Jump to content

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2019 at 3:33 PM, Elugnajiru said:

இனிவரும் காலங்களில் நல்லூர் ஆலய வளாகத்திலும் சுற்றாடலிலும் யாரும் வேட்டியுடணோ சேலையுடணோ வரக்கூடாது ஜீன்ஸ் சேட் டெனிம் வட இந்ந்திய உடைகளை அணிந்தே வரவேண்டும் எனச் சொன்னாலும் சொல்வார்கள் நல்லூர் ஆலயத்தின் உரிமையாளருக்குப் பாரம்பரியம் என்றால் என்னவென்று புரியவில்லைப்போல் இருக்கு. 

உண்மையில் எனது குடும்பத்தினதும் எனதும் குலதெய்வம் நல்லூர் முருகந்தான் ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் மனதுக்குச் சங்கடமாக இருக்கு. தவிர உலகின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் திருவிழாக்காலத்தில் மச்சம் மாமிசம் பாவிக்காமல் நல்லூரானை அனுட்டிப்பவன் நான்

1993ம் ஆண்டு அக்காவின் கையை பிடிச்சு கொண்டு ந‌ல்லுர் கோயிலுக்கு போன‌ கால‌ம் பொற்கால‌ம் , 
உங்க‌ளை போல‌ தான் எம் குடும்ப‌த்தின‌ரும் ந‌ல்லுர் திருவிழாவ‌ர‌ ம‌ச்ச‌ம் சாப்பிடுவ‌து இல்லை / 

ந‌ல்லுர் முருக‌ன் கோயிலுக்கு ப‌க்க‌த்தில் (  கிட்டு  அண்ணாவின்  பெய‌ரில் பெரிய‌ விளையாட்டு பூங்கா போராளிக‌ள் ஆர‌ம்பிச்சு வைச்ச‌வை , கோயிலுக்கு போயிட்டு  கிட்டு அண்ணா விளையாட்டு பூங்காவில் போய் விளையாடி விட்டு தான் வீட்டுக்கு வ‌ருவோம் , 1993ம் ஆண்டு ஊரில் நீங்க‌ளும் வ‌சித்து இருந்தா  கிட்டு அண்ணாவுக்கு  க‌ட்டின‌ விளையாட்டு பூங்காவையும் நீங்க‌ளும் க‌ண்டு இருப்பீங்க‌ள் 🙏/

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லாரா பாப்பா,

நல்லூர் கோயிலுக்குள் ஆண்கள் வெற்று மார்போடுதான் உட்பிரவேசிக்கலாம் என்ற சம்பிரதாயம் உள்ளது. அதற்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் கிட்டுமா?🤔🤔🤔

Link to comment
Share on other sites

2 minutes ago, tulpen said:

அறிவுள்ள மனிதர்களுக்கு அது மூடத்தனம். கருணை உள்ள கடவுள் என்று நீங்கள் நம்பும்  அந்த கற்பனைக் கதாபாத்திரம்  இது மூடத்தனம் என்றே கருதி அதை  விரும்பமாட்டார் என்பதை உணர  சாதாரண பொது அறிவுபோதும் . 

நான் ஏற்கனவே கூறியது போல் கடவுள் நம்பிக்கை உள்ளோர் நேர்த்தி வைத்து விட்டோ வேறு காரணங்களுக்காகவோ தாமாக விரும்பி அதை செய்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் ஒரு கற்பனை பாத்திரம், இவ்வாறு செய்வது மூடத்தனம்.

Link to comment
Share on other sites

14 minutes ago, Lara said:

நான் ஏற்கனவே கூறியது போல் கடவுள் நம்பிக்கை உள்ளோர் நேர்த்தி வைத்து விட்டோ வேறு காரணங்களுக்காகவோ தாமாக விரும்பி அதை செய்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் ஒரு கற்பனை பாத்திரம், இவ்வாறு செய்வது மூடத்தனம்.

தனது பக்தர்கள் அறியாமைநால் தங்களை வருத்துவதை தடுக்கும் சக்தியோ தன்னை வைத்து பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கயவர் கூட்டத்தை தடுக்கும் சக்தியோ கடவுளுக்கு இல்லை என்பது புலனாகிறது. கடவுளை நம்பும் உங்களுக்கே இவை எல்லாம் வடிகட்டிய  முட்டாள்தனம் என்பதை உணரும் பொது அறிவை   வழங்கவில்லையே. இனி விவாதித்து பயனில்லை. Good night.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2019 at 1:03 AM, tulpen said:

உலகில்  எல்லா விடயத்திலும் எமது முன்னோர்கள் தான் Best என்று சொல்வதும் ஒரு மனோவியாதிதான். தன்னை ஆக்கிரமித்து அடிமை கொள்ள வந்த அனைவரிடமும் தோற்று போய் அடிமை வாழ்வை தனது சந்ததியினருக்கு கொடுத்துவிட்டு சென்ற  அந்த Best முன்னோர்கள் இந்த உலகில் நம் முன்னோராக தான் இருக்கும். 

ஒரு சில‌ எம் முன்னோர்க‌ள் விட்ட‌ பிழைக்கு , ஒட்டு மொத்த‌ முன்னோர்க‌ளை குறை சொல்லுவ‌து ஏற்று கொள்ள‌ முடியாது /
எம் முன்னோர்க‌ள் தான் எம‌க்கு வ‌ழி காட்டி , நேற்று வ‌ந்த‌வ‌ன் போன‌வ‌ன் சொல்லுவ‌தை எல்லாம் ந‌ம்ப‌ நாம் ஒன்றும் முட்டாள்க‌ள் இல்லை / 

வாழ்க‌ எம் முன்னோர்க‌ளின் புக‌ழ் 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

லாரா பாப்பா,

நல்லூர் கோயிலுக்குள் ஆண்கள் வெற்று மார்போடுதான் உட்பிரவேசிக்கலாம் என்ற சம்பிரதாயம் உள்ளது. அதற்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் கிட்டுமா?🤔🤔🤔

கோவிலுக்கு செல்லும் போது நீராடி தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து செல்லுமாறு தான் சைவ சமயம் கூறுவதாக எனக்கு தெரியும்.

