• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக     படத்தின் காப்புரிமை Getty Images வங்கி தேர்வு பயிற்சி மையம், நீட் தேர்வு பயிற்சி மையம் என அனைத்து படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் பயிற்சி மையங்கள் வந்து விட்டன. இந்த வரிசையில் மதுரையில் பரோட்டா போடுவதற்கு ஒரு பயிற்சி மையம் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையின் தெருவோர உணவுகள் தனி கவனம் பெற்றவை. அவற்றிலும் விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் பெயர் பெற்றவை. பரோட்டா உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது பரோட்டா. இதனால் கடைகளில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பரோட்டா மாஸ்டர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 800 முதல் 1200 வரை ஊதியம் பெறுகின்றனர். சிலர் பகலில் ஒரு கடையிலும் இரவில் ஒரு கடையிலும் வேலை செய்து தினசரி 3 ஆயிரம் வரை சம்பாதித்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளுக்கு சென்று பரோட்டா மாஸ்டராக வேலை செய்கின்றனர். இப்படி பரோட்டா மாஸ்டர்களுக்கு உலகெங்கும் தேவை உள்ளதால் மதுரையை சேர்ந்த முகமது காசிம் என்பவர் மதுரை நகரில் பரோட்டா தயாரிப்பதற்கு என்று பிரத்தியேமாக செல்பி கோச்சிங் சென்டர் என்ற பெயரில் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். 30 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில் தினமும் காலையும் ,மாலையும் பரோட்டா தயாரிக்க செய்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மைதா மாவை தட்டி, வீசுவதுதான் பிரதான பயிற்சி. சாதாரண பரோட்டா, சிலோன் பரோட்டா, வீச்சு பரோட்டா என அனைத்து வகையாக பரோட்டாகள் தயாரிக்கவும் சால்னா தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொறியியல் படித்தவர்கள் உள்பட வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்கள் பலரும் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கின்றனர். பரோட்டா மாஸ்டர்களுக்கு ஒரு நாளுக்கு 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதால் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே வேளையில் பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். புரோட்டா எதிர்ப்பு இயக்கமும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. பட்டதாரி சகோதர்கள் மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மகன்களான பெரிய மருது மற்றும் லெனின் ஆகிய இரண்டு பட்டதாரி சகோதரர்கள் பரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் பெரிய மருது ஹோட்டல் மேலாண்மை படிப்பும், லெனின் பொறியியல் படிப்பும் முடித்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் பேஸ்புக்கில் பரோட்டா மாஸ்டர் கோச்சிங் சென்டர் குறித்து தெரிந்து பயிற்சி மையத்தில் சேர்ந்து பரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று வருகின்றனர். இது குறித்து பட்டதாரி இளைஞர் லெனின் பிபிசி தமிழிடம் பேசுகையில் "நான் பொறியியல் படிப்பு முடித்து விட்டு ஓராண்டாக வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பை விட பரோட்டா மாஸ்டருக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது அதே போல் உள்ளுர் மற்றும் வெளி நாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றேன்" என்றார் லெனின். பரோட்டா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் பட்டதாரி இளைஞர் ராஜசேகர் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'நான் பி.எஸ்.சி விலங்கியல் படித்துள்ளேன். லேப் டெக்னீசியனாக பணியாற்றினேன். பின்னர் அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிந்துள்ளேன். சரியான வேலை கிடைக்காததால் தற்போது ஒரு உணவகத்தில் காசளர் வேலை செய்து வருகிறேன்'.'மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் ஆனால் நான் வேலை செய்யும் ஹோட்டல் பரோட்டா மாஸ்டருக்கு என்னை விட அதிக சம்பளம். நான் வாங்கும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியவில்லை என்பதால் நான் பணிபுரியும் உணவகத்தில் பரோட்டா போட கற்று தரும்படி கேட்டேன் ஆனால் அவர்கள் கற்றுத் தர மறுத்ததால் நான் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து படிக்கிறேன்" என்றார். பரோட்டா பயிற்சி மையம் குறித்து ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம், பிபிசி தமிழிடம் பேசுகையில், ''முதலில் நான் இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்கும் போது பொது மக்கள் நகைச்சுவையாக பார்தார்கள். சிலர் கேலி, கிண்டல் செய்தனர். அது எனக்கு வருத்தத்தை தந்தது. ஆனால், என் மீது நான் வைத்த நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி அளிக்க தொடங்கினேன்'' என்றார் "பரோட்டா மாஸ்டர்களுக்கு உள்ளூரிலும், வெளியூரிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதன் தேவையறிந்து பயிற்சி அளித்து வருகிறேன். 60 கிலோ மீட்டர் பயணம் செய்துகூட இங்கே பயிற்சி பெறுகிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியும் இங்கே பயிற்சி எடுக்கிறார்கள். ஓராண்டில் 200 பேருக்கும் மேல் பயிற்சி அளித்துள்ளோம்" என்றார். https://www.bbc.com/tamil/india-50744283
    • பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக     ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் நாட்டுப்படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், தூண்டில் மூலம் மீன்பிடித்தல், கரைவலை மூலம் மீன்பிடித்தல் உள்ளிட்ட முறைகளில் மீன் பிடிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான கரைவலையை பயன்படுத்தி நூறு ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடித்து வருகின்றனர். பழமை மாறாமல் மீன்பிடித்து வரும் தனுஷ்கோடி மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கி வருவது மீன் பிடி தொழில். அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் வசித்து வரும் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகு,விசைப் படகுகள் இன்றி இன்றும் பழமை மாறாமல் கரை வலை மீன் பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர். கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ஆழிபேரலை காரணமாக தனுஷ்கோடி நகரம் அழிந்து போனது. ஆனால், இன்றும் தனுஷ்கோடியை சுற்றியுள்ள மீனவக் கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்து வருகின்றன. இந்த மீனவக் குடும்பங்களின் பிரதான தொழில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய முறையான கரைவலை மீன்பிடிப்பில் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். கரைவலை மீன்பிடிப்பு என்றால் என்ன? தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் கரை வலை மீன் பிடிப்பும் ஒன்று. இந்தக் கரைவலை மீன்பிடி முறை இலங்கையிலும், தமிழகத்தின் சில கடலோர பகுதிகளிலும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முதலில் கடற்கரையிலிருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு சிறிய படகில் (எஞ்சின் பொருத்தப்படாத) சென்று ஆங்கில 'யு' வடிவில் கரை வலையை அமைப்பார்கள்.பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று ஆண்கள், பெண்கள் என இருவரும் இணைந்து இழுப்பார்கள். பின்னர் பிடிக்கின்ற மீன்களை மீனவர்கள் மூன்று பங்காக பிரித்து கொள்வார்கள். அதாவது, வலைக்கும், படகுக்கும் ஒரு பங்கு. மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் கரை வலையை இழுக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சம பங்குகளாக பிரித்து கொள்வார்கள்.வருடத்தில் 6 மாதங்கள் தனுஷ்கோடிக்கு வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிப்பார்கள்,அதே போல் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தெற்கு கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலை முறையை பயன்படுத்தி மீன் பிடிப்பார்கள். இவ்வாறு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கரைவலை மீன்பிடி முறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவ பெண் செல்வி பேசும் போது: 'விவசாயிகளுக்கு எப்படி வெள்ளாமை (சாகுபடி) விளைச்சல் போலவோ, எங்களுக்கு கடலில் தான் விவசாயம்.