Jump to content

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?


Recommended Posts

On 8/11/2019 at 2:18 AM, ampanai said:

கோவிலின் விமானத்தில் உள்ள செப்புத்தகடுகளும் உமியியும் அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்த்து, கருவரைக்கு அனுப்பும். கருவரையிலும் செப்புத் தகடு உள்ளதால் அந்த அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்க்கும். அண்டக் கதிரானது ஒளியன்கள் (Photons) நிறைந்தது. ஆக அண்டக் கதிரானது இருட்டில் தங்காமல் வெளிச்சம் உள்ள இடத்தில் பிரதிபளிக்கிறது. அது கருவறைக்கு வெளியே நின்றிருக்கும் பக்தர்களை சென்றடைகிறது. அண்டக் கதிரானது மனிதர்களுக்கு நேர்மறையை (Positive) ஊக்குவிக்க வல்லது. இதனால் மனிதன் புத்துணர்வு பெறுகிறான். அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்: https://helios.gsfc.nasa.gov/qa_cr.html?fbclid=IwAR3PocYPIpICi8cTxvmleZV9ndDc6iKFlIs694pSGFJTbfbhxXgBo9AymlQ

பொய்யான தகவல்.

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
7 hours ago, valavan said:

நீங்கள் அதிகமாக கோவபடுவதுபோல்  தெரிகிறது

உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை நீங்க வெளிப்படுத்துவதை எவரும் ஏற்கிறார்கள் இல்லையே என்ற மான பிரச்சனையாக / கோபமாககூட  அது இருக்கலாம்.

பிறரை முட்டாள்கள் என்று தீர்ப்பு  சொல்ல  எந்த மனிதனுக்கும் உரிமையில்லை,

ஏனென்றால் தன்னை தானே  அறிவாளி என்று நினைக்கும் மனிதனும்  ஏதாவது ஒரு இடத்தில் முட்டாளாய் இருப்பான்.

உடன்கட்டை ஏறுவதும் மத கலாச்சாரங்களை விமர்சிப்பதும் ஒன்றல்ல,

உடன்கட்டை ஏறுவதை, அந்த கலாச்சாரத்தை  அடியோடு வெறுத்தது 

இதே நீங்க சொன்ன  காட்டுமிராண்டி கலாச்சாரத்தை கொண்ட இந்து மதம் தான்.

இடையிலே புகுந்து வேறு எந்த மதத்தவரும்  எவரும் அது தவறு என்று அடிச்சு திருத்தவில்லை

தான் செய்வது தவறு  என்று சுய விமர்சனம் செய்வதும், நான் செய்தது தப்பு என்று ஒத்துக்கொண்டு  திருந்தும் நாகரிகமும்  தில்லும் எந்த மதத்துக்கும் உண்டா இந்து மதத்தை தவிர>?

வல்லவன்,  உடன் கட்டை ஏறும் இந்து மதத்தவரின்  கலாசாரம் இந்து மதத்தவரால் சுயவிமர்சனம் செய்து கைவிடப்படவில்லை. ஆங்கிலேய அரசில் சட்ட தடையே காரணம் என்ற வரலாற்று உணமையை ஏன் மறைக்கப்பார்கிறீர்கள். அதுவும்  இந்துத்துவ வாதிகள் கடுமையாக எதிர்பபை மீறியே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. 

இரண்டாவது நீங்கள் சொன்னது அறிவுக்கு ஒவ்வாத  முட்டாள் பழக்கங்களை இந்துமதம் தானாகவே சுயவிமர்சனம் செய்து கைவிடும் என்பதே. அந்த நாகரீகம் இந்து மதத்துக்கு உண்டு என்பது உண்மையானால் இந்துவாகிய நான் எனது மதத்தின் மூடத்தனமான பழக்கங்களை சுய விமர்சனம் செய்யும்போது உங்களுக்கு கோபம் வரவேண்டிய அவசியம் என்ன? நீங்கள் அப்படியான நாகரீகம் கொண்ட இந்து இல்லையா? 

