-
Topics
-
Posts
-
வாழ்த்துக்கள் தமிழ்தேசியன்.
-
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலே நியமிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் கடந்த வாரம் அதிக முக்கியத்துவத்தை பிடித்திருந்தது. இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஒன்றுக்கான பணிப்பாளர் நியமனம் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தது கிடையாது. அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. அது மாத்திரமே இந்த அளவுக்கு சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டமைக்கு காரணமல்ல. புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான படை அதிகாரிகளுக்கு அளித்து வரும் உயர் பதவிகள், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னரான சூழல், பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலேயின் பின்னணி ஆகியனவும் கூட இந்தளவு கவனயீர்ப்புக்கு காரணம் தான். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அரச பாதுகாப்பு துறைகளில் புதிய அரசாங்கத்துக்கு நம்பிக்கையானவர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒவ்வொரு அரசாங்கம் பதவிக்கு வரும் போதும் நிகழுகின்ற மாற்றம் தான். கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவருக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உயர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக சேவையில் இருந்து விலகிய அதிகாரிகள் பலரும் கூட மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து தற்போது அவருக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலக முன்னாள் இராணுவ அதிகாரியான கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதையடுத்து பிரிகேடியர் சுரேஷ் சாலே, எஸ் ஐ எஸ் எனப்படும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருக்கிறார். அரச நிர்வாக கட்டமைப்பில் இராணுவ அதிகாரிகள், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்பதையே இந்த நியமனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி என்பதாலும், அவர் இராணுவ பாணியிலான ஆட்சியை நடத்த விரும்புவதாலும், தனக்கு நம்பிக்கையானவர்களையே வைத்துக் கொள்ள முனைவதாலும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது அவர் அதிகம் நம்பிக்கை கொண்டிருக்காததாலும்தான் அவர் சீருடை அதிகாரிகளை அதிகளவில் நியமித்து வருகிறார். இது இராணுவ ஆட்சியின் சாயலை அரசாங்கத்துக்க ஏற்படுத்தி வருகிறது. கோட்டாபய ராஜபக்ஷவினால் புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பிரிகேடியர் சுரேஷ் சாலே ஆகிய இருவரும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இராணுவ புலனாய்வுப் பிரிவின் உயர்மட்டப் பதவிகளில் இருந்தவர்கள். 2016 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி இராணுவப் புலனாய்வுப் படைப் பிரிவின் பிரதானியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் உம், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஷ் சாலேவும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் இடமாற்றம் செய்யப்பட்டனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை பொலிசாருக்கு கொடுத்து ஒத்துழைப்பு வழங்கத் தவறியதால் இவர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புகள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தன . அத்துடன் அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் அட்டகாசங்களும் அதிகரித்திருந்தன. ஆவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு இருப்பதாகவும் அப்போது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இந்த இரண்டு காரணிகளின் பின்னணிகள் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பிரிகேடியர் சுரேஷ் சாலே ஆகிய இருவரும் இராணுவ புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஓய்வு பெற்றிருந்தார். பிரிகேடியர் சாலே மியன்மாரில் இலங்கை தூதரகத்திலும் இராணுவ தலைமையகத்திலும் பணியாற்றினார். அத்துடன் வெளிநாட்டு கற்கை நெறியிலும் பங்கேற்றிருந்தார். பிரிகேடியர் சுரேஷ் சாலே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர். அவரது நம்பிக்கையை பெற்றவர் அதனால்தான் அவர் 2016இல் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து முன்னைய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டார். இப்போது அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை புலனாய்வு சேவைகளில் அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வுப் பணியகம், இஇராணுவப் புலனாய்வுப் பணியகம் ஆகியன முக்கியமானவை. இதில் அரச புலனாய்வு சேவை பெரும்பாலும் பொலிஸ் சேவையில் உள்ள அதிகாரிகளை கொண்டது. இராணுவ புலனாய்வுப் பணியகம் முற்றிலும் இராணுவ அதிகாரிகளை கொண்டது. தேசிய புலனாய்வுப் பணியகம் பொலிஸ், முப்படைகள் என்பனவற்றின் அதிகாரிகளை