• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பெருமாள்

மீண்டும் சூடு செய்தால் விஷமாகும் உணவுகள்!!

Recommended Posts

பொதுவாக வீட்டில் எந்த உணவு மிஞ்சினாலும். அதை எடுத்து வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதுதான் குடும்பங்களின் பழக்கம். அவை எத்தனை சுவையாக இருந்தாலும், சுட வைக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

காய்கறிகள் : கீரை வகைகள், கரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சுட வைக்கும்போது அது விஷமாக மாறும். குறிப்பாக கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷமாக மாறும்.

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

முட்டை : புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும். எனவே முட்டையை சமைத்தவுடனே சாப்பிடுவிடவும் அல்லது நீண்ட நேரத்திற்கு பிறகு சாப்பிட்டாலும் சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுங்கள்.

கோழிக் கறி : சிக்கனை எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அதற்காக மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் நிச்சயம் அது சிக்கன் அல்ல விஷம். அதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் முட்டையைப் போல் அதுவும் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

முதல் நாள் வைத்த மீன் குழம்பை ரோஸ் பாணுடன் கீரையயும் பருப்பையும் கலந்து அடிக்கும் போதுதானே ருசியே இருக்கு. செலவையும் குறைக்கலாம் 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

Share this post

Link to post
Share on other sites

எல்லா மரக்கறிகளையும் கறியாகச் செய்து சாப்பிடுவதில் உடன்பாடில்லை. பெரும்பாலான மரக்கறிகளைப் பச்சையாகவே சாப்பிடுவதுண்டு. 

வேக வைப்பதில் உள்ள பிரதான நன்மை, வெப்பம் மரக்கறிகளில் உள்ள கிருமிகளையும் இரசாயன மருந்துகளையும் அழிக்கும். பிரதான தீமை அவற்றிலுள்ள பெரும்பாலான விற்றமின்கள் அழிக்கப்பபடுவதுடன் வெப்பம், உப்பு, புளி போன்ற சேர்வைகள் புரதங்களைச் சிதைத்துவிடும். Omega 3 போன்ற நல்ல கொழுப்புகளும் வெப்பத்தால் மாற்றமடையும்.

கீரை வகைகளில் உள்ள முத்தாத இலைகளை சம்பல் போன்ற உணவுகளாகச் செய்து சாப்பிடலாம். ஊரில் இருக்கும்போது வெண்டிக்காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாகச் சாப்பிடுவதுண்டு.

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட விடயம் சரியாக விளங்கவில்லை. உணவை அதிகநேரம் வெளியே வைத்தால் அதில் கிருமிகள் தொற்றிப் பெருகும். அதனைசொ மீண்டும் சூடாக்க அதிலுள்ள கிருமிகள் இறந்து நச்சுத் தன்மை உண்டாகும் என நினைக்கிறேன். 

9 hours ago, பெருமாள் said:

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

அய்யய்யோ... பாஞ்ச் அண்ணை  எனக்கு, தொப்பிளை கண்டால்... "அலர்ஜி.:grin:
அடுத்த பிள்ளை பிறந்திடுமோ என்று.... இப்ப,  தொப்பிளை... பார்க்கிறதே இல்லை.  🤣

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

நான் நினைக்கிறன் பழுதடைந்த கறியினை சூடாக்கினால் நஞ்சாகும் என்று?

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, இணையவன் said:

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

எந்தவொரு விலங்கின  உணவையும், வெப்பத்திற்கு உட்படுத்தி சமைக்காமல் உண்பது ஆபத்தானது.

காரணம், நோய்கள், ஒட்டுண்ணிகள்.

கடலுணவுகளில், ஒட்டுண்ணிகள் இருபதற்கு வாய்ப்புள்ளது. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

அதிலும் மீன் குழம்பு பழைய குழம்பு தான் சுவையாக இருக்கும்.

அதுசரி இன்னும் 40-50 வயது பிளானா?
வீட்டுக்காரி தாங்கினாலும் பூமாதேவி தாங்க மாட்டாள்.

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்கள் பின்னூட்டம் யாருக்கெல்லாம் சரிப்பட்டுவருமோ எனக்குச் சரிவராது. நான் யப்பான் நாட்டுக்குச் சென்று குடியிருக்க விரும்பியுள்ளேன். அங்கு 125 என்ன அதற்குமேலும் தாக்குப்பிடிக்கலாமாம். 🤣

Image+2.png

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 8/6/2019 at 11:20 AM, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்களுக்கு இப்ப என்ன வயது? 😀

Share this post

Link to post
Share on other sites
On 8/6/2019 at 5:00 AM, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

ஆரோக்கிய வாழ்வு அறுபது வயதுக்கு பின் தேடி பலனில்லை மண்டையில் இருக்கும் நியுரோன்கள் எல்லாம் மெல்ல மெல்ல செயல் இழக்கும் நேரம்   ஊரில் இருக்கும்மட்டும் கொல்லையில் நிக்கும் ஆடும் மாடும் முருங்கையிலை யும் செவ்விளநீரும் கோழியும்  இயற்கையான முறையில் எங்களுக்கு உதவின இங்கு வந்து கடலில் மூணு மாதம் வாழ்ந்த  மீன் பிரீசரில் இரண்டு வருடம் கிடந்த பின் சட்டிக்குள் போட்டு வேகவைத்து  கறி எனும் பெயர் குடுத்து சாப்பிடுக்கிரம் பின்பு அதையே மைக்ரோ வேயில் சூடு படுத்தி நஞ்சாக்கி சாப்பிடுகிரம்  தேவையா ? இதைவிட மோசமானது மீன் டின் ஏற்கனவே காலாவதியாகி போன டின்னை திகதியை அழித்து விட்டு புதிதாக இருவருடங்கள் அடித்து விட்டு விற்பனைக்கு விடும் இந்தவகையான டின்கள் என்ன கெடுதியை கொண்டுவரும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை .

இன்னும் வரும்  ஜனவரி முதல் imo 2020 எனும் புயல் அடிக்க போகுது முக்கியமா புலம்பெயர் எங்களை பாரியளவில் தாக்குதலுக்கு முகம் கொடுக்கபோகிரம் அதாவது உலகெங்கும் உள்ள கப்பல்கள் அனைத்தும் குறைவான சல்பர் உள்ள எண்ணெயை பாவிக்க சொல்லி உலக கப்பல் போக்குவரத்தை கட்டுபடுத்தும் imo  அறிவித்துள்ளது இதனால் கப்பல் மூலம் வரும் அரிசி போன்ற பலசரக்கு வகைகள் பன்மடங்கு விலைஎறபோகுது அப்போது இந்த டின் வகைகள் இப்ப இரண்டு வருடம் அடிக்கும் கொள்ளை கூட்டம் இனி மூன்றுவருடத்துக்கு அடிப்பினமாக்கும்.😀

Share this post

Link to post
Share on other sites

மைக்ரோ அவனில் வைத்து சூடாக்காமல் அடுப்பில் வைத்து சூடாக்கினால் அதிக பாதிப்பில்லை என்று செல்லினம்... நான் அவித்த முட்டை,உ .கிழங்கு செலரி போன்றவற்றை திரும்பவும் சூடாக்குவதில்லை ...கடைகளில் சிப்ஸ் வாங்கும் போது எத்தனை தரம் திரும்ப,திரும்ப எண்ணெயில் பொரித்து இருப்பார்கள்...கூடாது என்று மனதிற்கு தெரிந்தாலும் வாயை😋 கட்டிப் போடேலாமல் வாங்கி திண்பதுண்டு 
 
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.