வெற்று மார்போடு உட்பிரவேசிப்பதன் காரணம் எனக்கு தெரியாது. புங்கையூரன் அவர்களை கேட்டால் இது பற்றி ஏதும் விளக்கம் உள்ளதா என கூறுவார்.

1 hour ago, tulpen said:

தனது பக்தர்கள் அறியாமைநால் தங்களை வருத்துவதை தடுக்கும் சக்தியோ தன்னை வைத்து பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கயவர் கூட்டத்தை தடுக்கும் சக்தியோ கடவுளுக்கு இல்லை என்பது புலனாகிறது. கடவுளை நம்பும் உங்களுக்கே இவை எல்லாம் வடிகட்டிய  முட்டாள்தனம் என்பதை உணரும் பொது அறிவை   வழங்கவில்லையே. இனி விவாதித்து பயனில்லை. Good night.  

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என ஏற்கனவே இன்னொரு திரியில் இருதடவை எழுதியிருந்தேன். உங்களுக்கு நினைவில்லையோ தெரியவில்லை.

ஆனால் கோவில்களையோ, கடவுளையோ, கடவுளை நம்பும் மக்களின் நம்பிக்கையையோ விமர்சிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. அது தான் எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ருத்து என்ற‌ பெய‌ரில் இந்த‌ உல‌க‌ம் தோன்றின‌ கால‌ம் தொட்டு நாம் வ‌ண‌ங்கின‌ தெய்வ‌ங்க‌ளை கொச்சை ப‌டுத்துவ‌தை வேடிக்கை பார்க்க‌ முடியாது / 

உங்க‌ வீட்டில் நாத்த‌ம் இருக்கும் போது ப‌க்க‌த்து வீடு நாருது என்று சொல்வ‌து போல் இருக்கு , இவ‌ர்க‌ளின் சைவ‌ச‌மைய‌ மீதான‌ ம‌த‌ வெறி தாக்குத‌ல் /

எல்லை மீறினால் , பிற‌க்கு நான் எழுதுவ‌தை ப‌ல‌ரால் தாங்கி கொள்ள‌ முடியாது / 

கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டு காவ‌டி எடுக்கும் எங்க‌ளுக்கே அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , அதை வேடிக்கை பார்த்து கேலியும் கிண்ட‌லும் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்கு 😉 /

என‌க்கு தெரியும் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் கேலி கூத்துக‌ள் , அதை ப‌ற்றி நான் எழுதாமை இருக்க‌ கார‌ன‌ம் , அது அவ‌ர்க‌ளின் த‌னிப‌ட்ட‌ வாழ்விய‌ல் என்று பேசாமை க‌ட‌ந்து சென்று இருக்கிறேன் 😉

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த‌ காளான் போல் , புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ர‌ முன் த‌மிழீழ‌த்தில் நூற்றுக்கு 85விழுக்காடு ம‌க்க‌ள்  சைவ‌ ம‌த‌த்தில் தான் இருந்த‌வை ,
புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து ம‌த‌ம் மாறி போட்டு ஆர‌ம்ப‌த்தில் எந்த‌ தெய்வ‌ங்க‌ளை க‌ட‌வுள் என்று கும்பிட்டிச்சின‌மோ அவையே பின்னாளில் அந்த‌ ம‌த‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து அவ‌ர்க‌ளுக்கு அது மிக‌ பெரிய‌ வெக்க‌க் கேடு  😁😁 /
ம‌த‌ம் மாரும் ஆட்க‌ள் , க‌ட்டின‌  பெண்டாட்டி இருக்க‌ த‌க்க‌ அடுத்த‌வ‌னின் ம‌ணைவி  ந‌ல்லா இருக்கிறாள் என்று நினைக்கும் ம‌ன‌ நிலை ப‌டைச்ச‌வ‌ர்க‌ள் 😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்த நல்லூர் நிர்வாகத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயம் மனித வளர்ச்சிக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை. இலங்கையை பொறுத்தவரை மனித வளர்ச்சிக்கு அரசியல் மட்டுமே தடையாக இருந்தது.இருக்கின்றது.கருத்துக்களம் எனும் பெயரில் எனது மதத்தை மட்டம் தட்டி எழுத வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சிங்களவனோடை அரசியல் செய்து தமிழர் பிரச்சனைய தீர்க்க வக்கில்லை. இஞ்சை வந்து ஏழறிவு விண்ணாணக்கதையள்.

Link to comment
Share on other sites

இந்த காலத்தில் இந்து மதம்; சைவ மதம்; வைணமதம்; புத்த மதம்; கிறிஸ்தவ மதம்;  ஜெயின் மதம்; இஸ்லாமிய மதம், யூத மதம, தவிர இதர மதங்கள் அனைத்தும் சிலரின் கைகளில் அகப்பட்டு தவறான முத்திரைகள்  குத்தப்படுகின்றன.ஆனால், பெரும்பான்மை மக்கள் மத நெறிகளை பின்பற்றுவதும், வழிபாட்டிற்கு செல்வதும் ஒரு மன அமைதிக்கு. 

