Jump to content

"சிவப்பு வெங்காய சலாட்"  செய்வது எப்படி... யாருக்காவது தெரியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 Ãhnliches Foto

"சிவப்பு வெங்காய சலாட்"  செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா?
சில  இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது.

இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்....
கடையெல்லாம்....  சிவப்பு  வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது.
அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். 
ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. 
அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது  அதன் செய்முறையை... தாருங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாய் இருக்கும். ஓடிப் போய் செய்து சாப்பிடுங்கோ.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயத்தை மெல்லிய சீவலாக வெட்டி உப்பை தேசிக்காய் புளி விட்டு  மெதுவாக பிழிந்து வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து பச்சை மிளகாய், மிளகு தூள் மற்றும் கொஞ்ச கடுகு தூளாக்கி போடுவார்கள்.  எனக்கு கட்ட சம்பல், லுனு மிரிஸ் தான் விருப்பம். செய்முறை தேவையானால் சொல்லவும் சிறி 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இரண்டு முறையில் வீட்டில் அடிக்கடி செய்வது.

1) 2-3 வெண்காயத்தை நீட்டுக்கு வெட்டி அத்துடன் தயிர் சேர்த்து தேவையான உப்பு தேசிக்காய் விட்டு கலந்து சாப்பிட்டு பாருங்கள்.இது கூடுதலாக புரியாணி போடும் இடங்களில் செய்வார்கள்.

2)அரைப்பதமாக பழுத்த தக்காளி சிறிது சிறிதாக அரிந்து வெண்காயத்தையும் அதே போல வெட்டி உப்பு கொஞ்சம் சுண்டக் கூடிய மாதிரி தேசிக்காய் விட்டு அங்கால இஞ்சால பார்த்திட்டு கையால ஒருக்கா பிசைந்து போட்டு சாப்பிட்டுப் பாருங்க.

பி.கு:-வெண்காயம் வெண்காயமாக தின்றுவிட்டு ஆத்துக்காரிக்கு கரைச்சல் கொடுக்கக் கூடாது தம்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

வெங்காயத்தை மெல்லிய சீவலாக வெட்டி உப்பை தேசிக்காய் புளி விட்டு  மெதுவாக பிழிந்து வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து

இது சிறிதளவு வேறுபட்ட முறை.

பின்பு, மிகவும் மெவிதான நெருப்பில் சிறிதளவு நேரம் வெங்காயத்தை saute பண்ணுங்கள் (ஈரத்தன்மை வெங்காயத்தில் இருக்கவேண்டும்), உப்பை தூவவும். சிறிதளவு வினிகரும் (மணமில்லாத) சேர்க்கலாம்.

மேலே nilmini சொல்லியவாறு, கடுகு, மிளகு, பச்சை மிளகாயுடன் செய்து முடிக்கலாம்.

இன்னும் ஒரு படி, சாலட் ட்ரெஸ்ஸிங் ஐ நீங்களே செய்வது. சிறிதளவு கரட்  சிறிய துருவல் ( grated carrot), 1-3 பற்கள் பச்சை உள்ளி துருவல் (துருவலின் அளவு குறுணியளவில்), ஒலிவ் ஆயில்  அல்லது கடையில்  வாங்கிய சாலட் ட்ரெஸ்ஸிங்,  எலுமிச்சம் சாறு, நொறுக்கிய மிளகு, உப்பு வேண்டியளவு. 

இவையெற்றலாம் bowl இல் சேர்த்து, சிறிதளவு நேரம் whisk பண்ணவும். இது, கரோட்டின் நறு நறு வென்ற கடிபடும் உணர்வுடன்,  நாவில் அவ்வப்போது கூசுவது (உள்ளிக் குறுணி)  போன்ற ருசியைத் தரும். 

கரட் இல்லாமலும், உள்ளியில் மட்டும் செய்யலாம், புதிய உணவுகளை துணிகரமாக சுவைப்பவராயின்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிவப்பு வெங்காய சலாட்"  செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா?
சில  இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது.

இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்....
கடையெல்லாம்....  சிவப்பு  வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது.
அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். 
ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. 
அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது  அதன் செய்முறையை... தாருங்களேன். :)

சிறி ஒரு இறாத்தல் வெண்காயமா வாங்கினீர்கள்?
எமது வீட்டில் 10 இறாத்தல் பை தான் வாங்குவோம்.
அனேகமான நேரங்களில் 3.99$ க்கு விற்பார்கள்.

