தமிழ் சிறி

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

Recommended Posts

36 minutes ago, valavan said:

ஒருவனை பைத்தியக்காரன் என்பதற்கும், ஒருவன் பலகோடிபேரை  பைத்தியக்காரர்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.

அடுத்தவரை தொந்தரவு செய்யாமலும் சட்டத்தை மீறாமலும் அவரவர் வழிபாட்டு கடமைகளை அவர்கள் விரும்பிய வகையில் ஈடேற்றுவது அவரவர் பிரச்சனை.

அதனால்தான்  அடுத்தவர் மூக்கு நுனியில் உங்கள் விரல் பட்டால்கூட குற்றம் என்று சட்டம் வைத்துள்ள மேற்குலகங்களில்கூட நீங்கள் சொன்ன காட்டுமிராண்டிதன வழிபாடுகளில் அந்நாட்டு அரசுகள் கை வைப்பதேயில்லை.

சாவின் விளிம்பிலிருந்து தப்பிய  தன் குழந்தைக்காக அலகுகுத்தி காவடி எடுப்பவர்களும் உண்டு , அது அவரவர்களின்  நம்பிக்கை நேர்த்திக்கடன், 

அவர்களின் முன்னால் போய் நின்று நீங்கள் செய்தது காட்டுமிராண்டிதனம் பைத்தியக்காரமான செயல்  செயல் என்று  சொல்லும் துணிவு உங்களுக்கிருக்கா?

நான் வேண்டுமென்றால் எனக்கு பிடிக்காத பைத்தியக்காரதனம்,காட்டுமிராண்டி தனங்களிலிருந்து என்னையும் எனது நெருங்கிய உறவுகளையும் ஒதுங்கியிருக்க சொல்லலாம். 

வல்லவன்,  இப்படியான மனித அறிவுக்கு ஒவ்வாத  காட்டுமிராண்டித் தனங்களை பாமர மக்கள் செய்யும் போது அதனை விமர்சனம் செய்யும் உரிமை  உங்களுக்கும் உண்டு எனக்கும் உண்டு. நீங்கள் இவ்வாறான முட்டாள்தனங்களை ஆதரிக்கின்றீர்கள் என்பதற்காக எனது மனதிற்கு பட்டதை நான் சொல்லாமல் இருக்க முடியாது. நான் முன்னரே கூறியதைப்போல கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறுவதை இந்து சமய பாரம்பரியம் ஒருகாலத்தில் நியாயப்படுத்தி ஆதரித்தது. அதை தவறு என்று நாகரீக உலகம் கூறியபோதும் உங்களைப்போல் அதற்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் இருந்தது. அதைப்போல் தான் இப்போதும். நாம் யாரையும் கட்டாப்படுத்தவில்லை. விமர்சனங்களைத்தான் முன்வைக்கிறோம். அதை புரிந்து கொள்ளுங்கள். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

Me too இயக்கம் வந்த பின்னர் எல்லாப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களையும் பிற்போக்கு என்று முத்திரை குத்துகின்றார்கள்!

அலகு குத்தி தூக்குக்காவடி எடுப்பது அதைவிட கடுமையான சூழலில் இருந்து காத்த கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு காணிக்கையாகவும் இருக்கலாம்தானே.

மீ ரூவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு கிருபன்? 1994 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து நங்கூரம் வெளிவந்த போதே மிருகபலிக்கெதிராக ஒரு ஆசிரியர் தலையங்கம் ஐங்கரன்  எழுதி நல்லை ஆதீனம்  புதுவையரிடம் முறையிட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. இது இப்போது இணையவெளியில் நடப்பதால் பரவலாக எமக்குத் தெரிகிறது!

Share this post

Link to post
Share on other sites

இவ்வாறாக தூக்கு காவடி எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல், சாமியாடுதல் என்று சொல்லி பேயாடுதல், நிலத்தில் விழுந்து புரளுதல் எல்லாம் அறிவு பூர்வமான செயல்கள் என்று இங்கு கருத்து எழுதுபவ்கள் யாராவது  கருதினால் அது நிருபப்பது உங்கள் கடமை. 

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, Justin said:

மீ ரூவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு கிருபன்?

சில வருடங்களுக்கு முன்னர் சர்ச்சைகள் எதுவும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் திடீரென்று விலத்தப்பட்டவையாக (taboos) ஆக மாறிவிட்டன.

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, கிருபன் said:

சில வருடங்களுக்கு முன்னர் சர்ச்சைகள் எதுவும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் திடீரென்று விலத்தப்பட்டவையாக (taboos) ஆக மாறிவிட்டன.

