• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
வல்வை சகாறா

இதற்குப் பெயர் பக்தியா?

Recommended Posts

பாலியல் பலாத்காரம் என்று அழைக்கக் கூடிய ஒரு குற்றத்தை ஒருவன் செய்தால் அவன் எந்த வருணத்தைச் (சாதி) சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனையை மனுதர்ம சாத்திரம் தீர்மானிக்கிறது. 

மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனை தண்டிக்கவும் 

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 358
 
கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனக்கு ஒரு வருட காவலும் ஆஸ்திப் பறிமுதலும் தண்டனைகள். இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக! 
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 374
 
ஒரே குற்றத்திற்கு சூத்திரருக்கு மரண தண்டனை, வைசியருக்குஒரு வருடம் சிறையும் ஆஸ்திப் பறிமுதலும், சத்திரியருக்கு ஆயிரம் பணம் அபராம் மொட்டையடித்தல், பிராமணருக்கு காயமின்றி பொருளுடன் ஊரைவிட்டு துரத்துதல்.

Share this post

Link to post
Share on other sites

துல்பென் மிகவும் ஆதாரபூர்வமா கருத்துக்களை முன் வைக்கும் உங்கள் பாங்கு அலாதியானது. 

உங்களின் கருத்துக்களுடன் எனக்கு 100% ஒப்புதல் இல்லாவிடினும், எதையும் தர்க ரீதியாக ஆராயும், சீண்டல்களை, சின்னபிள்ளைத்தனங்களை மேவி கண்ணியமாக கருத்தாடும் உங்கள் பண்பு போற்றுதலுக்குரியது.

இந்த திரியில் உங்களின் சில (அனைத்தும் அல்ல) கருத்துக்களுக்கு பச்சை குத்த நினைத்தாலும், ஏற்கனவே குழு மனோநிலை தலைக்கேறியவர்கள், நம்மை ஒரே அணியாக சித்தரிப்பதால், அந்த மனோநிலையை மேலும் வளரக்க வேண்டாமே என எண்ணி, பச்சைகுத்துவதை தவிர்து வந்தேன்.

கடைசி ரெண்டு பதிவுகளில் நீங்கள் இட்ட விபரங்கள் யாழில் வழமையாக குதிரை ஓட்டப் படும் குண்டுச்சட்டிக்கு முற்றிலும் வேறுபட்டது.

இப்படியான கருத்துக்களை இந்தமாதிரி செய்தி திரிகளில் இணைக்காமல் ஒரு தனித்திரியாக திறப்பீர்களேயாயின், உண்மையின் தேடுதல் உள்ளோர்க்கு அது பெருதவியாக அமையும்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

நன்றி கோசான். கருத்தாடல்களில 100 உடன்பாடு அவசியம்  இல்லை என்பதுடன் கருத்துக்கள்  குழு வாதத்தில் இருந்து விலகி individual ஆக இருப்பதே ஆக்கபூர்வமானது.  பட்டிமன்ற பாணியிலான கருத்தாடல்கள் ஆக்கபூரவமானதல்ல என்பது என்கருத்து. 

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, tulpen said:

அவைகள் முழுவதையும. எழுதினால் யாழ் இணைய சேர்வரில் இடப்பற்றாக்குறை ஏற்படும். அந்தளவுக்கு  மூடத்தனம் இந்து மதத்தால் தன்னைப்பின்பற்றும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவைகளின் ஆரம்பப்புள்ளியான சிறிய துளியை மட்டும் இணைக்கிறேன். 

சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்.
கீதை. அத்தியாயம் 4, சுலோகம் 13

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

"யாதயாமம் கதரசம் பூதி பர்யுஷிதம் ச யத்; உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமச்ப்ரியம்"; 

யாமம் கழிந்த, சுவையற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு சூத்திரர்களுக்கு பிரியமானது. " அத்தியாயம் 17, சுலோகம் 9

"க்ருஷிகொரஷயவாநிஜயம் வைச்ய கர்ம ஸ்வபாவஜம்; பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்;" 

உழவும், கால்நடை காத்தலும், வாணிபமும் வைசியர்கள் செய்யவேண்டியது. இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டாகிய கர்மம்." 
கீதை. அத்தியாயம் 18, சுலோகம் 44

உங்களுக்கு இன்னொரு திரியில் நான் எழுதியிருந்தேன் ஈழத்தமிழர்கள் தம்மை சைவ சமயத்தவர்களாகவே (இந்துக்கள் என அழைத்தாலும்) கருதுபவர்கள், அதற்கும் வட இந்தியர்களின் இந்து சமயத்திற்கும் வேறுபாடு உள்ளது என.

ஈழத்து இந்துக்கள் பாடசாலையில் சைவ சமயத்தை பாடமாக கற்று சைவ சமயத்தவர்களாக வளர்ந்து வருபவர்கள். சைவம் உட்பட 6 சமயங்கள் இணைந்து இந்து சமயம் என அழைக்கப்படுவதால் இந்துக்கள் என்ற பெயரையும் பயன்படுத்துபவர்கள்.

சைவ சமயத்தில் வருணாச்சிரமம் இல்லை. எனவே இதை நீங்கள் இங்கு இணைத்தது தேவையற்ற ஒன்று.

புராணங்கள், இதிகாசங்கள் கற்பனை கலந்து எழுதப்பட்டவை என பலருக்கும் தெரியும். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போர் செய்ய தூண்டும் வகையில் அளித்த அறிவுரை தான் கீதை. 

6 hours ago, tulpen said:

பாலியல் பலாத்காரம் என்று அழைக்கக் கூடிய ஒரு குற்றத்தை ஒருவன் செய்தால் அவன் எந்த வருணத்தைச் (சாதி) சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனையை மனுதர்ம சாத்திரம் தீர்மானிக்கிறது. 

மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனை தண்டிக்கவும் 

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 358
 
கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனக்கு ஒரு வருட காவலும் ஆஸ்திப் பறிமுதலும் தண்டனைகள். இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக! 
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 374

ஒரே குற்றத்திற்கு சூத்திரருக்கு மரண தண்டனை, வைசியருக்குஒரு வருடம் சிறையும் ஆஸ்திப் பறிமுதலும், சத்திரியருக்கு ஆயிரம் பணம் அபராம் மொட்டையடித்தல், பிராமணருக்கு காயமின்றி பொருளுடன் ஊரைவிட்டு துரத்துதல்.

வருணம் என்பது சாதி அல்ல. வருணாச்சிரமத்தில் வரும் 4 பிரிவுகளும் பிறப்பின் அடிப்படையில் கூறப்படுவதல்ல. தொழிலின் அடிப்படையில் கூறப்படுவது. அதை பின்னைய காலங்களில் சாதிபோல் மாற்றிவிட்டார்கள்.

ஈழத்து சாதி நிலைகளும் வருணாச்சிரம அடிப்படையில் உருவானதல்ல.

Edited by Lara
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, Lara said:

ஈழத்தமிழர்கள் தம்மை சைவ சமயத்தவர்களாகவே (இந்துக்கள் என அழைத்தாலும்) கருதுபவர்கள், அதற்கும் வட இந்தியர்களின் இந்து சமயத்திற்கும் வேறுபாடு உள்ளது என.

