Jump to content

பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்கவுள்ள கிரிஸ் கெய்ல்


Recommended Posts

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெறுகிறது. குறித்த போட்டியானது மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ் கெய்ல் விளையாடும் 300வது போட்டியாகும். இந்த போட்டியில் அவர் 9 ஓட்டங்களை பெறும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனை வீரரான பிரையன் லாராவின் 10,405 என்ற இலக்கை முறியடிக்க முடியும்.

அதேவேளை, இன்றைய போட்டிக்கு முன்னதாக, கனடாவில் இடம்பெற்ற குளோபல் இருபதுக்கு இருபது தொடரில் கெய்ல் ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களையும் 94 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக இந்திய தொடரில் அவர் முழு அளவில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்றைய போட்டியில் இந்திய அணி தமது 4 ஆம் இலக்க வீரரை பரீட்சித்து பார்க்கவுள்ளது.

மேலும், போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானமானது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.hirunews.lk/tamil/sports/221991/பிரைன்-லாராவின்-சாதனையை-முறியடிக்கவுள்ள-கிரிஸ்-கெய்ல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் எனக்கு மிகவும் பிடித்த வீரர். வெல்ல முடியாதவாறு வெல்லட்டும்....!  👍

Link to comment
Share on other sites

8 hours ago, ampanai said:

இந்த போட்டியில் அவர் 9 ஓட்டங்களை பெறும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனை வீரரான பிரையன் லாராவின் 10,405 என்ற இலக்கை முறியடிக்க முடியும்.

 
இன்றைய போட்டியில் பதினொரு ஓட்டங்களை கிறிஸ் கெயில் எடுத்தார். 
 
கிறிஸ் கெய்ல் எல்பிடபுள்யு பி புவனேஷ்வர் குமார் 1124 1 045.83
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.