Jump to content

"வெரைட்டி" தோசை, மாசம் 60,000 ரூபாய் வருமானம்... சவாலில் வென்ற  தள்ளுவண்டிக் கடை மோகன்!


Recommended Posts

"வெரைட்டி" தோசை, மாசம் 60,000 ரூபாய் வருமானம்... சவாலில் வென்ற  தள்ளுவண்டிக் கடை மோகன்!

à®®à¯à®à®©à¯ தà¯à®à¯à®à¯ à®à®à¯

வழிநெடுக சவால்கள் நிறைந்த மனித வாழ்வில், எங்கோ யாரோ ஒருவரிடம் விடுக்கும் சவால், ஒருவரின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. கரூர் நகரில், தள்ளுவண்டியில் தோசைக் கடை நடத்தும் மோகனின் கதையும் அதுதான். ஆட்டோ டிரைவராக இருந்து வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவர், நண்பர் ஒருவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற, தள்ளுவண்டியில் தோசை விற்கத் தொடங்கினார். இன்று, சவாலையும் வறுமையையும் ஒருசேர வென்று, மாதம் 60,000 வரை சம்பாதிக்கிறார்.

கரூர் ஜவஹர் பஜார் மாரியம்மன்கோயில் செல்லும் வழியில், சாலையோரம் இருக்கிறது இவரது தள்ளுவண்டிக் கடை.

à®®à¯à®à®©à¯ தà¯à®à¯à®à¯ à®à®à¯

இரவு மட்டுமே இவர் கடை நடத்துவதால், ஒருநாள் மாலை மங்கும் வேளையில் அவரது கடைக்குச் சென்றோம். தள்ளுவண்டிக் கடையைச் சுற்றி நல்ல கூட்டம். விதவிதமான தோசைகளை அநாயாசமாகப் போட்டுக்கொண்டிருந்த மோகனிடம் பேசினோம்.

"நான், பக்கத்துல இருக்கும் துரைசாமி சந்தையைச் சேர்ந்தவன். அப்பா சக்திவேல், அம்மா சந்திரா, மனைவி கல்பனா, மகள் ஐஸ்வர்யா, மகன் நித்திஷ்னு கூட்டுக்குடும்பமா வாழுறோம். எனக்கு, இப்போ 49 வயசு. 2000–ம் வருஷம் வரைக்கும் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ, 10 வருஷத்துக்கு மேல ஆட்டோ ஓட்டியும், வாடகை வீட்டுலதான் இருக்க முடிஞ்சுச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழல்.

அப்பதான், என்னைப்போல ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்த நண்பர் செல்வம், 1998–ல ஆட்டோ ஓட்டுற தொழிலை விட்டுட்டு, வெள்ளக்கோயில்ல ஹோட்டல் தொழிலை ஆரம்பிச்சார். ஆனா, இரண்டே வருஷத்துல மறுபடியும் கரூருக்கு ஆட்டோ ஓட்டவே வந்துட்டார். 'ஹோட்டல் தொழிலைப் பார்க்காம, வருமானமில்லாத ஆட்டோ ஓட்டுற தொழிலுக்கு ஏன் வந்தீங்க?'னு கேட்டேன். அதுல, ரெண்டுபேருக்கும் வாக்குவாதம் ஆனுச்சு. உடனே செல்வம், 'நீ ஹோட்டல் தொழிலை ஆரம்பிச்சுப் பாரு, அப்ப தெரியும் கஷ்டம்?'னு சொன்னார்.

அதை சவாலா ஏத்துக்கிட்டு, 2000–ல மாரியம்மன்கோயில் எதிரே தள்ளுவண்டியில் தோசைக் கடையை ஆரம்பிச்சேன். முதல்நாள் 500 ரூபாய் எடுத்தேன். இன்னைக்கு, மாசம் 60,000 சம்பாதிக்கிற அளவுக்கு முன்னேறிட்டேன். 'சவாலில் ஜெயிச்சுட்டே'னு செல்வம் தினமும் பாராட்டுற அளவுக்கு இன்னைக்கு முன்னேறி இருக்கேன்" என்று பெருமிதப்பட்டார்.

"ஆரம்பத்துல, சமையலைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. 'சவால் விட்டுட்டோம். ஜெயிக்க முடியுமா?'னு பயந்தேன். வீட்டுலயும், 'தேவையில்லாம தொழிலை மாத்தி மாட்டிக்க போறே'னு சொன்னாங்க. இருந்தாலும், வைராக்கியமா இந்தத் தொழில்ல இறங்குனேன். எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்கள வச்சு தோசை, இட்லி, சப்பாத்தினு டிபன் தயாரிச்சு விற்க ஆரம்பிச்சோம். டேஸ்ட் நல்லா இருந்ததால கூட்டம் வர ஆரம்பிச்சது.