சுயாந்தன் எனும் இந்து அறிஞர் இந்தக்கூற்றை மறுதலிக்கின்றார். அவருடைய சில கட்டுரைகளை யாழில் இணைத்திருந்தேன். யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.🥴 ஐந்து வருட விடுப்பில் இருந்ததால் நீங்களும் கண்டிருக்கமாட்டீர்கள். 😬 எதற்கும் படித்துப் பயன்பெறுங்கள்😎

Quote

இந்து என்பது தமிழரைக் குறிக்காது. அது சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கானது. அதுவடநாட்டுக்காரர்களுக்கானது என்று.  இதுதான் இருப்பதிலேயே ஆகப்பெரிதற்குறித்தனமான நகைச்சுவை. சரிவரப் படித்த ஒருவன் இதனைக் கேட்டதும் கொலாலென்று சிரித்துவிடுவான். தமிழிலுள்ள 35 வீதமான சொற்கள் சமஸ்கிருதத்தை உள்வாங்கியவை. வடமொழிகலந்தவை. அத்துடன் தமிழ்ச்சொற்கள் பலவும் வேற்றுமொழியில் கலந்துள்ளன. பேசும் மொழிதான் வேறே ஒழிய. நம் பூர்வீகத் தெய்வ வழிபாடுகளின் படி நாம் இந்துக்கள்தான். இந்துத் தேசியம் நமது அரசியலுக்கும் இருப்புக்கும் வலுச்சேர்க்கும். அதனை இங்கே கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் என்ற தொண்டர்படைக்கான ஆதரவுகளை நாம் அளிக்க வேண்டும். அது இலங்ஙையின் இறையாண்மைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அதனை இங்குள்ள தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்

Share this post

Link to post
Share on other sites

இலங்கையின்  சைவப் பெரியார் ஆறுமுக நாவலரின் சைவ சமய வினா விடையில் இருந்து ..... இலங்கை சைவ சமயத்தில் சாதி இல்லை என்று கூறுபவர்களுக்கு சமர்ப‍ணம்

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

புத்தகத்தின் அச்சு பதிப்பை காண இணைப்பை அழுத்துங்கள்.

https://www.directupload.net/file/d/5548/7x53zw38_jpg.htm

Edited by tulpen
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, கிருபன் said:

சுயாந்தன் எனும் இந்து அறிஞர் இந்தக்கூற்றை மறுதலிக்கின்றார். அவருடைய சில கட்டுரைகளை யாழில் இணைத்திருந்தேன். யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.🥴 ஐந்து வருட விடுப்பில் இருந்ததால் நீங்களும் கண்டிருக்கமாட்டீர்கள். 😬 எதற்கும் படித்துப் பயன்பெறுங்கள்😎

நீங்கள் என்னை வேறு யாருடனும் இணைத்து நினைத்தால் நான் எதுவும் செய்ய முடியாது.

சைவம் உட்பட 6 சமயம் இணைந்தது தான் இந்து சமயம். 

இலங்கையில் நாம் படித்து வளர்வது சைவ சமயம். ஆனால் ஏனைய கடவுளை வழிபடும் முறை அங்குள்ளது.

இது பற்றி தெரியாவிட்டால் புங்கையூரன் அவர்களை கேளுங்கள். 

இந்துத்துவா அமைப்புகள் அரசியல் சார்ந்து இயங்குபவை. அவை ஆரியர்களை மட்டுமே இந்துக்களாக கருதுபவர்கள். தமிழர்களை அழிக்க துணைபோவார்கள் என இன்னொரு திரியில் எழுதியிருந்தேன்.

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, tulpen said:

இலங்கையின்  சைவப் பெரியார் ஆறுமுக நாவலரின் சைவ சமய வினா விடையில் இருந்து ..... இலங்கை சைவ சமயத்தில் சாதி இல்லை என்று கூறுபவர்களுக்கு சமர்ப‍ணம்

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

புத்தகத்தின் அச்சு பதிப்பை காண இணைப்பை அழுத்துங்கள்.

https://www.directupload.net/file/d/5548/7x53zw38_jpg.htm

நான் உங்களுக்கு கூறியது வருணாச்சிரம முறை சைவசமயத்தில் இல்லை என. அதனடிப்படையில் ஈழத்து சாதி முறைகள் உருவாகவில்லை என.

ஆறுமுகநாவலர் சைவத்தை வளர்த்தாலும் சாதியையும் வளர்த்த ஒருவர். இலங்கையில் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்த மதத்தை பின்பற்றுவோரும் சாதி பார்ப்பவர்கள்.