நீங்கள் சொல்லும் மாற்றங்கள் ஆண் பெண் தொடர்பாடலில் உண்மையே! மதங்களில் இருக்கும் சம்பிரதாயங்களை கேள்வி கேட்பது காலா காலமாக நடந்து வருவது, நான் மேலே சுட்டிக் காட்டியிருக்கும் உதாரணம் போல! அதற்கும் மீ ரூவுக்கும் என்ன தொடர்பென்று எனக்கு இன்னும் விளங்கவில்லை!

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, Justin said:

நீங்கள் சொல்லும் மாற்றங்கள் ஆண் பெண் தொடர்பாடலில் உண்மையே! மதங்களில் இருக்கும் சம்பிரதாயங்களை கேள்வி கேட்பது காலா காலமாக நடந்து வருவது, நான் மேலே சுட்டிக் காட்டியிருக்கும் உதாரணம் போல! அதற்கும் மீ ரூவுக்கும் என்ன தொடர்பென்று எனக்கு இன்னும் விளங்கவில்லை!

மதங்களில் இருக்கும் சம்பிரதாயங்களை கேள்விகேட்டால் மீ ரூ இயக்கம் மாதிரி வளர்ந்து அவையும் விரைவில் காணாமல் போகலாம் என்று சொல்லவந்தேன். ஆனால் சம்பிரதாயங்களை celebrate பண்ணியே அவற்றை நாகரீகமாக மாற்றுவதில் வல்லவர்கள் நம்மவர்கள்!

யாழில் இதைப் பற்றி முன்னர் வந்த திரி!

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, நிழலி said:

இந்து மதத்தில் அல்லது ஏதாவது ஒரு மதத்தில் தன் உடலை வருத்தி, இரத்தம் சிந்தி, ஊசிகளை ஏற்றிக் கொண்டு வழிபட்டால் கடவுள் அனுக்கிரகம் செய்வார் என்று சொல்லப்பட்டு இருக்கா? தன்னை வருத்தி (உண்ணாமல் இருப்பது,  தோப்பு கரணம் இடுவது.,..) இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பது வேறு, தன்னை சித்திரவதை செய்து அதன் வலியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது வேறு. தன்னை சித்திரவை செய்வது காட்டுமிராண்டித்தனம்.

எல்லா மதங்களிலும் இப்படியான காட்டுமிராண்டித்தங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் பெண்களை முழுக்க மூடும் ஆடைகளை அணியச் செய்வதில் இருந்து, சிறுமிகளை மணம் முடித்து வைப்பது வரை பல காட்டுமிராண்டித்தங்கள் உள்ளன.

அதே போன்று இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதை ஏனைய கிறிஸ்தவர்களின் பாவங்களை கழுவுவதற்காகவும் என நம்பப்படுவதும் காட்டுமிராண்டித்தனமே. பாவத்தில் இருந்து பிறந்த மதமாக கிறீஸ்தவம் இருக்கின்றது.

அஹிம்சை மதம் என சொல்லப்படும் பெளத்தத்திலும் சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்குவதில் இருந்து இனவழிப்பை நியாயப்படுத்தும் காரணிகளை கொண்டு இருப்பது வரைக்கும் காட்டுமிராண்டித்தனங்களே.

என்னைக் கேட்டால் குகைகளில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித இனம் நாகரீகமடைந்த ஒரு இனமாக முற்றிலும் மாறுவதை தடுப்பது இப்படியான மத செயல் முறைகளே

நியாயமான வாதம்!

சில காட்டுமிராண்டிகள் தங்களது காட்டுமிராண்டித்தனத்தை மறந்து மற்றவர்களைப் பற்றி வலிந்து கதைப்பதும் மட்டுமல்லாது தங்களது  காட்டுமிராண்டித்தனத்தை அவர்கள்மேல் திணிக்க நினைப்பதுவும் மிகமிக மோசமான காட்டுமிராண்டித்தனமாக பார்க்க வேண்டும்!

சகல மதங்களிலும் காட்டுமிராண்டித்தனங்கள் நிறைந்துள்ளன.

அவரவர் தங்கள் மதங்களிலுள்ள காட்டுமிராண்டித்தனத்தை களைய முன்வருவது ஆரோக்கியமானது.

அந்த அடிப்படையில் திருக்கேதீஸ்வரத்தில் கிருத்துவ காட்டுமிராண்டிகள் இந்துக்களின் வளைவை அடித்துநொறுக்கியதை நாம் கண்டிக்கிறோம்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

