Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கடலோரம் தென்னம் தோப்பு_பா .உதயன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடலோரம் தென்னம் தோப்பு 
கரை மீது இரண்டு கிளிகள் 
கடல் அலையில் சுரம் எடுத்து 
கனவுகளை பாடுது 

காற்றினிலே தொட்டில் கட்டி 
கிளி இரண்டும் ஆடுது 
தென்றலிலே முகம் நனைத்து 
தேன்நிலவை தேடுது 

விழி ஓரம் கவி எழுதி 
வரம் ஒன்று கேக்குது 
வாழ்வு தனை வரையுது 
வசந்தத்தை பாடுது 

அலை வந்து சுரம் பாட 
அவள் மடி மீது தலை வைத்து 
மனதோடு பல ராகம் 
கிளி இரண்டும் சுக ராகம் 

அந்தி வானம் சிந்தி விட்ட 
அழகான மழை துளியில் 
கிளி இரண்டும் நனையுது 
கீதங்கள் கேக்குது 

ஏழு சுரத்தில் கவிதை எழுதி 
இதயம் இரண்டும் பேசுது 
எல்லை இல்லா வானத்தருகே 
ஏதோ கீதம் பாடுது .

கிளி இரண்டும் இசை பாட 
கிண்கிணியின் ராகத்திலே 
கடல் அலையும் ஆடுது 
காதல் மொழி பேசுது 

நினைவு அழியா கனவுடனே 
நீண்ட தூரம் பறப்பதற்கு 
கிளி இரண்டும் சமரசங்கள் 
கடற்கரையில் புது வசந்தம் .

 

Link to comment
Share on other sites

அழகான, எளிமையான கவிதை. தொடருங்கள் உதயகுமார்.  😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மல்லிகை வாசம் said:

அழகான, எளிமையான கவிதை. தொடருங்கள் உதயகுமார்.  😊

உங்கள் அழகான கருத்துக்கு நன்றி மல்லிகை வாசம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புலிகள் மன்னிப்புக் கேட்டு விட்டனர், அது தவறென ஒத்துக் கொண்டு விட்டனர் . மேலும், புலிகள் வெளியேற்ற முடிவெடுத்ததற்கும் சாதாரண தமிழ் மக்களின் அபிப்பிராயத்திற்கும் கட்டுரையாளர் சொல்லியிருப்பது போல வேறு பாடு இருந்தது. மதத் தலைவர்கள் புலிகளின் முடிவை மாற்ற முயற்சித்தனர் . சாதாரணமக்களும் உதவ முயன்றனர். யாழ் தபாலகத்தில் பணியாற்றிய முஸ்லிம் இளைஞர்களின் நலன்களை அந்த நேரத்தில் காக்க தபாலக ஊழியர் சங்கத்தில் இருந்த என் தந்தை உடபட்ட பல தபாலக அதிகாரிகள் புலிகளுடன் வாதாடியது எனக்குத் தெரியும்.  ஆனால், கட்டுரையாளர் சொல்வது போல உடனடியான சூறையாடல் நடக்கவில்லை. ஒரு கொஞ்சப் பணம் எடுத்துக் கொண்டு, மிகுதி எல்லாச் சொத்துக்களையும் விட்டு செல்லுமாறு தான் உத்தரவு. யாழ் நவீன சந்தையின் முஸ்லிம் வியாபாரிகள் பலர் புலிகளிடம் கடைச் சாவிகளை விட்டுச் சென்றனர். சிலர் கொடுக்காமலே சென்றனர். சாவி இருந்த கடைகள் சில மாதங்கள் கழித்து திறக்கப் பட்டன, சாவி இல்லாதவை உடைக்கப் பட்டன. அந்தக் கடைகளில் இருந்த பொருட்கள் தான் புலிகளால் திறக்கப் பட்ட "எழிலகம்" விற்பனை நிலையத்தில் பனையுற்பத்திப் பொருட்களோடு சேர்த்து விற்பனைக்கு வைக்கப் பட்டன.  எனவே, கட்டுரை சொல்லும் தகவல்கள் சில மிகைப் படுத்தப் பட்டவை. ஆனால், புலிகளின் தற்போதுள்ள வால்கள் சொல்வது போல , "மிக மனிதாபிமான முறையில்" அனுப்பி வைக்கப் பட்டனர் என்பது கட்டுரையாளரின் மிகைப்படுத்தலை விடப் பெரிய பூச்சுத்தல்!
  • இன்றுதான்... இவருடைய குரலை... முதன் முதலாக  கேட்கின்றேன். வித்தியாசமான.. காதுக்கு இனிய  குரலாக உள்ளது. 👍
  • நீஙகள் என்ன கருதுகிறீர்கள் என்பதல்ல இங்கே முக்கியமான விடயம். எது சரி, எது பிழை என்பதனை புரிந்த நிலையிலே சரியான ஆலோசணை தர முடியும். இங்கே, சிற்றிசன் அட்வைஸ் பீரோ எனும் அமைப்புக்கு முதலில் செல்ல வேண்டும். அவர்கள் சரியான ஆலோசணை தரக்கூடியவர்களை காட்டுவார்கள். ஆலோசணை தரக்கூடியவர், அதற்கான பயிற்சி மட்டுமல்ல, காப்புறுதியும், தேவையான அனுமதிப்பத்திரமும் வைத்திருப்பர். ஏனெனில், இந்த கலந்துரையாடல், குழப்பம் தந்தது. தனிப்பட்ட ரீதியில் யாரையும் விமரசிக்கவில்லை.
  • வழமையாக தமது தரப்பில் செய்யும் அனைத்து  தவறுகளையும் அடுத்தவன் மீது போட்டு தப்பிப்பதே பச்சை தமிழ் தேசியர்களின் வழமை. ஆனால் இங்கு பிழைத்துவிட்டது.😂 
  • எனது பார்வையில். இந்த வீடியோவை நான் விளங்கி கொண்ட விதத்துக்கும், நாதமும் ஓணாண்டியாரும் விளங்கி கொண்ட விதத்துக்கும் வேறுபாடு உண்டென நினைக்கிறேன். ஆனால் இதை நெறியாளரும் சாந்தி அக்காவும் இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்கபடுத்தி இருக்கலாம். திருமணத்துக்கு பின்னான காதல்(?) இல்லை தடுமாற்றம் என்பதே சரி, தவறானதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமண பந்தத்தில் இருந்தபடி வேறு உறவை வளர்ப்பது நம்பிக்கை சம்பந்தபட்ட விடயம். ஒரு குடும்பத்தில் எந்த உறவும் பரஸ்பரம் நம்பிக்கை கேடு வராமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால் முறைதவறிய காதலை செய்யுங்கோ ஆனால் பாதுகாப்பாக செய்யுங்கோ என இங்கே சாந்தி அக்காவோ நெறியாளரோ சொல்லவில்லை. என் பார்வையில், இப்படியான தடுமாற்றம் எமது சமுகத்தில் நிகழாமல் தடுக்க இது தவறு (நாதமுனி சொன்னது போல்) என்பதை மட்டும் சொல்லுவதை விட, ஓணாண்டி சொல்வது போல் கண்ணியமாக பிரிந்து போங்கள் என மட்டும் சொல்வதைவிட, இவற்றோடு சேர்த்து இந்த “தற்காலிக தடுமாற்றத்தில்” இருந்து மீள்வது எப்படி, என்ன வகையில் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம் என்பதை சொல்வதும் உதவிகளுக்கு signpost பண்ணுவதும் வினைதிறனா இருக்கும். ஒரு உதாரணம் - எயிட்சை கட்டுப்படுத்த ஒருவரோடு மட்டும் உறவு வையுங்கள் என்பதே மிக சரியான ஆலோசனை. ஆனாலும் அடுத்த வழியால் (alternative) அட்லீஸ்ட் பாதுகாப்பு சாதனங்களையாவது பாவியுங்கள் என கூறி அதை இலவசமாகவும் கொடுப்பது போலவே இதுவும்.   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.