Sign in to follow this  
பெருமாள்

Global Sulphur Cap 2020 - ஏற்படுத்தப்போகும் தாக்கம்

Recommended Posts

 
   Home > Tamil News  
 
 
athirubasingam-athavan-10542.jpg?id=451993

ஆதவன் பக்கம் (50) – Global Sulphur Cap 2020 - ஏற்படுத்தப்போகும் தாக்கம்

 
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2019 (செவ்வாய்க்கிழமை)
 
 

‘கடைசியாக கடத்தப்பட்ட விமான சம்பவம் எது’ என்றால், ‘கந்தகார்’ என்று பல வருடங்கள் முன்பு  இடம்பெற்ற சம்பவம் பற்றி உடனடியாக நூறு கோடிப் பேரும் இந்தியாவில் பதில் அளிப்பார்கள். ஆனால் ‘அண்மையில் கடத்தப்பட்ட கப்பல் எது’ என்றால் 'அது பற்றி எவருக்குமே தெரிந்திருக்காது' – இவ்வாறு கடந்த சில வருடங்கள் முன்பு இந்தியக் கப்பல் ஒன்று சோமாலியாக் கடற்கொள்ளைக்காரர்களால் கடந்தப்பட்ட போது தமிழக வாராந்த செய்தி மலர் ஒன்றில் கட்டுரை ஒன்று வரையப்பட்டிருந்தது. 

கடலியல் பற்றிய செய்திகள் என்றுமே பெரிதுபடுத்தப்படுவதில்லை. கப்பல்கள் மோதுண்டு, கடலில் எண்ணை கொட்டப்பட்டு, எண்ணையானது மெல்ல மெல்ல கரையை அடைந்து, மீன்களும் பறவைகளும் மடிந்தால் – அது மட்டும் ஊடங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. குறித்த சம்பவத்தில் காயம் அடையும் அல்லது உயிரைவிடும் மாலுமிகள் பற்றிக்கூட பெரிதாக எவரும் அலட்டிக் கொள்வதில்லை. 
 
சில விடயங்களை என்றுமே எவராலும் மாற்ற முடியாது. அவற்றில் ஒன்றாக மேற்குறித்த விடயமும் இருந்து வருகின்றது 
 
இவ்வாறாக இதுவரை பொது ஊடங்களாலும் சாதாராண மக்களாலும் பெரிதும் அறியப்படாத – உலகில் உள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் அதேவேளை, நேரடியாக அனைவரையும் பொருளாதார ரீதியில் பாதிக்கவருகின்றது ‘Global Sulphur Cap 2020’ என்னும் விடயம். 
 
‘IMO 2020’ என செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்த விடயமானது, அனைத்து கப்பல் நிறுவனங்களினதும், கப்பல் முதலாளிகளினதும் தலைகளைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றது.

athiroobasingam-athavan-page.jpg

‘Global Sulphur Cap 2020’ என்றால் என்ன?

1 ஜனவரி 2012 இலிருந்து கப்பல்களில் பாவிக்கப்படும் எண்ணையில் உள்ள கந்தக்கதின் (Sulphur) அளவு 3.50% ற்கு மேற்படாது இருக்க வேண்டும் என்பது விதி. இவ்வகை எண்ணை ‘High Sulphur Fuel Oil’ (HSFO) என அழைக்கப்படுகின்றது. 
 
காற்றில் Sulphur இன் அளவானது அதிகரிக்கும் போது சூழல் மாசடைதலும், புற்று நோய் அதிகரிப்பும் உண்டாகின்றது என்று கூறித்தான் வருடந்தோறும் வாகனங்களுக்கு நாங்கள் புகைப் பரிசோதனை செய்து கொண்டிருக்கின்றோம். 
 
உலகளாவிய ரீதியில் கப்பல்களால் எரிக்கப்படும் எண்ணையால் வெளியிடப்படும் கந்தகத்தின் அளவாலும் சூழல் பெரிதும் மாசுபடுகின்றது.  
 