4 hours ago, Eppothum Thamizhan said:

இந்தக்கதைகளை ஏன் சமய அனுட்டானங்களுடன் கலக்கிறீர்கள். இந்தக்கதையை நாமோ அல்லது நம்மவர்களோ நம்பியதாக எங்கும் எழுதப்படவில்லையே. தலையங்கத்திற்கு மட்டும் கருத்தெழுத பழகுங்கள். சும்மா கண்டமேனிக்கு திரியை திருப்பிவிடுவதே உங்களைப்போல் சில அறிவாளிகளின் வேலையாக இருக்கிறது என்பதை பல தடவைகள் நிரூபிக்கிறீர்கள். இதுவும் ஒரு மனோவியாதிதான்.

நான் கூறிய பதில் உங்களுக்கானதல்ல. இந்து மதம் அறிவியல்  பூர்வமானது என்ற அம்பனையின் விளக்கத்திற்கான பதிலே அது. இந்தி மதம் எத்தனை பொய் புரட்டுக்களை தன்னை நம்பிய மக்கள்மீது திணித்தது என்பதற்கான ஆதாரமே அது. இதனை  வாசித்து உங்களால் புரிய முடியாதது என் குற்றமல்ல. 

Link to comment
Share on other sites

5 hours ago, வாதவூரான் said:

இங்கேநிழலி மற்றும் டுல்பென்  இந்து/சைவ சமயத்தில் உள்ளதாக கூறும்நிறைய விடயங்கள்நான் கேள்விப்படாதது/படிக்காதது உயர்தர பாடங்களில் அல்லது பல்கலைக்கழக பாடங்களில் இருப்பதாக கூட கேள்விப்படவில்லை. உண்மையாகவே இது எல்லாம் இந்து/சைவ சமயங்களில் இருக்குதா? அல்லது எனக்கு தான் எதுவும் தெரியவில்லையா?.நேற்று ஈலிங் அம்மனிலும்நிறைய காவடி அந்த மாதிரி இருந்துது

வாதவூரான் தங்கள் கருத்துக்கு நன்றி. நான் கூறியது காவடியைத்  தோளில்  வைத்து ஜாலியாக குத்துப்பாட்டுக்கு நடனமாடி  மகிழும் கலாச்சாரத்தை  அல்ல. அப்படியான காவடியை நானும்  விரும்பி ரசிப்பேன். அலகு  குத்தி அல்லது தூக்குக்காவடி, நிலத்தில் உருளுவது போன்ற மூடத்தனத்தையே நான் விமர்சித்தேன். 

Link to comment
Share on other sites

29 minutes ago, tulpen said:

உடன் கட்டை ஏறும் இந்து மதத்தவரின்  கலாசாரம் இந்து மதத்தவரால் சுயவிமர்சனம் செய்து கைவிடப்படவில்லை. ஆங்கிலேய அரசில் சட்ட தடையே காரணம் என்ற வரலாற்று உணமையை ஏன் மறைக்கப்பார்கிறீர்கள். அதுவும்  இந்துத்துவ வாதிகள் கடுமையாக எதிர்பபை மீறியே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. 

ராஜாராம் மோகன்ராய் என்ற பிராமணர் உடன்கட்டை ஏறுதலுக்கெதிராக குரல் கொடுத்து தான் அதற்கெதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்று உண்மை உங்களுக்கு தெரியாது போல.

Link to comment
Share on other sites

8 minutes ago, Lara said:

ராஜாராம் மோகன்ராய் என்ற பிராமணர் உடன்கட்டை ஏறுதலுக்கெதிராக குரல் கொடுத்து தான் அந்த தடை கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்று உண்மை உங்களுக்கு தெரியாது போல.

