• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
வல்வை சகாறா

இதற்குப் பெயர் பக்தியா?

Recommended Posts

4 hours ago, வாத்தியார் said:

இதற்கும் பக்திக்கும் இந்தத் தொடர்பும் இல்லை
இதுவும் குழந்தைகள் மீதான ஒரு வன்முறைதான் .
விபரம் தெரிந்து அவர்களால் செய்யும் ஒரு விடையத்தில் காரண காரியமும் அதன் பலனும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தாக்கங்கள் என பலதையும் உணர்ந்து செய்வது வேறு.

இது வேறு

 

என்னது மதகுருவாக வருவதற்கு வயது எல்லை உள்ளதா ? உயர்தரம் படித்த பின்னரே .....அதுவும் 18   வயதிற்கு மேலே .....
அது எங்கே எழுதப்பட்டுள்ளது என்று உங்களால் காட்ட முடியுமா ?

கத்தோலிக்க சமயத்தில் வாத்தியார், இது பைபிளில் எழுதப் படவில்லை, நிறுவனமயமான கத்தோலிக்க மதத்தில்  canon law இருக்கிறது. உயர்தரம் படிக்க முதல் போனால், போடிங்கில் வைத்து உயர்தரம் படிக்க வைத்து, பல்கலை போனால் பல்கலை அனுப்புவர். பல்கலை போகவில்லையெனில் ஜூனியர் செமினாறியில் தத்துவம் 3 வருடம் (யாழ் பிரதான வீதியில் இருந்தது). அடுத்து பெரிய செமினாறியில் 3 வருடம் இறையியல் என்கிற தியோலொஜி (கொழும்புத்துறையிலும் அம்பிரியாவிலும் இருந்தன). போய் ஏ.எல் எடுத்த பிறகு ஒரு குறூப் விட்டுக்கு வரும். பல்கலை கிடைத்தால் ஒரு குறூப் வீட்டுக்கு வரும். ஏன், கடைசி வருடம் வரை போய் விட்டு  தியாக்கோன் பட்டம் பெறும் தருவாயில் திரும்பி வந்தோரும் உள்ளனர்.

சரி, இப்ப என் வாய்ப்பு: உயர்தரம் படிக்காமலே கத்தோலிக்க பாதிரியானவரின் பெயரைத் தருகிறீர்களா?

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, மல்லிகை வாசம் said:

இதற்கும் பெயர் பக்தி தானா, ஜஸ்ரின்??? இவ்வாறான செய்திகள் உங்கள் கண்ணின் தென்படுவதில்லை என நினைக்கிறேன். ➡️

George Pell's conviction of child sex crimes sparks 'unprecedented' crisis for Vatican

https://www.google.com/amp/amp.abc.net.au/article/10846434

உங்களுக்காக மேலும் சில செய்திகள்:

He Says a Priest Abused Him. 50 Years Later, He Can Now Sue:

https://www.google.com/amp/s/www.nytimes.com/2019/08/13/nyregion/child-victims-act-lawsuit.amp.html

Roman Catholic Church Sex Abuse Cases:

https://www.nytimes.com/topic/organization/roman-catholic-church-sex-abuse-cases

முதலில் உங்கள் நாட்டில், மதத்தில் உள்ள அழுக்குகளைக் கழுவி விட்டு வாருங்கள். எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெளயாரின் அநாவசிய தலையீடு தேவையில்லை. 

 

மல்லிகைவாசம்,

இதில் மதவாதம் பேசவும் கோபம் கொள்ளவும் எதுவும் இல்லை! ஜோர்ஜ் பெல்லும், அவர் போன்ற குற்றவாளிகளும் நீண்ட காலத்திற்கு முதலே பொலிசில் கொடுக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள். அவரைப் போன்றோர்களைக் கவனிக்காமல் விட்டதால் தான் ரட்சிங்கர் போப் பதவியிலிருந்து விலகிப் போனதை பல கத்தோலிக்கர்கள் கொண்டாடினர். நான் இவர்கள் செய்ததை குற்றம் என்று சொல்லும் நேர்மையுடன் இருக்கிறேன்! சின்னக் குழந்தைகளை வலிக்குள்ளாக்கும் சடங்குகள் பற்றி உங்கள் கண்டனம் எங்கே? தாயகத்தில் மிசினில் கட்டி தேரிழுத்தவர்கள் மீதான கண்டிப்பு எங்கே? கோதுகளான மத அனுஷ்டானங்களைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதை விட்டு விட்டு, அன்பையும் நேர்மையையும்  பின் தொடரப் பாருங்கள்! மதமே தேவையில்லை!