2 minutes ago, Kadancha said:

இது சிறிதளவு வேறுபட்ட முறை.

பின்பு, மிகவும் மெவிதான நெருப்பில் சிறிதளவு நேரம் வெங்காயத்தை saute பண்ணுங்கள் (ஈரத்தன்மை வெங்காயத்தில் இருக்கவேண்டும்), உப்பை தூவவும். சிறிதளவு வினிகரும் (மணமில்லாத) சேர்க்கலாம்.

மேலே nilmini சொல்லியவாறு, கடுகு, மிளகு, பச்சை மிளகாயுடன் செய்து முடிக்கலாம்.

இன்னும் ஒரு படி, சாலட் ட்ரெஸ்ஸிங் ஐ நீங்களே செய்வது. சிறிதளவு கரட்  சிறிய துருவல் ( grated carrot), 1-3 பற்கள் பச்சை உள்ளி துருவல் (துருவலின் அளவு குறுணியளவில்), ஒலிவ் ஆயில்  அல்லது கடையில்  வாங்கிய சாலட் ட்ரெஸ்ஸிங்,  எலுமிச்சம் சாறு, நொறுக்கிய மிளகு, உப்பு வேண்டியளவு. 

இவையெற்றலாம் bowl இல் சேர்த்து, சிறிதளவு நேரம் whisk பண்ணவும். இது, கரோட்டின் நறு நறு வென்ற கடிபடும் உணர்வுடன்,  நாவில் அவ்வப்போது கூசுவது (உள்ளிக் குறுணி)  போன்ற ருசியைத் தரும். 

கரட் இல்லாமலும், உள்ளியில் மட்டும் செய்யலாம், புதிய உணவுகளை துணிகரமாக சுவைப்பவராயின்.   

இந்தளவு பொறுமை சிறிக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

அருமையாய் இருக்கும். ஓடிப் போய் செய்து சாப்பிடுங்கோ.....!   👍

சுவி அண்ணா...  நீங்கள் பதிந்த சலாட் காணொளியில்...  வெள்ளரிக்காய் எல்லாம் வருகின்றது.
நன்றாக இருக்கும் போல் உள்ளது. நன்றி அண்ணா. :)

நான் சாப்பிட்ட இடத்தில்.... மெல்லியாதாக  சீவிய,  வெங்காயமும்.... 
தயிர், குறைவான தக்காளிப் பழ துண்டுகள் இருந்ததாக நினைவு.
ஏனோ... தெரியவில்லை, இன்று சாப்பிட வேண்டும் போல் இருந்தது.
நான்... எல்லாம் தேடி வாங்கி வர, மதியம் 11 ஆகி விட்டது.  

இப்ப....  நேரம் போய் விட்டது.  உந்த, எடுப்பெல்லாம்...  இப்ப செய்ய முடியாது என்று...
மனிசி... குசினியை... பூட்டி  விட்டா...

பிற் குறிப்பு: மனிசிக்கு  கோவம் வந்த காரணம் என்னவென்றால்.....
அயலில் வசிக்கும், அவவின் தமிழ் நாட்டு (திருச்சி)  நண்பி.... 
பூசனிக்காயுடன், மரவள்ளிக்கிழங்கை  சமைத்து சாப்பிட்டது இல்லை என்று சொன்னவவாம்.
அதற்கு... இவ, சமைத்துத்துக் கொண்டு இருக்கும் போது...
நான்... "சிவ பூசைக்குள் கரடி பூந்த மாதிரி".... குழப்பியடித்து விட்டேன்  போலுள்ளது.   

டிஸ்கி: என்ரை  மனிசியை....  "அடி  கள்ளி" என்று சொன்னால்....  
இன்று பின்னேரத்துக்கு இடையில்.... வெங்காய சலாட் இருக்கும்.

டிஸ்க்கிக்கு டிஸ்கி: ஆனால்... இன்னும், கள்ளி என்று சொல்லவில்லை.  🤣

Link to comment
Share on other sites

14 minutes ago, ஈழப்பிரியன் said:

1) 2-3 வெண்காயத்தை நீட்டுக்கு வெட்டி அத்துடன் தயிர் சேர்த்து தேவையான உப்பு தேசிக்காய் விட்டு கலந்து சாப்பிட்டு பாருங்கள்.இது கூடுதலாக புரியாணி போடும் இடங்களில் செய்வார்கள்.