இது ‘SOx Emmission’ எனப்படுகின்றது. 
 
தீய விளைவுகளைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் கடலியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் துணை அமைப்பான ‘International Maritime Organization’ (IMO) ஆனது, கப்பல்களில் பாவிக்கப்படும் எண்ணையில் உள்ள Sulphur இன் அளவை 0.50% m/m என்னும் அளவுக்கு குறைக்க உத்தரவிட்டுள்ளது. 
 
இவ்வகை எண்ணை ‘Low Sulphur Fuel Oil’ (LSFO) என அழைக்கப்படுகின்றது.
 
புதிய விதியானது கப்பல்களின் Main engine, Auxiliary engines மற்றும் Boiler கள் ஆகிய மூன்று வகை இயந்திரங்களுக்கும் பொருந்துகின்றது.
 
இந்த உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து உலகில் உள்ள அனைத்து கப்பல்களும் 0.50% Sulphur அளவைக் கொண்ட எண்ணையையே பாவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
மேற்குறித்த எண்ணைகளின் தோராயமான விலைகள் வருமாறு,
 
1 மெட்ரிக் டன் High Sulphur Fuel Oil (HSFO) – 400 US $
1 மெட்ரிக் டன் Low Sulphur Fuel Oil (LSFO) - 600 US $
 
மேற்குறித்த விலைகள் நேரத்துக்கு நேரம் இடத்துக்கு இடம் குறிப்பிடக் கூடிய அளவில் மாறுபடுகின்றன. 
 
கடந்த வருடம் நான் பணிபுரிந்த மத்திய தர கொள்கலன் கப்பலின் (Container Ship), இயந்திரங்களை இயக்குவதற்கு தேவையான எண்ணையின் அளவு சுமார் 140 மெட்ரிக் டன்கள்.
capt-athavan.jpg
 
நாள் ஒன்றுக்கு குறித்த கப்பலின் எண்ணைக்கு இதுவரை தேவைப்படுகின்ற பணம் 
 
= 400 x 140 = US $ 56,000/-
 
இதே கப்பலுக்கு புதிய விதிப்படி எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து, எண்ணைக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படப்போகும் பணம் 
 
= 600 x 140 = US $ 84, 000/-
 
ஆகவே, நாள் ஒன்றுக்கு குறித்த கப்பல் மேலதிகமாக செலவிடவுள்ள பணம்
 
= US $ 84, 000/- - US $ 56,000/-
 
= US $ 28,000/-
 
குறித்த கப்பல் சிங்கபூரிலிருந்து லண்டன் செல்கின்றது போது, தோராயமாக குறித்த பயணத்துக்கு மேலதிகமாக செலவிடவேண்டியுள்ள பணம்
 
= US $ 28,000/- x 18 
 
= US $ 5,04,000/-
 
இலங்கை ரூபாவில் கூறுவது என்றால் 
 
=  8,82,00,000/- 
 
எண்ணை மாற்றத்தால் நாற்பது அடி கொள்கலன் (Container) ஒன்றின் ‘காவு கூலி’ (Fright) சுமார் 400 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் என பல்வேறு கப்பல் நிறுவனங்களும் கணித்துள்ளன. 
 
கையில் வைத்திருக்கும் போனில் இருந்து காலில் போட்டிருக்கும் பாண்ட் வரை அனைத்தும் கப்பல்களாலேயே கொண்டு வரப்படுகின்றன. ஆகவே – அனைத்துப் பொருட்களினதும் விலைகள் நிரந்தரமாக அதிகரிக்கவுள்ளது என்பது தெளிவு. 
 
காவு கூலி அதிகரிப்பை முதலில் கப்பல் நிறுவனத்தினரும் (Owner மற்றும் Operator), பின்னர் பொருட்களை ஏற்றி இறக்குவோரும் (Shippers) ஏற்றுக் கொண்டாலும், இறுதியில் செலவை சரி செய்யவுள்ளவர்கள் பொருள் கொள்வனவர்களாகிய நாங்களே ஆவோம். 
 
