• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

Recommended Posts

1 hour ago, வாத்தியார் said:

கண்ணா.....
 கத்தோலிக்கத் திருச்சபையின் முடிவின்படி கத்தோலிக்க மதகுருமார்களாக  கடவுளுக்கு வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் திருமணம் செய்யக்கூடாதாம்.
சகோதரிகள்( சிஸ்டேர்ஸ்) திருமணம் செய்யக்கூடாதாம்
இதற்கும் போலி அறிவியலிற்கும்  ஏதாவது தொடர்புகள் இருக்கின்றதா?

ஆம் நிறையவே இருக்கிறது .....
நீங்கள் உங்களை முற்றுமுழுதாக சமூகத்துக்கு என்று ஒப்படைத்துவிட்டு 
திருமணம் குழந்தை குடுமபம் என்பது முரண்பாடு ஆகும். நீங்கள் இறைபணியை ஏற்றுக்கொண்ட பின்பு 
அதையே வாழ்வாக கொண்டபின்பு அது உங்களுடைய வாழ்வாகிவிடுகிறது. இன்னொரு பெண்ணையோ ஆணையோ உங்களுடன் இழுப்பதில் பல முரண்பாடு எழுகிறது.
இது ஏற்கனவே மணமாகி குழந்தையுடன் இருந்த புத்தனின் வாழ்வில் கூட வந்த சவால்தான்.
அவன் ஞானம் தேடி போனபோது ....... மனைவி குழந்தைகளை யார் பார்ப்பது என்று விமர்சனம் இப்போதும் 
புத்தன் மீது உண்டு. பல சைவ வைஷ்ணவ  துறவிகளும் அப்படித்தான் மதத்துக்காக தனித்தே சென்றுவிடுவார்கள். கிறிஸ்த்தவர்களில் பாதிரிகள் கன்னியாஸ்திரிகைகள் என்று மிகவும் குறைவு காண்பது கடினம் இந்தியா போனீர்கள் என்றால் தாராளமாக காணலாம். இது தமிழர்களின் சமண சைவ மதங்களில் மிகவும் தெளிவாக இருக்கிறது ...... பின்பு அவை திட்டமிட்டு பார்ப்பனர்களால் அடுத்த சமுகத்தை சுரண்ட அழிக்கபட்டதால் அவையும் அழிந்துவிட்டது. 

சரி தூக்கு காவடி எடுப்பதால் உடல் ரீதியாக   அவரைத்   தவிர  வேறு யாருக்கும் பாதிப்பில்லை
ஆனால் கிறிஸ்தவ குருமார்கள் மற்றும் சகோதரிகள் திருமணம் செய்யத் தடை இருப்பதால் எத்தனை பெருக்குப் பாதிப்பு.... இதைப்பற்றி இன்னும் எழுதலாம்... வேண்டாம்    

"அவரை தவிர"  அவர் யார்? என்பதுதான் இங்கு வாத பொருள் 
அவராக ஏன் நீங்களோ  பிராமணர்களோ அதை தூண்டிவிட்டு அதுக்கு வாக்களத்துவங்கும் மற்ற ஜீவராசிகளோ இல்லை? அதில் அருள் இருக்கிறது நன்மை இருக்கிறது என்றால் முதலில் தொங்கவேண்டியது பிராமணர்கள் 
ஆனால் எந்த பிராமணனும் தொங்குவதில்லையே? 
கிறிஸ்தவ பாதிரிகளின் பிரம்மச்சாரியம் உங்களுக்கு பாதிப்பைதந்தால்.... ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?
இங்கிருப்பவர்கள் சக கருத்தாளர்கள் இங்கு கூட எழுதவில்லை என்றால் எங்கு எழுதுவது பேசுவது? 
தாரளமாக எழுதுங்கள்  எல்லா குட்டைகளும் வெளிக்க வேண்டும் என்பதே இங்கு எழுதும் பலரின் ஆவல்.  

கிறிஸ்தவர்கள் முட்டுக்காலில் இருந்து வழிபாடு செய்து தங்கள் கால் முட்டிகளை வருத்தி நடக்க முடியாமல் அவதிப்படுவது
தேவாலயத்தைச் சுற்றி முட்டுக்காலில் நடப்பது
இவை எந்த நம்பிக்கையில் சேரும்

இதில் என்ன கேள்வி இருக்கிறது?
வெறும் மூடநம்பிக்கையைத்தான் சேரும் .... ஆனால் தேசிக்கையை வாயிலே குத்தி  குத்து ஊசிகளை உடலில் 
ஏற்றி காவடி என்று கயிறில் தொங்குவதை விட 1000 மடங்கு பரவாயில்லை எனலாம். 

ஏன் இஸ்லாமியர்களும் தங்கள் வழிபாட்டு முறையில் தரையில் கால்களை மடக்கித்தான் வழிபடுகின்றார்கள்

முன்னைய காலங்களில் தளபாட வசதிகள் இருந்து இருக்காது ஆதலால் தரையில் இருந்து 
வணங்கி இருக்கலாம். இப்போ பலூனில் பறக்க வசதி இருப்பதால் ......... மேலே கடவுள் இருக்கிறார் என்பவர்களை இஸ்லாமியர்கள் மட்டுமில்லை மற்றவர்களையும் பலூன்களில் மேலே அனுப்பிவிடலாம் சென்று வணங்கிவிட்டு வாருங்கள் என்று. கடவுளுக்கும் அடியார்களுக்கும் இடையில் கொஞ்சம் டிஸ்டன்ஸ் குறையுமில்லையா? 

என்ன இந்துக்கள் மனத்தில் அதிக துணிவும் பக்தியில் உயர்ந்த பணிவும் கொண்டவர்களாக இருப்பதால் தங்களை அதிகம் வருத்தி
வழிபாட்டில் ஈடுபடுகின்றார்கள்.

இதை ஏன் அதிக மூட நம்பிக்கையும் அறிவின்மையும் என்று எடுக்க கூடாது?
ஏதாவது இந்து மத புத்தகம் உங்கள் உடலை வருத்துங்கள் என்று சொல்கிறதா? 
யாரவது இந்து கடவுளர்கள் சாக்கு ஊசிகளை குத்துங்கள் பொற்காசு தருகிறேன் என்று சொல்கிறார்களா? 
இது மதமே தெரியாத ஒரு மாட்டு சிந்தனை என்று ஏன் எடுக்க கூடாது? 

இவையெல்லாம் மூட நம்பிக்கையல்ல இந்துக்களின் சம்பிரதாயங்கள்.
சட்டத்திற்கு முன்னரே இருந்த சம்பிரதாயங்கள் தான் மனிதர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 

 நீங்களே சொல்கிறீர்கள் எடுப்பவருக்குத்தான் பாதிப்பு என்று 
பின்பு அடுத்தவர் குத்து ஊசிகளை குத்தி கயிறில் தொங்கினால் மனிதர்களை கட்டுபடுத்தும் என்கிறீர்கள்?
என்ன வகையான கட்டுப்பாடுகளை இவை தருகின்றன? சரியாக புரியவில்லை ...
பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதே? 

18 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் எமது எல்லையை தாண்டவுமில்லை.மற்றவன் எல்லையை தாண்டி போகவுமில்லை.எமது எல்லைக்குள் வந்து உங்கள் பூஜை புண்ணியானங்களை செய்ய வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.நீங்களும் உங்களைப்போன்றவர்களும் சமூக சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினால் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அங்கே அவரவர் வசதிக்கேற்ப மூளையை பயன்படுத்தலாம். 
உதாரணத்திற்கு பூமியில் இருக்கும் குடிநீரை கடலில் கலக்கவிட்டு.......நிலவில் தண்ணீர் தேடுவது போல....tw_yum:

நல்லூர் கோவில் எல்லை எனக்கும் உங்களுக்கும் எந்த இடத்தில் பிரிகிறது? 
எல்லாம் எனது எல்லைக்கு உட்பட்டுதான் இருக்கிறது அதுதான் நிறைய எழுத வேண்டி வருகிறது.
அதுதான் நன் பல இடங்களில் எழுதுகிறேன் ... கிறிஸ்த்தவ முஸ்லீம் மதம் பற்றி எனக்கு அக்கறை இல்லை 
இந்த கேவலம் கெட்ட இந்துமதம் எனது வீடு தொடங்கி வீதி தொடர்ந்து ஊர்வரை இருக்கிறது ... இதை கழுவி சுத்தம் செய்யவேண்டியது எனது கடமை. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, ampanai said:
 1. - கோயில்கள் எல்லாம் ஒரு குளத்தை அருகில் ( அநேகமாக) கொண்டிருக்கும். இது மழை நீர் சேமிப்பிற்கு உதவும்
 2. - இந்த குளத்தில் கை, கால், முகம் கழுவுதல் - மக்கள் கூடும் ஒரு இடத்தில் சுகாதாரத்தை பேண உதவும்    
 3. - கடவுளை வீதியில் வலம் கொண்டு வருதலுக்கு, திடகாத்திரமான ஆண்களை தெரிவு செய்ய இது உதவும் 

அப்போ ஏற்கனவே வீட்டில் குளித்து சுத்தமாக வருபவர்கள் 
சாமியை நான் தூக்கவில்லை என்பவர்கள் 
சேட்டுடன் வரலாமா? 