இன்றைய உலகத்தில் ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனுக்கும் நாற்பது வயதில் வேலைக்கு சென்றுவருபவருக்கும் பொதுவாக உள்ள ஒன்று - மன அழுத்தம். 

இந்த 'வியாதிக்கு' மருந்து இல்லை. ஆனால், உலக நாடுகளின் சுகாதார அமைச்சுக்கள் கோடி கோடியாக செலவு செய்கின்றன. எமது மக்களிடம் பணம் இல்லை. ஆனால், தீர்வாக இந்து/சைவ மதங்கள் வகுத்த கொள்கைகளை பின்பற்றுகின்றனர்.   

கிட்டத்தட்ட உலகின் மூத்த மதமான இந்து / சைவ மதங்களில், கிட்டதட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்னராக உருவாகப்பட்ட சகல நெறிமுறைகழும் இந்த 21ஆம் நூற்றாண்டிற்கும் பொருந்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  சிலவற்றை நாம் ஒரு சமூகமாக நிராகரித்தும் உள்ளோம். அதேவேளை, அவற்றில் சில இன்றும் பொருந்தும் நெறி முறைகளே. சிலவற்றிற்கு எமக்கு விளக்கம் தெரியாது, அதனால் அதற்கு சிலர் அது மூட நம்பிக்கை எனவும் இலகுவாக கூறி விட்டு செல்கிறார்கள். 

மீண்டும் மன அழுத்தம், மன உளைச்சல் பற்றி பார்த்தால்,  பொருளாதாரா ரீதியாக 'வளர்ந்த' நாடுகளில், 20 வீதமானவர்கள் இதனால் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை, இதற்கு சிறந்த மருந்தாக தியானம் என்று 'அறிவால் வளர்ந்த உலகமே' ஏற்று வருகின்றது. 

இந்த தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை  போன்றவை ஒரு மருந்தே! மற்றையவர்களுக்கு இடையூறு செய்யாமல், அந்த சமூகத்தின் விதிகளை மீறாமல், மற்றைய மதங்களுக்கு தடையில்லாமல் அவரவர் தனது மன அழுத்தங்களுக்கு  ஒரு தீர்வை தேடுவதில் யாருக்கு என்ன வெறுப்பு? காழ்ப்புணர்வு?  அன்பே சிவம் !  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

என‌க்கு தெரியும் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் கேலி கூத்துக‌ள் , அதை ப‌ற்றி நான் எழுதாமை இருக்க‌ கார‌ன‌ம் , அது அவ‌ர்க‌ளின் த‌னிப‌ட்ட‌ வாழ்விய‌ல் என்று பேசாமை க‌ட‌ந்து சென்று இருக்கிறேன் 😉

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த‌ காளான் போல் , புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ர‌ முன் த‌மிழீழ‌த்தில் நூற்றுக்கு 85விழுக்காடு ம‌க்க‌ள்  சைவ‌ ம‌த‌த்தில் தான் இருந்த‌வை ,
புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து ம‌த‌ம் மாறி போட்டு ஆர‌ம்ப‌த்தில் எந்த‌ தெய்வ‌ங்க‌ளை க‌ட‌வுள் என்று கும்பிட்டிச்சின‌மோ அவையே பின்னாளில் அந்த‌ ம‌த‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து அவ‌ர்க‌ளுக்கு அது மிக‌ பெரிய‌ வெக்க‌க் கேடு  😁😁 /
ம‌த‌ம் மாரும் ஆட்க‌ள் , க‌ட்டின‌  பெண்டாட்டி இருக்க‌ த‌க்க‌ அடுத்த‌வ‌னின் ம‌ணைவி  ந‌ல்லா இருக்கிறாள் என்று நினைக்கும் ம‌ன‌ நிலை ப‌டைச்ச‌வ‌ர்க‌ள் 😉 /

பையன், நீங்கள் சில விடயங்களில் வளரவில்லை என நினைத்தேன்! நீங்கள் வளரவேயில்லை என்பதைக் காட்டுகிறது மேலுள்ள சில கருத்துகள்! புலம்பெயர்ந்த பின்னர் தமிழர்கள் தங்கள் மதமான சைவத்தை இழந்தார்களா? சமூகக் கல்வியும் வரலாறும் இலங்கையில் படித்தீர்களா அல்லது வாழும் நாட்டில் படித்தீர்களா? போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்ததாவது தெரியுமா? என்ன கூத்தையா இது? உங்கள் போன்ற சொந்த நாட்டின் வரலாறே தெரியாத பையன்களை வைத்துக் கொண்டா சீமான் தமிழகத்தில் கொடி கட்ட நிக்கிறார்? 

விடயங்கள் தகவல்கள் தெரியாமல் அலட்சியமாக இருப்பது உங்கள் உரிமை! ஆனால் உங்கள் அறிவற்ற தனத்திற்கு மற்றவர்கள் இலக்காகும் போது சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. இலங்கை வரலாற்றைப் படியுங்கள். தமிழர்களுக்கு உத்தியோக பூர்வ மதம் எது என்று உண்மையான தமிழ் வரலாற்றைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ampanai said:

இந்த காலத்தில் இந்து மதம்; சைவ மதம்; வைணமதம்; புத்த மதம்; கிறிஸ்தவ மதம்;  ஜெயின் மதம்; இஸ்லாமிய மதம், யூத மதம, தவிர இதர மதங்கள் அனைத்தும் சிலரின் கைகளில் அகப்பட்டு தவறான முத்திரைகள்  குத்தப்படுகின்றன.ஆனால், பெரும்பான்மை மக்கள் மத நெறிகளை பின்பற்றுவதும், வழிபாட்டிற்கு செல்வதும் ஒரு மன அமைதிக்கு. 