உடனடியாக இல்லாவிட்டாலும் நாளடைவில் இந்த விடயம் மிக குறைந்த மாத வருமானம் பெறுபவர்களை பாதிப்படையச் செய்யப்போகின்றது.
 
‘IMO 2020’ விதியை நடைமுறைப்படுத்த, கப்பல சொந்தக்காரர்களுக்கு உள்ள வழிமுறைகள்  
 
1) Switching from high-sulphur fuel oil (HSFO) to marine gas oil (MGO) or distillates
 
2) Using very-low-sulphur fuel oil or compliant fuel blends (0.50% sulphur)
 
3) Retrofitting vessels to use alternative fuels such as LNG or other sulphur-free fuels
 
4) Installing exhaust gas cleaning systems (scrubbers), which allow operation on regular HSFO
 
இவற்றில் 3 ஆவது மற்றும் 4 ஆவது முறைகள்  தலையைப் பிரித்து மீண்டும் தைப்பதற்கு ஒப்பானது ஆகும் – அதிக செலவும் சிக்கல்களும் நிறைந்தது. 
 
‘Global Sulphur Cap 2020’ – எவ்வாறன தாக்கத்தை கொண்டுவரவுள்ளது
 
கப்பல் நிறுவனங்களை பொறுத்தவரை எண்ணை குடிக்கும் கப்பல்களை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை 
 
எரிபொருள் வழங்கும் வலையமைப்பு (Bunker Supply Chain) பாதிக்கப்படலாம்.
 
சில பல சிறிய மற்றும் நடுத்தர கப்பல் நிறுவனங்கள் மூடப்படலாம் அல்லது ஒன்றாகச் சேரலாம். (ஊரவர்கள் ஒரு வேளை முன்னர் கப்பல்கள் வாங்கியிருந்தால்  2020 உடன் கதை முடிந்திருக்கும்)
 
புதிய விதிக்கமைவான புதிய கப்பல்களை கட்ட வேண்டிய கட்டாயம் 
 
மேலாக மேற்கூறிய வகையில் பொருட்களின் விலை அதிகரிப்பு.  
 
‘Global Sulphur Cap 2020’ – நன்மைகள்
 
IMO 2020 மேற்குறித்த எதிர்மறையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தினாலும், இதை அமுல்படுத்தாவிட்டால் ஏற்படும் விளைவும் எதிர்காலத்தில் அபாயகரமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
 
IMO 2020 ஆனது 85% ஆன SOx வெளியேற்றத்தை தடுக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதனால்  
 
1) கடலில் குறிப்பாக இந்திய சமுத்திரத்திலும் தென் சீனக் கடலிலும் உண்டாகும் மின்னல் தாக்கம் (Lightning storms) குறைவடையும்.
 
2) பயிர்களுக்கும் பயிர்ச் செய்கைக்கும் தீங்கு விளைவிக்கும் அமில மழையின் (Acid rain) அளவு குறைவடையும்.
 
3) மக்கள் நெரிசல் உள்ள கொழும்பு போன்ற துறைமுக நகர்களிலும் கரையோரப் பகுதிகளிலும் வாழும் மக்களின் சுவாசம் மற்றும் இருதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் (Respiratory problems and cardiovascular disease) குறைவடையும்.
 
அஜித் விஜய்யின் படங்களுக்கு பூசை போடப் படுவதிலிருந்து நூறு நாட்கள் ஒட்டப்படும் வரை காட்டப்படும் ஆர்வமும், கமல் ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு காட்டும் டெய்லி ஆர்வமும், தவறாத வட்ஸ் அப் கொசிப்புக்கள், திருப்பித் திருப்பித் தட்டும் பேஸ்புக் போன்ற நவீன மீடியா யுகம் – பல வருடங்கள் முன் கொண்டு வரப்பட்ட, இன்னும் சில மாதங்களில் நடை முறைப்படுத்தப்படவுள்ள – பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி – பல்வேறு வகைகளில் நன்மை பயக்கவுள்ள ஒரு விடயத்தை இதுவரை வெளிக் கொணரத் தவறியதை என்னவென்று கூறுவது? 
 
கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இதைத்தான் “கண் மண் பாராமல் அடித்தார்கள் “ என்று சொல்லுகிறார்களோ?
  • 1962 conflict with China significantly damaged India's standing at world stage: S Jaishankar Nov 14, 2019, 08.35 PM IST India's position at world stage seemed assured but the 1962 conflict with China significantly damaged the country's standing, External Affairs Minister S Jaishankar said on Thursday. "If the world is different (today), we need to think, talk and engage accordingly. Falling back is unlikely to help," he said, adding "purposeful pursuit of national interest is shifting global dynamics."  https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1962-conflict-with-china-significantly-damaged-indias-standing-at-world-stage-s-jaishankar/articleshow/72059047.cms
  • ரணில் பதவி விலகுவதாக கூறி விட்டார். கடிதத்தை நாளை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார். அதை தொடர்ந்து நாளையே மகிந்த பிரதமராக பதவியேற்பார். இது ரணிலின் statement. தமிழ் மொழிபெயர்ப்பு.
  • புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்  ஆட்சிக் காலம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிமயமிக்க பொற்காலமாக மாற்றம் பெறவுள்ளதாக தெரிவித்த  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், இதற்கான ஆணையினை மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் வழங்கியிருக் கின்றனர்.  நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின்  மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்  போதே   மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு  மேலும் கருத்து  தெரிவிக்கையில்: கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின்  ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தியில்  கிழக்கு மாகாணத்தில்  எதுவி தமான அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. மக்களை அபிவிருத்தி தொடர்பாக ஏமாற்றிய வரலாறுகளே தான்உள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியானது வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றியாகும்.  இது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விடயம்.இதற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டனர். இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றமை மொட்டு மலர்வதற்கு சாதகமாக அமைந்தது.  பிரசாரக் கூட்டங்களில் மக்கள் அலை அலையாக வலம் வந்தமை மூலமாக கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.  இதனை அறியாத சில அரசியல்வாதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மை விமர்சித்தனர். ஆனால் இன்று மௌன நிலைக்குத் தள்ளப்பட்டு வாய்ப்பூட்டுபோடப்பட்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்திக்காக நாம்  கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து வெற்றிவாகை சூடியிருக்கின்றோம் என்றார். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமழ-மககளகக-பறகலமகலம/73-241266
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சியொன்று கடந்த திங்கள்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.  இந்தச் சம்பவம் பற்றி கருத்து  தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன்:-  "தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி னேன். நான் வீடு திரும்பியதும் எனது மனைவி வீட்டு கதவை  பூட்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எனது வீட்டுக்கு முன் வாகனமொன்றிலும்  டிப்பர் ஒன்றிலும்  சுமார் 20 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பல், " டேய் ராஜன்" "வீட்டுக்கு வெளியே வாடா" என்று கத்தி சத்தமிட்டனர். நான் வீட்டைத் திறக்காமல் அருகிலுள்ள எனது சகோதரியின் வீட்டுக்கு, பின்பக்கத்தால் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை அவதானித்தேன். அதில் இருவர் எனக்குத் தெரிந்தவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் விசுவாசிகள்.அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.  நாங்கள்  கதவைத் திறக்காததால்  என்னைத் தாக்க வந்தவர்கள்,  ஆத்திரமடைந்து  கோடரியால் கதவைக் கொத்திவிட்டு     வீட்டு வாசலில் நின்று "சஜித்திடம் காசு வாங்கிவிட்டா  வேலை செய்தாய் ".  "இனி நாங்கள் வந்துவிட்டோம். உன்னை கவனிப்போம்"என்று கூச்சலிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/அம்பாறை/ரஜன-மத-தககதல-மயறச/74-241265