Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதற்குப் பெயர் பக்தியா?


Recommended Posts

53 minutes ago, tulpen said:

கோட்டைகளை கட்டியவனுக்கு இறைமை உள்ள நாடுகள. உண்டு . கோவில்களை மட்டும் கட்டியவன் நாடில்லாம் அகதியாய்  அடிமையாய் அலைகிறான். 

கோவில்களை கட்டியவர்கள் பல தேசங்களை ஆண்ட வரலாறும் உள்ளது.

வெள்ளையர்கள் அடுத்தவன் நாட்டை சுரண்டி வாழ்ந்தான்/வாழ்கிறான். 

போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் இலங்கையில் மதத்தை பரப்பி, தேவாலயங்களையும் அமைத்தது சிலருக்கு தெரிந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.

சிங்களவனும் விகாரைகளை கட்டி எம்மை ஆக்கிரமிக்கிறான். ஆனாலும் இந்துக்களை போட்டு தாக்குவோம்.

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
27 minutes ago, Lara said:

கோவில்களை கட்டியவர்கள் பல தேசங்களை ஆண்ட வரலாறும் உள்ளது.

வெள்ளையர்கள் அடுத்தவன் நாட்டை சுரண்டி வாழ்ந்தான்/வாழ்கிறான். 

போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் இலங்கையில் மதத்தை பரப்பி, தேவாலயங்களையும் அமைத்தது சிலருக்கு தெரிந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.

சிங்களவனும் விகாரைகளை கட்டி எம்மை ஆக்கிரமிக்கிறான். ஆனாலும் இந்துக்களை போட்டு தாக்குவோம்.

மதம் பிடித்த எல்லோருமே அதைத்தான்  செய்தார்கள். சம்பந்தருடன் வாதில்  தோற்ற 8000 சமணர்களை பாண்டிய சைவ மன்னன் கழுவில் ஏற்றி படுகொலை செய்ததைப்போல.

ஆனாலும் ஓரு நிலைக்கப்பால் மதத்தை அவர்கள் முழுமையாக நம்பாமல் அதை சம்பிரதாயத்திற்காக மட்டும் கைக்கொண்டனர். தமது மூளையை பாவித்து முன்னேறினர் 

  பிராமணர்களால்  ஏமாற்றப்பட்ட தமிழ் மன்னரகள் தம்மை பாதுகாக்க கோட்டைகளை கட்டாமல் பிராமணர்கள் உழைக்காமல் சாப்பிட கோவில்களையும் மடங்களையும் கட்டி ஏமாந்த சோணகிரிகளாக அனைத்தையும் இழந்ததுடன் அவர்களின் சந்ததிதியும் அடிமையானது தான் கண்ட மிச்சம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/18/2019 at 9:13 PM, goshan_che said:

லாரா, 

சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம்.

1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை ? சிவன்

2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை ? திபெத்தில் உள்ள கைலாயமலை. 

3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா?

4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா?

5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார்?

6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார்? 

7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார்? ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன?

8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன்?

9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா? அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா?

10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன்.

என் எடுகோள்கள். 

அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம்.

ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம்.

இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும்.    அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). 

ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை.   இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது.

உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். 

ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர்.

இவைதான் எனது எடுகோள்கள். 

தேவையான

மிகவும்  பயனுள்ள கருத்தாடல்

நன்றி  சகோ...

நேரம்  கிடைக்கும்  பொது  இது  தொடர்பான  கருத்தாடலை  வாசித்து  எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

மதம் பிடித்த எல்லோருமே அதைத்தான்  செய்தார்கள். சம்பந்தருடன் வாதில்  தோற்ற 8000 சமணர்களை பாண்டிய சைவ மன்னன் கழுவில் ஏற்றி படுகொலை செய்ததைப்போல.