நான் இவ்வாறு செய்து சோற்றுடன் சாப்பிடுவதுண்டு. ஆனால் தேசிப்புளி விட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Lara said:

நான் இவ்வாறு செய்து சோற்றுடன் சாப்பிடுவதுண்டு. ஆனால் தேசிப்புளி விட்டதில்லை.

தயிரில் புளித் தன்மை இருப்பதால் சிலர் பாவிப்பதில்லை.ஆனாலும் சிறிது தேசிக்காய் விட்டால் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nilmini said:

வெங்காயத்தை மெல்லிய சீவலாக வெட்டி உப்பை தேசிக்காய் புளி விட்டு  மெதுவாக பிழிந்து வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து பச்சை மிளகாய், மிளகு தூள் மற்றும் கொஞ்ச கடுகு தூளாக்கி போடுவார்கள்.  எனக்கு கட்ட சம்பல், லுனு மிரிஸ் தான் விருப்பம். செய்முறை தேவையானால் சொல்லவும் சிறி 

நில்மினி.... வெங்காயத்தை, மெல்லிய சீவலாக  மட்டும் சரியாக உள்ளது,
ஆனால்... அதனை பிழியும் போது... அதன் சத்துகள்,  எல்லாம் போய் விடுமே....
சக்கையை... சாப்பிட்டு, என்ன பிரயோசனம். 😮

கட்டா சம்பல் போத்தில்.. அதுகும்  "நிரூ" தயாரிப்புகள் அல்லது 
லீலா தயாரிப்புகள் போத்தல்களில் தமிழ் கடையில் வாங்குவோம்.  
வீட்டில்.. செய்து.. மினக்கெடுவது இல்லை.

"லுனு மீரிஸ்" என்றால் என்ன....
இதுவரை... கேள்விப்  படவேயில்லை. மாசி சம்பாலா?
என்ன இருந்தாலும்.... இரண்டு செய்முறைகளையும்  பதிந்து விடுங்கள் நில்மினி.
ஆனால்... ஒரு முறை செய்தால்... ஒரு மாதம் பாவிக்கக் கூடிய அளவில் இருக்குமா?
ஏனென்றால்... வீட்டில்,  மற்றவர்கள்... மச்சம்  சாப்பிடுவது, குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இரண்டு முறையில் வீட்டில் அடிக்கடி செய்வது.

1) 2-3 வெண்காயத்தை நீட்டுக்கு வெட்டி அத்துடன் தயிர் சேர்த்து தேவையான உப்பு தேசிக்காய் விட்டு கலந்து சாப்பிட்டு பாருங்கள்.இது கூடுதலாக புரியாணி போடும் இடங்களில் செய்வார்கள்.

2)அரைப்பதமாக பழுத்த தக்காளி சிறிது சிறிதாக அரிந்து வெண்காயத்தையும் அதே போல வெட்டி உப்பு கொஞ்சம் சுண்டக் கூடிய மாதிரி தேசிக்காய் விட்டு அங்கால இஞ்சால பார்த்திட்டு கையால ஒருக்கா பிசைந்து போட்டு சாப்பிட்டுப் பாருங்க.

பி.கு:-வெண்காயம் வெண்காயமாக தின்றுவிட்டு ஆத்துக்காரிக்கு கரைச்சல் கொடுக்கக் கூடாது தம்பி.

Bildergebnis für à®à®µà®©à¯ à®à®¤à¯à®à¯à®à¯ à®à®°à®¿à®ªà¯à®ªà®à¯à®à¯ வரமாà®à¯à®à®¾à®©à¯

நல்ல, குறிப்புகள் ஈழப்பிரியன். :)
பி.கு:-  இவன், அதுக்கு.....  சரிப்
  பட்டு,  வர மாட்டான்  😄 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அயலில் வசிக்கும், அவவின் தமிழ் நாட்டு (திருச்சி)  நண்பி.... 
பூசனிக்காயுடன், மரவள்ளிக்கிழங்கை  சமைத்து சாப்பிட்டது இல்லை என்று சொன்னவவாம்.