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா என்ன இன்னும் சின்ன பிள்ளைகளாக  அவர்களை உயர்தரம் படிப்பிப்பது சொந்த செலவில் (சபை) அதுக்காகத்தானே ஒருவர் விலகி வந்தார் பெயர் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் தவிர்க்கிறேன் காரணம் குடும்ப சூழ்நிலை என்று சொன்னார் தன் குடும்ப வறுமையால் தன்னை சபையிடம் கொடுத்ததாகவும் ஆனால்  அதைகடைப்பிடிக்க முடியவில்லையெனவும் கூறினார் ஆக ஒரு குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் அப்படி பார்த்தால் அங்கே பெற்றோர்கள் தான் குற்றவாளிகள்

சொல்லமாட்டார்களே

பெயர் முகவரி எதற்கு? தரமான ஆங்கிலம் படிக்க வேண்டுமென்று போய் விட்டு திரும்பி வந்து பெற்றோர் சொன்னார்கள் போனேன் என்போர் இருக்கிறார்கள். நான் வாத்தியாருக்கு எழுதிய பதிலில் விபரம் இருக்கிறது. ஆனால், திரும்பி வந்தவரை கூப்பிட்டு அலகு குத்தி விட்டார்களா? அல்லது சிறையில் போட்டு விட்டார்களா? அது தான் சுதந்திரம் என்பது. பிக்குச் சிறுவர் போல மொட்டை போட்டு விகாரை கூட்ட விடும் வேலையை விட இது எவ்வளவு சுதந்திரமானது? பச்சிளம் பாலகர்களை அலகு குத்தி அழ விடுவதை விட எவ்வளவு கொடுமை குறைந்தது? 

இப்படி மதகுருவாக விரும்பியோ விரும்பாமலோ வந்தவரைத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் மதத்தின் மீது இருக்கும் "காண்டு", கோயிலுக்குள் குறைந்த சாதி என்று முத்திரை குத்தியோரை வரவிடாமல் தடுக்கும் மதத்தின் மீது உங்களுக்கு வரவே வராதே? எப்படி வரும்?

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, Justin said:

ஜோர்ஜ் பெல்லும், அவர் போன்ற குற்றவாளிகளும் நீண்ட காலத்திற்கு முதலே பொலிசில் கொடுக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள். அவரைப் போன்றோர்களைக் கவனிக்காமல் விட்டதால் தான் ரட்சிங்கர் போப் பதவியிலிருந்து விலகிப் போனதை பல கத்தோலிக்கர்கள் கொண்டாடினர்.

இவ்வாறான குழந்தைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ சேர்ச்சுக்கள் பலவற்றிலும் காலம் காலமாக நிகழ்கின்றன. ஏதோ அந்த மதத்தில் குறைகள் இல்லை என்ற ரீதியில் நீங்கள் எழுதும் போது அதைச் சுட்டிக்காட்டினால் மத வாதம் என்பதா???

7 hours ago, Justin said:

பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது

 

18 minutes ago, Justin said:

சின்னக் குழந்தைகளை வலிக்குள்ளாக்கும் சடங்குகள் பற்றி உங்கள் கண்டனம் எங்கே?

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு எனக்கு கிறிஸ்த்தவ மக்கள் மீதோ முஸ்லீம்கள் மீதோ எந்த கோபமும் இல்லை 

ஆனால் இந்த உலகை திருத்தும் வெள்ளைவான் கும்பல்கள் ஏன் பிற மதங்களை ஆராயக்கூடாது அவர்களுக்கும் இது மூட நம்பிக்கை முட்டாள் தனமானது என கூற முடியவதில்லை இதற்கு பதில் சொல்லுங்கோ உடனே வந்து உன்னை திருத்து உலகம் திருந்தும் என்று சொல்லக்கூடாது 

உலகம் என்பது உருண்டை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமுதாயம் இப்ப வரைக்கும் இருக்கு 

எங்கயோ வாசித்த ஞாபகம் ஒன்று உலகம் சுத்துவதாக இருந்தால் விமானம் ஏன் பல மணிநேரம் பறக்க வேண்டும்  ? இப்படி கேள்வி கேட்ட ஆட்களும் உண்டு 

இதே குறிப்புத் தான் நானும் இங்கே தரப் போகிறேன்: எனக்கு இந்துக்கள் மீது மட்டுமல்ல, எந்த மதத்தினர் மீதும் கோபம் கிடையாது. என் கோபமெல்லாம் உங்கள் போன்ற tunnel vision உடைய பேர்வழிகளிடம் தான்., மேலே படத்தில் இருப்பது போன்ற ஒரு பிழையை பிழை என்று சொல்ல உங்கள் போன்ற ஒருவருக்கு நேர்மை இல்லை!  வேறு இரண்டு மதங்களை இழுத்து அதிலேயும் பொய் செய்தியைக் கலந்து தான் சமாளிபிகேசன் செய்ய வேண்டியிருக்கிறது! அப்படியானால் உங்கள் தனிப்பட்ட உள்ளக நேர்மையை விட ஒரு மதத்தின் சடங்கு தான் உங்களை பெருமைக்குள்ளாக்குகிறது! இப்படியான ஒரு பக்தன் தன் மதத்தை பெருமைப்படுத்துகிறானா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.  

