• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
வல்வை சகாறா

இதற்குப் பெயர் பக்தியா?

Recommended Posts

1 hour ago, tulpen said:

சீர் திருத்த நடவடிக்கைகள் தம்மை பாதிக்கும் என்பதால் அவர்கள் அதில்  அக்கறை காட்டாதது மட்டுமல்ல இது தொடர்பான கேள்விகள்  எழும்போது இப்படித்தான் முன்னோர ஆன்மீகம், ஞானம் என்று புலம்பல்கள் மூலம் மக்கள் மீது அறிவீனங்களை திணித்தனர். அதனால் தான் அறிவியல் முன்னேற்றம் ஏதும் இன்றி இருந்தனர்.

மீண்டும் மீண்டும் ஆன்மீகம், ஞானம் எல்லாம் அறிவீனம் என்று நீங்கள் புலம்புவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

மத, ஆன்மீக நம்பிக்கையால் நானும், என் போன்றவர்களும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம். நாங்கள் எதை நம்ப வேண்டும் / கூடாது என்று நீங்கள் பரிந்துரை செய்ய தேவையில்லை. தம்மளவில் மகிழ்ச்சியாக இல்லாதோர் தான் பிறர் நம்பிக்கைகளில் மூக்கை நுழைத்து விமர்சிப்பர். உங்கள் எழுத்துக்கள் இதையே நிரூபிக்கின்றன.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, மல்லிகை வாசம் said:

ஐரோப்பிய வருகைக்கு முன்னரும் நமது நாட்டு மக்கள் மகிழ்ச்சியான, தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இப்போது வசதிகள் இருக்கலாம். ஆனால் அன்றைய காலத்தில் சொகுசு வாழ்க்கை இல்லாமலும் தன்னிறைவான, சுதந்திர வாழ்க்கையை எமது மக்கள் வாழ்ந்தனர்.

இரண்டு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த எமது பாட்டன் பூட்டன்களின்  பிறந்த திகதியே Not known  என்ற நிலையிலேயே நிலையில் அந்த ம க்கள் தன்னிறைவுடன் வாழ்ந்தார்கள் என்று சகட்டு மேனிக்கு கூறுகின்றீர்கள். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. மனித அறிவிலை விட ஞானிகள் ஞானம் ஆழமானது என்பது உண்மை இல்லாவிட்டாலும்  நீங்கள் உங்களவில் அப்படி நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, goshan_che said:

அது முதல் மனவியின் எந்த செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதைப் பொறுத்தது.

முதல் மனைவி தலை மயிருக்கு மஞ்சள் பெயிட்ன் அடிப்பதை, முன்னாள் கணவன், மட்டுமல்ல கல்யாணத்திலேயே நம்பிக்கை இல்லாத கட்டை பிரம்மசாரிகளும் விமர்சிக்க முடியாது, தேவையில்லை.

ஆனால் முதல் மனைவி ஒரு வாயில்லா பிராணியை நடுத்தெருவில் வைத்து சங்கிகியால் விளாசினால் - முன்னாள் கணவன், இன்நாள் காதலன், பக்கத்துவீட்டுக்காரன், பால்காரன், கலியாணமே பொய் என்பவன், எல்லாரும், இப்படி ஜீவகாருண்யம் உள்ள எவருமே அதை விமர்சிக்க, தட்டிக்கேட்க, முடிந்தால் தடுக்கவும், முடியும். 

என்னை அடுத்த அடுத்த முரட்டுப்பாதைகளுக்கு தள்ளும் கேள்வி இது மதத்தை தாண்டி என் குறிக்கோளுக்கு இடைஞ்சலான எதையும் நான் செய்யப்போவதில்லை டொட்.  நன்றி வணக்கம் 

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

இங்கே அக்குபஞ்சர் பற்றி ஈழப்பிரியன் அண்ணா சொன்ன கருத்துக்கு, மல்லிகையும் குசா அண்ணரும் சொன்ன கருத்துக்களுக்கு என் பதில்:

1. அக்குபஞ்சர், எமது ஆயுள் வேதம் போல ஒரு மருத்துவ முறை. சமய நம்பிக்கை அல்ல.

2. அக்கு பஞ்சரில், தேர்ந்த நிபுணர் உடலில் தோலுக்கு கீழாக இருக்கும் நரம்பு வலையமைப்பை மிக நுண்ணிய ஊசிகளால் தூண்டி, சில வலி போக்கும் ஹார்மோன்களை தூண்டி, அதன் மூலம் வலி நிவாரணம் பெறலாம். அக்கு பஞ்சர் ஒரு வலி கண்ட நோயாளிக்கு மட்டுமே, வலி நிவாரணதுக்காக பாவிக்கப் படும். குஞ்சு குருமானை எல்லாம் கூப்பிட்டு அக்குபஞ்சர் என்று பஞ்சர் ஆக்குவதில்லை. அக்கு பஞ்சருக்கும், மனித உடல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத பூசாரி, அலகு குத்தி திருநீறடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

3. எமது முன்னோர்களின் உணவு, இதர பழக்க வழக்கங்களில் சில நல்ல விடயங்கள் இருக்கிறன என்பது மறுப்பதற்கில்லை. உதாரணம் தோப்பு கரணம் போடும் உடல் அப்பியாசம். ஆனால் இதே போல் சரிக்கு சரி ஒரு மண்ணுக்கும் உதவாத மோட்டுப் பழக்க வழக்கங்களும், பிற்போக்குத் தனங்களும் கூடவே இருக்கிறன. 