எனவே அதை சமூக பிரச்சினையாக அணுகுவதே சிறந்தது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 8/14/2019 at 3:29 AM, Justin said:

பணம் இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், சாதிவாதத்தினால் ஒரு பக்கம் கிறிஸ்துவக் குழுக்களுக்கும், முஸ்லிம் மதத்திற்கும் மக்கள் மாறுவது உண்மையல்லவா? மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே? அது பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது? 

மத மாற்றத்துக்கான முக்கிய காரணி பணம் தானேயன்றி வேறேதும் இல்லை. ஒரு மனிதனுக்கு நன்மை செய்வதற்கு மதம் எதற்கு. பிரச்சனைகளால் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களை மூளைச்சலவை செய்துதான் கிறித்தவ மத்த்துக்கோ அல்லது இஸ்லாத்துக்கோ மாற்றுகின்றனர். சாதி என்பது உங்கள் கிறித்தவ மதத்தில் மட்டும் இல்லையா ஐஸ்ரின்??? 

இங்கு யாழில் கூட என் திரிக்குள் வந்து கருத்து எழுதும் இருவர் இப்ப என் திருக்கை வருவதில்லை. காரணம் கிரேக்கச் சுற்றுலா பற்றிய கட்டுரை எழுதும்போது ‘’இன்னும் ஒரு கிறித்தவ ஆலயம். வேறு வழியின்றிச் சுற்றிப் பார்த்தேன்”என்று எழுதினேன். நான் அதை எழுதும்போதே நினைத்தேன் இவர்களுக்கு நான் இப்படி எழுதுவது பிடிக்காது என்று. அதற்காக மற்றவர்களுக்காக எழுத முடியுமா என்ன??

சிறுவர்களைக் நேர்த்திக்கடன் என்னும் பெயரில் கொடுமைப்படுத்துவது தவறு. ஒரு பாதிரியார் சிறு குழந்தையைக் குலுக்கி முதுகில் அடித்துத் துன்புறுத்துவதைப் பொறுக்காத தந்தை அந்தப் பிள்ளையை பாதிரியாரிடம் இருந்து இழுத்துப் பறித்த வீடியோ பல இடங்களில் ஓடித்திரிந்ததே????

எல்லா மத்த்திலும் எல்லாம் இருக்கிறது. ஆனால் மற்றைய மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்துமத்த்தில் குறைவு என்றுதான் நான் சொல்வேன்.

Share this post

Link to post
Share on other sites

68462044_10212005814740455_7865396604419

இப்படி எமது நாட்டில் முன்பிருந்ததாக நினைவில்லை.

Share this post

Link to post
Share on other sites

லாரா, 

சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம்.

1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை ? சிவன்

2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை ? திபெத்தில் உள்ள கைலாயமலை. 

3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா?

4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா?

5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார்?

6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார்? 

7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார்? ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன?

8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன்?

9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா? அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா?

10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன்.

என் எடுகோள்கள். 

அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம்.

ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம்.

இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும்.    அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). 

ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை.   இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது.

உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். 

ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர்.

இவைதான் எனது எடுகோள்கள். 

  • Like 6

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

68462044_10212005814740455_7865396604419

இப்படி எமது நாட்டில் முன்பிருந்ததாக நினைவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்படும் நஞ்சு. 

முன்பெல்லாம் நானறிந்த வகையில், ஏடு தொடக்கும் போது - வீட்டில் பெரியவரை அல்லது நன்கு கற்றறிந்த ஒருவரை கொண்டு தொடக்குவார்கள். இப்போ பெரும்பாலாக ஏடு தொடக்கலை செய்யது கோவிலில் வேலை செய்யும் பிராமணிகள். 