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, Justin said:

தாயகத்தில் மிசினில் கட்டி தேரிழுத்தவர்கள் மீதா கண்டிப்பு எங்கே?

இதனால் என்ன பாதிப்பு???? இதனைவிட கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்யும் குழந்தைச் சீரழிப்புகள் உயர்ந்த பண்பு, அப்படித்தானே?

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறான குழந்தைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ சேர்ச்சுக்கள் பலவற்றிலும் காலம் காலமாக நிகழ்கின்றன. ஏதோ அந்த மதத்தில் குறைகள் இல்லை என்ற ரீதியில் நீங்கள் எழுதும் போது அதைச் சுட்டிக்காட்டினால் மத வாதம் என்பதா???

 

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

எங்கே அப்படி எழுதியிருக்கிறேன் என்று காட்டுங்கள்! 

Just now, மல்லிகை வாசம் said:

இதனால் என்ன பாதிப்பு???? இதனைவிட கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்யும் குழந்தைச் சீரழிப்புகள் உயர்ந்த பண்பு, அப்படித்தானே?

மல்லிகை வாசம், எங்கே நான் பாதிரிமாரின் பாலியல் குற்றத்திற்கு வக்காலத்து வாங்கினேன் என்று காட்டுங்கள்?

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, Justin said:

மத அனுஷ்டானங்களைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதை விட்டு விட்டு, அன்பையும் நேர்மையையும்  பின் தொடரப் பாருங்கள்! மதமே தேவையில்லை!

ஒருவரது மத நம்பிக்கையை அவமதித்துவிட்டு இப்போ அன்பு, நேர்மை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் மத நம்பிக்கையை விட்டுவிடச் சொல்ல நீங்கள் யார்? ஒருவரது மத நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பதும் அன்பு தான். அது உங்களிடம் அறவே இல்லை. 

எங்களிடம் நேர்மையும், அன்பும் உண்டு. அதற்காக பிற மதத்தினர் நம் நம்பிக்கையை கேவலப்படுத்தும் போது மௌனித்து இருக்கமுடியாது.

5 minutes ago, Justin said:

எங்கே அப்படி எழுதியிருக்கிறேன் என்று காட்டுங்கள்! 

ஏற்கனவே மேலே மேற்கோள் காட்டிவிட்டேன். 

12 minutes ago, மல்லிகை வாசம் said:
  8 hours ago, Justin said:

பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Just now, மல்லிகை வாசம் said:

ஒருவரது மத நம்பிக்கையை அவமதித்துவிட்டு இப்போ அன்பு, நேர்மை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் மத நம்பிக்கையை விட்டுவிடச் சொல்ல நீங்கள் யார்? ஒருவரது மத நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பதும் அன்பு தான். அது உங்களிடம் அறவே இல்லை. 

எங்களிடம் நேர்மையும், அன்பும் உண்டு. அதற்காக பிற மதத்தினர் நம் நம்பிக்கையை கேவலப்படுத்தும் போது மௌனித்து இருக்கமுடியாது.

மேலே இருப்பது மட்டுமல்ல, சாதி ஒதுக்கல், பெண் தீட்டு என்ற கருத்து போன்ற மத அனுஷ்டானங்கள் அன்பின் அடையாளங்கள் அல்ல! அவை கோதுகள் மட்டுமே என்பதை நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் சொல்வேன், இந்துவாக இருந்தாலும் சொல்வேன்! பின்பற்றுபவர் தவிர ஏனையோரைப் பாதிக்கும் பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக் காட்டும் உரிமையை மனிதனாக இருப்பவன் யாரும் கொண்டிருக்கிறான்!  

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, Justin said:

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

கிறிஸ்தவ மதம் இறைக்கும் பணம் தான் இதற்கு காரணம். மத வியாபாரம் செய்வது யார் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இது காலம் காலமாக நடப்பது. வரலாறு!

இந்து மதம் அவ்வாறு மதமாற்ற வியாபாரம் செய்வதில்லை. வசதிக்காக இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் அவமானம் இந்து மதத்துக்கு அல்ல. கிறிஸ்தவ மதத்துக்கே!

3 minutes ago, Justin said:

பின்பற்றுபவர் தவிர ஏனையோரைப் பாதிக்கும் பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக் காட்டும் உரிமையை மனிதனாக இருப்பவன் யாரும் கொண்டிருக்கிறான்!  

ஏனையோரைப் பாதிக்கவில்லை என பலமுறை சொல்லியாயிற்று. மேலதிக விளக்கம் தேவையில்லை. 

முதலில் உங்கள் அழுக்குகளைக் களையுங்கள், பின்னர் இந்து மதத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். வீண் வாதம் தேவையில்லை.

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, மல்லிகை வாசம் said:

கிறிஸ்தவ மதம் இறைக்கும் பணம் தான் இதற்கு காரணம். மத வியாபாரம் செய்வது யார் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இது காலம் காலமாக நடப்பது. வரலாறு!