கலவையாக கொண்டது. மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தேசிய புலனாய்வுப் பணியகமும் இராணுவப் புலனாய்வு பணியகமுமே முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாக செயற்பட்டிருந்தன. பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த இரண்டு அமைப்புகளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண, தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவராகவும் இராணுவ புலனாய்வு பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஷ் சாலேவும் அப்போது பதவி வகித்தனர். ஆனால் 2011ஆம் ஆண்டில் இருந்து இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஷ் சாலே அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது இராணுவப் புலனாய்வுப் பிரிவில் அவருக்கு கீழ் இருந்த இரண்டு படைப்பிரிவுகளும் கலைக்கப்பட்டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு புலனாய்வுப் பிரிவை சாராத அதிகாரிகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டனர். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக சேவை நீடிப்பு வழங்கப்பட்ட பொலிஸ் புலனாய்வு அதிகாரியான சிசிர மெண்டிஸ் நியமிக்கப்பட்டார். அரச புலனாய்வு சேவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முதன்மையான புலனாய்வு அமைப்பாக மாற்றப்பட்டது. இது பொலிஸ் மற்றும் சிவில் புலனாய்வாளர்கள் கொண்டது. மைத்திரி ரணில் கூட்டு அரசாங்கம் இராணுவப் பின்னணி அல்லாத சிவில் ஆட்சி நடப்பதாக காட்டுவதற்கு விரும்பியது. அதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்கள் நடக்கும் வரை இந்த நிலைதான் காணப்பட்டது. ஈஸ்டர் தின தாக்குதல் அரசாங்க புலனாய்வு அமைப்புகளின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. அரச புலனாய்வு சேவைக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டு இருந்தபோதும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதன் விளைவாகவே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹேமஸ்ரீ பெர்னாண்டோவை பதவி விலகச் செய்தார். பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தர பதவி விலக மறுத்ததால் அவரை இடை நிறுத்தினார். தேசிய புலனாய்வு பணிப்பாளராக இருந்த சிசிர மெண்டிசுக்கு சேவை நீடிப்பு வழங்காமல் அந்த பதவியில் இருந்து நீக்கினார். ஆனாலும் அரச புலனாய்வு பணிப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தாக்குதல் குறித்து விசாரித்த ஆணைக்குழுக்கள், முதன்மையாக குற்றம் சாட்டியிருந்தது அரச புலனாய்வு சேவையின் மீது தான். அரச புலனாய்வு சேவைக்கு தான் இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து பல முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதனை அரச புலனாய்வு சேவை பணிப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்தன உரிய முறையில் கையாண்டு இருந்தால் தாக்குதல்களை தடுத்து இருக்கலாம். அவர் தனக்கு கிடைத்த தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தினாரா என்ற சந்தேகம் உள்ளது. தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று தான் மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்தார். ஆனாலும் தனக்கு தகவல் அளிக்கத் தவறிய ஏனைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த மைத்திரிபால சிறிசேன அரச புலனாய்வு சேவை பணிப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்த்தனவை காப்பாற்ற முற்பட்டது ஏன் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருந்த அரச புலனாய்வுச் சேவையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் தான் அதன் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஷ் சாலே நியமிக்கப்பட்டிருக்கின்றார். பிரிகேடியர் சுரேஷ் சாலே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து சிவில் புலனாய்வு அமைப்பில் இராணுவ ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கே முக்கியத்துவம் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் மாற்றமடைந்துள்ளது. பிரிகேடியர் சுரேஷ் சாலே அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்தவே அவர் முனைகிறார் என்பது உறுதியாகியிருக்கின்றது. ஆக அரச புலனாய்வுச் சேவை தொடர்ந்தும் முதன்நிலை புலனாய்வு அமைப்பாக செயற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. பிரிகேடியர் சுரேஷ் சாலே புலனாய்வுப் பிரிவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர். பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய போது புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் இவர் முக்கிய பங்காற்றியவர். மலேசியாவில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீளுயிர் கொடுக்க முனைந்த கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதனை கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்ததிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதானது சாதகமாகவும், பாதகமாகவும் பார்க்கப்படுகின்ற நிலையே உள்ளது. அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவது சர்வதேசத்தின் கண்களை அதிகம் உறுத்தத் தொடங்கியிருக்கின்றது. பிரிகேடியர் சாலேயின் நியமனத்துக்குக் கிடைத்திருக்கின்ற கூடுதல் வெளிச்சம் அதனைத் தான் உணர்த்தியிருக்கின்றது. https://www.tamilwin.com/articles/01/233828?ref=home-top-trending
