சீக்கிரமாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

https://movies.ndtv.com/tamil/kollywood/rajini-fans-opposes-jayam-ravis-comali-after-watching-its-trailer-2080355

 

 

 

Share this post


Link to post
Share on other sites

இதுல ரஜனி  கோமாளிகள் ஏன் கோபப்பட வேண்டும் அந்தாள் அரசியலுக்கு வந்து என்னத்த கிழிக்க போகுது 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
46 minutes ago, ampanai said:

ரஜனி சார் சீக்கிரமாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

மா மன்னா ரைப் .. போல கிடக்கு .. ☺️hqdefault.jpg

Share this post


Link to post
Share on other sites

``வேண்டாம்னு கமல் வருத்தப்பட்டார்; 'கோமாளி'ல ரஜினி காட்சியை நீக்கிட்டோம்!'' - ஐசரி கணேஷ்

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருக்கும் படம், 'கோமாளி'. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளம், இப்படத்தில் நடிக்கின்றனர்.

'ஹிப்ஹாப்' ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர், நேற்று வெளியானது. 16 வருடங்களாகக் கோமாவில் இருந்த ஜெயம் ரவி, 2016-ல் விழிப்பதுபோல் டிரெய்லர் தொடங்கும். சமூகத்தின் சமகால விஷயங்களைக் கிண்டல் செய்யும் விதமாக டிரெய்லரின் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

 

அதுமட்டுமன்றி, டிரெய்லரின் இறுதிக்காட்சியில், கோமாவிலிருந்து 16 வருடங்கள் கழித்து கண்விழிக்கும் ஜெயம் ரவி, ``இது எந்த வருஷம்?'' என யோகி பாபுவிடம் கேட்க, அவர் 2016 எனச் சொல்லியும் ஜெயம் ரவி நம்ப மாட்டார். அந்தச் சமயத்தில், ``நான் அரசியலுக்கு வருவது உறுதி'' என ரஜினிகாந்த் பேசுவதை ஜெயம் ரவிக்கு டிவியில் போட்டுக்காட்டுவார், யோகி பாபு. ``ஏய்... இது 96. யாரை ஏமாத்துறீங்க?'' என்று கேட்பார் ஜெயம் ரவி. குறிப்பிட்ட இந்தக் காட்சி, ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதால், அதை நீக்கும்படி சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்தனர் ரஜினி ரசிகர்கள். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், ஐசரி கணேசனை போனில் அழைத்து வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேசனிடம் பேசினோம். அவர், ``படத்துடைய டிரெய்லரில், அந்த விஷயத்தைப் பார்த்தப்போ நாங்க அதைத் தப்பாவே நினைக்கலை. எல்லோரும் ரசிக்கும்படியான காமெடி காட்சியாதான் இருக்கும்னு நினைச்சோம். இப்போ வரைக்கும், கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் அந்த டிரெய்லரைப் பார்த்திருக்காங்க. நிறைய பேர் ரசிச்சுருக்காங்க. அதுல குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் அந்தக் காட்சியில உடன்பாடு இல்லைங்கிறது ட்விட்டரைப் பார்த்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் சார் என்னைப் போனில் அழைத்து, 'அது வேண்டாம் கணேஷ்'னு சொல்லி வருத்தப்பட்டார். நானும் அவர்கிட்ட வருத்தப்பட்டுப் பேசினேன். உடனடியா இன்னைக்கே அந்தக் காட்சியைப் படத்துல இருந்து நீக்கிட்டோம். முதல்ல நானே ரஜினி சாருடைய தீவிர ரசிகன். அவர் நடிப்புல வெளிவந்த '2.0' படத்துலகூட நான் நடிச்சிருக்கேன். சிலர் தப்பா நினைக்கிறதால, படத்துல அந்தக் காட்சி கண்டிப்பா இருக்காது" என அந்தச் சர்ச்சை குறித்து விளக்கமளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

https://cinema.vikatan.com/tamil-cinema/isari-ganeshs-explanation-regarding-comali-trailer-issue

Share this post


Link to post
Share on other sites

பேத்தி வயதுப் பெண்களே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்..பாடல்காட்சியிலும் ரஜினியை வச்சு செய்யும் ‘கோமாளி’.

jayam-ravi-final----jpg.jpg

ரஜினியை அரசியல் கோமாளியாகச் சித்தரித்த ‘கோமாளி’பட சர்ச்சையே இன்னும் ஒரு முடிவுக்கு வராத அதே படக்குழு ரஜினியின் வயதைக் கிண்டலடித்து ஒரு 15 செகண்ட் பாடல் ஒன்றை வெளியிட்டு ரஜினியையும் அவரது ரசிகர்களையும் மீண்டும் வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் கடந்த 3ம் தேதி  இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது.

அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு  எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருந்தார்கள்.

அதற்கு கிடைத்த கண்டனங்களால் ட்ரெயிலரில் இருந்த ரஜினி காட்சிகள் நீக்கப்பட தற்போது மீண்டும் ஒரு பாடலை வெளியிட்டு ரஜினியின் வயதை பங்கம் செய்திருக்கிறார்கள். அந்தப் பாடல் வரிகளில் ‘சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆயிடுச்சே.இப்ப பேத்தி எல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே’என்று அவரது வயதையும் பேத்தி வயதுப்  பெண்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பதையும் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களை மேலும் எரிச்சலாக்கியுள்ளது.

    கோமாளி டீம் ஏன் சூப்பர் ஸ்டார்ங்கிற பர்னிச்சர போட்டு இப்படி உடைச்சி வச்சிருக்கானுங்கனு தெரியலயே😂😂😂 pic.twitter.com/uCVj0KTQmO
    — பாலாᴺᵀᴷ (@Bala4575)
    August 5, 2019

https://tamil.asianetnews.com/cinema/comali-team-again-teasing-rajini-in-a-song-pvtfjq

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this