ராஜாராம் மோகன்ராய்  இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை கடுமையாக எதிர்தார். இந்து மதத்தை சீர்திருத்த விரும்பினார். இந்து மத வாதிகள் அவரை எதிர்ததனர். ராஜாராம் மோகன்ராயை இன்று ஆதரிக்கும் நீங்கள் இந்து மத மூடத்தனங்களை அவரைப்பின்பற்றி ஒழிக்க பாடுபடுங்கள். 👍

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

ராஜாராம் மோகன்ராய்  இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை கடுமையாக எதிர்தார். இந்து மதத்தை சீர்திருத்த விரும்பினார். இந்து மத வாதிகள் அவரை எதிர்ததனர். ராஜாராம் மோகன்ராயை இன்று ஆதரிக்கும் நீங்கள் இந்து மத மூடத்தனங்களை அவரைப்பின்பற்றி ஒழிக்க பாடுபடுங்கள். 👍

ராஜாராம் மோகன்ராய் இந்து மதத்தை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்குவதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன் மதமாற்றத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். எல்லா மத நம்பிக்கையாளர்களும் சகோதரர்களாக சேர்ந்திருக்க முடியும் எனவும் நினைத்தார்.

உங்களை போல் இந்து மதத்தவரை மட்டும் மட்டம் தட்டும் வேலையையோ அல்லது மக்கள் அழியும் போது கடவுள் காப்பாற்ற வில்லை என்றோ புலம்பவில்லை. 

தவிர ராஜாராம் மோகன்ராயை நான் ஆதரிப்பதாக எங்கும் எழுதவில்லை.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் சில சில பகுதிகளில் இடம்பெற்ற (ஏனைய பகுதிகளில் குறைவாக இடம்பெற்ற) உடன்கட்டையேறுதலை ஒட்டுமொத்த இந்துக்களின் கலாச்சாரமாக தூக்கிப்பிடித்து  கதைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Lara said:

ராஜாராம் மோகன்ராய் இந்து மதத்தை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்குவதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன் மதமாற்றத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். எல்லா மத நம்பிக்கையாளர்களும் சகோதரர்களாக சேர்ந்திருக்க முடியும் எனவும் நினைத்தார்.

உங்களை போல் இந்து மதத்தவரை மட்டும் மட்டம் தட்டும் வேலையையோ அல்லது மக்கள் அழியும் போது கடவுள் காப்பாற்ற வில்லை என்றோ புலம்பவில்லை. 

தவிர ராஜாராம் மோகன்ராயை நான் ஆதரிப்பதாக எங்கும் எழுதவில்லை.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் சில சில பகுதிகளில் இடம்பெற்ற (ஏனைய பகுதிகளில் குறைவாக இடம்பெற்ற) உடன்கட்டையேறுதலை ஒட்டுமொத்த இந்துக்களின் கலாச்சாரமாக தூக்கிப்பிடித்து  கதைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

இந்து மதத்தில் தற்போது கடைப்பிடிக்கப்படும்  மூடத்தனங்களை பற்றியதே பிரதான விவாதம். ஏற்கனவே ஒழிக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் மூடத்தனம் ஒரு உதாரணத்திற்காகவே இங்கு பாவிக்கப்பட்டது எனபது உங்களுக்கு விளங்கவில்லையா? பிரதான விவாதத்திற்கு  வலு சேர்கக உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படும் போது அதை தூக்கிப்பிடிப்பது நீங்கள் தான். ராஜாராம் மோகன்ராய் அன்றைய இந்து மத  மூடப்பழக்கங்களை ஒழிக்க பாடு பட்டார் அவரால் முழுமையாக ஒழுக்கப்படாத மூடத்தனங்களை ஒழிக்க அவரின் சீடராக நீங்கள் பாடுபடலாமே? நம் எல்லோருக்கும் நல்லது தானே! 

Link to comment
Share on other sites

21 minutes ago, tulpen said:

இந்து மதத்தில் தற்போது கடைப்பிடிக்கப்படும்  மூடத்தனங்களை பற்றியதே பிரதான விவாதம். ஏற்கனவே ஒழிக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் மூடத்தனம் ஒரு உதாரணத்திற்காகவே இங்கு பாவிக்கப்பட்டது எனபது உங்களுக்கு விளங்கவில்லையா? பிரதான விவாதத்திற்கு  வலு சேர்கக உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படும் போது அதை தூக்கிப்பிடிப்பது நீங்கள் தான். ராஜாராம் மோகன்ராய் அன்றைய இந்து மத  மூடப்பழக்கங்களை ஒழிக்க பாடு பட்டார் அவரால் முழுமையாக ஒழுக்கப்படாத மூடத்தனங்களை ஒழிக்க அவரின் சீடராக நீங்கள் பாடுபடலாமே? நம் எல்லோருக்கும் நல்லது தானே! 

