Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

BE HONESTLY EXTEMIST

"ஆகவேதான் நான் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருக்க விருபுகிறேன்"

யாருக்கு இந்தத் தைரியம் இருக்கு!

தமிழீழ விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக விடுதலைப்புலிகளது பங்களிப்புடன் வீரியம்பெற்றிருந்தபோது இந்திய நடுவண் அரசு அப்போராட்டத்தை கூடிய விரைவில் முடக்கி தனது கைகளுக்குள் அதன் கடிவாளத்தைக் கொண்டுவரவேண்டும் என காலம் காலமாக முயற்சித்தது. இந்தியாவினது எந்தவித முயற்சிகளையும் புறந்தள்ளி முற்றுமுழுதாக இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களது போராட்டமாக அது இருக்கவேண்டும் அதற்கான தார்மீக ஆதரவை யாரும் தரலாம் ஆனால் எம்மைக் கட்டுப்படுத்த யாருக்கும் இடமளிக்ககூடாது என விடுதலைப்புலிகளது தலைவர் மிகவும் தீர்மானமாகவே இருந்தார். இந்திய அமைதிப்படை இலங்கையில் காலடிவைத்தபோது அந்தக் கொள்கையையே அடிப்படையாக சுதுமலைப்பிரகடனமும் இருந்தது, தான் வடாகுக்கிழக்குக்கான, இலங்கை அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட ஒரு பிராந்தியத்தின் முதலமைச்சராக இருந்தால் பிற்காலத்தில் அதுவே தமிழர்களது உரிமைப்போரின் குடுமியை இந்தியத் தரப்பிடம் கையளித்துவிடவேண்டி வரும் என்பதை மறைமுகமாக உணர்த்தினார்.

அதன்பின்பு வந்த தமிழர் வரலாற்றுக்காலம் இந்தியத் தரப்பிலிருந்து பல சங்கடங்களைச் சந்தித்ததெனிலும் ஒப்புக்குச் சப்பாணியாக நாம் இந்திய ஒழுங்குபடுத்தல்களுக்கொ அல்லது நிகழ்சித்திட்டங்களுடனேயோ ஒத்துவரமாட்டொம் என்பதில் அவர்கள் எப்போதும் பின்வாங்கியதில்லை.

அதற்கான விலையை முள்ளிவாய்க்காலில் தமிழர்தரப்புப் பெற்றுக்கொண்டபோதும் இலங்கைத்தீவிலும் உலக அரங்கிலும் சிறீலங்காவும் அதற்கு உறுதுணையாக நின்ற இந்தியாவும் எப்போதும் ஈழத்தமிழர்களுக்குச் செய்த தீங்குக்கு கூனிக்குறுகியே நிற்பர் இவ்விடத்தில் தோற்றாலும் நாம் மேன்மக்களாகவே இருக்கின்றோம் என ஈழத்தமிழ் இனம் இப்போதும் தலை நிமிர்த்தலாம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்வந்த அரசியல் சூழல் இப்போ முற்றிலும் வேறுமாதிரியானதாகிவிட்டது தமிழர் தலைமைகள் எனக்கூறித்திரிவோர் அல்லது பிரிதிநிதிகளாகப் பாராளுமன்றம்போணோர் இவர்கள் இந்திய அடிமைகளாகவே முற்றிலுமாக மாறிவிட்டனர். அதைவிட புலம்பெயர்தேசத்தின் ஈழத்தமிழர் அமைப்புகளில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்திய நிகழ்ச்சித்திட்டத்துக்குள் ஒருங்கமைக்கப்பட்டுவிட்டனர் அதில் பிரிட்டிஸ் தமிழ் போரும், உலகத்தமிழர் அமைப்பு உட்பட்ட ஏனைய லெட்டர்பாட் அமைப்புகளும் அடக்கம் அண்மையில் சென்னையில் ஒன்றுகூடி இந்திய அரசியல்வாதிகள் கால்களிலும் அதிகாரிகள் கால்களிலும் மண்டியிட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர்க்கான(?) அரசியல்வாதிகளும், புலம்பெயர் அமைப்புகளும் எந்தவிதத்தில் குத்திமுறிந்தாலும் எமக்கான தீர்வு அண்மைத்தூரத்தில் இல்லை, ஆனால் இவர்கள் எல்லோரும் தமிழர் பிரதிநிதிகள் எனும் ஒளிவடத்தில் நனையலாம். அவர்கள் போடும் கண்டதையும் வாயில் போட்டு திண்டு வாழலாம், சுமந்திரன் போன்றோருக்கு கபினட் தர அமைச்சருக்கான செல்வாக்கினை சிறீலங்கா அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்கலாம்.