மதம் ஒரு ஆயுதம்,  அதை வைத்து இனத்தை, அரசியலை, வியாபாரத்தை என பலதை கட்டியெழுப்ப முடியும். மதத்தை பத்திசாலித்தனமாக கைளாயத் தெரியாதபோது அவற்றால் அழிவுகள் எற்படும். மிகச் சிறுபான்மை பிராமணர்கள் இந்திய அதிகாரத்தை இன்றுவரை தமது கையில் வைத்திருப்பதற்கு அன்று அவர்கள் மதத்தை புத்திசாலித்தனமாக கையாண்டார்கள். சில தலமுறைக்கு முன்பு மணியாட்டி பூசை செய்தவர்கள் தான் இன்று அரசியல் தலமைகள் நீதிபதிகள் அரச நிர்வாக தலமைகளாக இருக்கின்றார்கள். சிங்களமும்  பொளத்த மதத்தை அடிப்படையாக வைத்து தேசீய இனத்தை கட்டியெழுப்பியது. மதம் மட்டுமில்லை மக்கள் சக்தி ஒருமிக்கும் அலகுகள் எல்லாம் சரியான முறையில் துரநோக்கோடு பயன்படுத்தப்படும் போது அவை பலனுள்ளதாக இருக்கின்றது. ஈழத்தை பொறுத்தவரை தொன்றுதொட்டு மதம் எம்மை நாமே அழிக்க சிதைக்க  பயன்படுத்தப்படுகின்றது . எக்காலத்திலும் அதை ஆக்க சக்தியாக பயன்படுத்தியதில்லை

கடவுள் இல்லை என்ற கருத்தில் வந்த திமுக வின் சண் ரிவி இன்று தொலைக்காட்சித் தொடர்கள் ஜோதிட பரிகாரங்கள் திருத்தல யாத்திரைகள் என்று பெரியார் எதை காட்டு மிராண்டி என்றாரோ அதை ஆயிரம் மடங்கு அதிகமாக செய்கின்றது. ஏனெனில் அது கோடிகள் புளங்கும் வியாபாரம். கடவுள் இலலை என்ற கருத்திலையும் சரி இருக்கு நம்பிக்கைகளையும் சரி சரியான முறையில் பயன்படுத்தி அரசியல் அதிகார பண வெற்றியை அடைகின்றார்கள்.

ஒரு விசயத்தை காட்டுமிராண்டித்தனம் என்பது அதை எப்படி பயன்படுத்துகின்றறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கின்றது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, tulpen said:

இவ்வாறாக தூக்கு காவடி எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல், சாமியாடுதல் என்று சொல்லி பேயாடுதல், நிலத்தில் விழுந்து புரளுதல் எல்லாம் அறிவு பூர்வமான செயல்கள் என்று இங்கு கருத்து எழுதுபவ்கள் யாராவது  கருதினால் அது நிருபப்பது உங்கள் கடமை. 

அறிவு பூர்வமான செயல் என்பது கால நீரோட்தத்துடன் மாறும் ஒன்று. 

ஆனால், காலப்போக்கில் இவை மாறலாம்.  மாறாமலும் போகலாம். 

" தூக்கு காவடி எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல், சாமியாடுதல் என்று சொல்லி பேயாடுதல், நிலத்தில் விழுந்து புரளுதல்" என்பன இவை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அறிவு பூர்வமான செயலாக நிச்சயம் இருந்திருக்கும். 

இந்தக்காலத்தில் கூட இவைற்றை நாடு உள்ளவர்களால் கொண்டாட முடியும். அது அந்த நாட்டின் சட்டத்திற்கு எதிரானதாக இல்லாத தருவாயில்.  இவ்வாறான செயல்முறைகள் பல கலாச்சாரங்களில் உள்ளவை. 

ஜப்பானில், உருசியாவில் கரடியை கொல்லுகிறார்கள். அதனால் மனித குலத்திற்கு நன்மை என அவர்கள் எண்ணுகிறார்கள். 

ainu bear worship

சீனாவில் சில பகுதிகளில் இன்றும் தாய்மை அடைந்திருக்கும் பெண்ணை தூக்கியவண்ணம் நெருப்பு தன்னால் மீது தந்தை பிள்ளை சுகப்பேறு பிறக்கவேண்டும் என நடக்கிறார்கள். 

எமது முன்னோர் இருகரம் கூப்பி வரவேற்பார்கள். மேற்குலகத்திலும் இப்பொழுது கை குழுக்கலை தவிர்க்கிறார்கள். உருசியாவில் விருந்தினர்களை பாணும் உப்பும் கொண்டே இன்றும் வரவேற்கிறார்கள். கனடாவில் மற்றையவர் தவறு செய்தாலும், செய்யாதவர் மன்னிப்பு கூறுவார். இவை எல்லாம் அறிவு சார்ந்து நடக்கலாம் இல்லை பிற்போக்கான செயல்களாக பார்க்கவும் படலாம்.     

கீழே இணைக்கப்பட்ட காணொளிகளில் தைப்பூசம் உட்பட்ட மேலும் பல இவ்வாறான உலகத்தை பார்க்கலாம். 