நீங்கள் எழுதுவதும் மாறானதுதான் எமது கோவில்களில் நான் கண்டது 
கூட்டமாக கட்டடத்துக்குள் குவிந்து நின்று நெருப்பு கொளுத்தி மேலும் வெப்பத்தை உண்டு பண்ணி 
ஆடை இருந்தால் கூட வியர்வையை ஆடை மூடி கொள்ளும் .... இது திறந்த மேனியுடன் நின்று வியர்வைகளை 
அடுத்தவர் மேல் பிரட்டும் வேலைதான் எல்லா கோவிலிலும் அதைகாமக நடப்பது. 

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Maruthankerny said:

அப்போ ஏற்கனவே வீட்டில் குளித்து சுத்தமாக வருபவர்கள் 
சாமியை நான் தூக்கவில்லை என்பவர்கள் 
சேட்டுடன் வரலாமா? 

நான் எனது அறிவிற்கு எட்டிய விளக்கத்தை தந்தேன், தருகிறேன் 🙂 

- மேலங்கியுடன் அனுமதிக்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம்
- மேலங்கியை கழட்டி இருப்பில் கட்டி அந்த வழிபாட்டு தளத்தின் கொள்கைக்கு மதிப்பு கொடுக்கலாம்
- நிர்வாகத்திடம் முறையிட்டு, இல்லை ஆதீன குழுவில் இந்த முறையை மாற்ற மனு கொடுக்கலாம்

மனம் உண்டால் இடம் உண்டு பாஸ் 🙂 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, விசுகு said:

அது சரி இங்க  என்ன  நடக்குது??😥😥

யாழ் களம் சிறப்பாக இன்னும் 100 வருடம் வாழ 
அடுத்த வருடம் நல்லூருக்கு யாழ்களம் சார்பாக ஒரு பறவைகாவடி எடுப்பதாக உத்தேசம் 
யார் எடுப்பது என்ற வாதம் தொடரும்போது நல்ல நேரம் நீங்கள் வந்தீர்கள். 

நீங்கள் பெரியவர்கள் இருக்கும்போது 
நாங்கள் சிறியவர்கள் .... எனும் தயக்கமாக இருக்கிறது.

ஒரு நல்ல முடிவை எழுதுங்கள். 

3 minutes ago, ampanai said:

நான் எனது அறிவிற்கு எட்டிய விளக்கத்தை தந்தேன், தருகிறேன் 🙂 

- மேலங்கியுடன் அனுமதிக்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம்
- மேலங்கியை கழட்டி இருப்பில் கட்டி அந்த வழிபாட்டு தளத்தின் கொள்கைக்கு மதிப்பு கொடுக்கலாம்
- நிர்வாகத்திடம் முறையிட்டு, இல்லை ஆதீன குழுவில் இந்த முறையை மாற்ற மனு கொடுக்கலாம்

மனம் உண்டால் இடம் உண்டு பாஸ் 🙂 

துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவதை ஒரு மரியாதை செய்வதாகவே 
எமது சமூகத்துக்கு சாதியை கொண்டுவந்து புகுத்திய பார்பனர்கள் சொல்லி கொடுத்தார்கள் 
சாமிக்கு முன்பு போகும்போது அதை ஒரு மரியாதையை நிமித்தமாகவே அவர்கள் செய்து வந்து இருக்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை   .... அது சமூகத்தில் நீங்கள் கூறியதுபோல சில ஒழுக்கங்களை பேணி இருக்கிறது என்பது உண்மைதான். 

அதில் அறிவியல் இருக்கிறது என்று சிலர் அவிக்க முற்படும்போதுதான் முரண்பாடு வருகிறது. 
முன்னோர் தமக்கு இருந்த அறிவில் இருந்தார்கள் அதில் தவறில்லை. இருந்து இருந்தால் அதை திருத்தாது தொடர்வதுதான் எமது தவறு. 

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, tulpen said:

அறிவுள்ள மனிதர்களுக்கு அது மூடத்தனம். கருணை உள்ள கடவுள் என்று நீங்கள் நம்பும்  அந்த கற்பனைக் கதாபாத்திரம்  இது மூடத்தனம் என்றே கருதி அதை  விரும்பமாட்டார் என்பதை உணர  சாதாரண பொது அறிவுபோதும் . 

அறிவுள்ள மனிதரென்று யாரை கூறுகிறீர்கள். உங்களையா??

கடவுள் இருக்கிறார் அவரின் கருணையால்தான் சில விடயங்கள் நடக்கிறது என்று நம்புவோர் அதற்கு பரிகாரமாக சிலவற்றை செய்கிறார்கள். அது அவரவர் விருப்பம். நீங்கள் ஏன் அதற்கு குத்தி முறிக்கிறீர்கள் என்று புரியவில்லை.

பொது அறிவைப்பற்றி அது சுத்தமாகவே இல்லாதவர்கள் பேசவே கூடாது.

Edited by நியானி
தணிக்கை
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

கோவிலுக்கு வருபவர்களில் யார் பூனூல் போட்ட பாப்பனர்கள்  யார்  வருணாசிரம அடிப்படையில்  பார்பனர்கள் அல்லாதவர்கள் என்று அறியவே பாப்பனர்கள் ஆண்களை மேலங்கி இல்லாமல் வரவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினர்  

Edited by tulpen
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, Justin said:

ஏற்கனவே சொன்னது போல, மன அழுத்தம் குறைக்க மத அனுஸ்டானங்கள் தேவையென்றால் அப்படியே சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டியது தானே? பிறகேன், அதில கொஸ்மிக் கதிர் இருப்பதால் செய்தேன், இதில உடற்பயிற்சி இருப்பதால் செய்தேன் என்ற போலி அறிவியலில் உங்கள் நம்பிக்கையைக் கொழுவி உங்கள் நம்பிக்கையை நகைப்புக்குள்ளாக்க வேண்டும்? 

இன்றைய நிலையில், இல்லாத அறிவியல் விளக்கங்களால் மற்றவனின் அறிவை தனக்கு முலாம் பூசப் பயன்படுத்தும் நம்பிக்கைகள் இந்து மதமும், சயன்ரோலொஜியும் (Scientology) தான்! சுன்னத் செய்வதால் நோய்த்தொற்றுக் குறையும் என்று மருத்துவம் கண்டு பிடித்த பிறகும் யூதர்களோ, முஸ்லிம்களொ நாம் விஞ்ஞானத்தால் இயக்கப் படும் மதம் என பிரச்சாரம் செய்யவில்லை. 

மத நம்பிக்கை என்பது ஒரு வகையான நிபந்தனையற்ற விளக்கங்கள் தேடாத நம்பிக்கை முறை, விஞ்ஞானம் என்பது நிபந்தனையுடைய, விளக்கங்கள் தேடும் செயல்முறை. இரண்டையும் தனியாக விட்டிருந்தால் ஏன் இந்தத் திரி இப்படி நீள்கிறது? 

சகோ,
நன்றிகள். உங்களிடம் இருந்தும் மற்றைய உறவுகளிடம் இருந்தும் ஆரோக்கியமான கருத்துக்களை உள்வாங்கி, 'உள்ளது கடல் அளவு...' என வளருவது எனது ஆறறிவும் இந்த திரியும்... 🙂    

"மத நம்பிக்கை என்பது ஒரு வகையான நிபந்தனையற்ற விளக்கங்கள் தேடாத நம்பிக்கை முறை, விஞ்ஞானம் என்பது நிபந்தனையுடைய, விளக்கங்கள் தேடும் செயல்முறை." - ஜஸ்ட்டின்

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, Maruthankerny said:

யாழ் களம் சிறப்பாக இன்னும் 100 வருடம் வாழ 
அடுத்த வருடம் நல்லூருக்கு யாழ்களம் சார்பாக ஒரு பறவைகாவடி எடுப்பதாக உத்தேசம் 
யார் எடுப்பது என்ற வாதம் தொடரும்போது நல்ல நேரம் நீங்கள் வந்தீர்கள். 

நீங்கள் பெரியவர்கள் இருக்கும்போது 
நாங்கள் சிறியவர்கள் .... எனும் தயக்கமாக இருக்கிறது.