இத்தனையும் எதற்காக எழுதுகிறேன் எனில்

கடந்த இருதினங்களுக்கு முன்பு இந்தியா சுதந்திரம் அடையும் காலப்பகுதியில் தனி இராச்சியமாக இருந்த காஸ்மீரது அனைத்து சிறப்பு இயல்புகளும் இந்திய நடுவண் அரசால் புடுங்கி எடுக்கப்பட்டு இந்தியச் சினிமா எடுப்பதற்கான சினிமாத்தளமாக மோடியால் பிரகடனப்படுத்தப்பட்டபோது.

அதிரடியாக பாகிஸ்தான் அரசு தனது பதிலடிகளை ஆரம்பித்து இந்தியாவினுடனான அனைத்துத் தொடர்புகளையும் தாம் முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் இனிமேல் இருநாடுகளும் இராயதந்திர ரீதியிலோ அன்றேல் சாதாரணமாகவே தொடர்பு எல்லைக்கு சற்று அல்ல நீண்ட தூரமே சென்றுவிட்டன, இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பையோ சங்கடங்களையோ உருவாக்கது எனிலும் பாகிஸ்தான் அனைத்துத் துறைகளிலும் அதனால் அடிவாங்கும் இராணுவ, பொருளாதார, புவியியல் மற்றும் தொடர்பாடல் முறைகளுடனும் முக்கியமாகப் போக்குவரத்து முறைமைகளிலும் பாதிப்புகள் ஏற்படும் ஆனால் கடந்தகாலங்களில் பாகிஸ்தான் இப்படியான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது அப்படியான காலங்களில் எப்படிச்செயல்படவேண்டும் என்பதற்கான பட்டவர்த்தமான அறிவும் அனுபவமும் அவர்களுக்கு நிறையவே இருக்கு ஆகவே அவர்கள் இதிலிருந்து மீண்டுவிடுவார்கள்.

சரி விசையத்துக்கு வருவொம்

ஈழத்தமிழர்களது இவ்வளவு அழிவுக்கும் உரிமைப்போராட்டத்தில் அவர்களது பின்தங்கல்களுக்கும் இந்தியாவே காரணம் என அறிந்தும் எமது தலைமைகளும் அமைப்புகளும் மக்களும் அரசியல்வாதிகளும் பாகிஸ்தான் அரசு செய்ததுபோல்.

"இத்தனை காலமும் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி நாங்கள் எமது விடுதலைக்கான போராட்டத்தை இனிமேல் உங்களது ஆதரவில்லாமலேயே கட்டமைத்துகொள்கிறோம் ஓரமாக இருந்து வேடிக்கை பார்க்கமட்டும் செய்யுங்கள்"


என எம்மில் ஒருத்தருக்காவது ஏன் துணிவுவரவில்லை?

கடந்த வருடம் நடந்த மாவீரர் தன நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் வெளியிடபட்ட அறிக்கையில்கூட இந்தியாவைத் தாயாபண்ணியும் ஒரு வரி இருந்ததே இவர்களது ஆசாராம் கோசாராம் வேலைகளினால்தான் அவ்வியக்கம் தனது தலைமையையும், வளங்களையும் இழந்ததே எனும் ஒரு விகிதக்கரிசனையும் இல்லாது அவ்வறிக்கையில் இந்தியாவைத் தூக்கிப்பிடித்திற்றே. இதுபற்றி யாராவது வினாவினார்களா.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பின் பின்னால், இதற்கான காலம் இப்போது எமக்கு வந்துவிட்டதாகவே எனக்குத்தோன்றுகிறது
பாகிஸ்தான் செய்ததுபோல் ஈழத்தமிழினமும் இந்தியாவைத் தூரவீச முனைப்புக்காட்டும் யாராவது மூக்குக்குக்கீழே மீசைமுளைச்ச அரசியல்வாதி எம்மிடத்தில் உண்டா?

ஆகவேதான் நான் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருக்க விருபுகிறேன்.