Share this post

Link to post
Share on other sites

இது அறிவியல் உலகம். மதங்களும் அவற்றிற்கான புராணங்களும் புனைக்கதைகளும் சம்பிரதாயங்களும் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டதாஉண்மையை அறிவின் மூலமாக உணரக்கூடிய ஆற்றலைக்கொண்ட மனிதர்கள் வாழ்வதற்கு முற்படும் காலம். மதங்களைப் பொறுத்தவரை இக்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத, அவற்றிலுள்ள வேண்டாத வழிகாட்டல்களை நீக்கிவிட்டு, மனமும் உடலும் நலமாக வாழ்வதற்குரிய வழிகாட்டல்களை ஏற்றும் பிறருடன் பகிர்ந்தும் வாழ்வதுதான் நலம்தரும்.

கல்லென்று எண்ணி எறிந்தபின்புதான் அது கல்லல்ல வைரம் என்று கவலை கொள்வதைப்போல், தோப்புக்கரணத்தைக்கூட காட்டுமிராண்டித்தனம் என்று காட்டச் சிலர் முயல்வதைக் காணலாம். அறிவியலில் முன்னேறி ஒரு வல்லரசாகவும் வளர்ந்திருக்கும் அமெரிக்கா, தோப்புகரணத்தில் உள்ள நன்மைகளை அறிந்து அந்தப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு தன் குடிமக்களை ஊக்குவிப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று படங்களுடன் வெளிவந்தது.

ஆயுதங்கள் இல்லாமலே நோய்களை மாற்றும் சிகிச்சை முறைகளை வரும் காலத்தில் மக்கள் கண்டுபிடிக்கலாம். அறிவியல் பாதையில் இதனை மறுக்கமுடியாது. அதன்பின்பு எங்கள் காலத்தில், பிறந்த குழந்தைமுதல் முதியோர்வரை அவர்களது உடல்களை ஊசிகளால் குத்தித் துளைப்பதையும், வெட்டிக் கிழிப்பதையும் காட்டுமிராண்டித்தனம் என்று அந்த மக்கள் கூறமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.! பழையதைக் கிளறி காழ்ப்புணர்சியுடன் வாந்தி எடுத்தால் அதன் மணம்தாங்காமல் மக்கள் ஓடத்தான் செய்வார்கள். அதனைவிடுத்து பொருனந்தாதனவற்றில் உள்ள நன்மைகள், தீமைகளை ஆராய்ந்து அறிந்தபின், அதனைப் பிறருக்கும் அறியத்தந்தால் அதில் பலனுண்டு. 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

தமிழர்களின் மத நம்பிக்கை இங்கு நிந்தனை செய்யப்பட்டிருக்கிறது ஆனால் இந்த திரியை மூடவோ அல்லது தவறான கருத்துக்களை நீக்கவோ இல்லை;ஆனால் கிறிஸ்த்தவ மதத்தையோ அல்லது இஸ்லாம் மதத்தையோ இப்படி தவறாக எழுதியிருந்தால் யாழ் நிர்வாகம் சும்மா இருந்திருக்குமா.....!!! 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, tulpen said:

இவ்வாறாக தூக்கு காவடி எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல், சாமியாடுதல் என்று சொல்லி பேயாடுதல், நிலத்தில் விழுந்து புரளுதல் எல்லாம் அறிவு பூர்வமான செயல்கள் என்று இங்கு கருத்து எழுதுபவ்கள் யாராவது  கருதினால் அது நிருபப்பது உங்கள் கடமை. 

இவ்வாறான செயல்கள் காலத்திற்கு பொருந்தாத  அறிவற்ற மடைத்தனம் என்று அதற்காக வக்காலத்து வாங்குபவர்களுக்கு என்னைவிட  நன்கு தெரியும். அதனால் தான் திரியை மூட கோரிக்கை வைக்கப்படுகிறது. இருந்தாலும் எதிர்கால தமிழரின்  தலை முறை இந்த மூடத்தனங்களை தூக்கி எறிந்து உலக சமுதாயத்தின் முன்னால் மிடுக்குடன்  தலை நிமிர்ந்து வாழும். 

Share this post

Link to post
Share on other sites

சகல மத வழிபாட்டு முறைகளும் மனித உடலுக்கு ஒரு பயிற்சியாகவே இருக்கின்றது. நம்மவர்கள் செய்வது அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் சிறிய உண்மைகள் இலைமறைகாயாகவே இருக்கின்றன.

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

சகல மத வழிபாட்டு முறைகளும் மனித உடலுக்கு ஒரு பயிற்சியாகவே இருக்கின்றது. நம்மவர்கள் செய்வது அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் சிறிய உண்மைகள் இலைமறைகாயாகவே இருக்கின்றன.