லண்டன் கோயில்களில் எல்லாம் சின்ன பிள்ளைகளை, ஐயர்மாரின் காலில் பெற்றோரே விழுந்து வணங்க வைப்பது சர்வ சாதாரணம்.

 இலங்கையில் முன்பெல்லாம், ஐயர் கோவிலில் மணி அடித்து, பூசை செய்து பிரசாதம் வழங்குபவர் மட்டுமே. அவருக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது.

ஆனால் புலம் பெயர்நாடுகளில் ஐயர்மாருக்கு “குரு” அந்தஸ்து வழங்கப்படும் போக்கு அதிகரிக்கிறது. 

கொஞ்சம் கொஞ்சமாக, எமது அடுத்த சந்ததியை, தமிழ்நாட்டு மக்களை போல், பிராமணர்களை உயர்வான, பூசிக்கப் படவேண்டியவர்களாக நோக்கும் நிலைக்கு நாமே தள்ளுகிறோம்.

  • Like 2
  • Sad 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, goshan_che said:

லாரா, 

சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம்.

1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை ? சிவன்

2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை ? திபெத்தில் உள்ள கைலாயமலை. 

3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா?

4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா?

5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார்?

6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார்? 

7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார்? ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன?

8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன்?

9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா? அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா?

10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன்.

என் எடுகோள்கள். 

அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம்.

ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம்.

இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும்.    அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). 

ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை.   இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது.

உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். 

ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர்.

இவைதான் எனது எடுகோள்கள். 

இதனை ஒரு கருத்து எனபதை விட ஒரு ஆய்வுக்கட்டுரை என்று சொல்லலாம் அவ்வளவுக்கு ஆழமான அறிவியல் பாரவையுடனான ஆய்வு. நன்றி

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, tulpen said:

இலங்கையின்  சைவப் பெரியார் ஆறுமுக நாவலரின் சைவ சமய வினா விடையில் இருந்து ..... இலங்கை சைவ சமயத்தில் சாதி இல்லை என்று கூறுபவர்களுக்கு சமர்ப‍ணம்

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

புத்தகத்தின் அச்சு பதிப்பை காண இணைப்பை அழுத்துங்கள்.

https://www.directupload.net/file/d/5548/7x53zw38_jpg.htm

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

 ஔவையார் அவர்கள் எழுதியது...

மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்.

சாதியைப்பற்றி நான் எடுத்துக்கொள்வது இப்படித்தான்

நீங்கள் யாரோ பிராமணர்கள் எழுதிய வாசகத்தை எடுத்துக் கொள்கின்கிறீர்கள் . நல்லதை எடுத்துக் கொண்டு எமக்குத் தேவையற்றவையை விலத்திக் கொள்வது   தான் வாழ்க்கைக்குச் சிறந்தது  

ஒவ்வொருவரும் ஒரே பொருளை பல கோணத்தில் நோக்கலாம்.

பக்திக்கும் நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல ஆத்திகர்கள்.
அவர்கள் தங்களின் நம்பிக்கையின்படி வாழ்கின்றனர்

நான் மதத்தை நம்புவதில்லையென்றாலும்
முன்னோர்களின் நம்பிக்கைகளை மதிப்பவன்

மதம் என்பது நமது முன்னோர்களின் வழிகாட்டலில் வாழும் மக்களிற்கான ஒரு கண்காணிப்பு .
எதோ ஒரு சக்தி எங்களைக் கண்காணித்துக் கொண்டே இருந்தால்
நாம் தவறுகளை   செய்யாமல் ஒழுக்கமாக இருப்போம்
(வேலைத்தளத்தில் கண்காணிப்புக்கருவிகள் வீதியில் கண்காணிப்புக்கருவிகள் போன்று ) இல்லையேல் ஒழுக்கம் என்பது கெட்டுவிடும்.