இந்து மதம் அவ்வாறு மதமாற்ற வியாபாரம் செய்வதில்லை. வசதிக்காக இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் அவமானம் இந்து மதத்துக்கு அல்ல. கிறிஸ்தவ மதத்துக்கே!

பணம் இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், சாதிவாதத்தினால் ஒரு பக்கம் கிறிஸ்துவக் குழுக்களுக்கும், முஸ்லிம் மதத்திற்கும் மக்கள் மாறுவது உண்மையல்லவா? மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே? அது பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது? 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Justin said:

மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே?து பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது?

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Just now, மல்லிகை வாசம் said:

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

யாரும் தான் தனக்கு முக்கியம் என்று கருதும் ஒரு காரணத்திற்காக மதம் மாறலாம் என்பது என் நிலைப்பாடு! மதங்கள் ஒன்றும் சட்டத்தால் பிறந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்ட கூறு அல்ல! இதை ஒரு அமைப்பு ஊக்குவித்தால் அதில் தவறில்லை! தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, மல்லிகை வாசம் said:

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

மல்லிகை வாசம்,  என்னைப்பொறுத்தவரை நான்  மதங்களை நம்புபவன் அல்ல. ஆனால் நீங்கள் ஆன்மீக வாதி. கடவுளை நம்பிக்கை உள்ளவர். கடவுள் நம்பிக்கையுடன் சேர்தது அதை விட மேலதிகமாக  இந்து மதம் பரப்பிய விரல் விட்டு எண்ண முடியாத பொய் புரட்டு, மூடத்தனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமையுடைய உங்களால்  ஒரு சிலர் அவர் மதம் மாறுவதை பொறுக்கமுடியவில்லையா?  

Share this post


Link to post
Share on other sites

மதங்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும். இப்ப இந்தப்பிள்ளைகளின் பெற்றோரை செருப்பால் அடிக்கவேண்டும், பிடித்து ஜெயிலுக்குள் போடவேண்டும். பிறகு பிள்ளைகளை கருணையுடன் அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடலாம். இல்லையென்றால் அனாமத்தாய் தெருவில விடலாம். அப்பாடா நிம்மதி......!  😥

Share this post


Link to post
Share on other sites

இளம் சிறார்களை அலகு குத்தி எலுமிச்சைப் பழங்களையும் கோர்த்து பொதுவெளியில் படங்களையும் பகிர்ந்தவர்கள் உண்மையில் பக்தியுள்ள சாதாரணர்களாகத்தான் இருப்பார்கள். அதனை நாகரீக உலகக் கண்ணாடியோடு பார்க்கும்போது தப்பாகத்தான் தெரியும். உலகமே இப்போது சமூகவலையில் நெருக்கியடித்துக்கொண்டு உள்ளதால் இப்படியான சம்பவங்களின் எதிரொலி பலருக்குக் கேட்கும் என்பதால் இவை எதிர்காலத்தில் குறைந்து காணாமல்போகும்!

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேறு எந்த மதத்திலும் மூட நம்பிக்கை இல்லையா  என நான் கேட்கிறேன் உங்களிடம் ?

 

ஒரு கோட்டுக்கு மேலால் இன்னொரு கோட்டை பெரிதாகக் கீறுவதால் முன்னைய கோடு அழியாது.

ஆனால் இங்கு நடப்பதோ ஒரு கோட்டுக்கு குறுக்காக இன்னொன்றைக் கீறி விதண்டாவாதம் புரிவதுதான்.

எல்லா மதங்களிலும் உள்ள காலத்திற்கு ஒவ்வாத சம்பிரதாயங்கள் மாறவேண்டும். அதனை விடுத்து ஒன்றைக் காட்டி இன்னொன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, மல்லிகை வாசம் said:

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

இதைத்தான் நாகரீகமாக ஆங்கிலத்தில் mind your own business என்று சொல்வது. ஆனால் கருத்தாடலில் பாவிப்பது தவறு.

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, tulpen said:

கடவுள் நம்பிக்கையுடன் சேர்தது அதை விட மேலதிகமாக  இந்து மதம் பரப்பிய விரல் விட்டு எண்ண முடியாத பொய் புரட்டு, மூடத்தனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமையுடைய உங்களால்  ஒரு சிலர் அவர் மதம் மாறுவதை பொறுக்கமுடியவில்லையா?  

ருல்பென், நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், மூடநம்பிக்கைகளை நம்புபவன் அல்ல. 