சீனாக்காரன் அக்குபன்சர் (acupuncture)மருத்துவத்தை .... அலகு குத்துவ🤣தில் இருந்துதான் கண்டுபிடிச்சவனாம்🤣

Share this post

Link to post
Share on other sites
On 8/9/2019 at 5:44 PM, Justin said:

எ.த, உங்கள் சுகப் படுத்த முடியாத மூலக்கொதி இங்கே எல்லாருக்கும் தெரிந்தது தான்! ஆனால் அந்த மூலக்கொதி தமிழ் வாசிப்பு கிரகிப்பிலும் கூட உங்களை அரைகுறைத் தமிழனாக மாற்றி விட்டது. கீழே மீளவும் நான் எழுதியதை கோடிகாட்டியிருக்கிறேன்!

மற்ற படி உங்களுக்கு விஞ்ஞானிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று விளக்கும் நோக்கம் எனக்கில்லை!

மூலக்கொதிப்பு இருந்தால் நான் டாக்டரிடம் காட்டி குணப்படுத்திக்கொள்கிறேன். அதற்கு உங்கள் அறிவுரை எனக்கு தேவையில்லை. 

விரதமிருப்பதால் வரும் நன்மைகள் இப்போதுதான் உங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.. சைவசமய சடங்குகளையும் செயல்களையும் விமர்சிப்பதும் உங்கள் சமய காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்ப்பதும்தான் உங்கள் வீரம் என்பது களத்தில் எல்லோருக்கும் தெரிந்தவிடயமே. மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் பல மருத்துவ ஆதாரங்களை எமது முன்னோர்கள் அன்றே சொல்லிவைத்திருப்பது உங்களுக்கு தெரியவில்லை போலும்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, Eppothum Thamizhan said:

உலகில்  எல்லா விடயத்திலும் எமது முன்னோர்கள் தான் Best என்று சொல்வதும் ஒரு மனோவியாதிதான். தன்னை ஆக்கிரமித்து அடிமை கொள்ள வந்த அனைவரிடமும் தோற்று போய் அடிமை வாழ்வை தனது சந்ததியினருக்கு கொடுத்துவிட்டு சென்ற  அந்த Best முன்னோர்கள் இந்த உலகில் நம் முன்னோராக தான் இருக்கும். 

Share this post

Link to post
Share on other sites

நமது முன்னோர்கள் காரணம் காரியமின்றி எதுவும் செய்வதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 

அறிவியல் மற்றும் தத்துவ ரீதியான விளக்கங்கள் :

கோவிலின் விமானத்தில் உள்ள செப்புத்தகடுகளும் உமியியும் அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்த்து, கருவரைக்கு அனுப்பும். கருவரையிலும் செப்புத் தகடு உள்ளதால் அந்த அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்க்கும். அண்டக் கதிரானது ஒளியன்கள் (Photons) நிறைந்தது. ஆக அண்டக் கதிரானது இருட்டில் தங்காமல் வெளிச்சம் உள்ள இடத்தில் பிரதிபளிக்கிறது. அது கருவறைக்கு வெளியே நின்றிருக்கும் பக்தர்களை சென்றடைகிறது. அண்டக் கதிரானது மனிதர்களுக்கு நேர்மறையை (Positive) ஊக்குவிக்க வல்லது. இதனால் மனிதன் புத்துணர்வு பெறுகிறான். அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்: https://helios.gsfc.nasa.gov/qa_cr.html?fbclid=IwAR3PocYPIpICi8cTxvmleZV9ndDc6iKFlIs694pSGFJTbfbhxXgBo9AymlQ

இந்து மதம் இறைவனால் நமக்காக உண்டாக்கபட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது.

இந்துக்களை பொறுத்தவரையில் கடவுள் கொள்கை எளிமையானது.

இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும்,
நீ என்னை வணங்காவிட்டால்
உன்னை தண்டிப்பேன் என்றோ,
என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால்
உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்றோ,
நீ எனக்கு அடிமை என்றோ சொன்னதாக எந்த வேதத்திலும் இல்லை.

அவரவர் எண்ணங்களுக்கேற்ப இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து.

தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

இந்து மதத்தின் புனித நூலின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை என்று எல்லாவற்றிலும் கடவுளை காணும் மதம்.

ஞானத்தை வழங்கும் தேவாரம்,திருவாசகம், திருக்கோவையார், பெரியபுராணம் முதலிய பன்னிருதிருமுறைகள் என்று எண்ணிலடங்கா வேதங்களை கொண்ட மதம்.

ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து"கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.

முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.

உலகமே விரும்பும் சனநாயக பண்புகளை கொண்ட மதம் !

மூலம் : தேடல் 

Share this post

Link to post
Share on other sites

தமிழன் கண்ட தோப்புக்கரணம் ..! சொந்தம் கொண்டாடி காப்பி ரைட் வாங்கிய அமெரிக்கா.!

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

திருவள்ளுவரும் சமயமும்
திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)[மேற்கோள் தேவை.

திருவள்ளுவரும் சைவமும்
திருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.

அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக் குறள்களிலுமே தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ampanai said:

நமது முன்னோர்கள் காரணம் காரியமின்றி எதுவும் செய்வதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 

அறிவியல் மற்றும் தத்துவ ரீதியான விளக்கங்கள் :

கோவிலின் விமானத்தில் உள்ள செப்புத்தகடுகளும் உமியியும் அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்த்து, கருவரைக்கு அனுப்பும். கருவரையிலும் செப்புத் தகடு உள்ளதால் அந்த அண்டக் கதிர்களை (Cosmic Rays) தன் வசத்தே ஈர்க்கும். அண்டக் கதிரானது ஒளியன்கள் (Photons) நிறைந்தது. ஆக அண்டக் கதிரானது இருட்டில் தங்காமல் வெளிச்சம் உள்ள இடத்தில் பிரதிபளிக்கிறது. அது கருவறைக்கு வெளியே நின்றிருக்கும் பக்தர்களை சென்றடைகிறது. அண்டக் கதிரானது மனிதர்களுக்கு நேர்மறையை (Positive) ஊக்குவிக்க வல்லது. இதனால் மனிதன் புத்துணர்வு பெறுகிறான். அறிவியல் ஆதாரம் வேண்டுவோர்: https://helios.gsfc.nasa.gov/qa_cr.html?fbclid=IwAR3PocYPIpICi8cTxvmleZV9ndDc6iKFlIs694pSGFJTbfbhxXgBo9AymlQ

இந்து மதம் இறைவனால் நமக்காக உண்டாக்கபட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது.

இந்துக்களை பொறுத்தவரையில் கடவுள் கொள்கை எளிமையானது.

இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும்,
நீ என்னை வணங்காவிட்டால்
உன்னை தண்டிப்பேன் என்றோ,
என்னை விட்டு வேறு கடவுளை வழி பட்டால்
உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்றோ,
நீ எனக்கு அடிமை என்றோ சொன்னதாக எந்த வேதத்திலும் இல்லை.

அவரவர் எண்ணங்களுக்கேற்ப இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து.

தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

இந்து மதத்தின் புனித நூலின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை என்று எல்லாவற்றிலும் கடவுளை காணும் மதம்.

ஞானத்தை வழங்கும் தேவாரம்,திருவாசகம், திருக்கோவையார், பெரியபுராணம் முதலிய பன்னிருதிருமுறைகள் என்று எண்ணிலடங்கா வேதங்களை கொண்ட மதம்.

ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து"கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.

முக்தி எனப்படும் மரணமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.

சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.

உலகமே விரும்பும் சனநாயக பண்புகளை கொண்ட மதம் !

மூலம் : தேடல் 

மூலம் தேடல் என்று போட்டதற்கு பதிலாக உளறல் என்று போட்டிருக்கலாம். ஏனென்றால் அத்தனையும் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி கொட்டப்பட்டு இதை share செய்தால் உங்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்று முட்டாள்தனங்களை தூண்டிவிடும் உளரல்கள். 

இந்து மதத்தை இறைவன் உருவாக்கினான்  என்றால் அவன் யார்? அவன் ஏன் உலகில் ஒரு சிறிய மூலையில் மட்டும் அதை உருவாக்கினான். இந்த பெரிய பூமியின் ஏனைய பகுதிகள் அந்த இறைவனுக்கு தெரியவில்லையா?

சந்திரனை பாம்பு விழுங்கியதாக நம்புபவர்கள் , செவ்வாய்கிரகம் திருமணங்களை தடுப்பதாக நம்புபவர்கள் அறிவியலில் சிறந்து விளங்கினார்கள் என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? 

சந்திரனின் சாபம் நீக்கிய சிவபெருமான்....

தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான்.

சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவ பெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை- வளர்பிறை உருவானது. சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது ஒரு சோமவார தினத்தில் தான். '14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்- மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்' என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஆம்..

நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.

இந்த கதையை சொன்னவர்கள் எமது முன்னோர்கள் தான். மகா புத்திசாலிகள். 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites

தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும்சூரியன் பிறந்தார்.[1] சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.

சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சம்ஞா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.

சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.

இதைப்போல பல ஆயிக்கணக்கான மூடத்தனத்தை எமது மக்களிடையே பரப்பியவரகள் யார்?  அவர்கள் தான் அதை இப்போது யாரோ கண்டு பிடித்த விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை கலந்து எம்முன்னோர்கள் மட்டும் தான் உலகில் தலை சிறந்தவர்கள் என்று ஜில்மா விடப் பார்கிறார்கள். 

சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. இந்த இருவேறு புராணங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

யார் இந்த சூரியன்? சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு.

அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. மார்க்கண்டேய புராணத்தில் இந்த கதை சொல்லப்பட்டுள்ளது. சூரியன் பற்றிய மற்றொரு வரலாறு வருமாறு:-- 

பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.

உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக்கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார். அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.

சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர். அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.

சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.

சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தன்னிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு “சாயாதேவி” என்று பெயர் சூட்டினாள்.

தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், “நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் மூன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்“ என்று கூறினாள்.

அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, “சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.

தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.

அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

Edited by tulpen
 • Sad 1

Share this post

Link to post
Share on other sites

எனக்கு தனிப்பட்ட முறையில் இதில் நம்பிக்கை இல்லை...ஆனால் ஏதோ ஒரு கஷ்டத்தில் இருந்து தம்மை கடவுள் காப்பாற்றினார் என்பதற்காக, அதற்கு நன்றிக்கடன் செலுத்த உதை செய்கிறார்கள்....உங்களுக்கு பிடிக்காட்டில் விலகி நில்லுங்கள்...காலங்கள் போகப் போக எமது எதிர்கால சந்ததி தாங்களாகவே இதில் இருந்து விலகி விடுவார்கள்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 8/9/2019 at 3:21 PM, tulpen said:

வல்லவன்,  இப்படியான மனித அறிவுக்கு ஒவ்வாத  காட்டுமிராண்டித் தனங்களை பாமர மக்கள் செய்யும் போது அதனை விமர்சனம் செய்யும் உரிமை  உங்களுக்கும் உண்டு எனக்கும் உண்டு. நீங்கள் இவ்வாறான முட்டாள்தனங்களை ஆதரிக்கின்றீர்கள் என்பதற்காக எனது மனதிற்கு பட்டதை நான் சொல்லாமல் இருக்க முடியாது. நான் முன்னரே கூறியதைப்போல கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறுவதை இந்து சமய பாரம்பரியம் ஒருகாலத்தில் நியாயப்படுத்தி ஆதரித்தது. அதை தவறு என்று நாகரீக உலகம் கூறியபோதும் உங்களைப்போல் அதற்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் இருந்தது. அதைப்போல் தான் இப்போதும். நாம் யாரையும் கட்டாப்படுத்தவில்லை. விமர்சனங்களைத்தான் முன்வைக்கிறோம். அதை புரிந்து கொள்ளுங்கள். 

நீங்கள் அதிகமாக கோவபடுவதுபோல்  தெரிகிறது

உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை நீங்க வெளிப்படுத்துவதை எவரும் ஏற்கிறார்கள் இல்லையே என்ற மான பிரச்சனையாக / கோபமாககூட  அது இருக்கலாம்.

பிறரை முட்டாள்கள் என்று தீர்ப்பு  சொல்ல  எந்த மனிதனுக்கும் உரிமையில்லை,

ஏனென்றால் தன்னை தானே  அறிவாளி என்று நினைக்கும் மனிதனும்  ஏதாவது ஒரு இடத்தில் முட்டாளாய் இருப்பான்.

உடன்கட்டை ஏறுவதும் மத கலாச்சாரங்களை விமர்சிப்பதும் ஒன்றல்ல,

உடன்கட்டை ஏறுவதை, அந்த கலாச்சாரத்தை  அடியோடு வெறுத்தது 

இதே நீங்க சொன்ன  காட்டுமிராண்டி கலாச்சாரத்தை கொண்ட இந்து மதம் தான்.

இடையிலே புகுந்து வேறு எந்த மதத்தவரும்  எவரும் அது தவறு என்று அடிச்சு திருத்தவில்லை

தான் செய்வது தவறு  என்று சுய விமர்சனம் செய்வதும், நான் செய்தது தப்பு என்று ஒத்துக்கொண்டு  திருந்தும் நாகரிகமும்  தில்லும் எந்த மதத்துக்கும் உண்டா இந்து மதத்தை தவிர>?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இங்கேநிழலி மற்றும் டுல்பென்  இந்து/சைவ சமயத்தில் உள்ளதாக கூறும்நிறைய விடயங்கள்நான் கேள்விப்படாதது/படிக்காதது உயர்தர பாடங்களில் அல்லது பல்கலைக்கழக பாடங்களில் இருப்பதாக கூட கேள்விப்படவில்லை. உண்மையாகவே இது எல்லாம் இந்து/சைவ சமயங்களில் இருக்குதா? அல்லது எனக்கு தான் எதுவும் தெரியவில்லையா?.நேற்று ஈலிங் அம்மனிலும்நிறைய காவடி அந்த மாதிரி இருந்துது

Share this post

Link to post
Share on other sites
On 8/11/2019 at 1:03 AM, tulpen said:

உலகில்  எல்லா விடயத்திலும் எமது முன்னோர்கள் தான் Best என்று சொல்வதும் ஒரு மனோவியாதிதான். தன்னை ஆக்கிரமித்து அடிமை கொள்ள வந்த அனைவரிடமும் தோற்று போய் அடிமை வாழ்வை தனது சந்ததியினருக்கு கொடுத்துவிட்டு சென்ற  அந்த Best முன்னோர்கள் இந்த உலகில் நம் முன்னோராக தான் இருக்கும். 