ஒரு சில நாட்கள் 100 முதல் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் ஒரு நாள் வருமானம் இல்லாமல் வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் ஆனாலும் சூறைக்காற்று, கன மழை என எது வந்தாலும் நாங்கள் கடற்கரையை விட்டு செல்லாமல் இங்கு தான் இருப்போம்.' அரசு அதிகாரிகள் எங்களை இங்கு இருந்து போக சொன்னாலும் இந்த கடலை விட்டு எங்கும் செல்ல மாட்டோம் என்றார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய 63 வயதான இலங்கைமுத்து, 'எனக்கு நினைவு தெரிந்து, சுமார் 5 வயதில் இருந்து இங்கு தான் வாழ்ந்து வருகிறேன். இந்த கடலில் பாரம்பரிய கரைவலை முறையில் மீன் பிடித்து மார்கெட்டில் விற்று தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். 'எங்களுக்கு கடல் தொழிலை விட்டால் வேறு எந்த தொழிலும் தெரியாது.என் பிள்ளைகளும் கடலில் மீன் பிடி தொழில் செய்து தான் வாழ்ந்து வருகின்றனர்.புயலே வந்தாலும் நாங்கள் கடற்கரையை விட்டு செல்லமாட்டோம்' என உறுதியுடன் கூறினார். கடல் வாழ் உயிரினங்களில் எதை மீனவர்கள் கடலில் பிடிக்க கூடாது என்பது குறித்து மீனவ பெண் முத்துக்காளி கூறுகையில் 'எங்கள் பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக மீன் பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகிறோம்.வருடம் முழுவதும் இந்த கடலை நம்பி தான் உள்ளோம்'. 'நாங்கள் பிடிக்கும் மீன்கள் 5 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகும்.நாங்கள் கடலில் கஷ்டப்பட்டால் தான் எங்களுக்கு சோறு. எங்களது வலைகளில் அரிய வகையான கடல் ஆமை,கடல்அட்டை,கடல் பல்லி, கடல் குதிரை ஆகியவைகள் வந்தால் கடலில் விட்டு விடுவோம் எங்களுக்கு தேவைப்படும் மீன்களை மட்டும்மே நாங்கள் கடலில் இருந்து எடுத்து கொள்வோம்' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவர் பாலு: " எங்கள் குடும்பத்தில் இரண்டு தலை முறையாக மீன் பிடி தொழில் செய்கிறோம். நான் 60 ஆண்டுகளாக கரைவலை முறையில் மீன் பிடித்து வருகிறேன். என் தாத்தா காலத்தில் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் நாறுகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.என் அப்பா காலத்தில் பருத்தி,பட்டு நூல் ஆகியவைகளை கொண்டு தயாரித்த வலைகளால் மீன் பிடித்தனர். "தற்போது என் காலத்தில் நைலான் (NYLON) வலைகளை பயன்படுத்தி கரைவலை முறையில் மீன் பிடித்து வருகிறேன்.என் தாத்தா அப்பா காலத்தில் வலைகளில் அதிகளவு மீன்கள் கிடைக்கும் ஆனால் அப்போது மீன்களுக்கு விலையில்லை இப்போது மீன்களுக்கு விலை உண்டு ஆனால் கடலில் மீன்கள் இல்லை" என்றார். https://www.bbc.com/tamil/india-50780491
    • படத்தின் காப்புரிமை KATE MONTANA, INATURALIST CREATIVE COMMONS Image caption ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில் ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தென்பட்டன. இந்த உயிரினங்கள் 'யுரிசெஸ் காப்போ' என்றழைக்கப்படும் பருமனான புழுக்கள் ஆகும். இந்த வகை புழுக்கள் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். சமீபத்தில் வந்த புயலின் காரணமாக சான்ஃப்ரான்சிஸ்கோவின் வடக்கு பகுதியிலுள்ள ட்ரேக்ஸ் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த உயிரினங்கள் காணப்பட்டன. இந்த உயிரினங்களின் உடலமைப்பு மண்ணுக்கடியில் புதைந்து வாழ்வதற்கு ஏதுவாக உள்ளது என்கிறார் உயிரியலாளர் இவான் பார். படத்தின் காப்புரிமை Getty Images இவை 300 ஆண்டுகள் பழமையான உயிரினம் என்பதற்கான தொல்பொருள் சான்று இருக்கிறது. மேலும் இவற்றில் சிலவை 25 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை எனக் கூறுகிறார் இவான் பார். கடற்கரையில் ஆங்கில எழுத்து `யு` வடிவிலான பல அடிகள் நீளமுள்ள வளைகளை இந்த உயிரினங்கள் தோண்டுகின்றன. இந்த உயிரினங்கள் இவ்வாறு பூமிக்கடியில் சென்று வாழ்வதாலும் மற்ற உயிரினங்களுக்கு வளைகள் தோண்டுவது மூலம் நிலத்தடியில் பாதையை ஏற்படுத்துவதாலும் ஆங்கிலத்தில் “விடுதிகாப்பான்” என்ற பொருளில் இந்த புழுக்கள் அழைக்கப்படுகின்றன. மீன்கள், சுறாக்கள் மற்றும் நீர்நாய்கள் போன்றவை இந்த புழுக்களை உண்ணுகின்றன. கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது thorzuroff முடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது thorzuroff <div class="embed-image-wrap" style="max-width: 599px"> <a href="https://www.instagram.com/p/B5gmaHUn0Cl/?utm_source=ig_web_copy_link"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="இன்ஸ்டாகிராம் இவரது பதிவு thorzuroff: What’s the