Jump to content

சூடு பிடிக்கும் தேர்தல் களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

 

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் களம் என்றும் இல்­லா­த­வாறு சூடு­ பி­டித்துக் காணப்­ப­டு­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பாளர் தொடர்பில் ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலையில் கொந்­த­ளிப்பும், பொது­ஜ­ன பெ­ர­முன வேட்­பா­ள­ராக யார் நிறுத்­தப்­ப­டுவார் என்ற முடிவை அறிய எதி­ரணித் தரப்­பி­னரும் குழம்பிப் போயி­ருக்கும் நிலையில் குழம்­பிய குட்­டையில் மீன்­ பி­டிக்க நினைக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரும் சமரில் ஈடு­பட்டு வரும் நிலையில் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்டும் அறி­விக்­கப்­ப­டா­மலும் காணப்­ப­டு­கி­றது. 

ஜனா­தி­பதித் தேர்­த­லையே முதலில் நடத்­த­வி­ருக்­கிறேன் என அண்­மையில் இந்­தி­யாவில் வைத்து அறி­வித்­தி­ருந்­தாலும், மாகா­ண­சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடத்­தப்­பட வேண்­டு­மென தேர்தல் ஆணை­யாளர் கங்­கணம் கட்டிக் கொண்­டி­ருக்­கிறார். இல்லை பொதுத் தேர்­தலை முதலில் நடத்­துங்கள் என இன்­னொரு தரப்­பி­னரும் கோரிக்கை விடுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 

மாகா­ண­ சபைத் தேர்­தலை விரைவில் நடத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு தேர்தல் ஆணைக்­குழுத் தலைவர் தேசப்­பி­ரிய அர­சியல் கட்­சி­களின் செய­லா­ளர்­க­ளுக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வரை ஜனா­தி­பதித் தேர்­தலை, முன் நடத்­தாமல், பொதுத் தேர்­த­லையோ அல்­லது மாகா­ண சபைத் தேர்­த­லையோ முன் நடத்தி நிலை­மை­களை நாடி­பி­டித்துப் பார்த்து முடிவில் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வதே அவரின் அபிப்­பி­ரா­ய­மாக காணப்­ப­டு­வ­து போல் தென்­ப­டு­கி­றது. ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புதிய பார்­வையில் எப்­ப­டி­யா­வது ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்தி முடித்து நாட்டின் புதிய தலை­வர்­களின் கீழ் பொதுத் தேர்­த­லையும் மாகா­ண சபைத் தேர்­த­லையும் நடத்தி தன்னை சுதா­க­ரித்துக் கொள்ள வேண்­டு­மென்­பதில் கவ­ன­மாக இருக்­கி­றா­றென்­பது மாற்றுக் கட்­சி­க­ளு­டைய கருத்­தாகக் காணப்­ப­டு­கி­றது.

எவ்­வாறு இருந்­த­போ­திலும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் இன்னும் இடம்­பெ­ற­வில்­லை­யா­யினும் கட்­சிகள் கூட்­டணி அமைப்­ப­திலும் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வ­திலும் வேகம் காட்டி வரு­வது ஊட­கங்­களின் தலைப்புச் செய்­தி­க­ளாக ஆகி­ வ­ரு­கின்­றன.

இவ்­வி­வ­கா­ரத்தில் கொதி­நிலை பெற்­றுக்­கா­ணப்­படும் கட்­சி­யாக, ஐக்­கிய தேசியக் கட்சி காணப்­ப­டு­கி­றது. அதே­போ­லவே பொது­ஜன­ பெ­ர­முன, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றின் நிலைப்­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன. 

parilmant.jpg

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கி­ய தே­சியக் கட்­சியின் நிலைப்­பாடு அல்­லது வேட்­பாளர் முடிவு தொடர்பில் இரண்டு வித­மான சவால்கள் முன்­வந்து நிற்­கின்­றன. ஒன்று யாரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விப்­பது, இரண்­டா­வது பிரச்­சினை கூட்­டணி அமைக்­காமல் ஐ.தே.கட்­சி­யினால் தனித்து வெற்றி பெற­ மு­டி­யாது என்ற கள­ நி­லைமை தொடர்­பாக பொதுக்­ கூட்­டணி அமைப்­பதில் காணப்­படும் சிக்­கல்கள். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அடுத்த தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கள­மி­றங்­குவார். அதற்­கு­ரிய வாய்ப்பே அதி­க­மாகக் காணப்­ப­டு­கி­றது என்ற கருத்து ஐ.தே.கட்சி ஆத­ர­வா­ளர்கள் மத்­தி­யிலும் கட்சிப் பிர­மு­கர்கள் மத்­தி­யிலும் வலு­வா­கவே அண்­மைக் காலம் வரை காணப்­பட்­டது. காரணம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மற்­றொ­ரு­வ­ருக்கு விட்டுக் கொடுக்­க­ மாட்டார் என்ற பல­மான அபிப்­பி­ரா­யமே காணப்­பட்டு வந்­தது. 