முன்னோர்கள் சொன்னதெல்லாம் best என்று நாள் எங்கும் சொல்லவில்லையே. எமது முன்னோர்கள் சொன்ன பல விடயங்களை இப்போ விஞ்ஞானிகள் சரியென்று ஒத்துக்கொள்கிறார்கள் என்றுதானே சொன்னேன். முதலில் எல்லா சமய செயல்களுமே பைத்தியக்காரத்தனம் என்று சொல்லித்திரியும் உங்கள் மனோ வியாதிக்கு பொய் மருந்தெடுங்கள். எமது முன்னோரை ஆக்கிரமிக்க வந்த எவரும் கத்தி பொல்லுடன் வரவில்லை. அவர்களிடம் அப்போதே துப்பாக்கிகளும் குண்டுகளும் இருந்தன. அவற்றை எதிர்த்து போராட நிச்சயமாக அவர்களால் முடிந்திருக்காது என்று கிரகிக்கக்கூட அறிவில்லாதவர்களுடன் கருத்தாடுவது வீண்வேலை.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 8/11/2019 at 9:13 AM, tulpen said:

தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும்சூரியன் பிறந்தார்.[1] சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.

சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சம்ஞா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.

சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.

இதைப்போல பல ஆயிக்கணக்கான மூடத்தனத்தை எமது மக்களிடையே பரப்பியவரகள் யார்?  அவர்கள் தான் அதை இப்போது யாரோ கண்டு பிடித்த விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை கலந்து எம்முன்னோர்கள் மட்டும் தான் உலகில் தலை சிறந்தவர்கள் என்று ஜில்மா விடப் பார்கிறார்கள். 

சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. இந்த இருவேறு புராணங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

யார் இந்த சூரியன்? சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு.

அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. மார்க்கண்டேய புராணத்தில் இந்த கதை சொல்லப்பட்டுள்ளது. சூரியன் பற்றிய மற்றொரு வரலாறு வருமாறு:-- 

பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.

உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக்கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார். அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.

சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர். அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, இயம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.

சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்துகொண்டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.

சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தன்னிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு “சாயாதேவி” என்று பெயர் சூட்டினாள்.

தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், “நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் மூன்று குழந்தைகளையும் கண்போல் வளர்த்து வர வேண்டும்“ என்று கூறினாள்.

அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, “சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்படியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.

தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.

அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

இந்தக்கதைகளை ஏன் சமய அனுட்டானங்களுடன் கலக்கிறீர்கள். இந்தக்கதையை நாமோ அல்லது நம்மவர்களோ நம்பியதாக எங்கும் எழுதப்படவில்லையே. தலையங்கத்திற்கு மட்டும் கருத்தெழுத பழகுங்கள். சும்மா கண்டமேனிக்கு திரியை திருப்பிவிடுவதே உங்களைப்போல் சில அறிவாளிகளின் வேலையாக இருக்கிறது என்பதை பல தடவைகள் நிரூபிக்கிறீர்கள். இதுவும் ஒரு மனோவியாதிதான்.

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Topics

 • Posts

  • சீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்தாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது. திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண்டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம்.  சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான். புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்.. இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்போ தெரிவு செய்யப் போகிறீர்கள்..???! இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.
  • த‌மிழ‌ன் தொலைக் காட்சி ஓன‌ர் என்றும் நான் பெரிதும் ம‌திக்கும் ஜ‌யா கலைக்கோட்டுதயமிட‌ம்  கேட்டால் இவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறை வ‌டிவாய் சொல்லுவார் அண்ணா , 
  • முதலில் நான் திராவிடன் என்று என்னைச் சொல்லுவதில்லை. நான் தமிழன் மட்டுமே.  கால்டுவெல் என்பவர்தான் திராவிடர் என்ற தெலுங்கர் மக்கள் கூட்டத்தினுள் தமிழரையும் உள்ளடக்கினார் என்றும் அது தவறு என்றும் நாம் தமிழர் இயக்கத்தை முதலாவதாகத் தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் சொல்லியுள்ளார். ஒரு கேள்விக்கு அவரது பதிலைப் பார்த்து புல்லரித்துப்போனேன்.😊 —- கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால், இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி "திராவிட நாடு" என்கிற அடிப்படையில் ஒன்றுபடக் கூடாது? பதில்:  கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக "தமிழ்நாடாக" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா?  ஒரு மொழி, ஒரு நாடு! என்பது தான் உலக நியதி. நன்றி:  சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து.