ஒரு நல்ல முடிவை எழுதுங்கள்.

சில  விடயங்களில் மற்றவர்கள்  தலையை  நீட்டக்கூடாது

அதில்  மதமும் முக்கியமானது

பறவைக்காவடி  சம்பந்தமாக

அவர்கள்  மட்டுமே முடிவெடுக்கவேண்டும்

எடுப்பார்கள்

அவர்களுக்கு  அந்த வரலாறும் பண்பாடும்

காலத்துக்கேற்ப மாற்றங்களை  ஏற்கும் அனுபவமும்  இருக்கிறது

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

முதலில் இந்து மதம் என்றால் என்ன?
தத்துவம் என்ன?
யார் கடவுள்?
என்று உங்களால் எழுத முடியுமா? இல்லாத ஒன்றை இருப்பதாக நீங்கள் சோடினை காட்டினால் 
சோடினையை தாண்டி எதையும் காணாதவன் கேள்வி கேட்பான். இது உங்கள் தவறே தவிர அடுத்தவன் தவறு அல்ல. 
நீங்கள் ஓரிரு கோவில்களில் காணும் தவறை நான் எல்லா கோவில்களிலும் காண்கிறேன்.
அந்த தவறுகள் திருந்த ஒரே வழி பேசுவதுதான்.
இந்த கோவில்களில் இப்படி நடக்கிறது என்று ஏன் நீங்கள் தெளிவாக எழுதுவதில்லை? 
மூடி மூடி மெழுகுவதால் உள்ளே அசிங்கங்கள் புத்தெடுக்கின்றன ... இதனால்தான் இன்று ஒரு புனிதமே நாறிப்போய் நாதாரிகளின் கூடமாய் கிடக்கிறது.

மிஞ்சிய ஒரு சக்தியை நீங்கள் கடவுளாக பார்ப்பது உங்கள் தனிப்பட்ட விடயம்போலவே 
அதை அசையும் அணுவாக பார்ப்பது அடுத்தவன் அறிவை பொறுத்தது. அவனுடைய பார்வையில் உங்களுக்கு உடன்பாடு இல்லது போவதில் தவறு இல்லை. ஆனால் அவனை எழுதாதே என்பதும்  உங்களின் நம்பிக்கைக்கு அவன்  விரோதமாக இருப்பதாகவும் எழுதுவது ஏற்புடையதல்ல .... நீங்களும் அதையேதான் 
அவன் நம்பிக்கைக்கு எதிராக செய்கிறீர்கள்....... நீங்களும்தான் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அது கடவுள்தான் என்றால் தொடர்ந்தும் எழுதுங்கள் ஆதாரங்களை முன்வையுங்கள் அதன் மூலமாக 
அவன் வாயை அடைத்து கொள்ளலாம். 
அதைவிடுத்து நாம் குத்து ஊசியில்தான் தொங்குவோம் என்றால் பார்ப்பவன் பல் இளிக்கத்தானே செய்வான். 

எனக்கு மிஞ்சிய சக்தியை நான் கடவுளாகப் பார்ப்பதும் அந்த சக்தியால் எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கும் ஒன்றிற்காக நான் தூக்குகாவடி எடுப்பதும் எனது தனிப்பட்ட விடயம். ஏன்  நான் உங்களையும் கூட வந்து காவடி எடுக்க சொன்னேனா? மற்றவனின் தனிப்பட்ட விடயங்களை நீங்கள் ஏன் விமர்சிக்கிறீர்கள். யாரும் உங்களிடம் free  advise  கேட்கவில்லையே. உங்களுக்கு ஒன்று பிடிக்காவிட்டால் மூடிக்கொண்டு உங்கள் வேலையை பாருங்கள். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் தகுதி  உங்களிடமும் இல்லை அதை கேட்கவேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை!!

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Eppothum Thamizhan said:

அருமையான‌ விள‌க்க‌ம் 🙏🙏🙏 /
 
Share this post

Link to post
Share on other sites
3 hours ago, வாத்தியார் said:

கண்ணா.....
 கத்தோலிக்கத் திருச்சபையின் முடிவின்படி கத்தோலிக்க மதகுருமார்களாக  கடவுளுக்கு வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் திருமணம் செய்யக்கூடாதாம்.
சகோதரிகள்( சிஸ்டேர்ஸ்) திருமணம் செய்யக்கூடாதாம்
இதற்கும் போலி அறிவியலிற்கும்  ஏதாவது தொடர்புகள் இருக்கின்றதா?

சரி தூக்கு காவடி எடுப்பதால் உடல் ரீதியாக   அவரைத்   தவிர  வேறு யாருக்கும் பாதிப்பில்லை
ஆனால் கிறிஸ்தவ குருமார்கள் மற்றும் சகோதரிகள் திருமணம் செய்யத் தடை இருப்பதால் எத்தனை பெருக்குப் பாதிப்பு.... இதைப்பற்றி இன்னும் எழுதலாம்... வேண்டாம்    

கிறிஸ்தவர்கள் முட்டுக்காலில் இருந்து வழிபாடு செய்து தங்கள் கால் முட்டிகளை வருத்தி நடக்க முடியாமல் அவதிப்படுவது
தேவாலயத்தைச் சுற்றி முட்டுக்காலில் நடப்பது
இவை எந்த நம்பிக்கையில் சேரும்

ஏன் இஸ்லாமியர்களும் தங்கள் வழிபாட்டு முறையில் தரையில் கால்களை மடக்கித்தான் வழிபடுகின்றார்கள்

என்ன இந்துக்கள் மனத்தில் அதிக துணிவும் பக்தியில் உயர்ந்த பணிவும் கொண்டவர்களாக இருப்பதால் தங்களை அதிகம் வருத்தி
வழிபாட்டில் ஈடுபடுகின்றார்கள்.
இவையெல்லாம் மூட நம்பிக்கையல்ல இந்துக்களின் சம்பிரதாயங்கள்.
சட்டத்திற்கு முன்னரே இருந்த சம்பிரதாயங்கள் தான் மனிதர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.   
 
வாத்தியார்,  நீங்கள் சொன்ன கத்தோலிக்க நடைமுறைகளுக்கெல்லாம் அறிவியல் விளக்கம் இருப்பதாக எந்த கத்தோலிக்கர் உங்களுக்குச் சொன்னார்? இது கத்தோலிக்க நடைமுறை, இதை நான் செய்கிறேன் என்று சொல்லி விட்டுப் போகும் தில் ஒரு கத்தோலிக்கனிடம் இருக்கிறதல்லவா? அதே நேர்மையை போலி விஞ்ஞானத்தின் பின் ஒளிந்து கொள்ளாமல் இந்துக்களும் செய்யலாம் என்பது தான் என் கருத்து!

வாத்தியார் என்று பெயர் வைத்திருக்கும் உங்களுக்கே இதை நான் மேலே இரண்டு தரம் எழுதியும் புரியவில்லையென்றால் இங்கே வாதக் குணத்தோடு திரியும் ஆட்களுக்கு எங்கே புரியப் போகிறது நான் சொல்வது?

6 hours ago, பையன்26 said:

உங்க‌ளை மாதிரி வ‌குப்பு எடுக்க‌ என‌க்கும்  தெரியும்  , இந்த‌ திரியில் சைவ‌ ம‌த‌த்தை ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்ன‌ எழுதி இருக்கிறார்க‌ள் என்ற‌த‌ வாசித்து விட்டு என் க‌ருத்துக்கு நீங்க‌ள் ப‌தில் அளியுங்கோ , 
நான் எழுதின‌து என்ன‌வோ நீங்க‌ள் ஊதின‌ ப‌ல்ல‌வியை மீண்டும் மீண்டும் ஊதுறீங்க‌ள் வ‌ள‌ர‌ வில்லை அது இது என்று , 

நான் உண்மையை எழுத‌ அதிக‌ம் உங்க‌ளுக்கு தான் வேர்த்த‌து , கார‌ண‌ம் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து ம‌த‌ம் மாறி போட்டு , தேவை இல்லாம‌ சைவ‌ ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்தும் ம‌னித‌ர்க‌ள் இப்ப‌டியான‌வ‌ர்க‌ள் தான் ,

ம‌த‌ம் மாறின‌ புத்து ஜீவ‌ங்க‌ள் இனியாவ‌து நீங்க‌ள் வ‌ண‌ங்கும் தெய்வ‌த்துக்கு உண்மையும் நேர்மையுமாய் இருங்கோ , அடுத்த‌வ‌ர்க‌ளின் ம‌த‌ங்க‌ளை கேலியும் கிண்ட‌ல் செய்வ‌தை நிறுத்தி கொள்ளுங்கோ , இப்ப‌டியே ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்தா கால‌ போக்கில் , தெருவில் போர‌ நாய் கூட‌ இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ளை ம‌திக்காது 😠 /