இன்றைய உலகத்தில் ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனுக்கும் நாற்பது வயதில் வேலைக்கு சென்றுவருபவருக்கும் பொதுவாக உள்ள ஒன்று - மன அழுத்தம். 

இந்த 'வியாதிக்கு' மருந்து இல்லை. ஆனால், உலக நாடுகளின் சுகாதார அமைச்சுக்கள் கோடி கோடியாக செலவு செய்கின்றன. எமது மக்களிடம் பணம் இல்லை. ஆனால், தீர்வாக இந்து/சைவ மதங்கள் வகுத்த கொள்கைகளை பின்பற்றுகின்றனர்.   

கிட்டத்தட்ட உலகின் மூத்த மதமான இந்து / சைவ மதங்களில், கிட்டதட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்னராக உருவாகப்பட்ட சகல நெறிமுறைகழும் இந்த 21ஆம் நூற்றாண்டிற்கும் பொருந்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  சிலவற்றை நாம் ஒரு சமூகமாக நிராகரித்தும் உள்ளோம். அதேவேளை, அவற்றில் சில இன்றும் பொருந்தும் நெறி முறைகளே. சிலவற்றிற்கு எமக்கு விளக்கம் தெரியாது, அதனால் அதற்கு சிலர் அது மூட நம்பிக்கை எனவும் இலகுவாக கூறி விட்டு செல்கிறார்கள். 

மீண்டும் மன அழுத்தம், மன உளைச்சல் பற்றி பார்த்தால்,  பொருளாதாரா ரீதியாக 'வளர்ந்த' நாடுகளில், 20 வீதமானவர்கள் இதனால் இன்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை, இதற்கு சிறந்த மருந்தாக தியானம் என்று 'அறிவால் வளர்ந்த உலகமே' ஏற்று வருகின்றது. 

இந்த தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை  போன்றவை ஒரு மருந்தே! மற்றையவர்களுக்கு இடையூறு செய்யாமல், அந்த சமூகத்தின் விதிகளை மீறாமல், மற்றைய மதங்களுக்கு தடையில்லாமல் அவரவர் தனது மன அழுத்தங்களுக்கு  ஒரு தீர்வை தேடுவதில் யாருக்கு என்ன வெறுப்பு? காழ்ப்புணர்வு?  அன்பே சிவம் !  

ஏற்கனவே சொன்னது போல, மன அழுத்தம் குறைக்க மத அனுஸ்டானங்கள் தேவையென்றால் அப்படியே சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டியது தானே? பிறகேன், அதில கொஸ்மிக் கதிர் இருப்பதால் செய்தேன், இதில உடற்பயிற்சி இருப்பதால் செய்தேன் என்ற போலி அறிவியலில் உங்கள் நம்பிக்கையைக் கொழுவி உங்கள் நம்பிக்கையை நகைப்புக்குள்ளாக்க வேண்டும்? 

இன்றைய நிலையில், இல்லாத அறிவியல் விளக்கங்களால் மற்றவனின் அறிவை தனக்கு முலாம் பூசப் பயன்படுத்தும் நம்பிக்கைகள் இந்து மதமும், சயன்ரோலொஜியும் (Scientology) தான்! சுன்னத் செய்வதால் நோய்த்தொற்றுக் குறையும் என்று மருத்துவம் கண்டு பிடித்த பிறகும் யூதர்களோ, முஸ்லிம்களொ நாம் விஞ்ஞானத்தால் இயக்கப் படும் மதம் என பிரச்சாரம் செய்யவில்லை. 

மத நம்பிக்கை என்பது ஒரு வகையான நிபந்தனையற்ற விளக்கங்கள் தேடாத நம்பிக்கை முறை, விஞ்ஞானம் என்பது நிபந்தனையுடைய, விளக்கங்கள் தேடும் செயல்முறை. இரண்டையும் தனியாக விட்டிருந்தால் ஏன் இந்தத் திரி இப்படி நீள்கிறது? 

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

சைவ சமயம் மனித வளர்ச்சிக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை. இலங்கையை பொறுத்தவரை மனித வளர்ச்சிக்கு அரசியல் மட்டுமே தடையாக இருந்தது.இருக்கின்றது.கருத்துக்களம் எனும் பெயரில் எனது மதத்தை மட்டம் தட்டி எழுத வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

சிங்களவனோடை அரசியல் செய்து தமிழர் பிரச்சனைய தீர்க்க வக்கில்லை. இஞ்சை வந்து ஏழறிவு விண்ணாணக்கதையள்.

சிங்களவனோட அரசியல் சரியா செய்யலை என்ற யாரைக் குற்றம் சாட்டுகின்றீர்கள் என்று எனக்கு  புரியவில்லை. சரியாக அரசியல் செய்யாத மாபெரும் தவறைச் செய்தவர்கள்   அரசியல் வாதிகளும்  அதன் பின்னர் வந்த விடுதலைப் புலிகளும் ஆகும். அவர்கள் இருவரும் அந்த தவறை செய்யும் போது அவர்கள் மீது வைத்திருந்த விசுவாசம் காரணமாக அவர்களின் தவறை சுட்டிக்காட்டாதது எம் எல்லோரதும் ஒட்டு மொத்த தவறு அல்லவா?  இப்போதும் எம்முன்னோர் மீது வைத்திருக்கும் அதி தீவிர விசுவாசம் காரணமாக அவர்கள் செய்த மூடத்தனங்களுக்கு  வக்காலத்து  வாங்குவது யார்?  நீங்கள் தானே. 