ஆனால், இங்கே சிக்கலே எது மூடநம்பிக்கை என்பது தான். நவீன விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட முடியாது என்பதற்காக ஒரு நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிடாது. விஞ்ஞானமே நாளுக்கு நாள் புதுப்புது விடயங்களை கண்டறியும் ஓர் பரிசோதனை / ஆராய்ச்சியாகத் தான் இருக்கிறது. விஞ்ஞானம் என்பது ஒரு complete tool கிடையாது, ஒரு நம்பிக்கையின் உண்மைத் தன்மையை அறிய. ஒரு காலத்தில் பூமியைச் சூரியன் சுற்றுகிறது என்ற விஞ்ஞானம் பின்னாளில் அது தவறு என்றது. இன்று சரியாக இருப்பது நாளை விஞ்ஞான முறைப்படி தவறாகலாம். எனவே, விஞ்ஞான முறைப்படி இந்து மத நம்பிக்கையின் சரி பிழைகளைக் கணிப்பது நூறு வீதம் நம்பகரமானதாக இருக்க முடியாது.

அத்துடன் நான் நம்பாத ஒரு மத நம்பிக்கையை மற்றவர்கள் நம்பினால் எடுத்த எடுப்பில் அது மூட நம்பிக்கை என்று கூறமாட்டேன். அது அவரவர் நம்பிக்கை. அதைக் கேள்வி கேட்க நான் யார்?

மதம் மாறுதலை என்னால் பொறுக்க முடியவில்லையா?!மேலே எல்லாக் கருத்துக்களையும் வாசித்து விட்டுத் தான் இதைக் கேட்கிறீர்களா? 

ஜஸ்ரின் அது தொடர்பாகக் கேட்ட கேள்விக்கு எனது பதிலைச் சொன்னேன்.

5 hours ago, மல்லிகை வாசம் said:

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்

 

5 hours ago, Justin said:

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Justin said:

தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

15ஆம், 16ஆம், 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் கிறிஸ்தவ மதத்தை பரப்ப உலகின் பல நாடுகளில் உள்ள தேசிய குடிகளை ஆயுதம் கொண்டும் மிரட்டினர்.

அது போக, ஒழுக்கமற்ற பாதிரியார்கள் நிறைந்த கிறிஸ்துவம் பணத்தை அள்ளி இறைத்ததும் வரலாறு. இன்னும் தொடர்கிறது. எனவே இது கறுப்பு வெள்ளை நிலைமை அல்ல. கிறிஸ்தவ மதத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி! மாறுபவனைப் பற்றிய கவலை நமக்கில்லை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மேலே உள்ள படத்தை தவிர மேலதிகமாக எங்கே எப்படி நடந்தது என்ற விபரம் இல்லை.  இதை மத அடிப்படையில் அணுகுவதும் பொருத்தமில்லை. 

அவனவன் குலசாமிகள், குல வழக்கங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் என அனைத்து சாமிகளும் இந்து என்றதுக்குள் கொண்டுவருகின்றார்கள். போதாக்குறைக்கு நித்தியானந்தா சாயிபாபா பங்காரு அம்மாபகவான் என ஆயிரத்தெட்டு ஆசாமிகளும் இந்துவுக்குள் வந்துவிடும்.  இந்தியா என்பது பல நாடுகளை இணைத்த ஒரு நிலப்பரப்பின் பெயர் போல்தான் இந்து மதம் என்பதும். 

ஈழத்தமிழர்கள் இந்துக்களா இல்லை சைவர்களா எப்படி தம்மை வெளிப்படுத்துவது என்பதில் இன்னும் தெளிவில்லை. சைவர்கள் என்று தம்மை தனித்துவப்படுத்திக்கொண்டால் அவற்றில் உள்ள நல்லது கெட்டதுகளை சீர்தூக்கிப் பார்த்து மாற்றங்கள் செய்து சைவமும் தமிழும் என்று தொடரலாம். இந்து என்று வில்லங்கத்துக்கு தலையை கொடுத்து வக்காலத்து வாங்கினால் பொல்லு கொடுத்து அடிவாங்கிறதாகத்தான் முடியும். ஏனெனில் இந்து என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. அதை ஒரு கட்டமைப்புக்குள்கொண்டுவரவும் முடியாது.  அதில் எக்காலத்திலும் எந்த மாற்றமும் செய்யவும் முடியாது. இந்து என்பது ஆன்மீகம் பக்தி சார்ந்த பதம் இல்லை மாறாக இந்து என்பது இந்திய மைய அரசியல் சார்ந்த பதம். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, கிருபன் said:

இதைத்தான் நாகரீகமாக ஆங்கிலத்தில் mind your own business என்று சொல்வது. ஆனால் கருத்தாடலில் பாவிப்பது தவறு.

அதனால் தான் கூடியவரை நாகரீகமான சொற்களை இங்கு பயன்படுத்த முயல்கிறேன். 😊

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Justin said:

பணம் இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், சாதிவாதத்தினால் ஒரு பக்கம் கிறிஸ்துவக் குழுக்களுக்கும், முஸ்லிம் மதத்திற்கும் மக்கள் மாறுவது உண்மையல்லவா? மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே? அது பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது? 