ஒரு மனிதனை கட்டுப்பாட்டுடன் வாழவைப்பதில் கடவுள் பக்தி பெரும்பங்கு வகிக்கிறது. கடவுள் பக்தியுடனும், கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் வாழ்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....
அவன் மதவாதியாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதனால் மற்றவர்களுக்கு  என்ன பிரச்சினை?

பக்தி முத்தி.... மூட நம்பிக்கையாக மாறி..... இப்போது சாதியில் வந்து நிற்கின்றது.🙄
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, வாத்தியார் said:

வாத்தியார் எனது இலகுவான கேள்விகளுக்கு சுற்றி வளைத்து குழப்பமான பதில்களே இதுவரை மத நம்பிக்கையாளர் என்று கூறுபவரிடம் இருந்து வந்துள்ளன. நீங்களும் அதே வகையிலேயே பதிலளித்துள்ளீர்கள்.  நீங்கள்  கூறியபடி பக்திக்கும்  மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரிந்த ஆத்தீகர்கள் அவற்றை ஒழிக்கலாம்  தானே. எல்லாவற்றிற்கும் ஒரு போலி அறிவியல்  விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துவதேன்? ஈகோவை தவிர வேறென்ன. இந்த உலகில் வாழ்ந்த அனைத்து முன்னோர்களும் தமது வாழ்ககை அனுபவங்களின் அடிப்படையில் சிலவற்றை செய்தார்கள். அவைகளில் அவர்களின்  காலத்து அறிவு வளரச்சிக்கேற்ப நல்ல விடயங்களும் அறிவீனமான வழக்கங்களும் இருந்தது உண்மை. பொருந்தாதவற்றை விலக்கி விடுவது தானே மானுட வளர்ச்சி. அது தமிழராகிய எமக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து மக்களுக்கும் பொருந்தும். 

  மற்றியது நீங்கள் கூறும் உங்கள்  பார்வையிலான எமது   முன்னோர்கள் யார்? கீழடி போன்ற  இடங்களில் வாழ்ந்த தற்பொதைய பெருமதங்களை கடைப்பிடிக்காத மக்களா? அல்லது அதற்கு பிறகு எம்முடையே ஊடுருவி எம்மை ஆக்கிரமித்து எமது மக்களுக்கு கல்வியை மறுத்து உதவாக்கரை புராணங்களையும்  மூடப்பழக்கங்களை யும் மட்டும் எமக்கு பழக்கிய அந்நியர்களா? 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
On 8/18/2019 at 9:13 PM, goshan_che said:

லாரா, 

சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம்.

சைவம் எமது சமயமா இல்லையா என நான் எங்கும் எழுதியிருக்கவில்லை. நாம் சைவ சமயத்தில் பிறந்து அதை படித்து வளர்ந்து வருவதால் நாம் சைவ சமயத்தவர். சைவ சமயத்தில் வருணாச்சிரமம் பற்றி இல்லை. ஈழத்து சாதி அமைப்புகள் அதன் அடிப்படையில் உருவானதல்ல. எனவே எமது மூடப்பழக்கவழக்கங்கள் எவை என்பதற்கு tulpen அதை இணைத்தது தேவையற்ற ஒன்று என குறிப்பிட்டேன்.

Share this post

Link to post
Share on other sites
On 8/18/2019 at 9:13 PM, goshan_che said:

ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை.   இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது.

உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். 

எமது என்று நீங்கள் ஈழத்தமிழர்களை மட்டும் குறிப்பிடுகிறீர்களா அல்லது தமிழகத்தமிழர்களையும் சேர்த்து குறிப்பிடுகிறீர்களா தெரியாது.

வருணாச்சிரம முறை தொழில் அடிப்படையில் கூறப்பட்டது. 

பிராமணர்கள் வேதம் ஒதுதல், பக்தி மார்க்கத்தைப் பரப்புதல்

ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்குதல் (மன்னர்)

வைசியர்கள் : வியாபாரம் செய்தல் (வணிகர்)

சூத்திரர்கள் சேவகம் புரிவோர்

முன்னைய பிராமணர் வேறு இன்றைய பிராமணர் வேறு.

