Jump to content

பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு அதற்குள் குதித்தால் என்னவாகும்.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.?

mainnnnchaleneg-24-1503570388.jpg

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும்.

உதாரணத்திற்கு - நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் - பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டையொன்றை போட்டால், பூமியின் மறுப்பக்கத்திற்கு ஈஸியாக போகலாம். அப்படித்தானே.?

இதற்கான விடை என்ன.?

இத்தகைய ஒரு காரியத்தை யார் செய்ய விரும்புவார்கள்.? வெளிப்படையாக சொல்லப்போனால் - அநேகமாக யாரும் இதை செய்யப்போவதில்லை. அதற்காக - தற்கால மற்றும் வருங்கால - பிள்ளைகள் இந்த கேள்வியை நம்மிடம் கேட்காமல் இருக்கப்போவதுமில்லை. ஆக, இதற்கான விடையை அறிந்துவைத்துக்கொள்வதைவிட வேரோரு அருமையான வழி நமக்கில்லை.

கோட்பாட்டளவில் என்ன நடக்கும்?

பூமியின் மறுபக்கத்திற்கு அல்ல, பூமியின் நடுப்பகுதியை கூட நம்மால் நெருங்க முடியாது என்பதே நிதர்சனம். பூமிக்குள் போடப்படும் துளையானது, பயங்கரமான வழிகளில் நம்மை கொன்றுவிடும் என்பது ஒருபக்கமிருக்க பூமிக்கு நடுவே துளையொன்றை போட்டால் - கோட்பாட்டளவில் என்ன நடக்கும்?

அதிகபட்சம் எவ்வளவு ஆழம்.?

வெளிப்படையாக கூற வேண்டுமெனில், பூமியின் மையத்தின் வழியாக துளையிட முடியாது. இந்த மிகப்பெரிய சாதனையை நிறைவேற்றுவதற்கான தொழில்நுட்ப திறன்களை தற்போது நாம் கொண்டிருக்கவில்லை. சரி, அதிகபட்சம் எவ்வளவு ஆழமாக நம்மால் பூமியில் துளைகளைப்போட முடியும்.? அது ஏன் நிறுத்தப்பட்டது.? இன்றுவரை, உலகில் இடப்பட்ட ஆழமான துளை - கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole) ஆகும். 1970-களில் துளையிடலை துவங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் 40,230 அடி (12,262 மீட்டர்) ஆழத்தை அடைந்தது. அதாவது சுமார் 7.5 மைல்கள் அல்லது 12 கி.மீ ஆழம். பூமியின் விட்டத்தோடு ஒப்பிடும்போது அது ஒரு முடி அகலம் கூட இல்லை. சரி அதற்குமேல் ஏன் துளையிடவில்லை.?

அது ஏன் நிறுத்தப்பட்டது.?

சுமார் 7.5 மைல் ஆழத்தை அடைந்ததுமே புவியின் மையப்பகுதியை நாம் நெருங்கி வருகையில் விடயங்கள் சூடுபிடிக்கும். ஏனென்றால் பூமியின் மையம், திரவ உலோகதினால் நிரம்பியுள்ளது மற்றும் அதன் வெப்பநிலை 9700deg ; ஃபாரன்ஹீட் (5400° செல்சீயஸ்) என்ற அளவை தாண்டிச் செல்கிறது. ஆக சுமார் 7.5 மைல் ஆழத்தை அடைந்ததுமே 350deg; ஃபாரன்ஹீட் (170 deg; செல்சீயஸ்) வெப்பத்தை விட அதிக வெப்பநிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

24-1503570622-maxresdefault.jpg

மீறி இன்னும் ஆழமாக சென்றால் அந்த அளவிலான வெப்பம் நிச்சயம் நுழையும் எவரையும் கொன்றுவிடும் என்பதை நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அதையும் மீறி இன்னும் ஆழமாக சென்றால், அதாவது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 30 மைல் (48 கிமீ) ஆழத்தை அடைந்தால் அங்கு கொதிக்கும் மேக்மாவை சந்திப்போம். அது நம்மை சாம்பலாக்கி விளையாடும் என்பதில் சந்தேகமேயில்லை.

கடந்து செல்வோமா.?