( அண்ண‌ன் சீமான் பின்னால் உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அறிவான‌ பிள்ளைக‌ள் அவ‌ர் பின்னால் நிக்கிறார்க‌ள் , உங்க‌ளோடு நான் த‌னி ஆளாய் விவாத‌ம் செய்ய‌ த‌யார் இந்த‌ திரியில் , நான் க‌ற்ப‌ணையில் எழுத‌ வில்லை நிய‌ வாழ்வில் ந‌ட‌ப்ப‌தை எழுதுகிறேன் 👏😁 /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும்  12 வ‌ய‌து சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌லே உங்களின் கேள்விக‌ளுக்கு ச‌ரியான‌ ப‌தில் அளிப்பின‌ம் 👏🙏😉
இதுக்கை எங்கையோ ம‌ற்ற‌ திரியில் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுத‌ , அத‌ இந்த‌ திரிக்கு காவி கொண்டு வ‌ந்து எழுதுறீங்க‌ள் சீ😠 , இந்த‌ திரிக்கு சம்ம‌ந்த‌மான‌ ப‌திவை எழுதுங்கோ ,  ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்க‌ வேண்டாம் 😉,

இந்த‌ திரியில் என் ம‌த‌த்தை மிக‌வும் கொச்சை ப‌டுத்தும் வித‌மாய் ப‌ல‌ ப‌திவுக‌ள் இருந்த‌து 😠 , அது தான் என் ஆவேச‌ க‌ருத்தை ப‌திவிட்டேன் 😉,

குமார‌சாமி தாத்தாவின் பாசையில் சொல்ல‌ போனால் ( ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😁

இந்த‌ விஞ்ஞான‌ உல‌கில் அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ளை நினைத்தால் சிரிப்பு வ‌ருது 😁😁 , இந்த‌ நூற்றாண்டில் தெரிந்து கொள்ள‌ நினைப்ப‌தை ஒரு சில‌ வினாடிக‌ளில் தெரிந்து கொள்ள‌லாம் , காலாம் மாறி போச்சு , 

த‌மிழீழ‌த்தில் இருந்த‌ ம‌த‌ங்க‌ள்
சைவ‌ ம‌த‌ம்
கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம்
க‌ர்ரோலிக் ம‌த‌ம் 

( புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து தான் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் அல்லோலியா என்ர‌ ம‌த‌த்துகை மாறின‌வை , மீண்டும் சொல்லுறேன் ம‌த‌ம் மாறும் இரு முக‌ம் கொண்ட‌வ‌ர்க‌லே இனியாவ‌து நீங்க‌ள் வ‌ண‌ங்கும் தெய்வ‌த்துக்கு உண்மையும் நேர்மையுமாய் இருங்கோ , தேவை இல்லாம‌ ம‌த‌ க‌ல‌வ‌ர‌த்தை உண்டு ப‌ண்ணாதைங்கோ ம‌ற்றும் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை கொச்சை ப‌டுத்தாதைங்கோ 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 🙏😉
 
பையன், தமிழீழத்தில் இருந்த மதங்களையே சரியாகப் பட்டியலிடத் தெரியாமல் இருந்து கொண்டு அறிவியல் பற்றிப் பேசுவோரை நக்கல் செய்யக் கூடாது! ஆனால், நான் சீரியசாக எடுக்கப் போவதில்லை! ஏனெனில் எனக்கு சிறு பிள்ளைகளோடு உரையாடிப் பழக்கம் இருக்கிறது. ஆனால், யாரொ ஒரு படத்தில் சொல்வது போல "நீங்க இன்னும் வளரணும் தம்பி!" 😎

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, பையன்26 said:

அருமையான‌ விள‌க்க‌ம் 🙏🙏🙏 /
 
இன் நேர‌ம் த‌மிழீழ‌த்தில் எம் த‌லைவ‌ரும் போராளிக‌ளும் இருந்து இருக்க‌னும் , இந்த‌ குள்ள‌ ந‌ரிக‌ள் சைவ‌ ம‌த‌த்தை ப‌ற்றி கேலியும் கிண்ட‌ல் செய்வ‌தை நிறுத்தி இருப்பின‌ம் , ஏன் எம் போராட்ட‌ம் இப்ப‌வும் தொர்ந்து  இருந்தா கூட‌ இந்த‌ வ‌ருட‌ ந‌ல்லுர் திருவிழாக்கு ஒரு த‌டையும் இருந்து இருக்காது / அண்ண‌ன் திலீப‌ன் 12 நாள் உண்ணா விரதம் இருந்து உயிரை விட்ட‌ இட‌ம் ந‌ல்லூர் /

கிட்டு அண்ணா ந‌ல்லுர் முருக‌ன் கோயிலுக்கு முன்னுக்கு நின்று பேசின‌து எல்லாம் இந்த‌ அர‌வேக் காடுக‌ள் வேனும் என்றால் அதை ம‌ற‌ந்து இருக்க‌லாம் ஆனால் என் போன்ற‌ பிள்ளைக‌ள் அவ‌ர் அந்த‌ கோயில‌டியில் பேசின‌ காணொளி என் க‌ண்ணுக்கையே நிக்குது / 

ஏன் எம் த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் ம‌டிந்து போன‌ மாவீர‌ர்க‌ள் நூற்றுக்கு 90வித‌ம் சைவ‌ ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் /

2009ம் ஆண்டுக்கு முத‌ல் ம‌த‌ க‌தையே க‌தைப்ப‌து இல்லை , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு தான் இந்த‌ நிலை , 
ஒரு இன‌த்தின் த‌லைவ‌ன் இல்லாம‌ல் போன‌து அந்த‌ இன‌த்துக்கு மாபெரும் இழ‌ப்பு 😓/
 
Share this post

Link to post
Share on other sites
Just now, பையன்26 said:

உங்களுக்குப் பதிலாக இதை எழுதாவிட்டாலும் நீங்கள் புலிகளை இதற்குள் இழுத்ததால் எல்லோருக்குமாக சொல்ல வேண்டியிருக்கிறது:

புலிகள் எந்த ஒரு மதத்தையும் ஈழத்தின் மதமாக தங்கள் மதமாக அங்கீகரிக்கவில்லை! திருநீறு பூசிய பிரபாகரனின் படம் ஒன்று வெளியான நேரம் ஐங்கரன் மதச்சார்பின்மையை வலியுறுத்தி ஒரு பத்தி எழுதிய நினைவிருக்கிறது. நான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன் ஒரு தடவை: மிருகபலியை எதிர்த்து ஐங்கரத்தார் ஒரு எடிரோறியல் எழுதிய போது, நங்கூரத்தைப் பற்றி நல்லை ஆதீனத்தின் பிரதிநிதிகள் கவிஞர் புதுவையிடம் கிறிஸ்தவ சதி என்று முறைப்பாடு செய்யச் சென்றார்கள். தனது பாணியில் அவர்களை தூசணத்தால் திட்டி அனுப்பி விட்டு புதுவையர் எங்களிடம் ஒன்றும் சொல்லவில்லை! உடனிருந்த உதவியாளர்கள் மூலம் நானும் ஐங்கரநேசனும் அறிந்தோம்.

சுருக்கமாக: புலிகள் எந்த மதத்தின் பாலும் சாரவில்லை! ஏனெனில் அவர்கள் தமிழ் தேசியத்தையே பாதுகாத்தார்கள். உங்கள் குருடன் யானை பார்த்த பழக்கத்தால் புலிகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, Justin said:

வாத்தியார்,  நீங்கள் சொன்ன கத்தோலிக்க நடைமுறைகளுக்கெல்லாம் அறிவியல் விளக்கம் இருப்பதாக எந்த கத்தோலிக்கர் உங்களுக்குச் சொன்னார்? இது கத்தோலிக்க நடைமுறை, இதை நான் செய்கிறேன் என்று சொல்லி விட்டுப் போகும் தில் ஒரு கத்தோலிக்கனிடம் இருக்கிறதல்லவா? அதே நேர்மையை போலி விஞ்ஞானத்தின் பின் ஒளிந்து கொள்ளாமல் இந்துக்களும் செய்யலாம் என்பது தான் என் கருத்து!

வாத்தியார் என்று பெயர் வைத்திருக்கும் உங்களுக்கே இதை நான் மேலே இரண்டு தரம் எழுதியும் புரியவில்லையென்றால் இங்கே வாதக் குணத்தோடு திரியும் ஆட்களுக்கு எங்கே புரியப் போகிறது நான் சொல்வது?