4. விஞ்ஞானம் மாறி மாறி சொல்லும், ஆனால் அது விஞ்ஞானத்தின் வழு அல்ல. இந்த நேர்மைதான் விஞ்ஞானத்தின் சிறப்பு. சரி என நம்பியதை, தக்க காரணம் காணும் போது பிழை என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் விஞ்ஞானத்துக்கு உண்டு. நம்பிக்கைகள் மதங்கள் போல, அது கடவுள் சொல்லியது அதில் மாற்றமில்லை என வாதாடாது.

இதற்கு நல்ல உதாரணமே, அக்குபஞ்சரும் தோப்புகரணமும். இரெண்டுமே விஞ்ஞானதுக்கு வெளியே இருந்து வந்தாலும், அதில் சாரம் இருப்பதால், விஞ்ஞானம் அவற்றை உள்வாங்கிகொண்டது.

5. சமயம் என்பது நம்பிக்கை சார்ந்தது. மிக எமோசனலான விடயம். ஆனால் பொது வெளியில் சமயம், நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு சில மனித விழுமியங்கள் உள்ளன. சமய நடவைக்கைகள் இந்த விழுமியங்களை மீறும் போது, அந்த சமயத்தில் உள்ளவர், இலாதவர் எல்லாரிடமும் இருந்து அதற்கு எதிர்வினை வருவது தவிர்கவியலாதது.

6 minutes ago, விசுகு said:

என்னை அடுத்த அடுத்த முரட்டுப்பாதைகளுக்கு தள்ளும் கேள்வி இது மதத்தை தாண்டி என் குறிக்கோளுக்கு இடைஞ்சலான எதையும் நான் செய்யப்போவதில்லை டொட்.  நன்றி வணக்கம் 

நான் கேள்வியே கேட்கவில்லையே அண்ணா?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

திரிக்கு சம்பந்தமான செய்தி..

முகநூல் அதிர்ச்சி: சென்னையில் குழந்தைகளுக்கு அலகு   குத்தி கொடுமை!

Posted on August 6, 2018 at 7:49 am by Tamil 
 
குழந்தைகள் கதறி அழ, அவர்களுக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் வேல் (அலகு) குத்திய கொடுமை சென்னையில் அரங்கேறியுள்ளது.

ரமேஷ் சி.ஆர். என்ற முகநூல் பதிவர் நேற்று இது குறித்த படங்களை பதிவேற்றியிருக்கிறார்.

அப்படங்களில், சுமார் எட்டு மற்றும் நான்கு வயது குழந்தைகளின் கன்னங்களிலும் வேல் குத்தப்பட்டு எலுமிச்சம்பழம் தொங்கவிடப்பட்டுள்ளது.

பார்ப்பவர்களை பதறவைக்கும் இந்த படங்களை பதிவிட்ட ரமேஷ் சி.ஆர். என்ற பதிவர், , “இன்று சென்னை புலியாந்தோப்பு பகுதியில் உள்ள ஶ்ரீ முன்டகன்னியம்மன் கோவிலில் எங்கள் செல்வங்கள் பழம் குத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

1-20.jpg

இதற்கு பின்னூட்டமிட்டுள்ள பதிவர்கள் பலர், இச்செயலைக் கண்டித்திருக்கிறார்கள்.

நேற்று (05.08.2018) மாலை சுமார் நான்கு மணிக்கு பதிவிடப்பட்டுள்ள இந்த பதிவுக்கு இன்று (06.08.2018)  காலை 7.30 வரை, 66 பேர் லைக் குறியிட்டுள்ளார்கள். 73 பேர் ஆத்திரக்குறியீட்டையும் 12 பேர் சோக்க் குறியீட்டையும், இருவர் காதல் குறியீட்டையும் பதிந்துள்ளனர்.

அதே போல பலரும் குறிப்பிட்ட பதிவரை கண்டித்துள்ளனர்.

6.jpg

Gokul Anand: தயவு செய்து இப்படி செய்ய வேண்டாம்….வருத்தமாக இருக்கிறது…குழந்தையம் கடவுளும் ஒன்று

Thamarai Selvan மூளை கெட்ட முட்டாள்தனம் பாவம் டா அந்த குழந்தைக்குகளுக்கு வலி எப்படி இருக்கும், எங்க போனீங்க human rights Commission இதுதான் இந்தியாவின் வளர்ச்சியா ? கடவுள் உண்மை என்றால் நீங்கள் எல்லாம் நல்லா அனுபவிப்பீர்கள் !!

Thamarai Selvan நகரத்து காட்டு வாசிகள் !!

Sheik Abdullah இந்த வன்கொடுமைக்கு போஸ்க்கோ ல போட்டா கூட குத்தம் இல்ல…

Bright Singh Johnrose இப்படி பட்ட முட்டாள்களை மக்கள் மத்தியில் நிறுத்தி கேட்க வேண்டிய விதத்தில் கேட்டால் தான் இதை பார்த்து நான்கு பேர் நாளை தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்ய முயற்சிக்க மாட்டார்கள்

Brinda உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா. பெத்த குழந்தையை இப்படியா கொடுமைப்படுத்துவது. மனசாட்சி இல்லை. Child abuseல உங்களையும் உங்க மனைவியை தூக்கி உள்ள வெச்சா தான் அறிவு வரும்.

செல்வம் கே குத்தவேண்டுமானால் நீயும், உனது மனைவியும் உடம்பு பூர குத்திக்கிட்டு நகர்வலம் போகவேண்டியது தானே. நாகரிக காலத்தில் காட்டுமிராண்டிகள் போல செயல் செய்துவிட்டு கொஞ்சம் கூட கவலைப்படாமல் புகைப்படம் எடுத்து போடுகின்றீர்கள் என்றால் புரிந்து தான் செகின்றீர்களா இல்லை. புரியாமல் இருக்கின்றீர்களா?..