சிறி எமது வீட்டிலும் இதே மாதிரி தான் மரவள்ளியும் பூசணியும் சேர்த்து சமைப்பார்கள்.பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்.

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

அயலில் வசிக்கும், அவவின் தமிழ் நாட்டு (திருச்சி)  நண்பி.... 
பூசனிக்காயுடன், மரவள்ளிக்கிழங்கை  சமைத்து சாப்பிட்டது இல்லை என்று சொன்னவவாம்.

நானும் ஏனைய மரக்கறிகளுடன் இவற்றையும் சேர்த்து செய்த சாம்பாறு, குழைசாதம் போன்றவற்றை தான் சாப்பிட்டிருக்கிறேன், தனியாக இரண்டையும் சேர்த்து சமைத்ததில்லை.

32 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி எமது வீட்டிலும் இதே மாதிரி தான் மரவள்ளியும் பூசணியும் சேர்த்து சமைப்பார்கள்.பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்.

நானும் ஒரு நாளைக்கு செய்து பார்க்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

நானும் ஏனைய மரக்கறிகளுடன் இவற்றையும் சேர்த்து செய்த சாம்பாறு, குழைசாதம் போன்றவற்றை தான் சாப்பிட்டிருக்கிறேன், தனியாக இரண்டையும் சேர்த்து சமைத்ததில்லை.

நானும் ஒரு நாளைக்கு செய்து பார்க்க வேணும்.

லாரா....  அவசரப்  பட்டு.... மரவள்ளிக்  கிழங்கையும், 
பூசணிக் காயையும் ஒன்றாக சமைக்காதீங்கோ.....  
இது.... எல்லாம், எமது "குசினி ஆய்வு கூடத்ததில்..." 
செய்யப் படும் பரீட்சார்த்த  முயற்சிகள் மட்டுமே...  

நாளைக்கு... எமக்கு.. வாந்தி, பேதி, கொலரா,  வயித்தாலையடி...   
சிக்கன் குனியா, மட்டன் குனியா, பிஷ் குனியா....     
போன்ற....   வருத்தம் வராமல் இருந்தால்...
நீங்களும்...இதனை செய்து பாருங்கள்... உறவுகளே...

உயிர், முக்கியம் அப்பு....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் 500 கிராம் வெங்காயத்தில் 200 கிராம் சலாட் செய்திருப்பீர்கள். மிகுதி 275 கிராமில்(சேதாரம் 25 கிராம்) இதையும் ஒருக்கால் செய்து பாருங்கள். இதில் சின்ன வெங்காயத்துக்கு பதிலா சிகப்பு வெங்காயத்தையும் பாவிக்கலாம்.டேஸ்ட்டா இருக்கும். அஞ்சலி இல்லைன்னா அமலாபால்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

லாரா....  அவசரப்  பட்டு.... மரவள்ளிக்  கிழங்கையும், 
பூசணிக் காயையும் ஒன்றாக சமைக்காதீங்கோ.....  
இது.... எல்லாம், எமது "குசினி ஆய்வு கூடத்ததில்..." 
செய்யப் படும் பரீட்சார்த்த  முயற்சிகள் மட்டுமே...  

நாளைக்கு... எமக்கு.. வாந்தி, பேதி, கொலரா,  வயித்தாலையடி...   
சிக்கன் குனியா, மட்டன் குனியா, பிஷ் குனியா....     
போன்ற....   வருத்தம் வராமல் இருந்தால்...
நீங்களும்...இதனை செய்து பாருங்கள்... உறவுகளே...

உயிர், முக்கியம் அப்பு....:grin:

சிறி இதே முறையில் எமது வீட்டில் நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்தே சமைப்போம்.அதற்குள் இஞ்சி கலக்காமலிருந்தால் சரி.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி இதே முறையில் எமது வீட்டில் நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்தே சமைப்போம்.அதற்குள் இஞ்சி கலக்காமலிருந்தால் சரி.