முன்னர் பிராமணர் அல்லாதோரும் பிராமணர் ஆக முடியும். பின்னர் அப்படியல்லாமல் அதை சந்ததி சந்ததியான சாதி போல் மாற்றி விட்டார்கள்.

ஈழத்து சாதி அமைப்புகள் இதனடிப்படையில் உருவானதல்ல.

இதுவும் மனுதர்மத்தில் வருவது.

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

அதாவது ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

பிக்குகள் பௌத்தத்திற்கு போல் பிராமணர்கள் சைவ சமயத்திற்கு மன்னர்களுடன் ஒட்டித்திரிந்தார்கள். 😊

Share this post

Link to post
Share on other sites

லாரா,

நாம் என்றால் தமிழ்கூறும் நல்லுலகு (தமிழகம்+இலங்கை).

ஈழத்தவர் சைவர்கள் என்கிறீர்கள். ஆனால் எமது ஆதி மதம் சைவமா? என்றால் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்கிறீர்கள்.

ஈழத் தமிழருக்கு ஒரு மதம், தமிழக தமிழருக்கு என ஒரு மதம் இருக்க முடியுமா?

நாம் எல்லாரும் தமிழர்களே - ஈழத்தமிழர் சைவர் என்பதுக்கு, திருமூலர் இலங்கையை சிவபூமி என்றார் என்பதை தவிர வேறு ஆதாரமேதுமில்லை.

மட்டக்களப்பில் பிரதான வழிபாடு அம்மன். யாழில் விஸ்ணுகோயில்கள் சிவன் கோயிலுக்கு இணையாக உள்ளன.

மாத்தறையில் இருந்து அழிந்த தொண்ட்டீஸ்வரம் ஒரு விஸ்ணு ஆலயம்.

இலங்கை தமிழர்கள் எல்லாரும் சைவர்கள் என்பது, திருமூலரின் வாக்கை மட்டும் கொண்டு சைவ பரிபாலன சபையின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களம் பரப்பிய புரட்டு

நான் சொல்கிறேன் எமது சங்க இலக்கியம் (ஈழத்தில் சங்க இலக்கியம் இல்லை) எதிலும் சிவன் என்றோ சைவம் என்றோ இல்லை. 

அப்படி இல்லாதபோது, எந்த அடிப்படையில் எம் மதம் சைவம் என்றோ நாம் சைவர் என்றோ ஏற்க முடியும்.என்னை கேட்டல் இலங்கையில் பின்பற்றபடுவது 6 உட்பிரிவுகளும் கலந்த, ஆதி சங்கரருக்கு பின்னான நவீன இந்து சமயமே. இதன் அடி, வட இந்தியாவிலே உளது.

ஆகவே இலங்கை இந்துக்கள் தம்மை, சைவர் என இனம்காட்டி, இந்துதுவா/பிரம்மணியத்தின் கேடுகளில் இருந்தும் விலத்தி நிற்க முடியாது.

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
33 minutes ago, goshan_che said:

ஈழத்தவர் சைவர்கள் என்கிறீர்கள். ஆனால் எமது ஆதி மதம் சைவமா? என்றால் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்கிறீர்கள்.

இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என நான் எங்கும் கூறவில்லை. நான் இத்திரியில் சைவம் எமது சமயமா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை, நீங்கள் அது பற்றி கேட்டீர்கள் என கூறினேன்.

இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், தமிழர்களிடையே முருக வழிபாடு வெவ்வேறு வழிகளில் இருந்தது. பின் தமிழர்களின் முருகவழிபாட்டுடன் ஆரியர்கள் ரிக் வேதத்திலுள்ள ஸ்கந்தா, குமரா என்பதை புகுத்தி முருக வழிபாட்டை பரப்பினார்கள் என்று.

தமிழர்களிடையே சிவ வழிபாடும் இருந்தது. பின்னர் அதுவும் ஆரியர் கலவை.