இனியன் துரைசாமி இரக்கமற்ற தந்தையை பெற்ற கொடுரமான செயல் கண்டிக்கத்தக்கது.

8.png

–    இவ்வாறு பலரும் கண்டனம் தெரிவித்து பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.

அதே நேரம், இச்செயலை ஆதரித்து பதிவிட்டவர்களும் இருக்கிறார்கள்.

Kamal Kamal என்பவர் வணங்கும் குறியீட்டை பதிந்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் “காட் ப்ளஸ் யூ” என்று பதிவிட்டுள்ளார்.

9.png

மேற்கண்ட பதிவு பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இயற்கை முறையில் வீட்டில் பிரசவம் பார்த்தால் தானாக முன்வந்து கைது செய்யும் அரசு, இது போன்று குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுக்க தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

https://patrikai.com/facebook-shockchildren-were-tortured-by-piercing-vel/

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இந்தச் செய்தியைக் கண்டுகொள்ளாமல் இதில் கருத்துக்கள் எழுதுபவர்கள் உங்கள் ஞானத்தேடலையும் சமய கலாச்சார நியாயப்படுத்களையும் கொன்ரினியூ பண்ணுங்கள்😷

 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

அலகு குத்தப்படாமல் இருக்கும் குழந்தையின் கண்களில் மரணபயம் தெரிகிறது 😡.

மாட்டுக்கு கூட புளூகிராஸ் இருக்கு, இந்த பச்சை மண்ணுகளுக்குத்தான் கேட்பாரில்லாமல் போய்விட்டது 😥

Share this post

Link to post
Share on other sites

இந்த திரியில் இன்னும் ஏன் நின்று எல்லோரும் புடுங்குப்படினம் என்று எனக்கு விளங்கவில்லை ... எல்லோரும் ஒற்றுமையாய் அந்த சிறுவர்களுக்கு அலகு குத்தினதை கண்டிக்கினம் ...அரைவாசிப் பேர் என்ன எழுதினம் என்றும் புரியல்ல😕

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, கிருபன் said:

இந்தச் செய்தியைக் கண்டுகொள்ளாமல் இதில் கருத்துக்கள் எழுதுபவர்கள் உங்கள் ஞானத்தேடலையும் சமய கலாச்சார நியாயப்படுத்களையும் கொன்ரினியூ பண்ணுங்கள்😷

உண்மையிலேயே இந்தக் குழந்தைகளின் மேல் அக்கறை இருந்தால் நேரே போய் உரியவர்களிடம் விசாரித்து தகுந்த அறிவுரை வழங்கியிருக்கலாம். 

ஆனால் இங்கு சிலர் தலைப்பையும் தாண்டி இந்து மத நம்பிக்கைகளை கேவலப்படுத்த முனைகையில் அதற்கான பதிலை நான் கொடுப்பது அவசியமாகிறது. எனது பதில்கள் கொடுமை ஏதாவது உண்மையில் நடந்திருந்தால் நியாயப்படுத்துவது அல்ல. தீர விசாரித்து ஒரு முடிவுக்கு வருதலாகும். முகநூல் போராளிகள், யாழ் சமூகப் போராளிகள் சொல்வதற்காக இணையத்தில் பகிரப்படும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்ப நான் தயாராக இல்லை. 

On 8/15/2019 at 7:49 AM, மல்லிகை வாசம் said:

இந்து மத மூடநம்பிக்கையை எதிர்ப்பதாக இவ்வாறான பல திரிகள் முன்னரும் ஆரம்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இது இங்குள்ள பலருக்கும் தெரியும்.

இத் திரிகளுக்கு கருத்து எழுதுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்து மதத்தில் இருக்கும் வேறு பல நம்பிக்கைகளையும் அனாவசியமாகக் கேலி செய்கிறார்கள் என்று திரிகளை முழுவதுமாக வாசித்தவர்களுக்குப் புரியும். 

இவ்வாறு அவர்கள் வீண் வம்பிழுக்கும்போது நாமும் தலைப்பை விட்டு விலகி அவர்களின் கருத்துக்கு மறு கருத்து எழுதவேண்டிய நிலை உள்ளது. 

இங்கு ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை விசாரித்தால் அல்லது அந்த இடத்தில் இருந்தோரைக் கேட்டால் தான் இதற்கான தெளிவான பதில் கிடைக்கும். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, கிருபன் said:

அப்படங்களில், சுமார் எட்டு மற்றும் நான்கு வயது குழந்தைகளின் கன்னங்களிலும் வேல் குத்தப்பட்டு எலுமிச்சம்பழம் தொங்கவிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இக் குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவர் என்றால், இக்குழந்தைகளின் படத்தை ஒரு பொது வெளியில் இணைத்திருக்க மாட்டீர்கள். 

மற்றவர்களும் பகிர்கிறார்கள் தானே என்ற அலட்சியத்தால் நீங்களும் பகிர்ந்து அவர்களின் privacyஐ மீறுகிறீர்கள் இல்லையா? அலகு குத்தி கொடுமைப்படுத்துகிறார்கள் எனப் புலம்பும் நீங்கள், முன்பின் தெரியாதவர்கள் முன் அவர்கள் படத்தைப் பகிர்தல் ஆபத்தில்லையா? நிழலி ஏற்கனவே இத்திரியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் ஏன் இந்த அலட்சியம்?

4 hours ago, goshan_che said:

அலகு குத்தப்படாமல் இருக்கும் குழந்தையின் கண்களில் மரணபயம் தெரிகிறது 😡.