எங்கட மதத்தில் சாதிய வெறி தலை விரித்தாடுகிறது...உண்மையில் வெட்கப்பட வேண்டிய விசயம்...அதற்காக உங்கட மதத்திற்கு மாறுபவர்களை உங்களுக்கு சமமாய் வைத்து நடத்துவீர்களா?...உங்கள் மனசாட்சியை  தொட்டு சொல்லுங்கள்...உங்கள் மதத்தில் சாத்திய வேறுபாடு இல்லையா?....நான் படித்தது எல்லாம் கத்தோலிக்க பாடசாலையில் 😐இங்கு ஏட்டிக்கு போட்டியாய் எழுதுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, ரதி said:

எங்கட மதத்தில் சாதிய வெறி தலை விரித்தாடுகிறது...உண்மையில் வெட்கப்பட வேண்டிய விசயம்...அதற்காக உங்கட மதத்திற்கு மாறுபவர்களை உங்களுக்கு சமமாய் வைத்து நடத்துவீர்களா?...உங்கள் மனசாட்சியை  தொட்டு சொல்லுங்கள்...உங்கள் மதத்தில் சாத்திய வேறுபாடு இல்லையா?....நான் படித்தது எல்லாம் கத்தோலிக்க பாடசாலையில் 😐இங்கு ஏட்டிக்கு போட்டியாய் எழுதுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை 

எனது கத்தோலிக்க நண்பர்கள் ஏனைய கிறிஸ்தவர்களை கொஞ்சமும் மதிப்பதில்லை.

11 hours ago, குமாரசாமி said:

கிறிஸ்தவ மதகுருவும் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஏதும் இருக்கின்றதா? ண்மையாகவே தெரியாதபடியால் கேட்கின்றேன்.

Pentecost கிறிஸ்தவர்கள் தொலைக்காட்சிகள் பார்க்க தடை, மருந்துகள் எடுக்க தடை.

வருத்தத்திற்கு மருந்து எடுக்காமல் உயிரிழந்த சிலர் உள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் இந்த விடயத்தில் நீள நீளமாக எழுத ஒன்றும் இல்லை! சிறுவர் துன்புறுத்தல் சட்ட ரீதியிலும் தவறு தார்மீக ரீதியிலும் தவறு! இதை இன மத பேதமில்லாமல் யாரும் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் வேண்டும். அந்தக் கண்டனம் வரமுதல் மனதில் "ஐயோ என் மதநம்பிக்கை!" என்ற கணநேரத்தயக்கம் ஒருவருக்கு வந்தால், அப்படிப்பட்டவருக்கு ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்! அமெரிக்க கிளிஷேயில் சொல்வது போல: I do not envy them!

அவ்வளவு தான் இந்தத் திரிக்கு என் நேரக் கோட்டா!

Share this post


Link to post
Share on other sites

அடுத்தவன் செய்யும் தீமைகளை காட்டி 
தமது தீமைகளை நியாயப்படுத்தும் எவனும் 

அடுத்தவன் செய்யும் நன்மைகளை காட்டி 
எந்த நன்மையையும் செய்கிறான் இல்லை 

இவர்கள் இங்கு என்ன பேச முனைகிறார்கள் என்பது கூட புரியவில்லை 
நேரடியான கேள்விகள்  கூட பலருக்கு புரிகிறது இல்லை.

நான்தான் உலக அரசன் என்று நானே சொல்வதால் 
உலகில் ஏதும் மாறிவிடாது என்ற சின்ன புரிதல்கூட பலருக்கு புரியவில்லை. 

ஓரளவு எழுத வாசிக்க ஆவல் உள்ளவர்கள் நிலைமை இப்படி இருக்கும்போது 
தமிழருக்கான தீர்வு  மேம்பாடு  பொருளாதார வளர்ச்சி போன்ற சிக்கலான விடயங்களை 
எப்படி பேசி முடிவை எட்டுவது என்ற கேள்விதான் எனக்குள் இப்போது அதிகமா எழுகிறது. 

சைகோலோஜி மிகவும் முக்கியமான பகுதி ........... பிள்ளைகளில் இப்படி ஊசிகளையும் 
தேசிக்காய்களையும் குத்துவோரின் மனோநிலை மிக எளிதாக புரிய கூடியது ... அவர்களிடம் அறியாமை 
அடிமைத்தனம் இரண்டும் குடிகொண்டு இருக்கும் ஆதலால் அவர்கள் முழுதாக இறைபக்த்தி என்று நம்புகிறார்கள். இன்னும் கொஞ்சம் முறுக்கேத்தி சூலத்தை எடுத்து பிள்ளைகள் வயிறில் குத்தினால் உங்கள் பிள்ளைகள் எதிராக்காலம்  நன்றாக இருக்கும் என்று சொல்லி அவர்களை குத்த வைப்பது மிக சுலபம். 

