Jump to content

ஆகஸ்ட் அதிசயம்...கொட்டித் தீர்க்கும் மழை!


Recommended Posts

அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கிப் போய் கிடக்கிறது. கடந்த வாரம் வரை, நீர்நிலைகள் மைதானமாக காட்சியளித்த நிலையில், தற்போது சாலைகளே நீர்நிலைகளாக மாறிவிட்டன.

புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியபோது, இதுவும் சாதாரண மழைதான் என்று கோவை மக்கள், தங்களது டே பிளானை (Day plan) அமைத்திருப்பார்கள். ஆனால், மழை வேறு பிளானை செயல்படுத்திவிட்டது.

புதன்கிழமை தொடங்கிய மழை, வெள்ளிக் கிழமை வரை கொட்டிக்கொண்டிருக்கிறது. வால்பாறை முற்றிலுமே முடங்கிப் போய்விட்டது. பழங்குடி கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தொடர்மழை காரணமாக, கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செல்வபுரம் டூ பேரூர் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.

தனது வழியெங்கும் நொய்யல் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. ஒண்டிப்புதூர் அருகே, நொய்யலில் கழிவுநீர் கலந்து நுரைகள் பறந்துகொண்டிருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறு 372 மி.மீ, சின்கோனா 315 மி.மீ, சோலையாறு அணை 282 மி.மீ, வால்பாறை தாலுகா 260 மி.மீ, பொள்ளாச்சி160 மி.மீ, கோவை தெற்கு 120 மி.மீ, பீளமேடு 106 மி.மீ மழைப்பொழிவை பெற்றுள்ளன.

மொத்தமாக கோவை மாவட்டத்தில், 244 செ.மீ பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவித்துள்ளனர். `ஆகஸ்ட் மாதத்தில் (ஆல் டைம் ரெக்கார்டு), கோவைக்கு கிடைத்த சிறந்த மழைப்பொழிவு இதுதான்’ என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

பில்லூர் அணை, தற்போது முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. சிறுவாணி அணையின் நீர் மட்டம் 36 அடியைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் சிறுவாணி அணை நிரம்ப உள்ளது.

சித்திரைசாவடி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில், 4,650 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பில்லூர் அணையிலிருந்து 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி, குரங்கு அருவி போன்றவற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், குற்றாலம் மற்றும் குரங்கு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆத்துப்பாலத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பாலங்கள் தண்ணீரில் தத்தளிக்க, புதிதாகக் கட்டப்பட்டு வரும் உக்கடம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், ``கோவையில் மழையால் பெரிய பாதிப்பு இல்லை. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பவானி மற்றும் நொய்யல் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்குச் செல்லவும். அவசர உதவிக்கு, 0422 2390261, 2390262, 2390263, 8190000200 (வாட்ஸ் அப்), 7440422422 ஆகிய உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம்” என்று கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தனர். தண்ணீர் வந்துவிட்டது. அதை எப்படி சேமிக்கப் போகிறோம்?

https://www.vikatan.com/social-affairs/environment/heavy-rainfall-in-coimbatore

 

நீலகிரியில் பெய்து வரும் கனமழை எதிரொலி: மீட்பு பணிக்கு ராணுவ உதவியை நாடியது மாவட்ட நிர்வாகம்

கனமழையால் பாதித்துள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்பு பணிக்கு உதவுமாறு ராணுவ உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. குன்னூரில் உள்ள ராணுவ முகாமின் உதவியை நீலகிரி மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.  தென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களில் தீவிரமாகி கொட்டி வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் நீலகிரி அவலாஞ்சியில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 92 செ.மீ மழை கொட்டியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் ஊட்டி தாலூகாவுக்குட்பட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்வதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 5-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி - மஞ்சூர் சாலையில் நேற்று 10 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மேலும் 2 நாட்களுக்கு அதிதீவிர கன மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனத்த மழை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதன் காரணமாகவும், ஏற்கனவே பெய்துள்ள கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கவும் ராணுவத்தின் உதவியை அம்மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516881

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®°à¯à®ªà¯à®ªà®°à®¿à®à¯à®à¯à®®à¯ வà¯à®³à¯à®³à®®à¯

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மேட்டூரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.

இதனால் கபிணி, கிருஷ்ணராஜசாகர், பவானி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் பாயும் வெள்ளத்தால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

à®à®°à¯ நாளில௠3 à®à®à®¿ à®à®¯à®°à¯à®µà¯

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு தற்போது வினாடி 5,500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அது போல் மேட்டூர் அணைக்கும் வினாடிக்கு 5.097 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

à®à¯à®à¯à®à¯à®¯à¯à®°à¯

இந்த நிலையில் மேட்டூர் நீர்தேக்க பகுதியான கோட்டையூரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீரவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/salem/heavy-rains-in-karanata-results-dams-water-level-increases-359711.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.