அவர் உங்கள் கருத்தை ஏற்கனவே வாசித்திருப்பார். சும்மா பம்பலுக்கு அப்படி எழுதியிருப்பார். 😀

Link to comment
Share on other sites

On ‎8‎/‎6‎/‎2019 at 8:58 AM, தமிழ் சிறி said:

"லுனு மீரிஸ்" என்றால் என்ன....
இதுவரை... கேள்விப்  படவேயில்லை

லுனி மிரிஸ் என்பது சிங்களவர்கள் செய்யும் ஒரு சம்பல். சிவப்பு வெங்காயம், உப்பு, சிறு துண்டுகளாகப்பட்ட மாசிக் கருவாடு, உறைப்பான மிளகாய்த் தூள் இவற்றுடன் சற்று தூக்கலாக கலந்த எலும்மிச்சை சாறு கொண்டு செய்யப்படும் சம்பல். தேங்காய் ரொட்டி (பொல் ரொட்டி) க்கு நல்ல சுவையாக இருக்கும்.

லுனு மிரிசை சாப்பிட்டு விட்டு எவருக்கும் முத்தம் கொடுக்க முடியாது என்பது இதன் தீங்கான பின் விழைவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

லூணு  மீரிஸ் ... செய்வதற்கு அதிகம் மினக்கெடத் தேவையில்லை போலுள்ளது.
தேவையான பொருட்களும் மிக குறைவாகவே உள்ளது.
சம்பல்  வகைகளை.... அதிகம்  சிங்களவர்கள்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.
கட்டா சம்பல், சீனிச் சம்பல், மாசி சாம்பல் என்று... பலவகைகளில்  கண்டு பிடித்திருக்கின்றார்கள். 

வெங்காயம், உள்ளி சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போனாலே.. முகத்தை சுழிப்பார்கள்.
இதற்குள்... முத்தத்துக்கு... ஆசைப்படுவது ரொம்ப அதிகம்,  நிழலி  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2019 at 2:30 PM, ஈழப்பிரியன் said:

சிறி ஒரு இறாத்தல் வெண்காயமா வாங்கினீர்கள்?
எமது வீட்டில் 10 இறாத்தல் பை தான் வாங்குவோம்.
அனேகமான நேரங்களில் 3.99$ க்கு விற்பார்கள்.

29839-zwiebeln.png

ஈழப்பிரியன்.... இங்கு சென்ற மாதம் ஒரு கிலோ வெங்காயம் 2 € விற்கு விற்றார்கள்.
குளிர் காலம் என்ற படியால்... அவுஸ்திரேலியாவிலிருந்து  இறக்குமதி செய்யப் பட்ட 
வெங்கயாம் என்ற படியால்  அவ்வளவு விலை.

இன்னும் ஒரு மாதத்தில்... இங்கும் கிலோ 20 சென்ற் அளவிற்கு வரும். 
அந்த நேரம் நானும்..  5 கிலோ சாக்குகளில்  நாலைந்தை வாங்கி,
நில அறையில் சேமித்து வைத்தால்... கொஞ்ச காலம் சமாளிக்கலாம்.

கனக்க  வாங்கினால்.. அது முளைக்க தொடங்கி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா..... வெங்காய சாலட்  செய்யும் ஒரு,  முறையை அனுப்பியிருந்தார்.
நொறுக்கிய செத்தல் மிளகாய், வினாகிரி, சீனி, உப்பு, மிளகு எல்லாம் சேர்த்து செய்யும் சலாட் 
வித்தியாசமான சுவையாக இருக்கும் என நம்புகின்றேன்.  

-------  --------

சிவப்பு வெங்காய சாலட் 

தேவையான பொருட்கள் ...

இரண்டு அளவான பெரிய வெங்காயம்

( பம்பாய் வெங்கயம் என்பார்கள் )

 தனி மிளகாய் த்தூள் அல்லது 

நொறுக்கிய செத்தல் மிளகாய் ஒரு மேசைக்கரண்டி 

ஒரு மேசைக் கரண்டி வினிகர் ..

அரைத்தேக்கரண்டி   சீனி 

தேவைக்கு உப்பு ....

 சிறிது மிளகு தூள் 

முதலில்  வெங்காயத்தை  மெல்லிதாக பிறை போல் வெட்டவும் . பின்பு உப்பு மிளகு சீனி ..மிளகாய் தூள்  வினிகர் ..

ஆகியவற்றை  சேர்த்து ...கரண்டியால் கிளறவும். 

இது ...சோற்றுடன் ...பக்க துணை யாக ( சைடு டிஷ் )...சாப்பிடலாம்.

மேசைக் கரண்டி  டேபிள் ஸ்பூன் 

 தேக்கரண்டி .... டி ஸ்பூன் 

நிலாமதி அக்கா.-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.