பையன், தமிழீழத்தில் இருந்த மதங்களையே சரியாகப் பட்டியலிடத் தெரியாமல் இருந்து கொண்டு அறிவியல் பற்றிப் பேசுவோரை நக்கல் செய்யக் கூடாது! ஆனால், நான் சீரியசாக எடுக்கப் போவதில்லை! ஏனெனில் எனக்கு சிறு பிள்ளைகளோடு உரையாடிப் பழக்கம் இருக்கிறது. ஆனால், யாரொ ஒரு படத்தில் சொல்வது போல "நீங்க இன்னும் வளரணும் தம்பி!" 😎

நான் எழுதின‌துக்கு முடிஞ்சா ச‌ரியான‌ ப‌தில‌ அளிக்க‌வும் , தேவை இல்லாம‌ சின்ன‌ பிள்ளை பெரிய‌ பிள்ளை கிழ‌ட்டு பிள்ளை என்ற‌ நொண்டி சாட்டு சொல்ல‌ வேண்டாம் 😠

நான் மேல‌ எழுதின‌ ம‌த‌ங்க‌ள்
த‌மிழீழ‌த்தில் என் க‌ண்ணால் க‌ண்ட‌ ம‌த‌ங்க‌ள் , யாழ்பாண‌த்தில் இருந்து முஸ்லிம் ம‌த‌த்த‌வ‌ர்க‌ளை விர‌ட்டி அடிச்ச‌தும் தெரியும் /

நீங்க‌ள் வ‌ண‌ங்கும் ம‌த‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் த‌மிழீழ‌த்தில் எந்த‌ திசையில் இருந்த‌து  அதை முத‌ல் சொல்லுங்கோ 😉 /

ப‌ல‌ ம‌த‌ங்க‌ள் அமெரிக்கா நாட்டில் இருந்து தான் ப‌ர‌ப்ப‌ ப‌ட்ட‌து

அதில் அடிமையாய் போன‌ கூட்ட‌ம் எம் ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்துவ‌து கேவ‌ல‌த்தின் விட‌ கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள் 😉/

நீங்க‌ளாய் தான் வ‌ந்து என் ப‌திவுக்கு ப‌தில் போட்டீங்க‌ள் , அதுக்கு நான் ப‌தில் அளித்தேன் , நான் கேட்ட‌ கேள்விக்கு  கோழைத்த‌மாய் தான்  உங்க‌ளால் எழுத‌  முடிஞ்ச‌து/

திரானி இருந்தா நான் எழுதின‌துக்கு ச‌ரியான‌ ப‌தில‌ அளியுங்கோ , ப‌தில் அளிக்க‌ முடியா விட்டால் மூடிட்டு கில‌ப்புங்கோ 😉/

ம‌த‌ வெறிய‌ர்க‌ள் எம் இன‌ எதிரி சிங்க‌ள‌வ‌னை விட‌ ஆவாத்தான‌வ‌ர்க‌ள் 😠😉

Share this post

Link to post
Share on other sites

ஆலயச் சூழலில் நெருக்குவாரத்தை தவிர்க்கவும் இது நல்லது.

முன்னரும் இப்படி சில தடவைகள் தடைகள் அமுலில் இருந்துள்ளன. 

Share this post

Link to post
Share on other sites

இந்த தூக்கு காவடியால் பலர் காவடி ஆடுவது தெரியுது 😆🥴😄😆😁 சரி  சரி ஆள இறக்கி விடுங்கள் தோல் பிஞ்சி வலிக்க போகுது 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, பையன்26 said:

இன் நேர‌ம் த‌மிழீழ‌த்தில் எம் த‌லைவ‌ரும் போராளிக‌ளும் இருந்து இருக்க‌னும் , இந்த‌ குள்ள‌ ந‌ரிக‌ள் சைவ‌ ம‌த‌த்தை ப‌ற்றி கேலியும் கிண்ட‌ல் செய்வ‌தை நிறுத்தி இருப்பின‌ம் , ஏன் எம் போராட்ட‌ம் இப்ப‌வும் தொர்ந்து  இருந்தா கூட‌ இந்த‌ வ‌ருட‌ ந‌ல்லுர் திருவிழாக்கு ஒரு த‌டையும் இருந்து இருக்காது / அண்ண‌ன் திலீப‌ன் 12 நாள் உண்ணா விரதம் இருந்து உயிரை விட்ட‌ இட‌ம் ந‌ல்லூர் /

கிட்டு அண்ணா ந‌ல்லுர் முருக‌ன் கோயிலுக்கு முன்னுக்கு நின்று பேசின‌து எல்லாம் இந்த‌ அர‌வேக் காடுக‌ள் வேனும் என்றால் அதை ம‌ற‌ந்து இருக்க‌லாம் ஆனால் என் போன்ற‌ பிள்ளைக‌ள் அவ‌ர் அந்த‌ கோயில‌டியில் பேசின‌ காணொளி என் க‌ண்ணுக்கையே நிக்குது / 

ஏன் எம் த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் ம‌டிந்து போன‌ மாவீர‌ர்க‌ள் நூற்றுக்கு 90வித‌ம் சைவ‌ ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் /

2009ம் ஆண்டுக்கு முத‌ல் ம‌த‌ க‌தையே க‌தைப்ப‌து இல்லை , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு தான் இந்த‌ நிலை , 
ஒரு இன‌த்தின் த‌லைவ‌ன் இல்லாம‌ல் போன‌து அந்த‌ இன‌த்துக்கு மாபெரும் இழ‌ப்பு 😓/
 
சைவ மதத்தை யாரும் இங்கு கொச்சைப்படுத்தவில்லை. சைவ மதத்தை கொச்சைப்படுத்தும் எண்ணற்ற மூடத்தனங்களை சிறிது சிறிதாகவெனிலும் கைவிட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் போற்றும் முன்னோர்  ஒன்றும் விசேட பிறவிகள் இல்லை. அவர்களும் எங்களைப்போல் சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் ஏதோ காரணத்திற்காக அன்றைய அறிவியல்  பிரகாரம் செய்தவற்றை அப்படியே இன்றைய மனித நாகரீகம் வளர்ந்த காலத்திலும் செய்ய வேண்டும் என் எதிர்பார்பபது தவறு.

உலகம் வளர வளர நாமும்  உலகத்திற் கேற்ப நாகரீக வளர்சசி  அடைந்தால்  தான் உலகத்தில் கெளரவமான இனமாக வாழ முடியும். தமிழ்மொழி அறிவியல்  பூர்வமான மொழியாக அடுத்த நூற்றாண்டில்  மிடுக்குடன் வளர வேண்டுமே தவிர பழைய பொய் புரட்டுக்களுடனான புராணக்கதைகளிலும்,  இதிகாசங்களிலும்,  மூடத்தனங்களிலும்  தங்கி இருக்க கூடாது. 

Edited by tulpen
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, பையன்26 said:

நான் எழுதின‌துக்கு முடிஞ்சா ச‌ரியான‌ ப‌தில‌ அளிக்க‌வும் , தேவை இல்லாம‌ சின்ன‌ பிள்ளை பெரிய‌ பிள்ளை கிழ‌ட்டு பிள்ளை என்ற‌ நொண்டி சாட்டு சொல்ல‌ வேண்டாம் 😠

நான் மேல‌ எழுதின‌ ம‌த‌ங்க‌ள்
த‌மிழீழ‌த்தில் என் க‌ண்ணால் க‌ண்ட‌ ம‌த‌ங்க‌ள் , யாழ்பாண‌த்தில் இருந்து முஸ்லிம் ம‌த‌த்த‌வ‌ர்க‌ளை விர‌ட்டி அடிச்ச‌தும் தெரியும் /

நீங்க‌ள் வ‌ண‌ங்கும் ம‌த‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் த‌மிழீழ‌த்தில் எந்த‌ திசையில் இருந்த‌து  அதை முத‌ல் சொல்லுங்கோ 😉 /

ப‌ல‌ ம‌த‌ங்க‌ள் அமெரிக்கா நாட்டில் இருந்து தான் ப‌ர‌ப்ப‌ ப‌ட்ட‌து

அதில் அடிமையாய் போன‌ கூட்ட‌ம் எம் ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்துவ‌து கேவ‌ல‌த்தின் விட‌ கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள் 😉/

நீங்க‌ளாய் தான் வ‌ந்து என் ப‌திவுக்கு ப‌தில் போட்டீங்க‌ள் , அதுக்கு நான் ப‌தில் அளித்தேன் , நான் கேட்ட‌ கேள்விக்கு  கோழைத்த‌மாய் தான்  உங்க‌ளால் எழுத‌  முடிஞ்ச‌து/

திரானி இருந்தா நான் எழுதின‌துக்கு ச‌ரியான‌ ப‌தில‌ அளியுங்கோ , ப‌தில் அளிக்க‌ முடியா விட்டால் மூடிட்டு கில‌ப்புங்கோ 😉/

ம‌த‌ வெறிய‌ர்க‌ள் எம் இன‌ எதிரி சிங்க‌ள‌வ‌னை விட‌ ஆவாத்தான‌வ‌ர்க‌ள் 😠😉

தவறு பையன், உங்களை திரும்பத் திரும்ப நீங்களே ஒரு முட்டாளாகக் காட்டிக் கொள்கிறீர்கள்:

1500 போர்த்துக்கேயர், கத்தோலிக்கம், போர்த்துக்கல் நாடு!
அதன் பின்னர் டச்சுக் காரர், டச்சு மறுசீரமைப்பு திருச்சபை, நெதர்லாந்து.
இறுதியாக 1800 ஆங்கிலேயர், வெஸ்லியன் உட்பட அங்கிலிக்கன் சபைகள்.