பத்து வருஷத்துக்கு முன்னாடி, இந்த இடத்துக்கு கடையை மாத்திட்டோம். அஞ்சு வருஷத்துக்கு முன்ன அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமப்போச்சு. அதனால மாரியம்மனை வேண்டிக்கிட்டு, கல்லு முன்னாடி நானே நிக்க ஆரம்பிச்சேன். அம்மாவோட கைப்பக்குவம் எனக்கும் வந்துட்டு. தரம், சுவை மட்டுமில்லாம, புதுசுபுதுசா நானே பல தோசைகளை அறிமுகப்படுத்தினேன்.

மல்லித்தோசை, பூண்டுத்தோசை மாதிரி நான் புதுசா, பஞ்சவர்ண தோசை, சுரக்காய் தோசை, மாங்காய் தோசை, பீர்க்கங்காய் தோசை, கருணைக்கிழங்கு, காலிஃபிளவர் தோசை, சேனைக்கிழங்கு தோசைனு பலவகை தோசைகளை அறிமுகப்படுத்தினேன். இதுல, நான் முயற்சி பண்ணுன பஞ்சவர்ண தோசை, கஸ்டமர்கள்கிட்ட படு ஃபேமஸாச்சு. அந்த தோசையில், அஞ்சு இடங்கள்ல பூண்டு, மல்லி, தக்காளி, ஆந்திரா காரம், மசால் ஆகியவற்றை அப்ளை பண்ணுவேன். ஒரே தோசையில் அஞ்சுவகை சுவை இருக்கும். கஸ்டமர்களுக்கும் அது ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தவிர, கேரளாவில் மட்டுமே இருக்கும் பால்கோவா தோசையை கரூரில் அறிமுகப்படுத்துனேன்.

கம்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, முளைகட்டுன பயிர்கள்னு பல வெரைட்டி தோசைகளையும் போடுறேன். எண்ணெய், குடிக்க மினரல் வாட்டர்னு எல்லாத்துலயும் தரமானதைப் பயன்படுத்துறேன். தக்காளி, மல்லி, காரம், தேங்காய், சாம்பார்னு பலவகை சட்டினிகளை வீட்டுல அம்மா ரெடி பண்ணிருவாங்க.

என் கடையைப் பத்தி கேள்விப்பட்டு, பாங்காங்குல இருக்கிற தமிழர் ஒருத்தர் போன் பண்ணி விசாரிச்சார். பெருமையா இருந்துச்சு. அதேபோல், எனது கடைக்கு சாதாரண நபர்கள் தொடங்கி, கார்களில் வரும் பெரும்புள்ளிகள் வரை பலமட்டத்திலும் கஸ்டமர்கள் இருக்காங்க. உள்ளூர் அரசியல்வாதிகள் செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி தொடங்கி நடிகர் கருணாஸ் வரை பல வி.ஐ.பி கஸ்டமர்களும் இருக்காங்க.

à®®à¯à®à®©à¯ à®à¯à®à¯à®®à¯à®ªà®¤à¯à®¤à¯à®à®©à¯

இந்த வளர்ச்சிக்கு முதல் காரணம் செல்வம் அண்ணன்தான். அவரிடம் விட்ட சவால்தான். அவரை காலத்துக்கும் மறக்க மாட்டேன். அடுத்து, கட்டடத்துல கடை நடத்தலாமானு யோசிச்சிகிட்டு இருக்கேன். 'மூன்று வேளையும் சாப்பாடு கொடுங்க'ன்னு கஸ்டமர்கள் சொல்றாங்க. அந்த முயற்சியிலும் இருக்கேன். சவால்கள் எங்கே இருந்து வேண்டுமானாலும் வரலாம். அந்தச் சவாலை நிறைவேற்ற முழுமனசா முயற்சி பண்ணுங்க, நீங்களும் வெற்றிக்கொடி நாட்டலாம்" என்று தன்னம்பிக்கையுடன் முடித்தார்.

ரெகுலர் கஸ்டமர்களான அண்ணன் தங்கை நவீன்-சௌமியா இருவரும், "இங்கே எல்லா தோசைகளும் அவ்வளவு ருசியா இருக்கும். வீட்டுல எவ்வளவு தடுத்தாலும், வாரத்துல மூணு நாள் இங்கே சாப்பிட வந்துருவோம். நாங்க ரெண்டு பேரும் மோகன் அண்ணன் கைப் பக்குவத்துக்கு அடிமைகள்!" என்றார்கள் கோரஸ்ஸாக.

வாà®à®¿à®à¯à®à¯à®¯à®¾à®³à®°à¯à®à®³à¯ à®à¯à®®à®¿à®¯à®¾, நவà¯à®©à¯.

https://www.vikatan.com/food/food/auto-driver-turns-street-dosa-vendor

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.