ஆனால் இரண்டாம் நபராக இவற்றை வெளியில் இருந்து பார்க்கும் ஒரு மனிதனின் மூளை  
இதுதான் சரியானது என்று நம்புவது என்ன விதமான சைகோலாஜி என்பது புரியவே இல்லை.
இப்படியொருவன் நம்புவான் என்று நான் சைகோலொஜியில் படிக்கவில்லை ........ இதை நான் நம்பவும் இல்லை. 

நித்தியானந்தா கபடமானவன் என்பதை அவரது சீடர்கள் மறுப்பது என்பது ஒருவித 
விசுவாச சிந்தனை அவர்கள் மூளை அப்படி சிந்திக்க இடம் கொடுக்காது.
ஆனால் நித்தியானந்தாவையே அறியாத ஒரு ஆப்ரிக்கனுக்கு நித்தியின் கபடங்களை வீடியோயாவாக 
போட்டுக்காட்டும்போது அவன் அதை நம்ப மறுத்தால்? அப்படி ஒரு நிலை மனித அறிவில் மூளையில் இருக்கிறதா? 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் .........
யாரையும் புண்படுத்தாமல் எனக்கு சரி என்று படுவதை எழுத முடியுமா? என்று பல தடவை எனக்குள் நான் எண்ணுவது உண்டு. காரணம் முன்பு இங்கு ஈசன் என்று ஒரு சக கருத்தாளர் இருந்தார் மிக நல்ல கருத்துக்களை எழுதுபவர்  எனக்கு அவரின் பல கருத்துக்கள் பிடிக்கும். இப்படி ஒரு இந்துசமய சம்மந்தமான திரி ஒன்றில்  நான் எழுதும்போது அவர் கோபம் அடைந்து தேவையற்றதை எல்லாம் எழுத் தொடங்கினார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .... என்னுடைய மதம் பற்றிதானே நானும் எழுதுகிறேன் இவர் ஏன் இப்படி குதிக்கிறார்  என்று. பின்பு ஒரு கட்டத்தில் அவர்  முற்றுமுழுதாக தன்னிலை கடந்து என்மீது தனிமனித தாக்குதலை நீ குரங்கு  பூனை ஆடு மாடு என்று எழுத தொடங்கிவிட்டார். அதை மட்டுறுத்தினார்கள் வெட்டி அவருக்கு ஒரு எச்சரிக்கை புள்ளியும் கொடுத்து இருந்தார்கள் ....... அன்றோடு அவர் இந்த களத்துக்கு வருவதில்லை. அவர் வருவதில்லையே தவிர அவரை பற்றிய தேடல் எனக்கு இன்னமும் நிற்கவில்லை... அவருடைய அறிவை புரிந்துகொள்வதுக்கான  முயற்சி என்பதை இப்போதும் செய்துகொண்டு இருக்கிறேன். 
நான் அவரது மதத்துக்கும் அவருக்கும் எதிரியாக இருப்பின் ...... இப்போதுதான் அவர் நிறைய எழுத வேண்டும். நான் இங்குதானே எழுதுகிறேன்........... யாழ்களத்துக்கு ஏன் எழுத தொடங்கினார்? அதுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும்  இல்லையே? போன்ற விடைதெரியாத வினாக்கள் மட்டுமே என்னிடம்.

மேலே கருத்து எழுதும் சிலரின் மனோநிலையும் உண்மையில் புரியவில்லை 
ஒரு சிநேகித பூர்வமான கருத்தாடலை ஏன் செய்யமுடியாமல் போகிறது?