இவை தான் 200  முதல் 500 வரையான ஆண்டுகள் ஈழத்திலும் இலங்கையிலும் இருந்த கிறிஸ்தவ மதங்கள். அமெரிக்காவில் இருந்து யாரும் வரவில்லை, ஏன்? அமெரிக்கா உருவானதே 1776 இல், பிறகெப்படி அமெரிக்காவில் இருந்து மதம் வரும்?

பின்னொரு காலத்தில்  CSI என்கிற  தென்னிந்திய திருச்சபை, அக்கிலிக்கனும் வேறு சபைகளும்  சேர்ந்து உருவானது. யாழ்ப்பாணக் கல்லூரி அவர்களுடையது!

அமெரிக்க மிஷன் என்ற சிறிய குழு பின்னர் வந்தது. சில பாடசாலைகள் இருக்கின்றன.

 யெகோவா, பெந்தகோஸ்து, AOG என்பன புதிய சேர்ப்புகள்.

 இதில் எந்த மதத்தை ஈழத்தமிழர் பின்பற்றினாலும் அவர்கள் தமிழர்களாகவே இருந்தனர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் தமிழர் தான், ஆனால் கிறிஸ்தவம் அவர் மதம்- உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை!

மற்றபடி உங்கள் கடைசி வரியோடு ஒத்துப் போகிறேன்: உங்கள் போன்ற வரலாறு தெரியாத மதவெறியர்கள் தான் இன்று எங்களுக்கு சிங்களவர்களுக்கு ஈடான ஆபத்து!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நல்லூர் திருவிழா என்பதும் நல்லூர் முருகன் கோவில் என்பதும் ஒரு இறை நம்பிக்கை உள்ள மக்கள் சமுதாயம் கடைப்பிடிக்கும் விடையம் இதில் அக்கோவிலைச் சார்ந்து வரும் செய்திகளைப் பற்றியதாகும் அதைவிடுத்து கடவுள் இருகிறாரா தூக்குக்காவடியில் முள்ளுப்போட்டுத் தைக்கலாமா இதெல்லாம் மூட நம்பிக்கை இல்லையா என விவாதம் செய்வது ஒரு செய்தியை மையமாக வைக்தல்ல, கடவுள் இருக்கிறாரா இல்லையா கடவுள் வழிபாட்டுமுறைகளில் மூடநம்பிக்கை இருக்கா இல்லையா இவைகளைப் பேசவேண்டுமெனில் வேறு ஒரு திரியினைத் தொடங்குங்கள். இல்லைத் தெரியாமல்தான் வினவுகிறேன் இங்கு விமர்சனம் செய்பவர்களது வீடுகளில் எப்படி உங்கள் மனைவி மற்றும் உறவினர்கள் எல்லோரும் இப்போ கடவுளைக்கும்பிடுவதை நிறுத்திவிட்டார்களா? சாமிப்படம் வைக்கும் இடத்தில் செருப்பைக்கழட்டி வைத்திருக்கிறீர்களா முதலில் உங்கட வீடுகளில் போய் வெள்ளை அடியுங்கோ 

கொஞ்சம் சத்தமாகக் கதைத்தாலே ஒருவேளை சாப்பாடு கட்  அதைவிட இந்தாளாலை இந்த வீட்டில நிம்மதியே போச்சு வீட்டிலை பிள்ளைகளை வைத்துக்கொண்டு அதுகள் வெளியாலை போகேக்கை ஏதாவகு நடந்தால் உந்தாளுக்கு என்ன நான் தான் பாடுபடவேண்டும்  எண்டு கொடங்கி சாப்பாடு போடேக்கை இஞ்சேருங்கோப்பா உங்களுக்கு இதுகளில விருப்பம் இல்லை எண்டால் பேசாமல் இருங்கோ எங்களுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கு அதுக்குப்பிறகும் கடவுள் அது இது எண்ட விசையத்தை இங்க கதைக்காதையுங்கோ எங்களுக்கும் வயசு போயிட்டுது  

எனச்சொன்னால் பம்மிக்கொண்டு இருக்கிறவையள்தான் கருத்தெழுதுபவர்களில் அதிகம் என நினைக்கிறன். 

தவிர கிட்டு பூங்காவைப் பற்றிய ஒரு விடையம் இலங்கை அரசாங்கம் சத்துட்டு உயன எனும் திட்டத்தில் சிறுவர் போசாக்குப்  பூங்காக்களை அமைக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்ததுஅந்த வேளை கிட்டத்தட்ட நாற்பது இலட்சம் ரூபாயை நல்லூர் தொகுதியில் ஒதுக்கின  அப்பணத்தை கல்வித்திணைக்களத்துக்குச் சொந்தமான இப்போதைய கிட்டுபூங்கா அமைவிடத்தில் புலிகள் அமைத்தனர் ஆனால் பெயர் மட்டுமே கிட்டு பூங்கா என வைத்ததன் காரணமாக இதுவரை அப்பூங்கா வேண்டாத இடமாக சிறீலங்காவின் அதிகார வர்க்கத்துக்குத் தோன்றுகிறது.

மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட அப்பூங்காவில் நிறைய மாலை வேளைகளை பின்னிரவு வரை கழித்திருக்கிறேன் அப்பூங்காவுக்குள் நுழைந்தால் நாட்டில் சண்டை நடக்குது எனும் ஒரு சிந்தனையும் வராது.

தவிர கோப்பாய் மாவீரர் மயான அமைவிடம் வடமாகாணச் சிறைச்சாலைகள் திணைக்களகத்துக்குச் சொந்தமான நிலம் அவ்விடத்தில்தான் முன்னம் யாழ் சிறையில் தண்டனை அனுபவிப்போருக்கான விவசாயவேலைகள் நடக்கும். காலையில் பேரூந்தில் கொண்டுவந்து விட்டால் குறிப்பிட்ட நேரம் கைதிகள் அங்கு வேலை செய்வார்கள்.  

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, Justin said:

தவறு பையன், உங்களை திரும்பத் திரும்ப நீங்களே ஒரு முட்டாளாகக் காட்டிக் கொள்கிறீர்கள்:

1500 போர்த்துக்கேயர், கத்தோலிக்கம், போர்த்துக்கல் நாடு!
அதன் பின்னர் டச்சுக் காரர், டச்சு மறுசீரமைப்பு திருச்சபை, நெதர்லாந்து.
இறுதியாக 1800 ஆங்கிலேயர், வெஸ்லியன் உட்பட அங்கிலிக்கன் சபைகள்.

இவை தான் 200  முதல் 500 வரையான ஆண்டுகள் ஈழத்திலும் இலங்கையிலும் இருந்த கிறிஸ்தவ மதங்கள். அமெரிக்காவில் இருந்து யாரும் வரவில்லை, ஏன்? அமெரிக்கா உருவானதே 1776 இல், பிறகெப்படி அமெரிக்காவில் இருந்து மதம் வரும்?

பின்னொரு காலத்தில்  CSI என்கிற  தென்னிந்திய திருச்சபை, அக்கிலிக்கனும் வேறு சபைகளும்  சேர்ந்து உருவானது. யாழ்ப்பாணக் கல்லூரி அவர்களுடையது!

அமெரிக்க மிஷன் என்ற சிறிய குழு பின்னர் வந்தது. சில பாடசாலைகள் இருக்கின்றன.

 யெகோவா, பெந்தகோஸ்து, AOG என்பன புதிய சேர்ப்புகள்.

 இதில் எந்த மதத்தை ஈழத்தமிழர் பின்பற்றினாலும் அவர்கள் தமிழர்களாகவே இருந்தனர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் தமிழர் தான், ஆனால் கிறிஸ்தவம் அவர் மதம்- உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை!

மற்றபடி உங்கள் கடைசி வரியோடு ஒத்துப் போகிறேன்: உங்கள் போன்ற வரலாறு தெரியாத மதவெறியர்கள் தான் இன்று எங்களுக்கு சிங்களவர்களுக்கு ஈடான ஆபத்து!