Link to comment
Share on other sites

பதிவின் தலையங்கம்,

'நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

முடிவு.... விடுதலைப் புலிகளின் அரசியல்.…..!!

கந்தா கடம்பா காப்பாற்ரடா.🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பையன், நீங்கள் சில விடயங்களில் வளரவில்லை என நினைத்தேன்! நீங்கள் வளரவேயில்லை என்பதைக் காட்டுகிறது மேலுள்ள சில கருத்துகள்! புலம்பெயர்ந்த பின்னர் தமிழர்கள் தங்கள் மதமான சைவத்தை இழந்தார்களா? சமூகக் கல்வியும் வரலாறும் இலங்கையில் படித்தீர்களா அல்லது வாழும் நாட்டில் படித்தீர்களா? போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்ததாவது தெரியுமா? என்ன கூத்தையா இது? உங்கள் போன்ற சொந்த நாட்டின் வரலாறே தெரியாத பையன்களை வைத்துக் கொண்டா சீமான் தமிழகத்தில் கொடி கட்ட நிக்கிறார்? 

விடயங்கள் தகவல்கள் தெரியாமல் அலட்சியமாக இருப்பது உங்கள் உரிமை! ஆனால் உங்கள் அறிவற்ற தனத்திற்கு மற்றவர்கள் இலக்காகும் போது சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. இலங்கை வரலாற்றைப் படியுங்கள். தமிழர்களுக்கு உத்தியோக பூர்வ மதம் எது என்று உண்மையான தமிழ் வரலாற்றைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்! 

உங்க‌ளை மாதிரி வ‌குப்பு எடுக்க‌ என‌க்கும்  தெரியும்  , இந்த‌ திரியில் சைவ‌ ம‌த‌த்தை ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ன‌ எழுதி இருக்கிறார்க‌ள் என்ற‌த‌ வாசித்து விட்டு என் க‌ருத்துக்கு நீங்க‌ள் ப‌தில் அளியுங்கோ , 
நான் எழுதின‌து என்ன‌வோ நீங்க‌ள் ஊதின‌ ப‌ல்ல‌வியை மீண்டும் மீண்டும் ஊதுறீங்க‌ள் வ‌ள‌ர‌ வில்லை அது இது என்று , 

நான் உண்மையை எழுத‌ அதிக‌ம் உங்க‌ளுக்கு தான் வேர்த்த‌து , கார‌ண‌ம் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து ம‌த‌ம் மாறி போட்டு , தேவை இல்லாம‌ சைவ‌ ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்தும் ம‌னித‌ர்க‌ள் இப்ப‌டியான‌வ‌ர்க‌ள் தான் ,

ம‌த‌ம் மாறின‌ புத்து ஜீவ‌ங்க‌ள் இனியாவ‌து நீங்க‌ள் வ‌ண‌ங்கும் தெய்வ‌த்துக்கு உண்மையும் நேர்மையுமாய் இருங்கோ , அடுத்த‌வ‌ர்க‌ளின் ம‌த‌ங்க‌ளை கேலியும் கிண்ட‌ல் செய்வ‌தை நிறுத்தி கொள்ளுங்கோ , இப்ப‌டியே ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்தா கால‌ போக்கில் , தெருவில் போர‌ நாய் கூட‌ இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ளை ம‌திக்காது 😠 /

( அண்ண‌ன் சீமான் பின்னால் உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அறிவான‌ பிள்ளைக‌ள் அவ‌ர் பின்னால் நிக்கிறார்க‌ள் , உங்க‌ளோடு நான் த‌னி ஆளாய் விவாத‌ம் செய்ய‌ த‌யார் இந்த‌ திரியில் , நான் க‌ற்ப‌ணையில் எழுத‌ வில்லை நிய‌ வாழ்வில் ந‌ட‌ப்ப‌தை எழுதுகிறேன் 👏😁 /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும்  12 வ‌ய‌து சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌லே உங்களின் கேள்விக‌ளுக்கு ச‌ரியான‌ ப‌தில் அளிப்பின‌ம் 👏🙏😉
இதுக்கை எங்கையோ ம‌ற்ற‌ திரியில் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுத‌ , அத‌ இந்த‌ திரிக்கு காவி கொண்டு வ‌ந்து எழுதுறீங்க‌ள் சீ😠 , இந்த‌ திரிக்கு சம்ம‌ந்த‌மான‌ ப‌திவை எழுதுங்கோ ,  ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்க‌ வேண்டாம் 😉,

இந்த‌ திரியில் என் ம‌த‌த்தை மிக‌வும் கொச்சை ப‌டுத்தும் வித‌மாய் ப‌ல‌ ப‌திவுக‌ள் இருந்த‌து 😠 , அது தான் என் ஆவேச‌ க‌ருத்தை ப‌திவிட்டேன் 😉,

குமார‌சாமி தாத்தாவின் பாசையில் சொல்ல‌ போனால் ( ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😁

இந்த‌ விஞ்ஞான‌ உல‌கில் அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ளை நினைத்தால் சிரிப்பு வ‌ருது 😁😁 , இந்த‌ நூற்றாண்டில் தெரிந்து கொள்ள‌ நினைப்ப‌தை ஒரு சில‌ வினாடிக‌ளில் தெரிந்து கொள்ள‌லாம் , காலாம் மாறி போச்சு , 

த‌மிழீழ‌த்தில் இருந்த‌ ம‌த‌ங்க‌ள்
சைவ‌ ம‌த‌ம்
கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம்
க‌ர்ரோலிக் ம‌த‌ம் 

( புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து தான் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் அல்லோலியா என்ர‌ ம‌த‌த்துகை மாறின‌வை , மீண்டும் சொல்லுறேன் ம‌த‌ம் மாறும் இரு முக‌ம் கொண்ட‌வ‌ர்க‌லே இனியாவ‌து நீங்க‌ள் வ‌ண‌ங்கும் தெய்வ‌த்துக்கு உண்மையும் நேர்மையுமாய் இருங்கோ , தேவை இல்லாம‌ ம‌த‌ க‌ல‌வ‌ர‌த்தை உண்டு ப‌ண்ணாதைங்கோ ம‌ற்றும் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை கொச்சை ப‌டுத்தாதைங்கோ 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 🙏😉
 
Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

மற்றையவர்களுக்கு இடையூறு செய்யாமல், அந்த சமூகத்தின் விதிகளை மீறாமல், மற்றைய மதங்களுக்கு தடையில்லாமல் அவரவர் தனது மன அழுத்தங்களுக்கு  ஒரு தீர்வை தேடுவதில் யாருக்கு என்ன வெறுப்பு? காழ்ப்புணர்வு?  அன்பே சிவம் !  

👍👍👍

எல்லோரும் தங்கள், தங்கள் மதத்திலுள்ள அழுக்குகளைக் களைந்து விட்டு ஒழுங்காக வாழ்ந்தாலே போதும்.

இங்கு மற்றவனது நம்பிக்கையில் மூக்கு நுழைப்பது சகஜமாகிவிட்டது. இது அநாகரிகமான செயல் என்று சிறிதும் யோசிப்பதில்லை. மற்றவனது மதம் பற்றி முழுமையாக அறியாமல், நுனிப்புல் மேய்ந்துவிட்டு அதனை இழிவுபடுத்தும் நிலை கண்டிக்கப்பட வேண்டும்.

5 hours ago, Justin said:

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்ததாவது தெரியுமா?

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் அன்று ஈழத்தில் இந்து மதத்தைச் சீர்குலைத்தது போல, இன்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் நமது பாரம்பரிய மத விழுமியங்களை இழிவுபடுத்துதல் வியப்பல்லத் தான். என்ன ஒரு ஆதிக்க மனப்பான்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலருக்கும் பல கருத்துக்கள் புரியாமல் இருக்கிறது 
புரிந்துகொள்ள முயற்சி எடுங்கள்.

என் மதம் உங்கள் மதம் தனிப்பட்ட விடயம் என்பது  எங்கள்  உங்கள் வீட்டுக்குள் இருக்கும்வரைதான் 
வீதிக்கு வந்துவிட்டால் அதனால் பாதிக்கபடுகிறவன் அதை சொல்லத்தான் செய்வான்.
உங்களுக்கோ எனக்கோ அடிப்படை மனித அறிவு இருந்தால் அடுத்தவன் சொல்வதை  முதலில் கேட்க வேண்டும். எனது சாமிக்கு  காணிக்கை செய்கிறேன் என்று அடுத்தவனை பிடித்த்து நான் வெட்டினால் 
நீங்கள் வந்து அது அவருடைய மதம் அது அவர் தனிப்பட்ட விடயம் என்று நான் வெட்டுவதுக்கு வந்து வரிசையாக நிற்பீர்களா? 

சைவமத்துக்கும் 
முன்னோருக்கும் 
வக்காலத்து வாங்குவதாக எண்ணி இரண்டையும் நீங்கள் அதிகம் கொச்சைபடுத்துகிறீர்கள் 
சைவமதமும் எமது முன்னோரின் சில அறிவியல்களும் திட்டமிட்டு அழிக்கபடுகிறது 
இதுக்கு இதை அழிக்க நினைத்தவன் என்ன யுத்திகளையும் சடங்குகளையும் புகுத்தினானோ 
மூடர்கள்போல அதை தொங்கிப்பிடிக்க துடிக்கிறீர்கள். 
முதலில் நீங்கள் செய்யவேண்டியது சைவமதம் என்றால் என்ன? என்று படித்து தெளிவு பெறுவது 
அடுத்து தமிழர்களின் பேர்அரசுகள் எப்படி அழிந்தன யாரால் அழிக்கபட்டன ஏன் அழிக்கபட்டன 
என்று படித்து அறிந்துகொள்வது. உங்களுக்கு இரண்டும் பற்றிய அறிவு அறவே கருத்துக்களில் இல்லை. 

முன்னோர்கள் அந்த காலத்தில் அவர்களிடம் இருந்த அறிவுக்கு ஏற்ப சில காரியங்களை செய்தார்கள்கள் 
அதில் தவறு இல்லை பூமி தட்டையானது என்று அவர்கள் நம்பி இருந்தால் அது அவர்கள் தவறோ குற்றமோ இல்லை. ஆனால் பூமி உருண்டை என்பதை நேரிலே மேல் இருந்து படம்பிடிக்க பல சற்றலைட்கள் உலாவரும் 
இந்த காலத்தில் நீங்கள் அடுத்தவனுக்கு பூமி தட்டை  ஏனனெனில் எமது முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை  என்று எழுதினால்  ......... முதலில் கேட்பவன் சிரிப்பான் .... உங்களுக்கு இப்பிடித்தான் கோபம் வரும் 
அடுத்து  நீங்கள்தான் எங்கள் முன்னோரை அசிங்கப்படுத்த்துகிறீர்கள் அடுத்தவன் எது எதுவோ ... அதை எழுதுகிறான். 