ஈழத்தமிழர்கள் தம்மை சைவ சமயத்தவர்களாகவே (இந்து மதம் என அழைக்கப்பட்டாலும்) கருதுபவர்கள். அதிலிருந்து வட இந்தியர்கள் கடைப்பிடிக்கும் இந்து மதத்திற்கு பாரிய வேறுபாடு உள்ளது. 

ஈழத்து இந்துக்கள் மேல் விமர்சனம் வைக்கிறேன் என்ற பெயரில் தொட்டதுக்கும் இந்திய இந்துக்களை இழுத்து கதைப்பதை நிறுத்துங்கள்.

தூக்கு காவடி எடுப்பவர்கள் தமது விருப்பின் பேரிலேயே அதை செய்கிறார்கள். எனவே உங்கள் விமர்சனங்கள் அவர்களை பாதிக்கப்போவதில்லை.

தவிர நீங்கள் திரிக்கு திரி இந்துக்களுக்கெதிராக வாந்தி எடுத்து வருவதால் உங்கள் கருத்துகளை பார்த்தால் சனம் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும். 😂

நான் ராஜாராம் மோகன்ராயின் சீடர் கிடையாது. 😎

Link to comment
Share on other sites

26 minutes ago, Lara said:

 

நான் ராஜாராம் மோகன்ராயின் சீடர் கிடையாது. 😎

மூடப்பழக்கங்களை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் நீங்கள்  மூடப்பழக்கங்களை எதிர்த்த ஒருவரின் சீடராக இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் சும்மா விளையாட்டாக குறிப்பிட்டேன். மன்னித்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

5 minutes ago, tulpen said:

மூடப்பழக்கங்களை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் நீங்கள்  மூடப்பழக்கங்களை எதிர்த்த ஒருவரின் சீடராக இருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். நான் சும்மா விளையாட்டாக குறிப்பிட்டேன். மன்னித்து கொள்ளுங்கள்.

ராஜாராம் மோகன்ராயின் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது, ஆனால் அவரது வேறு சில நடவடிக்கைகளை நான் ஆதரிக்கவில்லை.

தவிர இன்னொருவரின் சீடராக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2019 at 4:20 AM, Dash said:

தமிழர்களின் மத நம்பிக்கை இங்கு நிந்தனை செய்யப்பட்டிருக்கிறது ஆனால் இந்த திரியை மூடவோ அல்லது தவறான கருத்துக்களை நீக்கவோ இல்லை;ஆனால் கிறிஸ்த்தவ மதத்தையோ அல்லது இஸ்லாம் மதத்தையோ இப்படி தவறாக எழுதியிருந்தால் யாழ் நிர்வாகம் சும்மா இருந்திருக்குமா.....!!! 

ஐயா, இங்கே அதிகம் மெனக்கெடும் ஆர்வமில்லா விட்டாலும் இப்படியான கருத்துகளை விட்டு விட முடியவில்லை! தமிழரின் மத நம்பிக்கை என்று ஒன்று இல்லை! தமிழ் முதலில் வந்தது, நீங்கள் குறிப்பிட்ட மதங்கள் எல்லாமே பின்னர் வந்து தமிழின் முதுகின் மேல் ஏறியவை! மத நம்பிக்கைகளால் தமிழ் நலிவு கொள்ளவில்லை, பொலிவு தான் அடைந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2019 at 6:27 PM, Eppothum Thamizhan said:

மூலக்கொதிப்பு இருந்தால் நான் டாக்டரிடம் காட்டி குணப்படுத்திக்கொள்கிறேன். அதற்கு உங்கள் அறிவுரை எனக்கு தேவையில்லை. 

விரதமிருப்பதால் வரும் நன்மைகள் இப்போதுதான் உங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.. சைவசமய சடங்குகளையும் செயல்களையும் விமர்சிப்பதும் உங்கள் சமய காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்ப்பதும்தான் உங்கள் வீரம் என்பது களத்தில் எல்லோருக்கும் தெரிந்தவிடயமே. மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் பல மருத்துவ ஆதாரங்களை எமது முன்னோர்கள் அன்றே சொல்லிவைத்திருப்பது உங்களுக்கு தெரியவில்லை போலும்.

