Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'' தமிழரின் முதல்வனா நீ....???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்னியத்து சிங்களங்கள்

அரியாசனம் ஏறி விட்டு

எம் தமிழை அழிக்கின்ற

இன்னலதை காணலயோ...???

வந்தேறு குடிகளென்று- பகை

வாய் விட்டு சொல்லையிலே

எங்களது தமிழ் நாடு

ஏனென்று கேட்கலயே....

உண்மையதை கண்ட பின்னும்

ஊமையாகி நிற்கையிலே

தன் மானம் உள்ளயவன்

தலை நிமிர்தி கேட்கையிலே...

குற்ற வாளி யென்றவனை

கூண்டிலேற்ற முனையலாமோ...??

சட்டங்கள் என்று வந்து

சங்கடங்கள் கொட்டலாமோ....??

கதிரையது ஏறிவிட

கட்சி மாறும் கூட்டங்களே

மனு நீதி விற்று விட்டு

மன்றிலேறி என்ன செயவீர்....??

கொல்லர்கள் ஆழ்கின்ற

கோட்டையது போலும்...??- அங்கு

தமிழர்கள் அழிகையிலே

தம்பட்டம் அடிக்கின்றீர்....

''பாரதத்தின் மந்திரிக்கு

பாதையிலே அடித்தவனை

தூக்கி வைத்து தாளாட்டும்

துட்டர்களே நீரின்று....''

கயவனுடன் கூட்டு வைத்து

காட்டியே கொடுக்கின்றீர்

எம் தமிழை அழித்திடவே

ஏனின்று முயல்கின்றீர்....???

தூது வந்த புறாக்களையே - தீ

தூக்கிலிட்டு கொன்றவரே

ஜனநாயகம் உள்ளதென்றா

ஜம்பம் அடிக்கின்றீர்....??

கருத்துச் சுதந்திரத்தை

கழுத்தறுத்து கொன்றவரே

சிறகடிக்கும் வைகோவின்

சிறகொடிக்க முனைகிறாய்..

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??- வன்னி மைந்தன் -

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

ஆளக்கூடாதுதான்.. விரைவில் அவரை கதிரையில் இருந்து யாராவது பிடித்து இழுத்து கீழேதள்ளி விடுவார்கள். எனவே, கலக்கம் வேண்டாம்.

உங்கள் கேள்வியை இப்படியும் கேட்கலாம்..

அகமதில் ஊனத்தை

அடைத்து வைப்பவளே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

ஆளக்கூடாதுதான்.. விரைவில் அவரை கதிரையில் இருந்து யாராவது பிடித்து இழுத்து கீழேதள்ளி விடுவார்கள். எனவே, கலக்கம் வேண்டாம்.

உங்கள் கேள்வியை இப்படியும் கேட்கலாம்..

அகமதில் ஊனத்தை

அடைத்து வைப்பவளே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??

இம்சை அரசிக்கு

இரங்கலுரை எதற்கு...??

அவளெல்லாம் பெண்னென்று

அவையிலேன் உரைக்கிறாய்...???

சுடு காட்டு மேம்பணத்தை

சுருட்டியவள் கிள்ளாடி

அவளுக்கேன் வந்திங்கு

வைக்கிறாய் கரு முன்னோடி...???

பெண்னென்று இவளையே

பெருமையாய் சொல்வாரோ...??

கா..தூவென - இவளில்

காறியே துப்பாரோ....???

கவிதையில் வந்தவள்

கதை தனை சொல்வீரோ...??

காதிலே வேண்டுகிறேன்

கலைஞரே சொல்வீரா...???