Link to comment
Share on other sites

எழுஞாயிறு,

இது உங்களால் எழுதப்பட்ட ஆக்கமா? இல்லையெனில் மூலத்தினை குறிப்பிடுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணமும் எழுத்தும் 

எழுஞாயிரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Elugnajiru said:


என எம்மில் ஒருத்தருக்காவது ஏன் துணிவுவரவில்லை?

கடந்த வருடம் நடந்த மாவீரர் தன நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் வெளியிடபட்ட அறிக்கையில்கூட இந்தியாவைத் தாயாபண்ணியும் ஒரு வரி இருந்ததே இவர்களது ஆசாராம் கோசாராம் வேலைகளினால்தான் அவ்வியக்கம் தனது தலைமையையும், வளங்களையும் இழந்ததே எனும் ஒரு விகிதக்கரிசனையும் இல்லாது அவ்வறிக்கையில் இந்தியாவைத் தூக்கிப்பிடித்திற்றே. இதுபற்றி யாராவது வினாவினார்களா.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பின் பின்னால், இதற்கான காலம் இப்போது எமக்கு வந்துவிட்டதாகவே எனக்குத்தோன்றுகிறது
பாகிஸ்தான் செய்ததுபோல் ஈழத்தமிழினமும் இந்தியாவைத் தூரவீச முனைப்புக்காட்டும் யாராவது மூக்குக்குக்கீழே மீசைமுளைச்ச அரசியல்வாதி எம்மிடத்தில் உண்டா?

ஆகவேதான் நான் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகியிருக்க விருபுகிறேன்.

முதல் விடயம்: தமிழரின் சகல துன்பங்களுக்கும் இந்தியா தான் காரணம் என்பது சரியான முடிவல்ல! இந்திராகாந்தியும் பார்த்தசாரதியும் எம்.ஜி.ஆரும் இருந்த போது சிங்களவர்கள் "இலங்கையின் எல்லாப் பிரச்சினைக்கும் இந்தியா தான் காரணம்" என்று சொன்னது போன்ற பழியை மற்றவன் மேல் போடும் செயலே இதுவும். தமிழர்களின் அன்றைய தலைமையின் பக்கமும் பிழை இருந்தது. அதை மறைக்க அல்லது சிறிதாக்க  இப்படியாக இந்தியா பிளஸ் 160 நாடுகளின் பிழை என்று பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது: தமிழ் தலைமைகள் தள்ளி நில்லுங்கள் என்றதும் இந்தியா  ஒதுங்கிப் போய் விடும் என்று நம்பும் ஆய்வாளர்கள் இன்னும் இருப்பது வேடிக்கை! இந்த அரைவேக்காட்டுத் தனமான புரிதலில், பாகிஸ்தானோடு ஒப்பீடு வேறு! அணுவாயுதம், சீன நட்பு என்று இருக்கும் பாகிஸ்தானும் நிலமே இல்லாமல் இருக்கும் ஈழத்தமிழரும் ஒப்பிடக் கூடிய நிலையிலா இருக்கிறார்கள்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானையும் ஈழத்தமிழினத்தையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது அது உண்மையே. ஆனால் எமக்கு இழப்பதற்கு இனிமேல் எதுவுமில்லை தவிர இழந்த எதையுமே எம்மால் திரும்பவும் பெற்றுக்கொள்ளமுடியாது ஆனால் கடந்தகாலப்படிப்பினைகளிலிருந்து எதிர்வினயாக்கவேண்டிய கட்டாயம் இப்போது இருக்கு இந்தியா எப்போதும் எமக்காக ஒரு துரும்பையும் தூக்கிப்போடப்போவதில்லை எனும்போது அவர்களது கால்களுக்கும் கிடப்பதைவிட பகிரங்கமாகவே அவர்களைத் தூக்கி எறிவதே சாலச்சிறந்தது. உரிமை விடுதலை இவைபோன்ற விடையத்தில் தற்போது அவர்களை விலத்தி அதன்போக்கில் விட்டு இன்னுமொரு நூற்றாண்டுகாலக் காத்திருப்பின்பின்பு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.

நாங்கள், நீங்கள் தேவையில்லை எனக்கூறுவோம் அப்போது நடப்பதை எதிர்கொள்வோம். 