மதம்பிடித்தால் இப்படித்தான் குளறியடிக்க தோன்றும் 
உங்கள் மதத்தை நேசிக்க பழகுங்கள் அதுதான் அதைப்பற்றிய அறிவை வளர்க்க உந்தும் 
பின்புதான் உங்கள் மதம் அழிக்கபடுவதை உணரமுடியும் ........ அதை உணரும்போது அதை எவ்வாறு காப்பாற்றுவது என்ற எண்ணம் தோன்றும். 

தெளிவுறுதல் சைவ மத சிர்த்தார்த்தம் முதலில் அதை செய்தாலே பாதி சரியாகிடும்.
பின்பு நல்லூரில் அல்ல எந்த கோவில்களிலும் இப்படி கேலி கூத்தை பார்க்க மாட்டீர்கள். முன்னோரை பற்றிய அறிவு வரும்போது  அடுத்தவன் உங்களுக்கு எதிராக செய்துகொண்டிருக்கும் சதிகளை புரிவீர்கள் அதன் பின்பு  இப்படி குத்து ஊசிகளை உடலில் குத்தி கயிறில் தொங்குவது அசிங்கமும் எமது முன்னோருக்கு எதிரானதும்  என்று உணர்வீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

பதிவின் தலையங்கம்,

'நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

முடிவு.... விடுதலைப் புலிகளின் அரசியல்.…..!!

கந்தா கடம்பா காப்பாற்ரடா.🙏 

பூனைக்குட்டி மெல்ல மெல்ல வெளியிலை வருகுது எண்டு சொல்ல வாறியள்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இங்கே சைவமதத்தின் ஆதியில் இருந்த எல்லா நடைமுறைகளையும் எவரும்  ஆதரிக்கவில்லை.ஆனால் சைவ/இந்து மதமே தவறு என நையாண்டி பண்ணும் போதுதான் பிரச்சனைகள் வருகின்றது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.மதங்கள் கேவலமானது என்ற மொட்டைக்கருத்து வரும்போதுதான் விதண்டாவாத கருத்துக்கள் முளைக்கின்றன. கோவில்களில் நடக்கும் பகட்டு ஆடம்பரங்களை இங்குள்ளவர்கள் ஆதரித்ததாக நான் அறியவில்லை.நானே ஒரு சில கோவில்களுக்கு போவதில்லை.காரணம் அது சந்தையாக என் மனதுக்கு படுகின்றது. வீட்டில் எனக்கு வேண்டிய கடவுள்களை வணங்குகின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனை மிஞ்சிய ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது அந்த சக்தி  அவரவருக்கு சிவனாகவும் ஜேசுவாகவும் அல்லாவாகவும் புத்தராகவும் தெரிகின்றார்.அவ்வளவுதான்.
 
Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

பதிவின் தலையங்கம்,

'நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

முடிவு.... விடுதலைப் புலிகளின் அரசியல்.…..!!

கந்தா கடம்பா காப்பாற்ரடா.🙏 

சிங்களவனோடை அரசியல் செய்து தமிழர் பிரச்சனைய தீர்க்க வக்கில்லை. இஞ்சை வந்து ஏழறிவு விண்ணாணக்கதைள், என்று அரசியல் செய்தவர்கள், செய்பவர்கள் யாரோ  இருக்க இங்கு வந்து  தேவையில்லாமல்   அதை தொடக்கியவருக்கு  கொடுக்கப்பட்ட பதில் அது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

போலி அறிவியல் கருத்துகளால் ஒரு மத நம்பிக்கையை முண்டு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியிருக்கிறதெனில் அந்த மத நம்பிக்கை கொள்வோர் ஆன்மரீதியில் உள்ளீடு எதையும் பெறாமல் கோதுகளைக் கட்டிக் கொண்டு அல்லாடுகிறார்கள் என்று தான் அர்த்தம்! இது எந்த மதத்திற்கும் பொருந்தும் ஆயினும், இந்த போலி விஞ்ஞானத்தை வைத்து முண்டு கொடுப்பது அதிகம் இந்து மதமே என்பதால் இது இந்து மதத்திற்கு அதிகம் பொருந்துகிறது!  

கண்ணா.....
 கத்தோலிக்கத் திருச்சபையின் முடிவின்படி கத்தோலிக்க மதகுருமார்களாக  கடவுளுக்கு வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் திருமணம் செய்யக்கூடாதாம்.
சகோதரிகள்( சிஸ்டேர்ஸ்) திருமணம் செய்யக்கூடாதாம்
இதற்கும் போலி அறிவியலிற்கும்  ஏதாவது தொடர்புகள் இருக்கின்றதா?

சரி தூக்கு காவடி எடுப்பதால் உடல் ரீதியாக   அவரைத்   தவிர  வேறு யாருக்கும் பாதிப்பில்லை
ஆனால் கிறிஸ்தவ குருமார்கள் மற்றும் சகோதரிகள் திருமணம் செய்யத் தடை இருப்பதால் எத்தனை பெருக்குப் பாதிப்பு.... இதைப்பற்றி இன்னும் எழுதலாம்... வேண்டாம்    

கிறிஸ்தவர்கள் முட்டுக்காலில் இருந்து வழிபாடு செய்து தங்கள் கால் முட்டிகளை வருத்தி நடக்க முடியாமல் அவதிப்படுவது
தேவாலயத்தைச் சுற்றி முட்டுக்காலில் நடப்பது
இவை எந்த நம்பிக்கையில் சேரும்

ஏன் இஸ்லாமியர்களும் தங்கள் வழிபாட்டு முறையில் தரையில் கால்களை மடக்கித்தான் வழிபடுகின்றார்கள்