மாட்டுக்கு கூட புளூகிராஸ் இருக்கு, இந்த பச்சை மண்ணுகளுக்குத்தான் கேட்பாரில்லாமல் போய்விட்டது 😥

இங்கே நேர்முக வர்ணனை செய்து பயனில்லை. அது சரி நீங்கள் vegetarianஆ? 

3 hours ago, ரதி said:

இந்த திரியில் இன்னும் ஏன் நின்று எல்லோரும் புடுங்குப்படினம் என்று எனக்கு விளங்கவில்லை ... எல்லோரும் ஒற்றுமையாய் அந்த சிறுவர்களுக்கு அலகு குத்தினதை கண்டிக்கினம் ...அரைவாசிப் பேர் என்ன எழுதினம் என்றும் புரியல்ல😕

அவர்கள் தாங்கள் முற்போக்கு வாதிகள் என நிரூபிக்க இத்திரியைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையான அக்கறை இருந்தால் இங்கே இதைச் சாக்காக வைத்து மதத்தை இழிவுபடுத்த மாட்டார்கள்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, tulpen said:

இரண்டு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த எமது பாட்டன் பூட்டன்களின்  பிறந்த திகதியே Not known  என்ற நிலையிலேயே நிலையில் அந்த ம க்கள் தன்னிறைவுடன் வாழ்ந்தார்கள் என்று சகட்டு மேனிக்கு கூறுகின்றீர்கள். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இதற்கெல்லாம் பிறந்த திகதி தேவையில்லை. நமது பாட்டன், பூட்டன் வழி வந்த தகவல்களே போதும்.

வெள்ளையர் வளமான நமது நாடுகளை சுரண்டிக் கொண்டு போனது வரலாறு. உண்மையான அக்கறை இருந்தால் ஆராய்ந்து பார்க்கலாம். 

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, tulpen said:

இரண்டு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த எமது பாட்டன் பூட்டன்களின்  பிறந்த திகதியே Not known  என்ற நிலையிலேயே நிலையில் அந்த ம க்கள் தன்னிறைவுடன் வாழ்ந்தார்கள் என்று சகட்டு மேனிக்கு கூறுகின்றீர்கள். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இலங்கை வரலாறு பாகம் 1, ஆசிரியர்: செ.கிருஷ்ணராஜா

http://www.noolaham.org/wiki/index.php

ஐரோப்பிய வருகைக்கு முந்தைய இலங்கையின் விரிவான வரலாறைக் கூறும் ஆராய்ச்சி நூல் இது. இப்படி பல நூல்கள் உள்ளன.

பொறுமையும், ஆர்வமும் இருந்தால் வீண் விவாதம் செய்யாமல் உண்மையை ஆராய்ந்து உணரலாம். 😊

உங்களுக்காக இன்னொரு நூல்:

இலங்கையில் தமிழர் : ஒரு முழுமையான வரலாறு :  கி.மு. 300-கி.பி. 2000 /  முருகர் குணசிங்கம்.

http://www.nlb.gov.sg/biblio/13652002

Edited by மல்லிகை வாசம்

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மல்லிகை வாசம் said:

உண்மையிலேயே இக் குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவர் என்றால், இக்குழந்தைகளின் படத்தை ஒரு பொது வெளியில் இணைத்திருக்க மாட்டீர்கள். 

மற்றவர்களும் பகிர்கிறார்கள் தானே என்ற அலட்சியத்தால் நீங்களும் பகிர்ந்து அவர்களின் privacyஐ மீறுகிறீர்கள் இல்லையா? அலகு குத்தி கொடுமைப்படுத்துகிறார்கள் எனப் புலம்பும் நீங்கள், முன்பின் தெரியாதவர்கள் முன் அவர்கள் படத்தைப் பகிர்தல் ஆபத்தில்லையா? நிழலி ஏற்கனவே இத்திரியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் ஏன் இந்த அலட்சியம்?

இங்கே நேர்முக வர்ணனை செய்து பயனில்லை. அது சரி நீங்கள் vegetarianஆ? 

அவர்கள் தாங்கள் முற்போக்கு வாதிகள் என நிரூபிக்க இத்திரியைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையான அக்கறை இருந்தால் இங்கே இதைச் சாக்காக வைத்து மதத்தை இழிவுபடுத்த மாட்டார்கள்.

இது நேர்முகவர்ணனை இல்லை. பகிர பட்ட ஒரு விடயத்தை ஒட்டிய எனது கருத்து.

உங்களை போலவே இங்கே உடுக்கடித்து பிரயோசனமில்லை, போய் உங்கள் இந்து சமய உடுக்கடிப்பை வைரவர் கோயிலில் அல்லது, பூசை முடிந்த பிறகு நடக்கும் சத்சங்கத்தில் நடத்துங்கள் எனச் சொல்ல எனக்கும் அதிக நேரம் எடுக்காது.

ஆனால் நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் எனக்கு சக கருத்தாளரை மதிக்கும் மாண்பும் தம் கருத்தை அவர் சொல்ல சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற அறிவும் நன்றாகவே இருக்கிறது.

நான் புலால் உண்பவந்தான். எனக்கு மாட்டை உணவுக்காக அறுத்து உண்பதற்கும், பிள்ளைகள் மேல் நம்பிக்கைக்காக வன்முறையை ஏவுவதற்குமான வித்தியாசம் நன்றாகவே தெரிகிறது.

 அதனால்தான் மாட்டுக்கு “கூட” என எழுதியுள்ளேன்.

நீங்கள் எழுதியதை பார்த்தால் உங்களுக்கு மனித குழந்தைகளுக்கும், மாட்டுக்குமான வித்தியாசம் தெரியவில்லை போலுள்ளது.