:lol::lol::lol: :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகமதில் ஊனத்தை

அடைத்து வைத்தவனே

தமிழரின் முதல்வராய்- நீ

தமிழ் நாட்டில் ஆழலாமோ...??- வன்னி மைந்தன் -

ஆழலாம் என்று தமிழ்

நாட்டின் விதி

அதை யாரால் என்ன

பண்ணுவது

நல்ல ஒரு உணர்சிமிக்க கவிதை

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன வருத்தம் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லைத்தான் என்னினும் என் வைத்தியர் கான்சர் என்று கூறியது மீண்டும் நினைவில் வந்து தொலைக்குது. எத்தினை பேருக்குத் திட்டியிருப்பன். சண்டைபிடிச்சிருப்பன். இப்பிடி அற்ப ஆயுளில் போகத்தானோ என்று மனம் எண்ண, எல்லாம் அனுபவிச்சிட்டாய் தானே என்று மனச்சாட்சி கேட்குது. எனக்குத் 80,90 வயதுவரை இருக்கிற ஆசை என்றுமே இருந்ததில்லை. ஆனால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளாவது வருத்த துன்பம் இல்லாமல் இருக்கவிட்டிருக்கலாம்தானே அந்தக் கடவுள் எண்டு மனம் திட்டுது. எதுக்கும் வீட்டை போனபிறகு டயரியில என்ன என்ன ஆசை இன்னும் தீராமல் இருக்கு எண்டு லிஸ்ட் போட்டால்த்தான் தெரியும். கீமோ செய்யாமல் எங்காவது முக்கியமாய் பார்க்கவேண்டிய இடத்துக்கு மனிசனையும் கூட்டிக்கொண்டுபோய் வந்தால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே கோதாரிவிழுந்த கொரோனாவால ஒரு இடமும் போக ஏலாது என்ற நினைப்பு வர அப்பத்தான் இதுக்குள்ள அந்தக் கொரோனா தொற்றினால் என் நிலை இன்னும் மோசமாகும் என்ற நினைப்புடன் என் பையைத் திறக்க மகள் உள்ளே வைத்திருந்த சிறிய Hand sanitizer கண்ணில் பட எடுத்து கைகளில் பூசிக்கொள்கிறேன்.   மேலும் இரண்டு மணிநேரம் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருக்க நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. எனக்கு ஸ்கானிங்க் இருக்கு என்று ஒருவர் வந்து அழைத்துப் போகிறார். அங்கும் அரை மணிநேரக் காத்திருப்பின்பின் உள்ளே என்னை அழைத்தவர் தன்னை வைத்தியர் மார்க் என்று அறிமுகம் செய்கிறார். ஒரு ஐந்து நிமிடங்கள் என் வயிற்றைக் கருவி மூலம் ஸ்கான் செய்துவிட்டு, நான் நினைக்கிறேன் உன் பித்தப் பையில்தான் எதோ பிரச்சனை இருக்கிறது என்கிறார். "அதில் கான்சரோ என்கிறேன்". "எனக்கு வடிவாகத் தெரியவில்லை. இதற்கென்று இருக்கும் வைத்தியர்கள் தான் சொல்ல வேண்டும்" என்றபடி அவரென்னை வெளியே அனுப்புகிறார். திரும்ப வைத்தியர்கள் என்னை அழைப்பார்கள் என்று எண்ணியபடி ஒரு மணிநேரம் காத்திருக்கிறேன். அது பலரும் வந்து போகும் இடமாக இருப்பதனால் அடிக்கடி கதவைத் திறக்க குளிர்கிறது. இரண்டு மணி நேரம் போனபின் ஒரு தாதி வந்து வேறு ஒரு பகுதிக்கு அழைத்துப் போய் அமரவைக்கிறார். மேலும் ஒரு மணி நேரத்தில் உள்ளே அழைக்க ஒரு வெளிநாட்டுக்கார வைத்தியர் இருக்கிறார்.   "வணக்கம் எப்படி இருக்கிறாய்" " சரியான தண்ணீர்த் தாகம்" " இப்ப தலை சுற்றலில்லையா" " இல்லை. எனக்கு என்ன நோய்" " உனக்கு liver இல் தான் பிரச்சனை" "அதிலா கான்சர்" " உனக்கு கான்சர் இல்லை. ஆனால் உன் ஈரல் சரியாகப் பாதிக்கப் பட்டிருக்கு" " எனது வைத்தியர் சிறுநீர்ப் பையில் கான்சர் என்கிறாரே" "உன் வைத்தியர் உன்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறு. ஒன்றை நிட்சயம் செய்யும் முன்னர் எப்படி அவர் ஒருவரிடம் அப்படிக் கூறலாம்" " இப்பதான் எனக்கு நின்மதியாக இருக்கு" " நீ அல்ககோல் குடிப்பாயா" " இல்லை " எப்பவாவது மனிசன் குடிக்கும்போது ஒருவாய் சுவைத்துப் பார்த்ததையம் சுவையான இனிப்பான வைன்களை ஒரு கொங்சம் குடித்ததை கூறுவதா விடுவதா என்று மனம் பதைத்து பின் வேண்டாம் என்று முடிவெடுக்கிறது. " சிகரெட் பிடிக்கிறனியா" " எங்கள் குடும்பத்திலேயே யாரும் அதைத் தொட்டுப் பார்ப்பதில்லை" " கணவர் குழந்தைகளுடன் தானே வாழ்கிறாய்" " ஓமோம் மூன்று குழந்தைகள்" " வேலை செய்கிறாயா" " ஒரு ஆண்டின்பின் கடந்த வாரம் தான் வேலை கிடைத்தது" " கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதே. உன் கணவருடன் மட்டும் தானே உறவு கொள்கிறாய் " " ஓம் ஏன் அப்பிடி ஒரு கேள்வி கேட்கிறாய் " " ஏனென்றால் தொடர்ந்து குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், பல ஆண்களுடன் உறவில் ஈடுபடுபவர்கள் இவர்களுக்குத்தான் கலீரலில் இப்படி தாக்கமேற்படும்" " நான் இதற்குள் அடங்கவில்லையே. எப்படி எனக்கு இதுவந்திருக்கும் " " இன்னும் ஒன்றும் உண்டு. அது நீ உண்ணும் உணவு. நீ வழக்கமாக என்ன உணவுகளை உண்கிறாய் " " காலையில் ஓட்ஸ், சிறுதானியக் கஞ்சி அல்லது பாண். மதியம் சோறு கறிவகைகள். இரவு இடியப்பம், பிட்டு ...." "என்ன குளிசைகள் பாவிக்கிறாய்" "பிரஷர் தான் ஒரு மாதத்துக்கு முன் சரியான உச்சத்துக்குப் போய் ஐந்து நாட்கள் இங்குதான் இருந்தேன்" " எத்தனை குளிசை எடுக்கிறாய் தினமும் " "கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு இரண்டு எடுக்கிறேன்" " உன் கணவனுடன் உனக்குப் பிரச்சனையா" " என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா" "இல்லை இல்லை. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நல்ல காலம் இப்ப நீ மருத்துவமனைக்கு வந்தது. இன்னும் காலம் தாழ்த்தியிருந்தால் லிவர் இன்னும் பாதிப்படைந்திருக்கும்" "முதல் ஸ்கான் செய்த வைத்தியர் ஏன் பித்தப்பையில் பிரச்சனை என்கிறார்" அவர் சந்தேகப்பட்டார். மற்றப்படி நாம் இரண்டு வைத்தியர்கள் சேர்ந்து பார்த்தபின் தான் உனக்கு மஞ்சள்  காமாளை நோய் இருப்பது தெரிந்தது" "மஞ்சள் காமாளையா" "ஓம் நீ காலையில் என்ன குடிப்பாய்" "கோப்பி குடிப்பேன்" " வேறு என்ன என்ன உண்பாய் குடிப்பாய் என்று