கொதிக்கும் மேக்மா என்ற பெரும்தடையை சமாளிக்க ஒரு சூப்பர் திட்டம் இருக்கிறது, அதாவது மிகவும் பலமான குழாய் ஒன்றை உருவாக்கி பாதுகாப்பாக சூடான மேக்மாவை நாம் கடந்து செல்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். கடந்து செல்வோமா.?? - மாட்டோம். இதை நிகழ்த்தினாலும் நாம் மரணிப்பது உறுதி. இந்த பயணத்தில் காற்று, அதாவது காற்றின் அழுத்தம் நம்மை கொல்லும். குழாய் மூலம் பூமியை கடக்கலாமா.?

அதென்ன அழுத்தம்.?

நீங்கள் தண்ணீருக்குள் ஆழமாக நீந்தும்போது அழுத்தம் ஏற்படும் அல்லவா.? அதே போலத்தான். உங்களுக்கு மேல் அதிக காற்று இருக்கும் காரணத்தினால் கீழ் செல்லும் நாம் அழுத்தத்தை உணர்வோம். ஆக, குழாய் மூலம் பூமிக்குள் நுழைந்து மறுபக்கத்தை அடையலாம் என்ற திட்டம் உங்களிடம் இருந்தால் - 31 மைல்கள், அதாவது 50 கிமீ ஆழத்திலேயே பெருங்கடல்களின் கடைமட்ட ஆழத்தில் உணரும் அழுத்தத்தை விட பல மடங்கு அதிக அழுத்தத்தை உணர்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

கிரகத்தின் சுழற்சி நம்மை என்ன செய்யும்.?

24-1503570608-main-qimg-4d13266dbb3ef75c

ஒருவேளை கொதிக்கும் மேக்மா வழியாக செல்ல அனுமதிக்கும் ஒரு குழாயை செய்ய முடிந்து, அந்த குழாயிலிருந்து அனைத்து காற்றையும் உறிஞ்சி வெளியே எடுத்து, ஒரு பிரத்யேக உடை அணிந்து குழாயினுள் நம்மால் சுவாசித்து பயணிக்க முடியும் என்றாலும் கூட, கிரகத்தின் சுழற்சியினால் நாம் சிக்கல்களை சந்திப்போம். மரணம் வரையிலான சிக்கல் கிரகத்தின் பாதி ஆழத்தை அடைந்ததும் நாம் உருவாக்கிய குழாயின் சுவர்களைவிட கிரகத்தின் சுழற்சி வேகமானதாக இருக்கும். அதாவது மணிக்கு 1,500 மைல்கள் (மணிக்கு 2400 கிமீ) என்ற வேகத்தில் பூமி கிரகம் சுழலும். இது கடுமையான உடல் நல பாதிப்பு, குழாய்களுக்குள் துள்ளுவது, அதன் மீது மோதுவது போன்ற கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் தொடங்கி மரணம் வரையிலான சிக்கல்களை சந்திப்போம்.

கண்மூடித்தனமாக குதித்தால் என்னவாகும்.??

சரி, பூமிக்குள் துளையிட்டு பயணிப்பதில் உள்ள யதார்த்த விவகாரங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு கண்மூடித்தனமாக பூமிக்கு நடுவே துளையிட்டு ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு குதித்தால் என்னவாகும்.?? - வெறும் 42 நிமிடங்கள் மற்றும் 12 நொடிகளுக்குள் நாம் மறுபக்கத்தை அடைவோம்.

எனினும், இதோடு வேடிக்கை முடிந்து விடாது. முன்னும் பின்னுமாக ஊசல் பூமியின் தீவிர ஈர்ப்பு மற்றும் உங்களின் தீவிர வேகத்தின் காரணமாக துளையின் வழியாக நீங்கள் மறுபுறம் வந்தாலும் கூட நீங்கள் மீண்டும் பூமிக்குள் வந்த வழியாகவே சரிவீர்கள். ஆரம்பித்த இடத்திற்கே வருவீர்கள் மற்றும் மீண்டும் உள்நோக்கி சரிவீர்கள். இப்படியாக நீங்கள் முன்னும் பின்னுமாக ஊசலாடப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள், முடிவே இருக்காது.

https://tamil.gizbot.com/scitech/what-would-happen-if-you-jumped-through-the-center-the-earth-015075.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.