மாட்டைத் தின்றான் என்று மனிதனை அடித்து கொன்ற காவிக் காடைகளுக்கும் இந்தவித்தியாசம் தெரியாமல் இருக்கிறது என்பதும் கருதத்தகுந்தது.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, மல்லிகை வாசம் said:

உண்மையிலேயே இக் குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளவர் என்றால், இக்குழந்தைகளின் படத்தை ஒரு பொது வெளியில் இணைத்திருக்க மாட்டீர்கள். 

மற்றவர்களும் பகிர்கிறார்கள் தானே என்ற அலட்சியத்தால் நீங்களும் பகிர்ந்து அவர்களின் privacyஐ மீறுகிறீர்கள் இல்லையா? அலகு குத்தி கொடுமைப்படுத்துகிறார்கள் எனப் புலம்பும் நீங்கள், முன்பின் தெரியாதவர்கள் முன் அவர்கள் படத்தைப் பகிர்தல் ஆபத்தில்லையா? நிழலி ஏற்கனவே இத்திரியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் ஏன் இந்த அலட்சியம்?

இப்படியான நிகழ்வுகளை அலட்சியப்படுத்தி அவை தொடர்வதை தடுக்காமல் இருக்கவேண்டும் என்ற உங்கள் உள்ளக்கிடக்கை தெரிகின்றது. 

முதலாவதாக இணைக்கப்பட்ட பதிவில் படம்தான் செய்தியாக இருந்தது. ஆனால் அது முகநூல் போன்ற பொதுவெளியில் பகிரப்ப்பட்டு காரசாரமான விவாதங்கள் நடைபெறுவதால், அதன் context ஐ தும்பைவிட்டு வாலைப் பிடித்துத் தொங்கும் யாழ் கள கருத்தாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இணைத்தேன்.

மேலும் நிழலி கூறியபடி இது privacy பிரச்சினையென்றால் திரியை இழுத்து மூடியிருக்கலாம்.😎

இனி இந்தத் திரியில் தமிழரின் வரலாற்றுப் பாடம் படிப்போம். அது மகாவம்ச வரலாற்றைப் படிப்பதை விட நல்லதுதானே😂

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, கிருபன் said:

இப்படியான நிகழ்வுகளை அலட்சியப்படுத்தி அவை தொடர்வதை தடுக்காமல் இருக்கவேண்டும் என்ற உங்கள் உள்ளக்கிடக்கை தெரிகின்றது. 

 இந்த விடயத்தில் எனது கருத்தை பல முறை இங்கு பதிந்துள்ளேன். அதை முழுமையாக வாசிக்காமல் மீண்டும் மீண்டும் என் மேல் குற்றம் சுமத்தி பயனில்லை.

இஙகோ, அல்லது முகநூலிலோ நாங்கள் கூடிக் கும்மியடித்து ஒரு பயனுமில்லை. தனிநபர் மீதான காழ்ப்புணர்ச்சியும், அந்த குழந்தைகளின் படங்களை பொது வெளியில் பகிர்வதும் ஆரோக்கியமான செயலல்ல.

16 minutes ago, கிருபன் said:

முதலாவதாக இணைக்கப்பட்ட பதிவில் படம்தான் செய்தியாக இருந்தது. ஆனால் அது முகநூல் போன்ற பொதுவெளியில் பகிரப்ப்பட்டு காரசாரமான விவாதங்கள் நடைபெறுவதால், அதன் context ஐ தும்பைவிட்டு வாலைப் பிடித்துத் தொங்கும் யாழ் கள கருத்தாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இணைத்தேன்.

Context ஐ விட்டு மதத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி காட்டி வீண் விவாதம் புரிபவர்கள் இதைப் புரிந்து கொண்டால் சரி. அவர்கள் தான் தலைப்பை மீறி எதற்கெடுத்தாலும் மதத்தைக் குறை கூறுகின்றனர்.

19 minutes ago, கிருபன் said:

மேலும் நிழலி கூறியபடி இது privacy பிரச்சினையென்றால் திரியை இழுத்து மூடியிருக்கலாம்.😎

அது நிர்வாகத்தினர் எடுக்க வேண்டிய முடிவு. அவ்வாறு நிர்வாகம் திரியை இழுத்து மூடினால் இங்கு சில முற்போக்குவாதிகளுக்கு மெல்லுவதற்கு அவல் இல்லாமல் போய்விடுமே! 😊

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

உங்களை போலவே இங்கே உடுக்கடித்து பிரயோசனமில்லை, போய் உங்கள் இந்து சமய உடுக்கடிப்பை வைரவர் கோயிலில் அல்லது, பூசை முடிந்த பிறகு நடக்கும் சத்சங்கத்தில் நடத்துங்கள் எனச் சொல்ல எனக்கும் அதிக நேரம் எடுக்காது.

உடுக்கடித்து, பூசை செய்வது நாத்திகரான உங்களுக்கு இழிவாகத் தோன்றலாம். நமக்கு அப்படி அல்ல. உங்கள் எழுத்து இன்னொருவரின் நம்பிக்கை மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

3 hours ago, goshan_che said:

ஆனால் நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் எனக்கு சக கருத்தாளரை மதிக்கும் மாண்பும் தம் கருத்தை அவர் சொல்ல சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற அறிவும் நன்றாகவே இருக்கிறது.

இவ்வாறான காழ்ப்புணர்ச்சியை வைத்துக்கொண்டு சக கருத்தாளரை மதிக்கிறீர்கள் என்பது வேடிக்கையான பேச்சு. 

3 hours ago, goshan_che said:

நீங்கள் எழுதியதை பார்த்தால் உங்களுக்கு மனித குழந்தைகளுக்கும், மாட்டுக்குமான வித்தியாசம் தெரியவில்லை போலுள்ளது.