முதலில் கதவைச் சாத்துவோம் அப்போது தெரியும் சண்டியனுக்கு மவுசு போய்விட்டது எனவும் இலங்கையின் போலீசுகாரனாகத் தன்னை நினைப்பவருக்கு எப்படியான உணர்வு வரும் எனவும். தவிர முதலில் அவர்கள் மேலுள்ள பயத்தை நாம் போக்கவெண்டும். சரிதான் வெளியே போ எனச்சொன்னால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைபண்ணிபாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Elugnajiru said:

பாகிஸ்தானையும் ஈழத்தமிழினத்தையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது அது உண்மையே. ஆனால் எமக்கு இழப்பதற்கு இனிமேல் எதுவுமில்லை தவிர இழந்த எதையுமே எம்மால் திரும்பவும் பெற்றுக்கொள்ளமுடியாது ஆனால் கடந்தகாலப்படிப்பினைகளிலிருந்து எதிர்வினயாக்கவேண்டிய கட்டாயம் இப்போது இருக்கு இந்தியா எப்போதும் எமக்காக ஒரு துரும்பையும் தூக்கிப்போடப்போவதில்லை எனும்போது அவர்களது கால்களுக்கும் கிடப்பதைவிட பகிரங்கமாகவே அவர்களைத் தூக்கி எறிவதே சாலச்சிறந்தது. உரிமை விடுதலை இவைபோன்ற விடையத்தில் தற்போது அவர்களை விலத்தி அதன்போக்கில் விட்டு இன்னுமொரு நூற்றாண்டுகாலக் காத்திருப்பின்பின்பு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.

நாங்கள், நீங்கள் தேவையில்லை எனக்கூறுவோம் அப்போது நடப்பதை எதிர்கொள்வோம். 

முதலில் கதவைச் சாத்துவோம் அப்போது தெரியும் சண்டியனுக்கு மவுசு போய்விட்டது எனவும் இலங்கையின் போலீசுகாரனாகத் தன்னை நினைப்பவருக்கு எப்படியான உணர்வு வரும் எனவும். தவிர முதலில் அவர்கள் மேலுள்ள பயத்தை நாம் போக்கவெண்டும். சரிதான் வெளியே போ எனச்சொன்னால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைபண்ணிபாருங்கள்

திரும்பவும் சுட்டிக் காடுவதற்கு மன்னியுங்கள், வீட்டுக்குள் இருப்பவன் தான் உள்ளே வந்தவனை வெளியே போகச் சொல்ல முடியும்! நாமே தெருவில் நிற்கிறோம், எப்படி முடியும்? ஏதோ த.தே.கூ வும் ஏனையோரும் இந்தியாவை விரும்பி அவர்களைச் சார்வதாக உங்கள் புரிதல் இருக்கிறது. 2009 இற்கு முன்னர், இந்தியா hands off என்ற நிலையில் இருந்த போது யாருக்கு அதிக இழப்பு ஏற்பட்டது? யாருக்கு அது பலம் கொடுத்தது? உங்கள் கருத்துகள் என்னவோ உணர்ச்சி வசப்பட்டு எழுதியதாக  தெரிகிறது! ஆனால் அது உங்கள் உரிமை, அதைத் தடுக்கவில்லை. ஆனால் logical ஆக இல்லை என்பதை மட்டும் சுட்டிக் காட்டிக் கொண்டு விடைபெறுகிறேன்!

பதிலுக்கு நன்றி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

முதலில் கதவைச் சாத்துவோம் அப்போது தெரியும் சண்டியனுக்கு மவுசு போய்விட்டது எனவும் இலங்கையின் போலீசுகாரனாகத் தன்னை நினைப்பவருக்கு எப்படியான உணர்வு வரும் எனவும். தவிர முதலில் அவர்கள் மேலுள்ள பயத்தை நாம் போக்கவெண்டும். சரிதான் வெளியே போ எனச்சொன்னால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைபண்ணிபாருங்கள்

அப்படி சொல்வதுக்கு எங்கடை அரசியலவாதிகளுக்கும் அவர்களின் செம்புகளுக்கும் துணிவிருக்கா ?

இப்படி ஒரு விடயத்தை கண்டாலே எல்லாத் தமிழனின் உயிரும் போனது போல் பாடம் எடுக்க தொடங்கி விடுவினம் பாருங்க 😀😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.