இப்படி மற்றவனின் உழைப்பை எடுத்து மத நம்பிக்கையொன்றை வளர்க்கும் வேலையை இந்து மதம் மட்டுமே செய்கிறது என்பது பலருக்கும் தெரிந்ததே. அதை மட்டுமே நான் எதிர்க்கிறேன். மற்றபடி எதை யார் நம்புகிறார்கள் என்பது எனக்கு அக்கறையில்லை!

ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் விஞ்ஞானிகளை சிறையில் போட்டும் கொன்றும் அறிவியலை கிறிஸ்தவம் தடுக்கப் பார்த்தது! தொடர்ந்து வந்த மறுமலர்ச்சிக் காலத்தில் கலைகளையும் அறிவியலையும் தடுக்க முடியாது என்று உணர்ந்த பின்னர், அவை இரண்டிற்கும் ஆதரவு கொடுத்து வளர விட்டது. வத்திக்கான் அரண்மனையின் சிற்ப ஓவிய சிறப்புகளும், ஐரோப்பாவின் மிகப்பழமையான வான் தொலைநோக்கியும் இதற்கு சான்றுகள்! மனித வளர்ச்சியில் ஐரோப்பா எங்கே நிற்கிறது இப்போது?

இந்து மதவாதத்தின் பால் தெரிவான மோடி பரிசோதனைக் குழாய்க் குழந்தைகள் புராணங்களில் கண்டு பிடிக்கப் பட்டதாகச் சொல்லி இந்த அடுத்தவன் உழைப்பில் போலி மதநம்பிக்கையை வளர்க்க உங்கள் போன்ற கையிருப்பில் அதிகம் இல்லாதோர் அவரோடு இழுபடுகிறீர்கள், இது நடக்கும் இந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன? தெருவில் பெண்களே தனியாகப் போக இயலாத நிலை இந்த நாடுகளில்!


போலி அறிவியல் கருத்துகளால் ஒரு மத நம்பிக்கையை முண்டு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியிருக்கிறதெனில் அந்த மத நம்பிக்கை கொள்வோர் ஆன்மரீதியில் உள்ளீடு எதையும் பெறாமல் கோதுகளைக் கட்டிக் கொண்டு அல்லாடுகிறார்கள் என்று தான் அர்த்தம்! இது எந்த மதத்திற்கும் பொருந்தும் ஆயினும், இந்த போலி விஞ்ஞானத்தை வைத்து முண்டு கொடுப்பது அதிகம் இந்து மதமே என்பதால் இது இந்து மதத்திற்கு அதிகம் பொருந்துகிறது!  

Link to comment
Share on other sites

4 hours ago, tulpen said:

ராஜாராம் மோகன்ராய் அன்றைய இந்து மத  மூடப்பழக்கங்களை ஒழிக்க பாடு பட்டார்

கிறிஸ்துவத்தின் இறைவன், அவரின் மகன், புனித ஆவி வழிபாடு போன்றவற்றையும் நிராகரித்தவர், Percepts of Jesus என்ற நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்றும் நிராகரித்தவராம்.

சொல்ல மறந்திட்டன்.

Link to comment
Share on other sites

29 minutes ago, Lara said:

கிறிஸ்துவத்தின் இறைவன், அவரின் மகன், புனித ஆவி வழிபாடு போன்றவற்றையும் நிராகரித்தவர், Percepts of Jesus என்ற நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்றும் நிராகரித்தவராம்.

சொல்ல மறந்திட்டன்.

அதை தானே நானும் எப்போதிருந்தே  சொல்லுகிறேன். எல்லா மதங்களும் மக்களை ஏமாற்ற படு பொய்களை கூறுகின்றன என்பது தானே எனது வாதம். கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என்று எல்லாமே அப்படித்தான். ஆனால் எனது  மதம் எண்ணிலடங்கா மூடத்தனத்தையைம் புராண புரட்டுக்களையும் கொண்டுள்ளதை எப்படி என்னால் மறுக்கமுடியும். 