ஆனாலும் ஓரு நிலைக்கப்பால் மதத்தை அவர்கள் முழுமையாக நம்பாமல் அதை சம்பிரதாயத்திற்காக மட்டும் கைக்கொண்டனர். தமது மூளையை பாவித்து முன்னேறினர் 

புராணங்கள், இதிகாசங்களை நம்பாத நீங்கள் அனல் வாத புனல் வாத கதையை, கழுவிலேற்றிய கதையை நம்புகிறீர்களாக்கும். 😀

பாண்டிய மன்னன் அப்ப சமண சமயத்தை தழுவியிருந்தவர். பின்னர் தான் சைவத்துக்கு மாறினவர். 😊

Link to comment
Share on other sites

4 minutes ago, Lara said:

புராணங்கள், இதிகாசங்களை நம்பாத நீங்கள் அனல் வாதம் புனல் வாத கதையை, கழுவிலேற்றிய கதையை நம்புகிறீர்களாக்கும். 😀

பாண்டிய மன்னன் அப்ப சமண சமயத்தை தழுவியிருந்தவர். பின்னர் தான் சைவத்துக்கு மாறினவர். 😊

புராண இதிகாசங்களில் பல புரட்டுக்கள் உள்ளன. அது வேறு பிராமணர்களை நம்பி ஏமாந்த தமிழ் மன்னர்கள் என்பது புராணங்கள் அல்ல. அவை வரலாறு. 

சைவ, சமண மதங்களின் முரண்பாட்டில் சமணர்களை சைவர்கள் படுகொலை புரிந்தார்கள் என்பதே வரலாறு.  அதை ஒரு  சரியான செயலாக  தர்ம‍மாக காட்ட முற்பட்டதே புராணங்கள். சைவ பாடப்புத்தகங்களில் கூட அந்த ஈனத‍னமான செயலை நியாயபடுத்தியே எழுதியுள்ளார்கள். போத்து கேயர் எமது கோவில்களை இடித்தார்கள். மதம் மாற்றினார்கள் என்றால் சைவர்களும் அதை செய்துள்ளார்கள். மதம் என்றாலே அப்படித்தான். அது எல்லா மத‍த்திற்கும் பொருந்தும். புத்திசாலித்தனமாக அரசியல் செய்தவர்கள் இன்று உயர்வாக வாழ்கிறார்கள். கடவுள் எல்லாம் பார்த்துக்கொள்வான் என்று சோம்பேறி தனமாக நம்ப வைக்கப்பட்ட கூட்டம் நாடின்றி அகதியாக அலைகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாரா,

சைவர்களும், வைணவர்களும் மிக மிலேச்சத்தனமாக மோதிக் கொண்டது நாம் அறிந்ததே.

திருப்பதியில் இருப்பது முருகன் என்றும், தெலுங்குப் பிராமண வைணவர்கள் முருகனின் மூக்கை உடைத்து, வெள்ளி கவசம் மாட்டி, வெங்கடாசலம் ஆக்கினர் என்று கூறுவோரும் உளர்.

இதே போல், பல அடுக்குமாடிகளை கொண்ட, இரவில் எட்டடுக்கு தீபம் போல ஒளிரும் ஒரு மரத்தாலான (கல் அல்ல) ஒரு விஸ்ணு கோவில் தெய்வேந்திர (கவனிக்க: தெய்வேந்திரன்=இந்திரன்) முனையில் இருந்தது என்றும் அதே தொண்டீஸ்வரம் (ஈஸ்வரம் எனும் பெயர் திருப்பதி (திருமலை) போல பின்னர் இணைந்திருக்கலாம்) எனவும், போத்துக்கேயர் அல்லாமல், சைவர்களே அதை எரித்து, அதே இடத்தில் சந்திரசேகரயீச்சரம் எனும் சிவன் கோவிலை கல்லால் நிறுவினர் எனவும் எங்கோ படித்தேன்.

சந்திரசேகர்யீச்சரத்தையே போத்துகீசர் உடைத்தனராம்.

Link to comment
Share on other sites

லாரா,

 ஆரிய இந்து மதத்தால் தமிழரின் வாழ்வியலில் திணிக்கபட்ட மூடத்தன‍ங்களில் சற்றும் நம்பிக்கை இல்லாத நீங்கள் அதற்காக விழுந்து விழுந்து வாதாடுவது ஏன் என்று என்னால் புரிய முடியவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லாத மூடத்தனங்களை நீங்கள் வாழும் சமுதாயம் பின்பற்றும் போது அது மூடத்த‍னம் என்று சுட்டிக்காட்டுவது தானே இயல்புதானே. இது  அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கையில் தலையிடுவது அல்ல. அவர்கள் செய்வதை நாம் தடுக்கவில்லை .அது தவறு என்று ஆதாரத்துடன் நிருபிப்பது இயல்பான விடயமாக உங்களுக்கு தெரியவில்லையா? அவ்வாற கருத்தகளை கண்டவுடனேயே நீங்கள் பதறுவது ஏன்?