குறித்­த­வொரு சந்­தர்ப்­பத்தில் அவரின் ஆத­ர­வா­ளர்கள் 2030ஆம் ஆண்­டு­ வரை ரணிலே கட்­சியின் தலை­வ­ராக இயங்­குவார். அதன் பின்னே அவர் அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெற வேண்­டு­மென்ற அபிப்­பி­ராயம் இருந்து வந்­தது மாத்­தி­ர­மல்ல, தானே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக களம் இறங்க இருப்­ப­தாக பூட­க­மாக தனது கருத்தை வெளிக்­காட்­டி­யி­ருந்தார். ஆனால் நிலை­மைகள் மாற, மாற சபா­நா­யகர் கரு­  ஜ­ய­சூ­ரி­யவும் முன்தள்­ளப்­பட்ட நிலையில் கரு, சஜித், ரணில் என்ற மும்­முனைப் போட்டி உரு­வா­கி­யுள்­ள­தாக பேசப்­பட்­டது. 

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் உள்ள ஆத­ர­வா­ளர்கள் தரப்­பினர் மும்­மு­னை­யாகப் பிரிந்து நிற்­கி­றார்கள் என்றும் பேசப்­பட்­டது. தான் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டால் வெற்றி நிச்­சயம் என சபா­நா­யகர் கரு ஜ­ய­சூ­ரிய கனவு காண்­ப­தா­கவும் இன்­னொரு தரப்­பினர் கிண்டல் செய்­த­தா­கவும் பத்­தி­ரிகைச் செய்­திகள் தெரி­வித்­தி­ருந்­தன. இவ்­வாறு இவர் தெரிவு செய்­யப்­ப­டு­வா­ரானால் அது அவ­ரது மரு­மகன் நவீன் திஸா­நா­யக்­கா­வுக்கு வாய்ப்­பாகப் போய்­விடும். பெரு­ம­ரத்தை சுற்­றிய பல்­லியைப் போல் நவீன் அர­சி­யலில் முன்னிலை பெறக்கூடிய சந்­தர்ப்­பங்கள் உரு­வாகி விடு­மென்­பதும் இன்­னொரு சாராரின் கருத்­தா­கவும் இருந்­தது. 

இதன் நடுவில் முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தா­ஸாவின் மகனும் இன்­றைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தித் த­லை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்­டு­மென்ற சிபார்­சு­களும் கோரிக்­கை­களும் அதி­க­மாகப் பெரு­கி­ வந்த நிலையில் அதைத் தவிர்க்க முடி­யா­த­படி ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய சூழ்­நி­லை­யொன்று கட்­சித் த­லை­வ­ரான ரணி­லுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­படும் நிலை­யில்தான் பிந்தி வந்த செய்­தி­க­ளின்­படி இவ்­வி­வ­கா­ரத்­துக்கு உடன்­பாடு காணப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்

ப­டு­கி­றது.

சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிப்­பதில் தலைவர் ரணி­லுக்கு அதி­கப்­ப­டி­யான விருப்­ப­மில்­லை­யென்­பது தெரி­யப்­பட்ட விடயம். அவர் மட்­டு­மன்றி கட்­சி யின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள், அமைச்சர் சிலர், மூத்த ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு விருப்­ப­மில்­லை­யென்ற போதிலும் அடி­மட்டத் தொண்­டர்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள், பொது­மக்கள் மத்­தியில் காணப்­படும் கணி­ச­மான செல்­வாக்கைக் கண்டு கட்­சி­யினர் பயப்­படும் நிலை­யொன்று குறிப்­பாக தலைவர் ரணி­லுக்கு அப்­பயம் உண்டு என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரியும் உண்மை. 