மாட்டைத் தின்றான் என்று மனிதனை அடித்து கொன்ற காவிக் காடைகளுக்கும் இந்தவித்தியாசம் தெரியாமல் இருக்கிறது என்பதும் கருதத்தகுந்தது.

நான் எனது அபிப்பிராயத்தை ஏற்கனவே பல முறை எழுதிவிட்டேன். மேலே கிருபனுக்கும் ஏற்கனவே மீண்டும் பதிலளித்தாயிற்று. 

எனது கருத்தைத் திரித்து நீங்கள் உங்கள் முற்போக்கு வாதத்தை நிலைநாட்ட முயல்கிறீர்கள். மேலும், குழந்தைகளை விலங்குகளுடன் ஒப்பிட்டு நீங்கள் எழுதிய கருத்துக்கான பதிலைத் தான் அப்படி எழுதினேன்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

நான் புலால் உண்பவந்தான். எனக்கு மாட்டை உணவுக்காக அறுத்து உண்பதற்கும், பிள்ளைகள் மேல் நம்பிக்கைக்காக வன்முறையை ஏவுவதற்குமான வித்தியாசம் நன்றாகவே தெரிகிறது.

'விலங்குகள் மீது கூட கருணை காட்டும் இந்தக் காலத்தில்...' என்று அடிக்கடி இத் திரியில் எழுதினீர்கள். அது தான் நீங்கள் உண்மையிலேயே அனைத்து உயிர்கள் மீதும் கருணை கொண்டவர் என்று தவறாக புரிந்து கொண்டேன். 😊

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, மல்லிகை வாசம் said:

இலங்கை வரலாறு பாகம் 1, ஆசிரியர்: செ.கிருஷ்ணராஜா

http://www.noolaham.org/wiki/index.php

ஐரோப்பிய வருகைக்கு முந்தைய இலங்கையின் விரிவான வரலாறைக் கூறும் ஆராய்ச்சி நூல் இது. இப்படி பல நூல்கள் உள்ளன.

பொறுமையும், ஆர்வமும் இருந்தால் வீண் விவாதம் செய்யாமல் உண்மையை ஆராய்ந்து உணரலாம். 😊

உங்களுக்காக இன்னொரு நூல்:

இலங்கையில் தமிழர் : ஒரு முழுமையான வரலாறு :  கி.மு. 300-கி.பி. 2000 /  முருகர் குணசிங்கம்.

http://www.nlb.gov.sg/biblio/13652002

நான்கூற வந்த விடயம் உங்களுக்கு விளங்க வில்லை  என்று நினைக்கிறேன். வரலாற்றைப் பதிவு  செய்வதில் நம்மவர்கள் எம்மவர்கள் மிக மோசமாக பின்தங்கி இருந்தனர் என்று இந்நூலை எழுதிய முருகர் குணசிங்கமே ஒப்புக்கொண்ட விடயம். வரலாற்றை பாதுகாக்காத இனமாக இருந்ததால் நூல் எழுதுவதில்  தனக்கு ஏற்பட்ட பாரிய  சிரமங்களைப் பற்றி தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவரே விபரித்திருந்தார். ஐரோப்பிய வரலாற்றுடன் ஒப்பிடும் போது ஆசிய வரலாறு மிக மிக துல்லியத்தன்மை குறைந்த வரலாறு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை . இதையே சுருக்கமாக குறிப்நீபிட்டிருந்தேன். நேரில்கண்டது போல் வரலாற்றை குறிப்பிட்டிருந்ததால் அதை இங்கு குறிப்பிட்டேன் .   

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, tulpen said:

நான்கூற வந்த விடயம் உங்களுக்கு விளங்க வில்லை  என்று நினைக்கிறேன். வரலாற்றைப் பதிவு  செய்வதில் நம்மவர்கள் எம்மவர்கள் மிக மோசமாக பின்தங்கி இருந்தனர் என்று இந்நூலை எழுதிய முருகர் குணசிங்கமே ஒப்புக்கொண்ட விடயம். வரலாற்றை பாதுகாக்காத இனமாக இருந்ததால் நூல் எழுதுவதில்  தனக்கு ஏற்பட்ட பாரிய  சிரமங்களைப் பற்றி தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவரே விபரித்திருந்தார். ஐரோப்பிய வரலாற்றுடன் ஒப்பிடும் போது ஆசிய வரலாறு மிக மிக துல்லியத்தன்மை குறைந்த வரலாறு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை . நீங்கள் நேரில்கண்டது போல் வரலாற்றை குறிப்பிட்டிருந்ததால் அதை இங்கு குறிப்பிட்டேன் .   

எல்லா வரலாற்றையும் நேரில் போய்த்தான் கண்டு நிரூபிக்க வேண்டுமா? அப்படிப் பார்த்தால் இன்று நாம் நம்பும் பல விஷயங்களை நேரில் பார்த்தா உறுதிப்படுத்துகிறோம்? என்ன மாதிரியான கருத்து இது? 

எது எப்படியோ, எமது முன்னோர் ஐரோப்பிய வருகைக்கு முன்னர் தன்னிறைவாக வாழ்ந்தனர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேலே நான் குறிப்பபிட்ட புத்தகங்களை ஆறுதலாக வாசித்து உணரவும். 