என்ன இந்துக்கள் மனத்தில் அதிக துணிவும் பக்தியில் உயர்ந்த பணிவும் கொண்டவர்களாக இருப்பதால் தங்களை அதிகம் வருத்தி
வழிபாட்டில் ஈடுபடுகின்றார்கள்.
இவையெல்லாம் மூட நம்பிக்கையல்ல இந்துக்களின் சம்பிரதாயங்கள்.
சட்டத்திற்கு முன்னரே இருந்த சம்பிரதாயங்கள் தான் மனிதர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.   
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கே சைவமதத்தின் ஆதியில் இருந்த எல்லா நடைமுறைகளையும் எவரும்  ஆதரிக்கவில்லை.ஆனால் சைவ/இந்து மதமே தவறு என நையாண்டி பண்ணும் போதுதான் பிரச்சனைகள் வருகின்றது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.மதங்கள் கேவலமானது என்ற மொட்டைக்கருத்து வரும்போதுதான் விதண்டாவாத கருத்துக்கள் முளைக்கின்றன. கோவில்களில் நடக்கும் பகட்டு ஆடம்பரங்களை இங்குள்ளவர்கள் ஆதரித்ததாக நான் அறியவில்லை.நானே ஒரு சில கோவில்களுக்கு போவதில்லை.காரணம் அது சந்தையாக என் மனதுக்கு படுகின்றது. வீட்டில் எனக்கு வேண்டிய கடவுள்களை வணங்குகின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனை மிஞ்சிய ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது அந்த சக்தி  அவரவருக்கு சிவனாகவும் ஜேசுவாகவும் அல்லாவாகவும் புத்தராகவும் தெரிகின்றார்.அவ்வளவுதான்.
 
முதலில் இந்து மதம் என்றால் என்ன?
தத்துவம் என்ன?
யார் கடவுள்?
என்று உங்களால் எழுத முடியுமா? இல்லாத ஒன்றை இருப்பதாக நீங்கள் சோடினை காட்டினால் 
சோடினையை தாண்டி எதையும் காணாதவன் கேள்வி கேட்பான். இது உங்கள் தவறே தவிர அடுத்தவன் தவறு அல்ல. 
நீங்கள் ஓரிரு கோவில்களில் காணும் தவறை நான் எல்லா கோவில்களிலும் காண்கிறேன்.
அந்த தவறுகள் திருந்த ஒரே வழி பேசுவதுதான்.
இந்த கோவில்களில் இப்படி நடக்கிறது என்று ஏன் நீங்கள் தெளிவாக எழுதுவதில்லை? 
மூடி மூடி மெழுகுவதால் உள்ளே அசிங்கங்கள் புத்தெடுக்கின்றன ... இதனால்தான் இன்று ஒரு புனிதமே நாறிப்போய் நாதாரிகளின் கூடமாய் கிடக்கிறது.

மிஞ்சிய ஒரு சக்தியை நீங்கள் கடவுளாக பார்ப்பது உங்கள் தனிப்பட்ட விடயம்போலவே 
அதை அசையும் அணுவாக பார்ப்பது அடுத்தவன் அறிவை பொறுத்தது. அவனுடைய பார்வையில் உங்களுக்கு உடன்பாடு இல்லது போவதில் தவறு இல்லை. ஆனால் அவனை எழுதாதே என்பதும்  உங்களின் நம்பிக்கைக்கு அவன்  விரோதமாக இருப்பதாகவும் எழுதுவது ஏற்புடையதல்ல .... நீங்களும் அதையேதான் 
அவன் நம்பிக்கைக்கு எதிராக செய்கிறீர்கள்....... நீங்களும்தான் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அது கடவுள்தான் என்றால் தொடர்ந்தும் எழுதுங்கள் ஆதாரங்களை முன்வையுங்கள் அதன் மூலமாக 
அவன் வாயை அடைத்து கொள்ளலாம். 
அதைவிடுத்து நாம் குத்து ஊசியில்தான் தொங்குவோம் என்றால் பார்ப்பவன் பல் இளிக்கத்தானே செய்வான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

நாங்கள் எமது எல்லையை தாண்டவுமில்லை.மற்றவன் எல்லையை தாண்டி போகவுமில்லை.எமது எல்லைக்குள் வந்து உங்கள் பூஜை புண்ணியானங்களை செய்ய வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.நீங்களும் உங்களைப்போன்றவர்களும் சமூக சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினால் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அங்கே அவரவர் வசதிக்கேற்ப மூளையை பயன்படுத்தலாம். 
உதாரணத்திற்கு பூமியில் இருக்கும் குடிநீரை கடலில் கலக்கவிட்டு.......நிலவில் தண்ணீர் தேடுவது போல....tw_yum:

Link to comment
Share on other sites

15 hours ago, கிருபன் said:

லாரா பாப்பா,

நல்லூர் கோயிலுக்குள் ஆண்கள் வெற்று மார்போடுதான் உட்பிரவேசிக்கலாம் என்ற சம்பிரதாயம் உள்ளது. அதற்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் கிட்டுமா?🤔🤔🤔

  1. - கோயில்கள் எல்லாம் ஒரு குளத்தை அருகில் ( அநேகமாக) கொண்டிருக்கும். இது மழை நீர் சேமிப்பிற்கு உதவும்
  2. - இந்த குளத்தில் கை, கால், முகம் கழுவுதல் - மக்கள் கூடும் ஒரு இடத்தில் சுகாதாரத்தை பேண உதவும்    
  3. - கடவுளை வீதியில் வலம் கொண்டு வருதலுக்கு, திடகாத்திரமான ஆண்களை தெரிவு செய்ய இது உதவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இங்க  என்ன  நடக்குது??😥😥

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.