ஒரு குழந்தையின் உடலில் ஊசியை குத்துங்கள் என்று எந்த இந்துமத புத்தகமும் சொல்லவில்லை 
அதை எதாவது இந்து கடவுள் ஞானிகள் வலியுறுத்துகிறார்களா? என்றாலும் இல்லை 
இந்த காட்டுமிராண்டி வேலையை 
எப்படி கிறிஸ்தவ மத குருக்கள் சிறுவர்களை கெடுப்பதும் 
முஸ்லிம்கள் மக்களை கொல்வதும் நியாய படுத்தும்? 
இது என்ன மனோநிலை? 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • Sri Lanka confirms first case of coronavirus -health official Reuters January 27, 2020 11:46 AM EST COLOMBO — Sri Lanka has confirmed the first case of coronavirus in the country, a senior Sri Lankan health official said on Monday. “A Chinese lady, who is in her 40s, arrived on the 19th as a tourist and fell ill on the 25th and was confirmed as having the coronavirus following a test on Monday,” Sudath Samaraweera, the chief epidemiologist with Sri Lanka’s Ministry of Health, told Reuters, adding that this marks the first confirmed case in the island nation. The new flu-like virus, first reported in the Chinese city of Wuhan, has killed more than 80 people and infected more than 2,700 others. Although most cases identified remain in China, more than a dozen other countries have so far reported cases. (Reporting by Waruna Karunatilake in Colombo; Writing by Euan Rocha; Editing by Alex Richardson)    
  • உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்! குணமாக்கக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவிற்கு 106 பேர் தற்போது வரை பலியாகியுள்ளனர். அந்நாட்டை நிலைகுலையச் செய்திருக்கும் இவ்வைரஸ் தொடர்பில் மருத்துவர்கள் தங்கள் முயற்சிகள் அனைத்தையும் முடுக்கி விட்டிருக்கின்றனர். சில நகரங்களை அரசு தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. சீனாவில் தங்கியிருக்கும் பிரஜைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தங்களிடம் மருந்து இருப்பதாகவும் அரசு அனுமதியளித்தால் சீனா செல்லத் தயார் எனவும் சித்த மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர்,     https://www.ibctamil.com/world/80/135996?ref=home-imp-parsely
  • தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி By A.Pradhap     இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டு தொடரை கைப்பற்றியது.  தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து வசம் போட்டியின் போது, பெப் டு ப்ளெசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்களை வீசிமுடிக்க தவறியுள்ளது. இதனை அவதானித்த நடுவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்ட பின்னர், போட்டி மத்தியஸ்தரான எண்டி பைக்ரொப்ட் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். நடுவர்கள் முறையீட்டின் அடிப்படையிலும், பெப் டு ப்ளெசிஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்க அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான விதிமுறைகளின் படி, அணியானது குறித்த நேரத்தில் ஓவர்களை நிறைவுசெய்ய தவறினால், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இருந்து ஓவருக்கு தலா 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும். அதன்படி, மூன்று ஓவர்கள் வீசத் தவறிய தென்னாபிரி க்க அணிக்கு, 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகளை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணிக்கு, தற்போது 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அணி 24 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  http://www.thepapare.com/south-africa-fined-docked-six-championship-points-for-slow-over-rate-tamil/
  • எனது மூத்த மகனுடன் பிரமிட்டுக்கள்  பற்றி  பேச்சு  வந்தபோது பிரமிட்டுக்களின் உருவாக்கத்தில்  தமிழர்களும் உடனிருந்ததாக ஒரு வரலாறு  இருக்கிறது நீங்கள்  அறிந்து  கொள்ளணும்  என்றேன் உடனேயே கூகிழில்  தேடத்தொடங்கினான் எந்த ஆதாரமும்  இல்லையப்பா  என்றான் அதிலிருந்து எமது வரலாறுகள்  சார்ந்து மிகுந்த அவதானமாக  பேசுவதுண்டு
  • டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடி முன்னேற்றம் By Akeel Shihab - தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க மண்ணில் வைத்து கைப்பற்றிய இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.  இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகிறது.  முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் (27) நிறைவுக்கு வந்தது. முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்தது.    இந்நிலையில் குறித்த தொடரின் நான்காவதும் இறுதியுமான போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (24) ஜஹனஸ்பேர்க்கில் ஆரம்பமானது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 191 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அணி தரவரிசையில் ஐந்திலிருந்து  மூன்றாமிடத்திற்கு அதிரடியாக முன்னேறியுள்ளது.   குறித்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாகுவற்கு முன்னர் இங்கிலாந்து அணி 101 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்பட்ட அதேநேரம் தென்னாபிரிக்க அணி 102 தரவரிசை புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியதன் மூலம் இரண்டு நிலைகள் உயர்ந்து தென்னாபிரிக்க அணியை பின்தள்ளி 105 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.  இதேவேளை, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவிய தென்னாபிரிக்க அணி 98 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் உயர்வு காரணமாக மூன்றாமிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி தற்போது நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையின் படி இங்கிலாந்து அணி 5 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவுடன் மொத்தமாக 146 புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் காணப்படுகின்றது.   குறித்த தரவரிசையில் தென்னாபிரிக்க அணி ஒரு வெற்றி, 6 தோல்விகளுடன் மொத்தமாக 30 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில் நேற்று நிறைவுக்கு வந்த இறுதி டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துவீச்சு பிரதியை பதிவு செய்ததன் காரணமாக இதிலிருந்து 6 புள்ளிகளை இழந்து தற்போது 24 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் காணப்படுகின்றது.  ஐ.சி.சி டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை.  இந்தியா – 120 புள்ளிகள் அவுஸ்திரேலியா – 108 புள்ளிகள் இங்கிலாந்து – 105 புள்ளிகள் நியூசிலாந்து – 105 புள்ளிகள் தென்னாபிரிக்கா – 98 புள்ளிகள் இலங்கை – 92 புள்ளிகள் பாகிஸ்தான் – 85 புள்ளிகள் மேற்கிந்திய தீவுகள் – 81 புள்ளிகள் பங்களாதேஷ் – 60 தரவரிசை புள்ளிகள் ஆப்கானிஸ்தான் – 49 புள்ளிகள் http://www.thepapare.com/england-move-up-two-places-to-third-in-the-icc-test-team-rankings-tamil/