Link to comment
Share on other sites

19 minutes ago, tulpen said:

அதை தானே நானும் எப்போதிருந்தே  சொல்லுகிறேன். எல்லா மதங்களும் மக்களை ஏமாற்ற படு பொய்களை கூறுகின்றன என்பது தானே எனது வாதம். கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என்று எல்லாமே அப்படித்தான். ஆனால் எனது  மதம் எண்ணிலடங்கா மூடத்தனத்தையைம் புராண புரட்டுக்களையும் கொண்டுள்ளதை எப்படி என்னால் மறுக்கமுடியும். 

உடன்கட்டையேறுதல் என்பதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி வாதாடி தான் உடன்கட்டையேறுதல் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தவர்.

Link to comment
Share on other sites

1 minute ago, Lara said:

உடன்கட்டையேறுதல் என்பதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி வாதாடி தான் உடன்கட்டையேறுதல் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தவர்.

எத்தனை ஆயிரம் மூடத்தனம் இப்பவும் இருக்கிறது. நீங்க முடிந்து  போன ஒரு மூடப்பழக்கத்தொடு நிற்கிறீர்கள். அது உதாரணத்திற்கு மட்டும் சொல்லப்பட்டது. நடைமுறையில் உள்ள பல  மூடத்தனத்தை  இல்லாமல்  செய்ய உதவுவீர்களானால் அது  சிறப்பாக இருக்கும். 

Link to comment
Share on other sites

12 minutes ago, tulpen said:

எத்தனை ஆயிரம் மூடத்தனம் இப்பவும் இருக்கிறது. நீங்க முடிந்து  போன ஒரு மூடப்பழக்கத்தொடு நிற்கிறீர்கள். அது உதாரணத்திற்கு மட்டும் சொல்லப்பட்டது. நடைமுறையில் உள்ள பல  மூடத்தனத்தை  இல்லாமல்  செய்ய உதவுவீர்களானால் அது  சிறப்பாக இருக்கும். 

உடன்கட்டையேறுதல் இந்துமத மூடப்பழக்கம் என நீங்கள் கூறியதால் தான் அது பற்றி எழுதினேன். அவர் அதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி தான் அதற்கெதிராக சட்டம் கொண்டுவர செய்தார்.

தூக்கு காவடியெடுக்கும் படி இந்துமதம் கூறவில்லை. அது மக்கள் தாமாக தமது நம்பிக்கை அடிப்படையில் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

15 minutes ago, Lara said:

உடன்கட்டையேறுதல் இந்துமத மூடப்பழக்கம் என நீங்கள் கூறியதால் தான் அது பற்றி எழுதினேன். அவர் அதை உண்மையான இந்துமதம் ஆதரிக்கவில்லை என கூறி தான் அதற்கெதிராக சட்டம் கொண்டுவர செய்தார்.

தூக்கு காவடியெடுக்கும் படி இந்துமதம் கூறவில்லை. அது மக்கள் தாமாக தமது நம்பிக்கை அடிப்படையில் செய்கிறார்கள்.

அப்படியா அப்ப உலகிலேயே மிக அறிவியல்  பூர்வமான மதமான😂 இந்து மத பெரியோர்கள் அது தவறு எற்று மக்களுக்கு கூற வேண்டாமா? நான் அதை கூறியதற்காக என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே? சுவஸ் ஆலயம் கடந்த வருடம் தீ மிதித்தலை ஆலய சார்பில் ஒழுங்கு செய்ததை கேள்விப்படவில்லையா? ஓ அது உண்மையான இந்து மதம் இல்லையோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் தூக்குக்காவடியை கோவில் நிர்வாகத்தினர் நிறுத்தவில்லையாம். பாதுகாப்புப் படையினர்தான் நிறுத்தினராம்.

சிங்களப் படையினர் இவ்வாறு அடக்குமுறை செய்வது பற்றி அலசாமல் உடன்கட்டை ஏறுவது பற்றி ஏன் அலட்டவேண்டும்?