worst thing you’ve eaten? #Seafood #SpoonWorm #gaebul #Seoul #Korea #Noryangjin #market #yum #gross #weird #food #Yeouido #fishmarket #63building #skyfarm #delicacy" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.instagram.com/p/B5gmaHUn0Cl/?utm_source=ig_web_copy_link~/tamil/india-50792735" width="599" height="941"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை thorzuroff</span> <span class="story-image-copyright" aria-hidden="true">thorzuroff</span> </span> </figure> </a> </div> இது மனித உணவாகவும் கருதப்படுகிறது. கிழக்கு ஆசியாவில் காணப்படும் யுரேசிஸ் யுனிசின்க்டஸ் வகை தென் கொரியா போன்ற நாடுகளின் சுவையான உணவாக கருதப்படுகிறது.https://www.bbc.com/tamil/india-50792735
    • இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா? - விசாரணைகளுக்காக இருவர் கைது   படத்தின் காப்புரிமை Getty Images மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேனின் ஓட்டுநர்கள் என்ற வகையில் இந்த இரண்டு பேரும் இருந்தனர். ஒரு வாகனத்தில் நபர்களை கடத்தி, பின்னர் வேறொரு வாகனத்தில் அவர்களை மாற்றி கொண்டு செல்வதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒருவர் கூறியிருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளை வேன் தொடர்பில் அறியவில்லை என கூறியுள்ளதாகவும், ஆனால் வெள்ளை வேன் விவகாரத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகித்ததாகவும் அவர் தெரிவித்தார். படத்தின் காப்புரிமை AZZAM AMEEN/ twitter Image caption ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரின் கீழ் கடமையாற்றிய அதிகாரிகள் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரிகேடியர் ஒருவரும், மேஜர் ஒருவரும் இருந்ததாக கூறிய அவர், குறித்த இராணுவ அதிகாரிகளின் கீழேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். மொனராகலை பகுதியிலுள்ள இடமொன்றிற்கு கடத்தப்படுபவர்கள் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில். துன்புறுத்தல்களின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, உடலை வெட்டி, முதலைகளுக்கு உணவாக வீசியதாகவும் அன்றைய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட சாரதி என தன்னை கூறி கொண்டவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் இவ்வாறே காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தான் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்த போதிலும், போலீஸார் விசாரணைகளை நடத்த முயற்சித்தபோது அதனை விசாரணை செய்ய வேண்டாம் என உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த ஆட்கடத்தல் விவகாரத்திற்கு போலீஸார் மற்றும் இராணுவம் இரண்டு தரப்பினரும் தொடர்புப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவர் கூறியிருந்தார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்கள், வெளிநாட்டு நாணயங்களை கொண்டு வரும் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதாக அந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட மற்றொருவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த இரண்டு சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பலர் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு, காணாமல் செய்யப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த இரண்டு பேரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து, வெள்ளை வேன் கடத்தல் விவகாரத்தில் சாரதிகளாக பணியாற்றியிருந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-50794679
    • புலம் பெயர் தமிழர்கள் இன்று ஓர் பலமான சக்தியாக உருவாகி வருகிறார்கள். இவர்கள்  கடுமையாக உழைத்து சக்தி மிக்க அரசியல் தலைவர்களுடன் நட்புஉறவை பேணி ஈழத் தமிழருக்கான நிரந்தரமானதும் அதி கூடிய அரசியல் தீர்வை பெற்று தர உழைக்க வேண்டும்.நாமே நமக்கான தீர்வை பெற போராடி வந்த போதும் இந்த உலகம்  தர்மத்தின் அடிப்படையில் இல்லாததாலும் உலக ஒழுங்கு அரசியலை நாமும் சரியாக புரிந்துளாது போனதாலும் இன்று நமது மக்கள் பெரும் துயரோடு வாழ்கின்றனர்.ஆகவே இவர்களுக்கான சரியான தீர்வை பெற இளைய தமிழ் சமுதாயம் உழைக்க வேண்டும் .