போனா நூற்றாண்டில் உல‌க‌ம் எப்ப‌டி இருந்திச்சு என்று இப்ப‌ இருக்கிர‌ யாராலும் ச‌ரியா சொல்ல‌ முடியாது /

நான் எழுதுவ‌து இந்த‌ நூற்றாண்டை ப‌ற்றி /

அமெரிக்கா வ‌ர‌லாறு என‌க்கும் தெரியும் , அமெரிக்கா யாரால் உருவாக்க‌ ப‌ட்ட‌து என்றும் தெரியும் , பெரும் பாலான‌ அமெரிக்க‌ நில‌ப் ப‌ர‌ப்பை எந்த‌ வ‌ம்சாவ‌ழியின‌ர் வைச்சு இருந்த‌வை என்றும் தெரியும் /

நியுயோக் 
இன்டியான‌ , இந்த‌ மானில‌ ஆட்க‌ள்

கீழ‌ உள்ள‌ 
புலொடியா நொத் க‌ரொலினா
ச‌வுத் க‌ரொலினா போன்ர‌ மானில‌ங்க‌ளுட‌ன் க‌டும் போர் ந‌ட‌ந்த‌து / அமெரிக்க‌ வ‌ர‌லாறை விடுவோம் / 

எங்க‌ட‌ சைம‌ ம‌த‌ம் 1500 வ‌ருட‌த்துக்கு முத‌லே தோன்றின‌து / உங்க‌ளுக்கு ஆதார‌ம் வேணும் என்றால் இப்ப‌வே காட்டுறேன் /

புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து அல்லொலியா என்ற‌ ம‌த‌த்துக்கு மாறி , ஆர‌ம்ப‌த்தில் வ‌ண‌ங்கின‌ சைவ‌ ம‌த‌த்தை கேலியும் கிண்ட‌லும் செய்ய‌லாமா /

அல்லொலியா ம‌த‌ம் எந்த‌ நூற்றாண்டில் தோன்றின‌து /

எங்க‌ட‌ ம‌த‌ம் கால‌ம் தொட்டு எப்ப‌டி இருந்த‌தோ அதே போல‌ எப்ப‌வும் அப்ப‌டியே இருப்ப‌து தான் எங்க‌ள் ம‌த‌த்துக்கு பெருமை / அடுத்த‌வ‌ர்க‌ளின் கேலி கிண்ட‌லுக்கு எம் ம‌த‌த்த‌வ‌ர்க‌ள் ஒரு போதும் இட‌ம் த‌ர‌ மாட்டின‌ம் /

என் வாழ் நாளில் இந்த‌ திரியில் தான் என் ம‌த‌த்தை அசிங்க‌ப் ப‌டுத்தி எழுதின‌ ஆட்க‌ளை பார்த்து இருக்கிறேன் / அப்ப‌டியான‌ போலிக‌ளின் ம‌த‌த்தை ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் தெரியும் 😉

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, பையன்26 said:

பையன், ஒரு விடயம் தெரியவில்லை என்றால் சொல்வதைக் கேட்க வேண்டும், பிழையாகச் சொல்லியிருந்தால் மன்னிப்புக் கோரி விட்டு நகர வேண்டும்! என்ன இது இரண்டும் இல்லாமல் அடம் பிடிச்சுக் கொண்டு?

தமிழ் மொழி எப்ப தோன்றினது பையா? அது தோன்றின நேரம் தமிழரின் மதம் என்ன? சொல்லுங்கள் கேட்பம்!

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Justin said:

பையன், ஒரு விடயம் தெரியவில்லை என்றால் சொல்வதைக் கேட்க வேண்டும், பிழையாகச் சொல்லியிருந்தால் மன்னிப்புக் கோரி விட்டு நகர வேண்டும்! என்ன இது இரண்டும் இல்லாமல் அடம் பிடிச்சுக் கொண்டு?

தமிழ் மொழி எப்ப தோன்றினது பையா? அது தோன்றின நேரம் தமிழரின் மதம் என்ன? சொல்லுங்கள் கேட்பம்!

உல‌கில் மூத்த‌ மொழி த‌மிழ் தான் என்று அமெரிக்கா ஆய்வாள‌ர்க‌லே சொல்லின‌ம் /
போதுமா 😁 /

நான் தெரியாத‌தை ஏதாவ‌து ஒன்றை த‌ட்டி பார்த்து தெரிந்து கொள்ளுவேன் / தெரியாது என்ற‌ சொல்லு இந்த‌ பைய‌னிட‌ம் எடு ப‌டாது /

எம் முன்னோர்க‌ளும் சொல்லின‌ம் த‌மிழ் தான் உல‌க‌த்தின் மூத்த‌ மொழி என்று 🙏
 
9 minutes ago, Justin said:

பையன், ஒரு விடயம் தெரியவில்லை என்றால் சொல்வதைக் கேட்க வேண்டும், பிழையாகச் சொல்லியிருந்தால் மன்னிப்புக் கோரி விட்டு நகர வேண்டும்! என்ன இது இரண்டும் இல்லாமல் அடம் பிடிச்சுக் கொண்டு?

தமிழ் மொழி எப்ப தோன்றினது பையா? அது தோன்றின நேரம் தமிழரின் மதம் என்ன? சொல்லுங்கள் கேட்பம்!

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு , இந்த‌ ப‌ழ‌மொழி உங்க‌ளுக்கு பொருந்தும் ( ஜ‌ஸ்ரின் 😁)

இனி இந்த‌ திரியில் எழுத‌ விரும்பல‌ 😉 /

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 🙏

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, Justin said:

இப்படி மற்றவனின் உழைப்பை எடுத்து மத நம்பிக்கையொன்றை வளர்க்கும் வேலையை இந்து மதம் மட்டுமே செய்கிறது என்பது பலருக்கும் தெரிந்ததே. அதை மட்டுமே நான் எதிர்க்கிறேன். மற்றபடி எதை யார் நம்புகிறார்கள் என்பது எனக்கு அக்கறையில்லை!

ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் விஞ்ஞானிகளை சிறையில் போட்டும் கொன்றும் அறிவியலை கிறிஸ்தவம் தடுக்கப் பார்த்தது! தொடர்ந்து வந்த மறுமலர்ச்சிக் காலத்தில் கலைகளையும் அறிவியலையும் தடுக்க முடியாது என்று உணர்ந்த பின்னர், அவை இரண்டிற்கும் ஆதரவு கொடுத்து வளர விட்டது. வத்திக்கான் அரண்மனையின் சிற்ப ஓவிய சிறப்புகளும், ஐரோப்பாவின் மிகப்பழமையான வான் தொலைநோக்கியும் இதற்கு சான்றுகள்! மனித வளர்ச்சியில் ஐரோப்பா எங்கே நிற்கிறது இப்போது?

இந்து மதவாதத்தின் பால் தெரிவான மோடி பரிசோதனைக் குழாய்க் குழந்தைகள் புராணங்களில் கண்டு பிடிக்கப் பட்டதாகச் சொல்லி இந்த அடுத்தவன் உழைப்பில் போலி மதநம்பிக்கையை வளர்க்க உங்கள் போன்ற கையிருப்பில் அதிகம் இல்லாதோர் அவரோடு இழுபடுகிறீர்கள், இது நடக்கும் இந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன? தெருவில் பெண்களே தனியாகப் போக இயலாத நிலை இந்த நாடுகளில்!

போலி அறிவியல் கருத்துகளால் ஒரு மத நம்பிக்கையை முண்டு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியிருக்கிறதெனில் அந்த மத நம்பிக்கை கொள்வோர் ஆன்மரீதியில் உள்ளீடு எதையும் பெறாமல் கோதுகளைக் கட்டிக் கொண்டு அல்லாடுகிறார்கள் என்று தான் அர்த்தம்! இது எந்த மதத்திற்கும் பொருந்தும் ஆயினும், இந்த போலி விஞ்ஞானத்தை வைத்து முண்டு கொடுப்பது அதிகம் இந்து மதமே என்பதால் இது இந்து மதத்திற்கு அதிகம் பொருந்துகிறது!  

விரதமிருப்பதால் வரும் நன்மைகள் இப்பொழுது தான் உங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது, மருத்துவ விஞ்ஞானிகள் தமது உழைப்பின் மூலம் கண்டறியும் பல மருத்துவ ஆதாரங்களை எம் முன்னோர் முன்னரே கூறி வைத்துள்ளனர் என்ற எப்போதும் தமிழனின் கருத்துக்கு மோடியை இழுத்து கருத்தை திசைதிருப்பியுள்ளீர்கள். 