கூறு" "ஒரு தடவை மட்டும் தான் கோப்பி. அதன்பின் வெறும் தேநீர் பலதடவை குடிப்பேன். பழங்கள் நிறைய உண்பேன். ஆனால் முன்னர் வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தையம் உண்பேன். இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்" "மூலிகைத் தேனீரா? என்ன மூலிகை" "அதுவா பொறு எனக்குப் பெயர் பாடம் இல்லை"   எனது வாற்சப் குழுமத்தில் போய்த் தேடியெடுத்து அந்த you tube வீடியோவில் இருந்த பெயர்களைக் கூறுகிறேன். " வேப்பிலைப் பொடி - Neem leaf Powder, வெள்ளை மிளகு - White Pepper , கார்போக அரிசி- Babchi seeds , பறங்கிப்பட்டைச் சூரணம் - China Root Powder " " இதை யார் உனக்குப் பரிந்துரை செய்தது" " யாரும் எனக்குச் செய்யவில்லை. You Tube இல் பார்த்துவிட்டு நானாக இலங்கையிலிருந்து எடுப்பித்து அரைத்துப் பவுடராக்கிக் குடிக்கிறேன்" " எந்தளவு குடித்தாய்" " இரு மேசைக்கரண்டியளவு சுடுநீரில் போட்டு அவித்துக்குடித்தேன்" "உன் வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவில்லையா" " மூலிகைகள் உடலுக்கு நல்லதுதானே. அதனால் வைத்தியரிடம் கேட்கவில்லை" " நான் நினைக்கிறேன் இந்த மூலிகைத்தேநீர் தான் உன் ஈரலைப் பாதிப்படையச்செய்திருக்கிறது. உன் வீட்டிலிருந்து  அதில் கொஞ்சம் எடுத்து வரச் சொல்கிறாயா "    " அதற்கென்ன. இப்பவே கொண்டுவரச் சொல்கிறேன் "  " இன்று நீ இங்குதான் தங்கவேண்டும். நாளை இன்னொரு ஸ்கான் இருக்கு" "சரி இனி நான் ஏதாவது குடிக்கலாம் தானே" "ஓம். வெளியே போய் இரு. உன்னை அழைத்துப் போவார்கள்.       பவுடருக்கை china வேற இருக்கு. இவங்கள் வேறு காரணத்தால வருத்தம் வந்தாலும் இப்ப சைனாக் காரனைச் சாட்டப் போறாங்களே என்ற யோசனையோடு அமர்ந்திருக்க தாதி என்னை அழைத்துச்சென்று முன்பு இருத்திய கட்டிலடியில் கொண்டு சென்று விட்டுவிட்டு உனக்கு கோப்பியா? தேனீரா? என்கிறாள். தேநீரைத் தெரிவு செய்ததும் இன்னொரு உணவு பரிமாறும் பெண் ஒரு பெட்டியில் விதவிதமான sandwich ஐ கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு என்னிடம் வருகிறாள். என்னிடம் வரும்போது இரண்டே இரண்டுதான் எஞ்சிஇருக்கு. ஒன்று Tuna sandwich. மற்றையது சீஸ் மற்றும் பிக்கிள் வைத்தது என்று சொல்ல இரண்டாவதைத்தெரிவு செய்கிறேன். சாதாரணமாகவே வெளியே எங்கேயும் நான் sandwich உண்பதே இல்லை. tuna வைத்தது உண்டு லண்டனிலும் பாரிஸில் கார்டினோரிலும் ஏற்பட்ட ஒவ்வாமையின் பின் நான் உண்பதே இல்லை. இன்று வேறு வழியின்றி அதன் பெட்டியைப் பிரித்தால் சில்லிட்டுப் போய் இருக்கிறது அது.    வரும் இன்னும்  
    • போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போறதுக்கெல்லாம் ஒரு ஆராச்சி, ஒரு ஆய்வுக் கட்டுரை... 😏  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.