ஏலவே 2006 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யிலும் அதன் பின்­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்கு வங்கி சரிந்து, செல்­வாக்கு வீழ்ச்சி கண்டு கொண்­டி­ருந்த நிலையில் சஜித்தை கட்­சியின் தலைவர் ஆக்­க­ வேண்­டு­ மென்ற கோஷங்கள் வலுத்து வளர்ந்து வந்­த­மை­யையும் அதனால் ரணில் பாரிய சவால்­களைச் சந்­திக்க வேண்­டிய இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­ட­தையும் மறந்து விட முடி­யாது. இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது மாமனார் ஜே.ஆர்.ஜெய­வர்­தன காலத்து படிப்­பி­னை­யை யும் ஞாபகம் கொண்­ட­வ­ரா­கவே இருக்க முடியும். 1989ஆம் ஆண்டு ஜே.ஆரின் பத­விக்­காலம் முடி­வ­டைந்து ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பாளர் நிய­ம­னத்தில் கட்­சியின் அதிக செல்­வாக்கைப் பெற்­றி­ருந்த ஆர்.பிரே­ம­தாஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கட்­சியின் சார்பில் நிய­மிக்க விருப்பம் காட்டாத நிலை காணப்­பட்ட போது அவை­யெல்­லா­வற்­றையும் உடைத்துக் கொண்டு பிரே­ம தாஸ, போட்­டி­யிட்டு வெற்­றியும் பெற்றார். இச்­சம்­பவம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­யா­த­வொரு விட­ய­மல்ல. 

இன்­றைய சூழ்­நி­லையில் சஜித் எதிர்த் த­ரப்­பி­னரும் விரும்பும் ஒரு வேட்­பா­ள­ராக பார்க்­கப்­ப­டு­கிறார். குறிப்­பிட்டுக் கூறு­வ­தானால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரான அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோ­ருடன் இணைந்து மூன்றாம் அணி­யொன்றை உரு­வாக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக சில வதந்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­ததை வைத்துப் பார்க்­கும்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு வேட்­பா­ள­ராக அவர் பேசப்­ப­டு­கிறார். இதே­வேளை சஜித்தை ஜனா­தி­ப­தி­யாக்க வேண்­டிய அவ­சியம் சுதந்­திரக் கட்­சிக்குக் கிடை­யாது என கட்­சியின் மூத்த உறுப்­பி­ன­ரான தயா­சிறி ஜய­சே­கர கடு­மை­யா­க­ச் சா­டியும் உள்ளார்.

இதே­வேளை பூகோள அர­சியல் சார்ந்த பார்­வையில் அரு­கி­லுள்ள நாடான இந்­தியா முன்­மொ­ழி­யப்­பட்டு பேசப்­படும் வேட்­பா­ளர்­களில் சஜித்தை ஏற்­றுக்­கொள்ளும் நிலையே அதி­க­மாகக் காணப்­ப­டு­கி­றது என்ற கருத்தை ஓர் இந்­திய அர­சியல் ஆய்­வாளர் தெரி­வித்­தி­ருந்தார். பொது­ஜ­ன பெ­ர­மு­னவின் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய பிரே­ரிக்­கப்­பட்டால் அவர் இந்­திய உப­கண்ட அர­சி­ய­லுக்கு ஏற்­ற­வாறு நடந்து கொள்ள மாட்டார். மாறா­கவே நடந்து கொள்ள முனைவார் என்ற அபிப்­பி­ராயம் இந்­திய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் காணப்­படும் நிலையில் சஜித்தை வர­வேற்கும் சாத்­தி­யப்­பா­டு­களே அதி­க­மாகக் காணப்­ப­டு­கி­ற­தென அந்த ஆய்­வாளர் மேலும் தனது கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை இவர் தொடர்பில் சிறு­பான்­மைக் கட்­சிகள் என்ன கருத்­தியல் கொண்­ட­வை­க­ளாக காணப்­ப­டு­கின்­றன என்­ப­தையும் இவ்­வி­டத்தில் பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் நாங்கள் யாரை ஆத­ரிக்கப் போகி­றோ­மென்­பதை பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களால் வெளி­யி­டப்­படும் விஞ்­ஞா­ப­னத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே தீர்­மா­னிப்போம். நாட்டின் ஒட்டுமொத்த மக்­க­ளுக்கும் நன்மை பயக்­கின்ற வகையில் எமது ஆத­ரவு குறித்து முடிவு எடுப்­போ­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார்.

முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான கட்­சிகள் எத்­த­கைய முடிவை எடுப்­பார்கள் என்று இப்­போ­தைக்கு ஆரூடம் கூற முடி­யா­ம­லே­யுள்­ளது. அண்­மையில் கிண்­ணி­யாவில் மக்கள் மத்­தியில் உரை­யாற்­றிய அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் கடந்த காலங்­க­ளைப் போல் முஸ்லிம் தரப்­பி­ன­ரா­கிய நாம் அவ­சர முடி­வு­களை எடுக்க மாட்­டோ­மென்று கூறி­யுள்ளார்.

ஐக்­கிய தேசி­யக்­ கட்சி எதிர்­கொள்ளும் இரண்­டா­வது சவால் பொதுக்­ கூட்­ட­ணி­யொன்று அமைக்கும் முயற்­சி­யாகும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் செல்­வாக்கில் பார­தூ­ர­மான வீழ்ச்சி ஏற்­பட்டு வரு­வ­தாக அக்­கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்கள் மாத்­தி­ர­மல்ல, மூத்த அமைச்­சர்­களும் கரு­து­கி­றார்கள். இவ்­வா­றான சூழ்­நி­லையில் வர­வி­ருக்கும் தேர்­தல்­க­ளான ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருக்­கலாம், பொதுத் தேர்­த­லாக இருக்­கலாம் அல்­லது மாகா­ண­சபைத் தேர்­த­லாக இருக்­கலாம். கட்­சியை தூக்கி நிறுத்த வேண்­டு­மாயின் பொதுக்­கூட்­ட­ணி­யொன்று அமைக்­கப்­பட வேண்­டிய அவ­சியம் அனை­வ­ராலும் உண­ரப்­பட்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்ல ஏற்றுக்கொள்­ளப்­பட்ட கருத்­தா­கவும் காணப்­ப­டு­கி­றது. 

காரணம் எதிர்த்­த­ரப்­பி­ன­ரான பொது­ஜ­ன­ பெ­ர­மு­னவின் அப­ரிமித­மான கூட்டு வளர்ச்­சி­ எல்லாக் கட்­சி­களுக்கும் சவா­லா­கவே மாறி வரு­கி­றது. நாடு மேற்­படி கட்­சி­யிடம் பறி­போ­கு­மாக இருந்தால் எதிர்­கொள்­ளக்­கூ­டிய பாரிய நெருக்­க­டிகள் பற்றி  தீர்க்­க­மாக சிந்­தித்­ததன் முடி­வா­கவே பொதுக்­கூட்­டணி அமைக்கும் உடன்­பாட்­டுக்கு வரப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக முன்­ன­ணியை உரு­வாக்­கு­வ­தற்­கான யோச­னைக்கு கட்­சி­யி­லுள்ள பெரும்­பான்­மையானோர் வர­வேற்பு தெரி­வித்­தி­ருப்­ப­துடன் அக்­கூட்­டணின் தலைவர், செய­லாளர் பத­விகள் ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியின் வசமே கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென்ற ஆலோ­ச­னை­யையும் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்த பின்பே கூட்­டணி தொடர்­பான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாஸ நிய­மிக்­கப்­ப­ட­ வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இதனால் பல்­வேறு இழு­பறி நிலை உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இப்­பொதுக் கூட்­ட­ணிக்குள் கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, சம்­பிக்க ரண­வக்க, மனோ­ க­ணேசன், ரவூப் ஹக்கீம், ஐக்­கிய  தேசியப் பிரதிநிதி­க­ளான  கபீர் ஹாசிம், ரவி கரு­ணா­நா­யக்க, மலிக் சம­ர­விக்­ரம பலரும் இடம்பெறு­கின்­றனர். இங்கு கூறப்­பட்ட கருத்­து­களால் பல முரண்­பா­டுகள் தோன்­றிய நிலையில் பொதுக்­கூட்­டணி தொடர்பில் யாப்புத் திருத்தம் மேற்­கொள்ள வேண்­டு­மென்ற முடி­வுக்கும் வந்­தி­ருந்­தனர்.

ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்­பை திருத்­து­மட்டும் பொதுக் கூட்­ட­ணியை அமைக்கும் தீர்­மா­னங்கள் ஒத்­தி­வைக்­கப்­பட வேண்டும் என்ற நிலை கொண்டுவரப்­பட்­டி­ருந்­தது. தனிக்­ கட்­சி­யாக ஜனா­தி­ப­தித்­ தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­வ­தி­லுள்ள சவால்கள் உண­ரப்­பட்­டதன் கார­ண­மாக,மிக விரைவில் பொதுக் கூட்­ட­ணியை அமைக்க வேண்­டு­மென்ற முடி­வுக்கு வரப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் தெரி­வித்­துள்ளார். இவரின் கருத்­துப்­படி ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­லான கூட்­டணி, ஜனா­தி­பதித் தேர்­தலை வெற்றி கொள்­வதே எமது ஒரே இலக்­காகும் என்று பிர­தமர் தெரி­வித்­துள்ளார்.

இருந்­த­போதும் பொதுக்­கூட்­ட­ணியின் தலை­மைப் ப­தவி, செய­லாளர் மற்றும் முக்­கிய பத­விகள் தொடர்பில் உடன்­பாடு காண மு­டி­யாத நிலையில் கூட்­டணி அமைப்­பதில் கடு­மை­யான சவால்­களும் இழு­ப­றி­களும் காணப்­ப­டு­கின்­றன என்­பது தெளி­வாகத் தெரி­கிற விடயம். அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­ம­னத்தில் தீர்க்­க­மான முடி­வுக்கு இன்னும் வர­ மு­டி­ய­வில்­லை­யென்ற நிலையும் காணப்­ப­டு­கி­றது. பிந்திக் கிடைத்த செய்­தி­களின் பிர­காரம் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் நில­விய மும்­முனைப் போட்டி முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக தெரி­யப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வையே கட்­சியின் வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்­டிய சூழ­லுக்கு கட்­சியின் தலைமை நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித்தை அறி­வித்தால் தனது தலைமைப் பத­விக்கு ஆபத்து வந்­து­விடும் என மிகவும் ராஜ­தந்­திர முறையில் செயற்­பட்டு வந்த  ரணில் கட்­சிக்குள் ஓங்­கி­வரும்  கருத்துக் கணிப்­புக்கு முக்­கியம் கொடுக்க வேண்­டிய சூழ்­நி­லையில் இம்­மு­டி­வுக்கு வந்­துள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. எது­வாக இருந்­தாலும் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்டு வேட்பு மனுவில் கையெ­ழுத்­திட்டுக் கொள்­ளும் வரை எதை­யுமே உறு­திப்­ப­டுத்­திக்­ கொள்­வது சாத்­தி­ய­மில்­லை­யென்றே கூற வேண்டும். இப்­பொ­ழுது ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து பொது­ஜன பெர­முன, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­ய­வற்றின் நிலைப்­பா­டுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. பொது­ஜன பெர­மு­னவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பரந்­து­பட்ட பொதுக்­கூட்­ட­ணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக நீண்ட கால­மாக கூறப்­பட்டு வரு­கி­ற­போதும் உறு­தி­யான, தெளி­வான முடிவு எட்­டப்­ப­ட­வில்லை. சுதந்­தி­ரக் கட்சி தனித்துப் போட்­டி­யி­டு­வ­த­னாலோ மறு­புறம் பொது­ஜன பெர­முன சிறு­பான்­மை­க் கட்­சி­களின் ஆத­ர­வைப்­ பெ­றாமல் போட்­டி­யி­டு­வ­த­னாலோ எந்­த­வொரு தேர்­த­லிலும் வெற்­றி­ பெற முடி­யாது என்­பது தெளி­வான யதார்த்தம். தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மாயின் பல­மான பொதுக் கூட்­ட­ணி­யொன்று அமைக்­கப்­பட வேண்­டு­மென்­பதை இரு­ த­ரப்­பி­னரும் உணர்ந்­தி­ருந்­துங்­கூட, தனித்­த­னி­யான கெள­ர­வங்­களால் இரு­ கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் உடன்­பாடு காண்­பதில் கால­ தா­ம­தங்கள் ஏற்­பட்டு வரு­கின்­றன. தோல்வி மீதான அச்­சத்தின் கார­ண­மா­கவே பெர­முன சுதந்­தி­ரக்  கட்­சி­யுடன் கூட்­டணி அமைக்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது என்ற கர்வம் கொண்­ட­வர்­க­ளாக, சுதந்­திரக் கட்­சி­யினர் காணப்­ப­டு­கின்ற அதே வேளை ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான சுதந்­தி­ரக் கட்­சி­யுடன் கூட்டு வைத்­துக்­கொள்ள வேண்­டு­ மாயின் சில விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கும் ஆளாக வேண்­டி­வரும் என்ற பயம் உடை­ய­வர்­க­ளாக பொது­ஜன பெர­முன எண்ணும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இருந்­த­போ­திலும் சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு இன்­றியும் எதி­ரே­யுள்ள ஐக்­கிய  தேசிய முன்­ன­ணியின் பலத்தின் பாலும் ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­களை வெற்­றி­ கொள்ள வேண்­டு­மாயின் பரந்­து­பட்ட கூட்­ட­ணி­யொன்றை அமைக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்ந்து செயற்­பட வேண்­டி­யது மேற்­படி இரு கட்­சி­க­ளுக்கும் அவ­சி­ய­மா­கி­றது.