மோடி தான் எமது முன்னோர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலும். 😀

இயேசு பிறந்த போதே ivf பிறப்பு முறை இருந்ததாக கதையளந்தவர்களும் இருக்கிறார்கள். அவை உங்கள் கண்ணில் பட்டிருக்காது. 😂

இஞ்சியும் மரவெள்ளியும் சேர்த்து சாப்பிடுவதால் வரும் தீமையை எமது முன்னோர் முன்பே கூறினார்கள். மருத்துவ உலகு பின்னரே கண்டு பிடித்தது. இப்படி பல உண்டு.

இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்துக்கு வெள்ளையர்கள் பலர் வாடிக்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 😎

Edited by Lara
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Eppothum Thamizhan said:

எனக்கு மிஞ்சிய சக்தியை நான் கடவுளாகப் பார்ப்பதும் அந்த சக்தியால் எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கும் ஒன்றிற்காக நான் தூக்குகாவடி எடுப்பதும் எனது தனிப்பட்ட விடயம். ஏன்  நான் உங்களையும் கூட வந்து காவடி எடுக்க சொன்னேனா? மற்றவனின் தனிப்பட்ட விடயங்களை நீங்கள் ஏன் விமர்சிக்கிறீர்கள். யாரும் உங்களிடம் free  advise  கேட்கவில்லையே. உங்களுக்கு ஒன்று பிடிக்காவிட்டால் மூடிக்கொண்டு உங்கள் வேலையை பாருங்கள். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் தகுதி  உங்களிடமும் இல்லை அதை கேட்கவேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை!!

என்னய்யா நீங்கள் ....
திரும்ப திரும்ப ஒரே கேள்வியுடன் வரிசையாக வருகிறீர்கள்?
இதுக்கான பதில் ஏற்கனவே நான் மேலே குமாரசாமி அண்ணருக்கு எழுதி இருக்கிறேனே.
எனது தனிப்பட்ட விடயம் என்று எதை எழுதுகிறீர்கள்?
அதுதான் வீதிக்கு வந்துவிடுகிறீர்களே? பிறகு வீதியில் நிற்பவனுக்கு பதில்சொல்லிதான் ஆகவேண்டும் 
வீதி பொது வீதி  இதுகூட புரியாமல் எழுதுகிறீர்கள். எனது தனிப்பட்ட விடயம் என்று பருத்தித்துறை வீதியால் 
நான் ஆடை இன்றி நல்லூர் வீதியால் போகமுடியுமா? 
அடுத்த மனிதர்கள் சிறார்கள் வீதிகளில் நிற்கும்போது இப்படி காட்டுமிராண்டி வேலை தயவு செய்து செய்யாதீர்கள். வேண்டும் என்றால் உங்கள் உடல்களில் குத்து ஊசிகள் சாக்கு ஊசிகளை குத்தி உங்கள் முகட்டு வளையில் ஒரு கயிறை கட்டி தொங்குங்கள் ... அப்போதும் தயவு செய்து கதவை சாத்திவிடுங்கள்.
அடுத்த வீட்டுகாரனுக்கு தெரியும்போது அது மூட பிரச்சாரம் ஆகிறது ...... பின்பு சமூகத்தை கெடுப்பதால் நாம் வரத்தான் வேண்டும். 
நித்தியானந்தவின் ஆசிரமம் வீதியில் இல்லை ..... ஆனாலும் நான் என்ன செய்கிறேன் என்றோ? நான் ரஞ்சிதாவுடன் எனது படுக்கை அறையில் படுத்தால் உங்களுக்கு என்ன என்று கேட்க்கும் தகுதியோ அவருக்கு இல்லை. பிரம்மச்சரியம் என்று வெளியில் பிரச்சாரம் செய்து சமூகத்தில் கொஞ்சம் அறிவு குறைந்தவர்கள் 
சுயமாக சிந்திக்க தெரியாதவர்களை எம்மாற்ற பார்ப்பதால் ..... சமூகம் படுக்கை அறைவரை எட்டி பார்த்ததை  நீங்கள் அறீவீர்கள். அவர் இந்த பூச்ச்சாண்டி வேலைகளை விட்டுவிட்டு போய் யாருடன் படுத்தாலும்  அடுத்தவனுக்கு கவலை இல்லை. 

குறிப்பாக நீங்களும் பிராமணர்களும் இப்படி கயிறில் தொங்கிக்கொண்டு போனால்  தனிப்பட நான் மிகுந்த சந்தோசம்  அடைவேன் ......... ஆனால் போகவே மாட்டீர்கள். யாரும் ஒரு அறிவு குறைந்த மூடன் பாவம் பரம்பரையாக மூளைச்சலவை ஆகி  இப்படி தொங்குவதை ..... எங்கள் தனிப்பட்ட விடயம் என்று மல்லு கட்ட வருகிறீர்கள்.  நல்லாவூரில் உங்களுக்கு இருக்கும் அதே உரிமை எனக்கும் இருக்கிறது ... அதுதான் இந்த முரண்பாடு. 

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, Lara said:

விரதமிருப்பதால் வரும் நன்மைகள் இப்பொழுது தான் உங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது, மருத்துவ விஞ்ஞானிகள் தமது உழைப்பின் மூலம் கண்டறியும் பல மருத்துவ ஆதாரங்களை எம் முன்னோர் முன்னரே கூறி வைத்துள்ளனர் என்ற எப்போதும் தமிழனின் கருத்துக்கு மோடியை இழுத்து கருத்தை திசைதிருப்பியுள்ளீர்கள். 

மோடி தான் எமது முன்னோர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலும். 😀

இயேசு பிறந்த போதே ivf பிறப்பு முறை இருந்ததாக கதையளந்தவர்களும் இருக்கிறார்கள். அவை உங்கள் கண்ணில் பட்டிருக்காது. 😂

இஞ்சியும் மரவெள்ளியும் சேர்த்து சாப்பிடுவதால் வரும் தீமையை எமது முன்னோர் முன்பே கூறினார்கள். மருத்துவ உலகு பின்னரே கண்டு பிடித்தது. இப்படி பல உண்டு.

இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்துக்கு வெள்ளையர்கள் பலர் வாடிக்கையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 😎

மத நம்பிக்கைகள் சடங்குகள் பற்றி எந்த மதத்தைச் சேர்ந்தோர் விஞ்ஞான விளக்கம் சொல்லும் கதையளந்தாலும் அது சொந்தக் காலில் நிற்க வக்கில்லாமல் செய்யும் திருட்டு வேலை தான்! இயேசுவின் பிறப்பை செயற்கைக் கருக்கட்டலாக கதையளந்தது கிறிஸ்தவரா என்பதே முக்கியமான கேள்வி! ஏனெனில் சம்மனசின் வாழ்த்தினால் மேரி கர்ப்பமானாள் என்பது அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று! அதை விஞ்ஞானமாக விளக்கினால் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று குறைந்து விடும்! இப்படியே தண்ணீரில் நடந்தது, குருடன் பார்த்தது எல்லாவற்றையும் விஞ்ஞான விளக்கமாக்கினால் கிறிஸ்தவம் மறைந்து விடும்!  

இந்துக்கள் அப்படியல்லவே! நாம் பல நூற்றாண்டு முதலே கண்டு பிடித்து செய்து விட்டோம், இப்போது விஞ்ஞானிகள் நிரூபிக்கிறார்கள் என்று விஞ்ஞானத்தை வைத்து தங்கள் நம்பிக்கையை validate செய்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது. அது தான் மத நம்பிக்கைக்கு அவசியம் இல்லை என்கிறேன்.

இஞ்சியும் மரவள்ளியும் சேர்த்துத் தின்றால் மரணம் நிகழும் என்று அறிந்து கொண்ட பின்னர் உங்கள் முன்னோர்கள் சாப்பிட வேண்டாமென்று சொல்லியிருப்பர்! இரண்டையும் கலந்தால் சயனைட் உருவாகிறது என்று விஞ்ஞானி கண்டு பிடித்தான். இரண்டும் கண்டுபிடிப்புகளே! ஆனால், "எங்களுக்கு சயனைட் இருப்பது தெரிந்து தான் முதலே எழுதி வைத்து விட்டோம், இவர்கள் இப்போது லேட்டாகக் கண்டு பிடிக்கிறார்கள்!" என்று நக்கலாகச் சொல்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது!

 மருத்துவத்தை உறுதிப்படுத்துவது விஞ்ஞான ஆய்வுகளேயன்றி, அதை வெள்ளைக் காரன் வரவேற்கிறானா கறுத்தத் தோல் உடையவன் வரவேற்கிறானா என்பதை வைத்தல்ல! வெள்ளையன் பாவித்தால் அது சிறந்தது என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு உங்கள் தோல் நிறம் இனம் பற்றி தாழ்வுச் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.