-
லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை குற்றவாளியாக அறிவித்து தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்டுள்ள விவகாரம் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளில் உரசல்களை ஏற்படுத்தியிருக்கிறதாக கட்டுரையாளர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தனது கட்டுரையில் அவர் மேலும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை, கழுத்தை அறுத்து விடுவது போல சைகை மூலம் எச்சரிக்கை செய்திருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ. இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பணியிலிருந்த அவரது இந்த செயல் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி இருந்தது. அவருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டது. அவரை அங்கிருந்து திருப்பி அழைத்துக் கொள்ளுமாறும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் வலியுறுத்தியிருந்தது. இதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ லண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார். எனினும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்றும் ஜெனிவா சட்டங்களின்படி அவருக்கு இராஜதந்திர விலக்கு உரிமை இருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. பின்னர் பிரிகேடியர் பிரியங்க ராஜதந்திர விலக்கு உரிமையை கொண்டிருப்பதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அடுத்து அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் நிறுத்தப்பட்டன. எனினும் புலம்பெயர் தமிழர்கள் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் பிரித்தானியாவின் பொது ஒழுங்கு சட்டத்தின் இரண்டு பிரிவுகளை மீறினார் என பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ முன்னிலையாகாத நிலையில் விசாரணைகள் நடத்தப்பட்டு கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி பிரித்தானியாவின் பொது ஒழுங்கு சட்டத்தின் இரண்டு பிரிவுகளை மீறி குற்றமிழைத்துள்ளார் என்றும் அதற்காக 2400 பவுண்ட் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாம் பதவிக்கு வந்த சில வாரங்களுக்குள் இந்த தீர்ப்பு வந்திருப்பது தம்மை பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறது புதிய அரசாங்கம். தமது தூதரகத்தில் ராஜதந்திர அந்தஸ்துடன் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை குற்றவாளியாக அறிவித்திருப்பது சர்வதேச நியமங்களுக்கு எதிரானது என்றும் கருதுகிறது அரசாங்கம். இந்த இரண்டுக்கும் அப்பால் புலம்பெயர் தமிழர்களையும், பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலையும் இவற்றுடன் இணைத்தும் பார்க்கிறது, பல கோணங்களில் இந்த தீர்ப்பை தொடர்புபடுத்தி இலங்கைக்கு எதிரான நடவடிக்கையாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த தீர்ப்பு வெளியாகும் முன்னரே இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் பிரித்தானியாவுக்கும் மேடையில் முட்டிக் கொள்ளும் சூழ்நிலை காணப்பட்டது. 2018 ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்த நாடு பிரித்தானியா தான். ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் அதற்கு பதிலாக பிரித்தானியா தலைமையிலான நாடுகள் அந்த தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தன. அதற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது நாட்டின் இறைமையை, அரசியலமைப்பை மீறும் செயல் என்றும் புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் நியாயம் கற்பித்து வருகின்றனர். அதனால் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்ள போவதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது. ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்ப்பது அல்லது வாக்குறுதிகளில் இருந்து நழுவிக் கொள்வது என்பது வேறு விடயம். முன்னைய அரசாங்கம் அவ்வாறுதான் நடந்து கொண்டது. ஆனால் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தால் அந்த தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகள் தமக்கு எதிராக செய்யப்பட்ட போர் பிரகடனமாகவே எடுத்துக்கொள்ளும். தம்மையும் சர்வதேச கட்டுப்பாட்டையும் மதிக்காமல் நடந்து கொள்ளும் செயற்பாடாகவே பார்க்கப்படும். அவ்வாறான ஒரு முடிவை எடுக்க இலங்கையின் புதிய அரசாங்கம் யோசித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் குறித்து தான் அதிகம் சிந்திக்கிறது. எவ்வாறாயினும் ஜெனிவாத் தீர்மானத்துக்கு கட்டுப்பட போவதில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்புகளும், எச்சரிக்கைகளும் பிரித்தானியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான முறைகளை ஏற்படுத்தி இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்தது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள், ஜெனிவா தீர்மான அமுலாக்கம், அடுத்த கட்ட ஜெனிவா நகர்வுகள் குறித்து இந்த சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதுவும் அரசாங்கத்துக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு நடந்த சில நாட்களுக்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன், ஜெனிவா தீர்மான விவகாரம் குறித்து அதற்கு ஆதரவளித்த நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுகளை ஆரம்பித்து விட்டோம் என்று கூறியிருந்தார். கால முறைப்படி வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்கை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் புதிய அரசாங்கம் இந்த நிலைமையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற சிக்கலான கேள்வி இருந்து வருகிறது. இவ்வாறான சூழலில் ஜெனிவா நகர்வுகள் குறித்து பிரித்தானியா இப்போதே கூட்டமைப்பு உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனையில் இறங்கியிருப்பது இட்டு இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை அடைந்து இருக்கிறது. அதேவேளை பிரித்தானியாவில் கடந்த 12ஆம் திகதி நடந்த தேர்தலுக்காக கன்சர்வேட்டிவ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இலங்கையில் பிரச்சினையை தீர்க்க இரண்டு தேசங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பதாக வியாக்கியானங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதற்கும் இலங்கை அரசாங்கத்தில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இலங்கையை பிளவுபடுத்த பிரித்தானியா முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டின் வரலாறு தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில காலனி ஆதிக்கத்திற்கு முன்னர் வடக்கு-கிழக்கில் தமிழ் அரசு எப்போதும் இருந்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார். போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னர் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன என்ற வரலாறு பாடப் புத்தகங்களில் கூட உள்ளதை அவர் மறந்து விட்டார். இரு தேசங்களாக அறிவிப்பதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பது போன்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அரசாங்கம் கடுமையான சவாலாக கருதுகிறது. இந்தச் சூழலில்தான் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான தீர்ப்பை அளித்திருந்தது. பிரித்தானியாவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது போல இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது. பிரித்தானியாவின் நீதித்துறை அரசியல் லாபங்களுக்காக தீர்ப்புகளை அறிவிக்கும் அளவுக்கு மோசமான தரம் தாழ்ந்தது அல்ல. அந்த விடயம் இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியாதது அல்ல. ஆயினும் சிறுபிள்ளைத்தனமாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு பிரித்தானியாவுடன், இலங்கை அரசாங்கம் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே மோதலுக்கு தயாராகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் ராஜதந்திர விலக்குரிமையை வைத்து அவரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அந்த ராஜதந்திர விலக்குரிமையை நிராகரித்தே தீர்ப்பை அளித்திருக்கிறது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் குறுக்கீடு செய்ய முனையவில்லை. அதற்கு தேர்தல் காலமாக இருந்ததும், தேர்தலில் இலங்கைத் தமிழரின் வாக்குகள் பலம் மிக்கவையாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தநிலையில் பிரித்தானியாவிலும் புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் இந்த விவகாரம் இன்னும் சூடு பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவுடன் தொடங்கிய மோதல்கள் இப்போது மெல்ல மெல்ல தணிய தொடங்கியுள்ள நிலையில் பிரித்தானியா, சுவிஸ் என அந்த முரண்பாடுகள் திசை திரும்பி இருக்கின்றன. எல்லா நாடுகளுடனும் நல்லுறவு என்ற இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண தொடங்கிவிட்டதை தான் இந்த முரண்பாடுகள் கோடிட்டு காட்டி நிற்கின்றன என குறிப்பிட்டுள்ளார். https://www.tamilwin.com/politics/01/233875?ref=home-imp-parsely
-
மண்கும்பான் அண்ணை ஒராளை சந்திச்சன். அவர் சொன்னார் தன்ரை வடலிக்காணி இரண்டு கேணி மாதிரி வந்துட்டுதாம்.