Jump to content

நரேந்திர மோதி பேச்சு: "காஷ்மீரில் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா படப்பிடிப்பு நடத்துங்கள் - வேலைவாய்ப்பு பெருகும்"


Recommended Posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து, அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் இந்த உரையை நிகழ்த்தினார் அவர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், லடாக் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் பேசத் தொடங்கினார்.

 

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

“காஷ்மீரின் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது. படேல், அம்பேத்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, வாஜ்பேயி ஆகியோரின் கனவு நினைவாகி உள்ளது.” - பிரதமர் நரேந்திர மோதி

Posted by BBC News தமிழ் on Thursday, 8 August 2019

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

"ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகளின் பல உரிமைகள் மறுக்கப்படக் காரணமாக இருந்த, வளர்ச்சிக்குத் தடையாக இருந்த ஒரு ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார் .

 
 

கனவு நிறைவேறியது

ஒரு நாடாக, ஒரு குடும்பமாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

 

சர்தார் வல்லபாய் பட்டேல், பாபாசாஹிப் அம்பேத்கர், ஜனசங்கத் தலைவர் டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி, பாஜக வை சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி ஆகியோரின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்றார் மோதி.

துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமை

இந்தியாவின் பல மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமையைக் காப்பதற்கு 'துப்புரவுத் தொழிலாளர் சட்டங்கள்' உள்ளன. ஆனால், ஜம்மு காஷ்மீர் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அந்த உரிமை இல்லை. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுக்க பல மாநிலங்களில் சட்டங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் அது இல்லை என்று தெரிவித்தார் மோதி.

விவாதம் நடைபெறவில்லை

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370 எப்படி ஜம்மு காஷ்மீர் மக்களை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்பது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இந்த உறுப்புரை மக்களுக்கு எப்படிப் பலனளிக்கிறது என்று யாராலும் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

"மத்திய அரசின் ஆளுகையில் வைத்திருப்பதால் நல்லாட்சி நடக்கிறது"

ஜம்மு காஷ்மீரை சிறிது காலத்துக்கு மத்திய அரசின் நேரடி ஆளுகையில் வைத்திருப்பது என்பது யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாநில நிர்வாகம் நேரடியாக மத்திய அரசுடன் தொடர்புகொண்டுள்ளது. இதனால், நல்லாட்சியின் விளைவுகளை களத்தில் பார்க்கலாம் என்றார் மோதி.

வளர்ச்சித் திட்டங்கள்

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் கவலை, அனைத்து இந்திய மக்களின் கவலை. நாம் தனியாக இல்லை. பாரபட்சமின்றி, ஜம்மு காஷ்மீரிலும், லடாக்கிலும் வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இளைஞர்கள் பலனடைவார்கள். விளையாட்டுத்துறையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார் மோதி.

"தமிழ் சினிமா படப்பிடிப்பு நடக்கும் - வேலைவாய்ப்பு பெருகும்"

இந்த முடிவால், காஷ்மீரில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பெருமளவில் நடக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் கூறினார் மோதி.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது, முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அவர் உரை நிகழ்த்துவது கவனம் பெறுகிறது.

https://www.bbc.com/tamil/india-49279079

`யூனியன் பிரதேசம் ஏன்; தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது!' - மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

மாலை 4 மணிக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது 8 மணியாக மாற்றப்பட்டது. நாட்டு மக்களிடையே பேசிய மோடி, ``காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேல், வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவவே சட்டப்பிரிவு 370 உதவியது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு இந்த சட்டப்பிரிவு இதுவரை தடையாக இருந்தது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீர், லடாக் பகுதிகள் வளர்ச்சியடையும். காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் குடும்ப ஆட்சிமுறைக்கு முடிவு எழுதப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசால் லடாக் பகுதிகளில் எந்த நன்மையும் நடக்கவில்லை. காஷ்மீர் மக்களுக்கு இனி வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். இந்த சட்டப்பிரிவு ரத்தால் பட்டியல், பழங்குடி இன மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். 370 சட்டப்பிரிவு ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை எவ்வாறு பாதித்தது என்பதைக்கூற இங்கும் யாரும் இல்லை. இந்த சட்டப்பிரிவு ரத்தால் அந்த மாநில மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பேச இங்கு யாரும் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.

 

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்க முடிவெடுத்தது ஏன்?
ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தைக் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு கவனித்து வந்தது. அப்போது, நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை வேகமாக செயல்படுத்த முடிந்தது.

 

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தற்காலிக முடிவுதான்!
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிக முடிவுதான். அதேநேரம், லடாக் யூனியன் பிரதேசமாகவே தொடரும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படும். அந்த உரிமை அவர்களுக்கு என்றும் நிலைத்திருக்கும். பாதுகாப்பு படையில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் முகாம்கள் நடத்தப்படும். நான் சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்தபோது சாலை மற்றும் மின்சார வசதிகள் மேம்பட்டிருப்பதைக் கண்டேன். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்ட பிறகு அங்கு வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் சினிமா படப்பிடிப்புகளுக்கான தடைகள் நீக்கப்படும்.

காஷ்மீரில் இனி திரைப்பட நிறுவனங்களைத் தொடங்கலாம். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களை தயாரிப்பவர்கள், காஷ்மீரில் படப்பிடிப்புகளை நடத்த முன்வர வேண்டும். சினிமா படப்பிகளை காஷ்மீரில் நடத்தியதால் அந்த மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். லடாக்கில் சூழலியல் சுற்றுலாக்கள் ஊக்கப்படுத்தப்படும். காஷ்மீரில் உள்ள மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்படும். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை புதிய பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதிகளைத் தோற்கடிப்பார்கள். மாற்றுக்கருத்து உள்ளவர்களை மதிக்கிறோம்; ஆனால், தேசவிரோத நோக்கில் செயல்படக்கூடாது. லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இனிமேல் ஜம்மு - காஷ்மீரையோ லடாக்கையோ தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

அனைவருக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் எந்தவொரு பிரச்னையும் எங்கள் பிரச்னை. அவர்களின் மகிழ்ச்சி, சோகமான தருணங்களில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முழுமையான பாதுகாப்புடன் விரைவில் நடத்தப்படும். கடந்த 1947-க்குப் பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன. ஜம்மு - காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீஸாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம். விமான நிலைய உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து ஏற்படுத்திக் கொடுக்கப்படும். காஷ்மீரில் விளையாட்டு அரங்குகள் போன்றவை இல்லை. அவற்றில் கவனம் செலுத்தப்படும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்று பிரதமர் மோடி பேசினார். காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார். 8 மணிக்குத் தொடங்கி ஏறக்குறைய 40 நிமிடங்கள் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

https://www.vikatan.com/news/india/we-have-taken-a-historic-decision-pm-modi-on-kashmir-issue

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ அரசியல்வாதிகள் அந்தப் பக்கம் போயிடாதேங்கோ.

மக்களை மட்டும் பலிக்கடாவா அனுப்புங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

           -- முனிரத்னம் --

531223912_1280x720.jpg

எடுடா வண்டிய..  ரோஜா-2 எடுக்கணும்..😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.