சிவ வழிபாடு தனியே இலங்கை, இந்தியாவில் மட்டும் இருந்ததல்ல. பல்வேறு நாடுகளில் இருந்தது.

33 minutes ago, goshan_che said:

நாம் என்றால் தமிழ்கூறும் நல்லுலகு (தமிழகம்+இலங்கை).

சாதி முறை பற்றி கதைக்கும் போது ஈழத்தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் ஒன்றாக கருத முடியாது.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
25 minutes ago, goshan_che said:

என்னை கேட்டல் இலங்கையில் பின்பற்றபடுவது 6 உட்பிரிவுகளும் கலந்த, ஆதி சங்கரருக்கு பின்னான நவீன இந்து சமயமே.

ஆதி சங்கரர் 6 சமயத்தை இணைத்தார். ஆனால் இந்து சமயம் என்ற பெயர் வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.

அத்துடன் ஆதிசங்கரர் 6 சமயத்தை இணைக்க முன்னரே தனித்தனியாக வணங்கப்பட்ட கடவுள்களுக்கு உறவு முறைகளை ஏற்படுத்தி இணைத்து விட்டார்கள். 

Share this post

Link to post
Share on other sites
43 minutes ago, Lara said:

ஆதி சங்கரர் 6 சமயத்தை இணைத்தார். ஆனால் இந்து சமயம் என்ற பெயர் வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.

அத்துடன் ஆதிசங்கரர் 6 சமயத்தை இணைக்க முன்னரே தனித்தனியாக வணங்கப்பட்ட கடவுள்களுக்கு உறவு முறைகளை ஏற்படுத்தி இணைத்து விட்டார்கள். 

அப்ப யாவும் கற்பனை என்று சொல்லுறீங்க. 

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, tulpen said:

அப்ப யாவும் கற்பனை என்று சொல்லுறீங்க. 

புராணங்கள், இதிகாசங்கள் கற்பனைகளுடன் கலந்து அமைந்தவை என முன்னரே கூறியிருக்கிறேன்.

முன்னர் தனித்தனியாக கடவுள் வழிபாடுகள் இருந்து வந்தன.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, goshan_che said:

மாத்தறையில் இருந்து அழிந்த தொண்ட்டீஸ்வரம் ஒரு விஸ்ணு ஆலயம்.

தொண்டீஸ்வரம் பஞ்ச ஈஸ்வரங்களில் (சிவாலயங்களில்) ஒன்று.

பஞ்ச ஈஸ்வரங்கள்: திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம்.

தொண்டீஸ்வரம் சைவ, வைணவ (வைஷ்ணவ) பேதங்களுக்கிடமளிக்காமல் ஒரே வளாகத்திலேயே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோவில்களை கொண்டிருந்தது என்று வாசித்திருக்கிறேன்.

போர்த்துக்கேயரால் இவை அனைத்தும் (இன்னும் பல கோவில்களும்) அழிக்கப்பட்டது. கோவில்களில் பணியாற்றிய பக்தர்களையும் பூசாரிகளையும் படுகொலை செய்தார்கள். 

இக்கோவில் கருங்கற்களைக்கொண்டு மாத்தறைக்கோட்டையை கட்டினார்கள்.

பஞ்ச ஈஸ்வரங்களில் ஏனைய நான்கும் சிவாலயமாக மீண்டும் எழுப்பப்பட இது தமிழர் பகுதியை விட்டுச்சென்றதால் பின் அவ்விடத்தில் விஷ்ணு ஆலயத்தை அமைத்தார்கள் சிங்களவர்கள். புத்த விகாரையும் கட்டியுள்ளார்கள் என்றும் வாசித்த நினைவு.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

கோட்டைகளை கட்டியவனுக்கு இறைமை உள்ள நாடுகள. உண்டு . கோவில்களை மட்டும் கட்டியவன் நாடில்லாம் அகதியாய்  அடிமையாய் அலைகிறான். 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.