Link to comment
Share on other sites

5 hours ago, goshan_che said:

இதே போல், பல அடுக்குமாடிகளை கொண்ட, இரவில் எட்டடுக்கு தீபம் போல ஒளிரும் ஒரு மரத்தாலான (கல் அல்ல) ஒரு விஸ்ணு கோவில் தெய்வேந்திர (கவனிக்க: தெய்வேந்திரன்=இந்திரன்) முனையில் இருந்தது என்றும் அதே தொண்டீஸ்வரம் (ஈஸ்வரம் எனும் பெயர் திருப்பதி (திருமலை) போல பின்னர் இணைந்திருக்கலாம்) எனவும், போத்துக்கேயர் அல்லாமல், சைவர்களே அதை எரித்து, அதே இடத்தில் சந்திரசேகரயீச்சரம் எனும் சிவன் கோவிலை கல்லால் நிறுவினர் எனவும் எங்கோ படித்தேன்.

சந்திரசேகர்யீச்சரத்தையே போத்துகீசர் உடைத்தனராம்.

நான் அவ்வாறு கேள்விப்படவில்லை.

எனக்கு தெரிந்து மாத்தறை, தெய்வேந்திர முனையிலிருந்த தொண்டீஸ்வரத்துக்கு சந்திரமௌலீஸ்வரம், சந்திரசேகரரீச்சரம்/சந்திரசேகரர் ஆலயம் போன்ற பெயரும் இருந்தது.

நகுலேஸ்வரத்துக்கு திருத்தாம்பலேஸ்வரம் என்ற பெயர் இருந்தது போல்.

Link to comment
Share on other sites

10 hours ago, Lara said:

தொண்டீஸ்வரம் சைவ, வைணவ (வைஷ்ணவ) பேதங்களுக்கிடமளிக்காமல் ஒரே வளாகத்திலேயே சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோவில்களை கொண்டிருந்தது என்று வாசித்திருக்கிறேன்.

அத்துடன் மேலுள்ளது இணைய செய்தியிலேயே வாசித்தேன்.

உண்மையில் ஒரே வளாகத்திலேயே விஷ்ணுவுக்கும் கோவிலை கொண்டிருந்ததா என்பது உறுதியில்லை.

ஆனால் அழிக்கப்பட்ட தொண்டீஸ்வரம் ஒரு சிவ ஆலயம் என்பது உறுதி.

Link to comment
Share on other sites

On 8/18/2019 at 9:13 PM, goshan_che said:

1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை ? சிவன்

சைவ நெறி புத்தகம் முழுமுதற்கடவுளாக காட்டுவது சிவனை.

ஆனால் சிவனுக்கு அருவம், உருவம், அருவுருவம் இருப்பதாக கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

On 8/18/2019 at 9:13 PM, goshan_che said:

2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை ? திபெத்தில் உள்ள கைலாயமலை. 

ஆரம்ப காலத்தில் சிவலிங்க வழிபாடு இருந்தது. அதேபோல் தென்னிந்தியாவில் ஆலமரக்கடவுளாக சிவன் இருந்தார். கைலாய மலையுடன் பின்னர் தான் தொடர்புபடுத்தப்பட்டிருப்பார். தென்னிந்தியாவிலிருந்து இமயமலையடிவாரத்துக்கு குடிபெயர்ந்தவர்களால் அல்லது ஆரியர்களால்.

Link to comment
Share on other sites

On 8/18/2019 at 9:13 PM, goshan_che said:

தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா?

தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன்?

சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா? அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா?

முன்பு பல கடவுள் வழிபாடு இருந்ததால் கடவுள், தெய்வம் போன்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிவனை பற்றிய குறிப்புகள் உள்ளன. நீங்கள் எந்த இலக்கியங்களை கூறுகிறீர்கள்? 

அத்துடன் இலங்கையிலேயே முன்னர் சிவ வழிபாடு இருந்தமைக்கான ஆதாரங்களாக கல்வெட்டுகள், நாணயங்கள், மட்பாண்டங்கள் என பலவற்றை கண்டெடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.