இதே­வேளை பொது­ஜன பெர­மு­னவின் வேக­மான வளர்ச்சி கண்டு சுதந்­திரக் கட்­சி யினர் பயங்­கொள்­வ­தா­கவும் சில விமர்­ச­னங் கள் கொண்டு வரப்­ப­டு­கி­ன்றன. அண்­மையில் ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் பொது­ஜன பெர­மு­ன­வுடன் ஒன்று இணைந்து போட்­டி­யிடும்  நோக்கில் 10 அர­சியல் கட்­சிகள் பொது­ஜன பெர­மு­ன­வுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இணைந்து கொண்­ட­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

கடந்த 28.07.2019இல் இடம்­பெற்ற இப்­பு­ரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் அர­சியல் கட்­சி­களும் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்­காத அர­சியல் கட்­சி­களும் இணைந்­துள்­ளன. இதன் பிர­காரம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சில தமிழ்க் கட்­சி­களும் தெற்கு சிங்­களக் கட்­சி­களும் கூட்­டணி அமைத்­துள்­ளன. இதில் இலங்கை தொழி­லா ளர் ஐக்­கிய முன்­னணி, தமிழ் ஐக்­கிய சுதந்­திர முன்­னணி, ஈழவர் ஜன­நா­யக முன்­னணி, முஸ்லிம் உலமா கட்­சி­ போன்ற வட­கி­ழக்கு அமைப்­புகள் இணைந்­துள்­ளன. எவ்­வாறு இருந்­த­போ­திலும் பொதுஜன பெரமுனவின் தலைமை ஏற்கும் நிலைக்கு சுதந்திரக் கட்சிக்கோ அல்லது சுதந்திரக் கட்சியை முன்னுரிமைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுனவுக்கோ, கெளரவப் பிரச்சினை காணப்படும் நிலையே தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தனிப் பாதையில் பயணிக்க விரும்புவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கப் போவதாகவும் செய்திகள் கசிகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையென மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருக்கும் நிலையில் எமது பட்டியலில் ஐவர் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார். வெற்றியின் நலன் குறித்தும் கருத்திற் கொண்டே வேட்பாளரைத் தெரிவு செய்வேன் என அவர் அறிவித்துள்ளார்.  மைத்திரிபால சிறிசேன, தினேஷ் குணவர்தன, சமல் ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ, குமார வெல்கம ஆகியோரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பொருத்தமான ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் மஹிந்த ராஜபக் ஷ அறிவித்திருந்தார். இதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின் படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை ஆதரிக்குமாறு தனது கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால கோரவுள்ளதாக செய்திகள் கசியும் நிலையில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களும் செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதையே காணக்கூடியதாகவுள்ளது. இதேவேளை எந்த ஒரு தரப்பினரும் உத்தியோகபூர்வமான ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே காணப்படுகிறது.

எவ்வாறு இருப்பினும் கடந்த காலங்களைப் போல அல்லாது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது கட்சிகளுக்கிடையிலான பலப்பரீட்சையாக மாத்திரமன்றி இனங்களின் ஆதரவை வசீகரிக்கும் ஒரு தேர்தலாக அமையப்போகிறது என்பதும் சிறுபான்மை இனத்தவரின் ஆதரவுடன் தெரிவு செய்யப்படுவாரா அன்றி சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இன்றி தனிப் பேரினவாதத்தின் ஆதரவுடன் தெரிவு செய்யப்படுவாரா என்பதற்கான ஒரு தேர்தலாக அமையப் போகிறதென்பது வெளிப்படையாகத் தெரியும் விடயம்.

- திருமலை நவம்

 

https://www.virakesari.lk/article/62365

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.