16 hours ago, tulpen said:

இரண்டு தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த எமது பாட்டன் பூட்டன்களின்  பிறந்த திகதியே Not known  என்ற நிலையிலேயே நிலையில் அந்த ம க்கள் தன்னிறைவுடன் வாழ்ந்தார்கள் என்று சகட்டு மேனிக்கு கூறுகின்றீர்கள். இதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

நீங்கள் கேட்ட கேள்வியே திரிக்கத் தெரிந்த உங்களுக்கு, நான் சொன்ன கருத்துக்கள், ஏன் வரலாற்று உண்மைகளை கூட திரிக்க மாட்டீர்கள் எனபது என்ன நிச்சயம்? ஆதாரங்கள் காட்டியவுடன் கேள்வியை மாற்றும் சுத்துமாத்து தெரிந்த உங்களுடன் ஆக்கபூர்வமான கருத்தாடல் செய்ய முடியாது.

நீங்கள் முதலில் கேட்ட கேள்வியை மேலே quote பண்ணியுள்ளேன். 

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, tulpen said:

வரலாற்றைப் பதிவு  செய்வதில் நம்மவர்கள் எம்மவர்கள் மிக மோசமாக பின்தங்கி இருந்தனர் என்று இந்நூலை எழுதிய முருகர் குணசிங்கமே ஒப்புக்கொண்ட விடயம்.

மேலும் வரலாற்றைப் பதிவு செய்யாமல் இருப்பது வேறு. தன்னிறைவாக, நிம்மதியான வாழ்க்கை வாழ்வது என்பது வேறு.

மேற்குலகை வால் பிடிக்கும் உங்களுக்கு நம் முன்னோர்கள் வாழ்க்கை பின்தங்கியதாகத் தெரிந்தால்,

1) அது உங்கள் மேலாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது. மேற்குலகிற்கு வால் பிடிப்பது உயர்வான, கௌரவமான ஒன்று என்று

அல்லது

2) முன்னோர்களைப் போற்றுவது தாழ்மையானது என நினைக்கிறீர்கள். 

அது உங்கள் பார்வை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எமது பார்வையில் நாங்கள் தெளிவாக உள்ளோம். நன்றி

Share this post

Link to post
Share on other sites

சிலவற்றை எழுத வார இறுதியில் தான் நேரம் கிடக்கிறது , அதுவும் துணைவியார் மகளை பார்க்கவெண்டு அடுத்த மாநிலத்துக்கு போயிருப்பதால் எனது நேரம் ஏறக்குறைய முழுவதும் எனது கட்டுப்பாட்டிலேயே

பறவைகளில் பருந்து வித்தியாசமானது , மழை பெய்யும் போதும் அது பறக்கும் ஆனால் நனைய மாட்டாது , ஏனெனில் மழை முகிலுக்கும் மேலாக அது பறப்பதால்.

மலைப்பாங்கான பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் , ஊட்டி வளர்க்கும் , குஞ்சு தானாக பறக்கக்  கூடிய பருவம் வந்ததும் , அதனை வெளியே இழுத்தெடுத்து மலையிலிருந்து கீழே தள்ளி விடும்

குஞ்சு (மரண பயத்தில் ??)  கெக்கே பிக்கெக்கே என்று தத்தளித்து சிறகை விரித்து பறக்க முயலும் , எங்கேயாவது இடிபடப் போகுதென்றால்  தாய் பறவை உடனேயும் சென்று மீண்டும் உச்சிக்கு தூக்கிக் கொண்டு வந்து மீண்டும் தள்ளி விடும் .

பறவை தானாகப் பறக்கும் வரை இது தொடரும்     

Parenting at its best optimum level

வாழ்வில் நிலையானது மரணம் மட்டுமே , இயற்கையாகப் பிறக்கும் போது மனிதர்( இருவரும்)  அனுபவிப்பது மரண வலிக்கு ஒத்தது  என்பது கோட்பாடு !

அன்றிலிருந்து  உண்மையாக இறக்கும் வரை  மரண பயம் என்பது வாழ்வியலில் ஒன்றிப்போயிருக்கும் ஒரு விடயம் .

வீட்டுவேலை செய்யவில்லை என்று வகுப்பு மாஸ்டர் முன்னுக்கு  வரச் சொல்லும் போதாகட்டும் , சைக்கிளில் டபுள் போகும் போது போலீஸ் மறிக்கும் போதாகட்டும் , வாகனம் ஓட்டும் போது   முன் வாகனத்துடன் முட்டும் போதாகட்டும் , வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆகும் போதாகட்டும்

எப்போதுமே மரண பயம் தான்

இதற்கு மனிதர்களை ஆயத்தப் படுத்த வேண்டிய தேவை இருக்கிறது ,

இதனால் தான் இயற்கையாகவே பிறக்கும் போது அந்த வலிக்கு உட்பட வைக்கிறது , பகுத்தறிவு உடைய சீவராசிகளுக்கு இது விசேடமாக தேவைப்படுகிறது ,எனவே மனிதனும் கட்டுப்படுத்தப் பட்ட முறையில்  வாழ்வியலில் இந்த வலிக்கு உட்படும் செயற்பாடுகளை மேற்கொள்கிறான் ….விசேடமாக வளர்ந்து வரும் இளம் வயதில்….

சும்மா சகட்டு மேனிக்கு ஊசி குத்தி விட்டான் சித்திரவதை என்றெல்லாம் மற்றய பெற்றோரின் வளர்ப்பு முறைகளை விமர்சிப்பது முறையல்ல என்பது எனது கருத்து , கோட்டினை எங்கே  கீறிக் கொள்ள  வேண்டும் என்பதனை நாகரிகமான முறையில் அவரவர் தெரிவுக்கே விட்டு விடலாமா ….

