Sign in to follow this  
poet

மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன்.

Recommended Posts

(உன் கணவன்) ”காட்டான்தான். என்றாலும் எம்முன்னே, நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள் இன்றும் கமழும்.  ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன் இந்த ஞாலம் கடுகு”
.

Image may contain: 1 person

.
மூன்றாவது மனிதனின் கவிதை.
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
என்றோ ஆழ்மனதுள் தைத்து
இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும்
காலமுகமான
ஒரு கவிதையடி நீ.
தொடுவான் எரிய
மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே
ஈடன் பூந்தோட்டத்து வழி தவற
ஓயாமல் சபிக்குமொரு 
ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான்.
.
ஏவாள் நீ இன்றெங்கே.
உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை
இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே
நீ இச்சித்தும் நான் தவிர்த்த
அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா.
உன்னிடத்தே வளைய வளைய வந்து
எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே
அந்த அருவருத்த பாம்பு
அது எங்கே.
உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து
மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற
ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை என் மனசு.
.
இருள் கலைய முன்னெழுந்து காடு செலல்
நள்ளிரவிற் சுமையோடு வீடடைதல்
இரவெல்லாம் பதனிடுதல் என்றிருக்கும்
ஆதாம் சுகமா.
காட்டான்தான்
என்றாலும் எம்முன்னே
நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள்
இன்றும் கமழும்.
ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன்
இந்த ஞாலம் கடுகு.
.
இது யாருடைய வாழ்வு.
யார் பட்டி மந்தைகள் நாம்.
கூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று
நம் இருப்பு யாருடைய கணித விழையாட்டு.
எது பகடை எவர் காய்கள்
இது எவருடைய சதுரங்கம்.
.
- 1995

Edited by poet

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.   காஷ்மீர் - 1949  Goa.       - 1961 சிக்கிம் - 1975 ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை.  சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும். இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   
  • கோரோனோவிற்கு வீட்டு சுத்திகரிப்பு இரசாயணம், முகமூடி, எட்ட நிற்பது என்று எல்லா குரங்கு சேட்டையும் செய்தாச்சு! பத்து நாளா பிபிசி முதல் செய்தியில் கோவிட் இல்லை!  பீதி கிளப்பி முடிஞ்சாச்சு! இப்ப இனவெறி பிரச்சினைக்கு முள்ளிவாய்க்கால் என்றால் என்ன என்று தெரியாத சிறி லிங்கன் போஸர் கூட்டம் இருட்டடிப்பு செய்யினமாம்! இப்படி தெரிஞ்சிருந்தால் புலி எல்லாருக்கும் கைபேசி வாங்கி கொடுத்து சமூக வலையில் இருட்டடி, கரந்தடி போராட்ட்ங்கள் செய்திருக்கலாம். 52 பில்லியன் டொலர் ஹெரோயின் எப்பிடமிக் வழக்கில் எம்பிட்ட பெரிய மருந்து நிறுவனங்களுக்கு என்ன நடந்தது?
  • துருக்கியை விட.... இந்தியா அகிம்சையை மதிக்கவில்லை என்பதில், எனக்கு மிகுந்த கோபம்.
  • என்ர‌ தாத்தாவை யாரும் விவாத‌த்தில் வெல்ல‌ முடியுமா ,  பேர‌ன் எழுத்து பிழை விட்டு எழுதினாலும் பேர‌னின் தாத்தா சிற‌ந்த‌ எழுத்தாள‌ர் ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள புய‌ல் /  நீ க‌ல‌க்கு தாத்தா 🙏👏😘
  • அகாலமாகும் அகிம்சை வழிகள்.   .. அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர் இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். இவர்கள் அனைவரும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்கள் கெட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. இவர்கள் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். துருக்கியில் மூவர் அடைந்துள்ள மரணம் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அவர்கள் உலகிற்கு நிரூபித்துள்ளார்கள். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்? https://orupaper.com/trky/