Jump to content

கனடாவில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றுக்கான முயற்சி இடம்பெறுகிறது


Recommended Posts

கனடாவில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றுக்கான முயற்சி இடம்பெறுகிறது. இதற்காக தேவைப்படும் $3 மில்லியன் பணத்தில் 23% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் மிகுதிப்பணம் திரட்டப்படவேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்களிப்பு செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே உள்ளனர்.

முதலில் தமிழ் இருக்கை என்றால் என்ன ? 
ஒரு பேராசிரியருக்கு கீழ் 10 வரையான ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவது. இதன் மூலம் கருத்தரங்குகளும், மொழி சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படலாம். பின்பு இது தமிழ்த் துறையாக விரிவடைய உதவும்.

தமிழ்த் துறை என்பது தலைவர், பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களைக் கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்படுவதாகும்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கும் தமிழ்த் துறைகள் இன்னும் பலப்படுத்தப்படவேண்டும். அத்துடன், வெளிநாடுகளிலும் அதற்கான முயற்சிகள் இடம்பெறவேண்டும்.

தமிழ் இருக்கையின் தேவை என்ன?

உலகில் உள்ள பழம்பெரும் மொழிகளில் ஒன்றான செம் மொழியாம் தமிழ் மொழியில் உள்ள பல இலக்கிய மற்றும் நூல்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, அவற்றுக்கு உலக அங்கீகாரம் கிடைக்க வழியேற்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் ஏராளமான அறிவியல் உண்மைகள் மறைந்துகிடக்கின்றன. உதாரணமாக, பல நோய்களுக்கான மருந்துகள், மருத்துவ முறை, விண்வெளி இன்னும் பல. இவற்றை உலகம் ஏற்றுக்கொள்ள ஆய்வுகள் நடத்தப்பட்டு, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
உதாரணமாக, தாயின் கருவறையில் இருக்கும் ஒரு சிசு, ஆறு வாரங்களில் என்ன செய்யும், பத்து வாரங்களில் என்ன செய்யும், அதன் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் 'திருமந்திரத்தில்' சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நவீன மருத்துவத்தில் ஸ்கேன் போன்ற கருவிகள் வந்த பின்னர்தான் கருவறையில் இருக்கும் சிசு என்ன செய்யும் என்று நிரூபிக்கப்பட்டது.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கும், நிதி உதவிக்கும் : http://torontotamilchair.ca/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.