எந்தக் காலத்திலும் எப்போதுமே உண்மையான விடயம் " தி பிட்டெஸ்ட் சேவைவ்ஸ் " (FITTEST SURVIVES)

இனிய வார இறுதி வாழ்த்துக்கள்   

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, மல்லிகை வாசம் said:

எல்லா வரலாற்றையும் நேரில் போய்த்தான் கண்டு நிரூபிக்க வேண்டுமா? அப்படிப் பார்த்தால் இன்று நாம் நம்பும் பல விஷயங்களை நேரில் பார்த்தா உறுதிப்படுத்துகிறோம்? என்ன மாதிரியான கருத்து இது? 

எது எப்படியோ, எமது முன்னோர் ஐரோப்பிய வருகைக்கு முன்னர் தன்னிறைவாக வாழ்ந்தனர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேலே நான் குறிப்பபிட்ட புத்தகங்களை ஆறுதலாக வாசித்து உணரவும். 

சொல்லவந்த விடயத்தின் பிரதான கருத்தை  எளிதாக புரிய விருப்பம்  இல்லாததால் உதாணங்களுக்கு  கருத்தெழுதி திசை நேரத்தை போக்கடிக்க விரும்புகின்றீர்கள். நான் கூறிய விடயம் வரலாற்றை பேணுவதில்  எமது முன்னோர்கள் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்தார்கள் என்பதே. இந்து மதத்தில் உள்ள அக்கறையை விட அநோக்கியல்கள் பரப்பிய மூடத்தனங்களை பேணவேண்டும் என்பதுல் குறியாக இருக்கினலறீர்கள் என்பது உங்களது பதில்களில் தெளிவாக தெரிகிறது. 

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, tulpen said:

சொல்லவந்த விடயத்தின் பிரதான கருத்தை  எளிதாக புரிய விருப்பம்  இல்லாததால் உதாணங்களுக்கு  கருத்தெழுதி திசை நேரத்தை போக்கடிக்க விரும்புகின்றீர்கள். 

இந்த விமர்சனம் உங்களுக்கே பொருந்தும். நான் சரியான ஆதாரம் கொடுத்தும் உங்கள் வசதிக்காக கூசாமல் திரிபுபடுத்தும் உங்களுடன் விவாதம் செய்வது எனது நேரத்தயும், சக்தியையும் தான் விரயம் செய்கிறது. நமது கருத்தாடலை வாசிப்போருக்கு இது தெளிவாக தெரியும் என நினைக்கிறேன். இதே கருத்தை முன்னரும் சில உறவுகள் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, மல்லிகை வாசம் said:

மேலும் வரலாற்றைப் பதிவு செய்யாமல் இருப்பது வேறு. தன்னிறைவாக, நிம்மதியான வாழ்க்கை வாழ்வது என்பது வேறு.

மேற்குலகை வால் பிடிக்கும் உங்களுக்கு நம் முன்னோர்கள் வாழ்க்கை பின்தங்கியதாகத் தெரிந்தால்,

1) அது உங்கள் மேலாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது. மேற்குலகிற்கு வால் பிடிப்பது உயர்வான, கௌரவமான ஒன்று என்று

அல்லது

2) முன்னோர்களைப் போற்றுவது தாழ்மையானது என நினைக்கிறீர்கள். 

அது உங்கள் பார்வை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எமது பார்வையில் நாங்கள் தெளிவாக உள்ளோம். நன்றி

ஒரு விடயத்தை கூறும்போது அதை கிரகிக்கும் ஆற்றலே உங்களுக்கு இல்லையா.?  அதனால்  தான் முள்டாள்த்தனங்கள்  தொடரவேண்டுமென  நினைக்கிறீர்கள். ஆனால் இன்றைய புதிய தலைமுறை பிள்ளைகள்  இந்து மத்தால் விதைக்கப்பட்ட நச்சு விதைகளான மூடத்தனத்தை தொடராது என்ற நம்பிக்கை எனக்குன்று. இந்த சந்ததியின் பல மூடத்தனங்கள் அவர்களுடனேயே   புதைக்கப்படல் வேண்டும். நிச்சயம் மூடத்தனங்கள  மட்டும் புதைக்கப்படும். 

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, tulpen said:

இந்து மதத்தில் உள்ள அக்கறையை விட அநோக்கியல்கள் பரப்பிய மூடத்தனங்களை பேணவேண்டும் என்பதுல் குறியாக இருக்கினலறீர்கள் என்பது உங்களது பதில்களில் தெளிவாக தெரிகிறது. 

மூடத்தனம் மூடத்தனம் என்று மீண்டும் மீண்டும் கூறுவதால் மூடத்தனமாக முடியாது. 

நான் முன்னர் எழுதியது போல் எனது நம்பிக்கையில் நான் தெளிவாக உள்ளேன். பிறர் நம்பிக்கையை அவமதிப்பது ஒரு மனநோய். ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கும் உங்களுக்கும் வெகுதாரம். எனவே உங்களுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இனியும் எனக்கில்லை. நன்றி

2 minutes ago, tulpen said:

முள்டாள்த்தனங்கள்  தொடரவேண்டுமென  நினைக்கிறீர்கள். ஆனால் இன்றைய புதிய தலைமுறை பிள்ளைகள்  இந்து மத்தால் விதைக்கப்பட்ட நச்சு விதைகளான மூடத்தனத்தை தொடராது என்ற நம்பிக்கை எனக்குன்று. இந்த சந்ததியின் பல மூடத்தனங்கள் அவர்களுடனேயே   புதைக்கப்படல் வேண்டும். நிச்சயம் மூடத்தனங்கள  மட்டும் புதைக்கப்படும். 

"மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் ......"

சுற்றி சுற்றி அதே கருத்து.... 

இந்துமதம் நச்சு விதை அல்ல, கற்பகதரு... இங்கே உங்களைப் போன்றவர்கள் விதைப்பது தான் விஷம்.

நன்றி 

வணக்கம்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.