Sign in to follow this  
nunavilan

தமிழ் பள்ளியில் பயின்று முனைவர் பட்டம் பெற்ற மலாய் மாணவரின் இமாலய சாதனை! தமிழால் நான்.

Recommended Posts

தமிழ் பள்ளியில் பயின்று முனைவர் பட்டம் பெற்ற மலாய் மாணவரின் இமாலய சாதனை! தமிழால் நான்.

 

 

 

Share this post


Link to post
Share on other sites

அந்த மலாய் மாணவர், தமிழை எவ்வளவு நேசிக்கின்றார் என்பது.... 
அவரின் பேச்சிலும், முகபாவனையிலும் தெரிகின்றது. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்த வீடியோவில் பல அனிமேஷன்ஸ் சேர்க்கப்பட்டு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் பல வரலாற்று தவறுகள் உள்ளன. போத்துக்கேயர்கள் 1520ல் யாழ்ப்பாணம் வரவில்லை. நெடுந்தீவு உள்பட்ட, தீவுப்பகுதிகளுக்கே வந்தனர். அங்கிருந்த வாறே, தமிழகத்திலிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளையும், இறக்குமதி, ஏற்றுமதிகளியும் தடுத்ததன் மூலம் யாழ்ப்பாண அரசினை, திறை செலுத்தும் நிலைக்கு கொண்டுவந்து, தமக்கு சார்பான நாடாக்கினார்கள். 1591ல் தமது பொம்மை அரசன் எதிர்மன்னசிங்கம் என்பவரை அரசனாக்கினார். 1617ல் எதிர்மன்னசிங்கத்தின் மகன் பரராசசேகரன் இறக்க, அவனது மகன் சங்கிலியன், போர்த்துக்கேயர் வந்தபின் சிம்மாதனம் ஏறிய 3வது அரசன்.  தனது அனுமதி இல்லாமல் 3,000 பேரை மன்னாரில் மதம் மாத்தி விட்டார்கள் என்று கோபம் அடைந்து, போர்த்துகேயர்களுடன் நேரடியாக மோதி, போர்க்களத்தில் தோற்று , யாழ்பாண ராஜ்ஜியத்தினை இழந்தார்.  Phillippe de Oliveira  என்பவரால் கைதாகிய இந்த இரண்டாம் சங்கிலி மன்னன் 1619ல் தூக்கிலிடப்பட, அன்றில் இருந்தே யாழ்ப்பாண ராஜ்ஜியம் போர்த்துக்கேயர் வசமானது. ஆனாலும்1658 ஆம் ஆண்டில் ரிஜ்க்லோஃப் வான் கோயன்ஸின் கீழ் டச்சுக்காரர்களால் யாழ்ப்பாண ராஜ்ஜியம் கைப்பற்றப்பட்டது. 1785 முதல் 1948 வரை பிரிட்டிஷ்காரர்களும், 1948 முதல் சிங்களவர்களாலும், இடையே 1987 முதல் 1990 வரை இந்தியர்களாலும் ஆளப்பட்டது. 1990 முதல் 1995 வரையான காலப்பகுதியில் புலிகள் கட்டுப்பாடில் கூட இருந்திருக்கின்றது.
    • நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்      by : Yuganthini நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகளை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள விசேட செயலணி அரசியல் யாப்புக்கு முரணானது மேலும் சிறந்த அரச சேவையை, குறித்த விசேட செயலணியின் கீழ் கொண்டு வருவதானது நாட்டை முழுவதுமாக இராணுவ ஆட்சிக்குள் தள்ளிவிட முயற்சிக்கும் செயலாகும். அத்துடன் சுயாதீன அரச சேவை, அரச சேவைகள் ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படுக்கப்படுகின்றது. ஆனால் தற்போது  குறித்த  செயலணியின்  உத்தரவிற்கமையவே அரச சேவை செயற்பட வேண்டியுள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது” என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நாடு-இராணுவ-ஆட்சியை-நோக்-2/
    • எமது கட்சி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம்.     தொழிலாளர் தேசிய முன்னணியை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு காலத்துக்குக் காலம் கட்டுக்கதைகளாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஒரு குழு இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. இணையத்தில் வருகிறது என்பதற்காக அதில் வெளிவரும் அநாமதேய செய்திகளை நம்பி குழப்பமடையாமல் கட்சி செயற்பாட்டாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் அதன் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜாவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதைப் போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. இது குறித்து விளக்கமளித்து விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளார் அவர் மேலும் தமது அறிக்கையில், அரசியல் கட்சிகள் போன்ற பொது அமைப்புகள் சமூக நோக்கத்துக்காக தனிநபர்கள் பலரது ஒன்றிணைப்பில் இயங்கி வருகின்றன. தொழிலாளர் தேசிய முன்னணியும் அத்தகைய ஓர் அமைப்பாகும். எமது கட்சி ஜனநாயக பண்புகளை மதிக்கும் அமைப்பு. அதற்கென கட்டமைப்பு உள்ளது. அதில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. அத்தகைய கருத்துக்கள் வெளிப்படும் போது அவை வாத, விவாதங்களுக்கு உட்பட்டு தீர்வு காண்பது ஜனநாயகப் பண்பு ஆகும். எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் குறித்த விபரங்கள் பேசித்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜாவுக்கு தேசியப் பட்டியலில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொடுக்கும் முழுப் பொறுப்பையும் தலைவர் என்ற வகையில் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனாலும், இது குறித்த எதிர்மறையான செய்திகளை இணையத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு ஒரு குழு திட்டமிட்ட அடிப்படையில் அநாமதேய செய்திகளை வெளியிட்டு வருவது குறித்து நான் அவதானித்து வருகிறேன். எமது கட்சியில் எடுக்கப்படும் தீர்மானங்களை நாம் உத்தியோகபூர்வமாக வெளியிடும் செய்திகளுக்கு மாறாக கட்சியில் பெயர் குறிப்பிடப்படும் பதவி நிலையில் உள்ள எவரது பெயரையும் குறிப்பிடாது வெளிவரும் எதிர்மறையான செய்திகளையும், திட்டமிட்டுப் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளையும், அத்தகைய செய்தித் தளங்களையும் புறக்கணித்து விட்டு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.   -மலையக நிருபர் சுந்தரலிங்கம்- http://tamil.adaderana.lk/news.php?nid=129434
    • 24 மணிநேரத்தில்1,490 பேர் கைது         ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,490 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 498 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 70,042  பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 19,856 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 25,942 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/24-மணநரததல1-490-பர-கத/175-251423
    • எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!         by : Benitlas எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தனியார் பேருந்துகளின் சேவைகளையும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், இதுவரை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படாதிருந்த பேருந்துகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் ரயில்களில் காணப்படும் ஆசனங்களின் அளவிற்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/எதிர்வரும்-திங்கட்கிழமை/