சிங்களப் படையினர் இருக்குமட்டும் உடன்கட்டை ஏறுவதை இந்துமதப் பண்பாடு என்று சொல்லி யாரும் செய்யமுடியாது. அவர்களின் அனுக்கிரகம் இருந்தால், முஸ்லிம் பெண்கள் அபயா அணிவதை நிறுத்தியது போன்ற பல மூடப்பழக்கங்களை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டியே நிறுத்திவிடலாம். 😎

 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, tulpen said:

அப்படியா அப்ப உலகிலேயே மிக அறிவியல்  பூர்வமான மதமான😂 இந்து மத பெரியோர்கள் அது தவறு எற்று மக்களுக்கு கூற வேண்டாமா? நான் அதை கூறியதற்காக என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே? சுவஸ் ஆலயம் கடந்த வருடம் தீ மிதித்தலை ஆலய சார்பில் ஒழுங்கு செய்ததை கேள்விப்படவில்லையா? ஓ அது உண்மையான இந்து மதம் இல்லையோ? 

நீங்கள் தூக்கு காவடியை இந்து மத காட்டுமராண்டித்தனம் என கூறி எழுதியிருந்தீர்கள். இந்து மதத்தில் தூக்கு காவடி எடுக்குமாறு கூறப்படாத போது அதை எவ்வாறு இந்துமத காட்டுமிராண்டித்தனம் என கூற முடியும் என்பது தான் என் கேள்வி.

மக்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் அனைத்திற்கும் மதத்தை காரணம் கூற முடியாது.

Link to comment
Share on other sites

13 minutes ago, Lara said:

நீங்கள் தூக்கு காவடியை இந்து மத காட்டுமராண்டித்தனம் என கூறி எழுதியிருந்தீர்கள். இந்து மதத்தில் தூக்கு காவடி எடுக்குமாறு கூறப்படாத போது அதை எவ்வாறு இந்துமத காட்டுமிராண்டித்தனம் என கூற முடியும் என்பது தான் என் கேள்வி.

மக்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் அனைத்திற்கும் மதத்தை காரணம் கூற முடியாது.

அப்படி கூறப்பட வில்லை என்றால் அது அறியாமை என்று அதை நிறுத்த  ஏன் இந்து கோவில்கள் முயலவில்லை என்ற சிம்பிள்  அரிவரி கேள்விக்கு கூட நீங்கள் பதில் தரப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே. 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

அப்படி கூறப்பட வில்லை என்றால் அது அறியாமை என்று அதை நிறுதம ஏன் இந்து கோவில்கள் முயலவில்லை என்ற சிம்பிள்  அரிவரி கேள்விக்கு கூட நீங்கள் பதில் தரப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே. 

கடவுள் நம்பிக்கையுள்ளோர் நேர்த்தி வைத்து விட்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதை செய்கிறார்கள். எனவே அதை நிறுத்த இந்து கோவில்கள் முயன்றிருக்காது.

Link to comment
Share on other sites

1 minute ago, Lara said:

கடவுள் நம்பிக்கையுள்ளோர் நேர்த்தி வைத்து விட்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதை செய்கிறார்கள். எனவே அதை நிறுத்த இந்து கோவில்கள் முயன்றிருக்காது.

அப்படி மூடத்தனத்தை மக்கள் செய்வதை ஊக்குவித்தால் தானே மத வியாபாரம் களை கட்டும். 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

அப்படி மூடத்தனத்தை மக்கள் செய்வதை ஊக்குவித்தால் தானே மத வியாபாரம் களை கட்டும். 

மீண்டும் அதே புராணமா? 😀

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது மூடத்தனம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோருக்கு அது மூடத்தனம் அல்ல.

Link to comment
Share on other sites

1 minute ago, Lara said:

மீண்டும் அதே புராணமா? 😀

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது மூடத்தனம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோருக்கு அது மூடத்தனம் அல்ல.

அறிவுள்ள மனிதர்களுக்கு அது மூடத்தனம். கருணை உள்ள கடவுள் என்று நீங்கள் நம்பும்  அந்த கற்பனைக் கதாபாத்திரம்  இது மூடத்தனம் என்றே கருதி அதை  விரும்பமாட்டார் என்பதை உணர  சாதாரண பொது அறிவுபோதும் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.