ampanai

நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த

Recommended Posts

இலங்கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahinda.jpg

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக, இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங்குக்கு  அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த செவ்வியில் மஹிந்த ராஜபக் ஷ மேலும் கூறியதாவது,

கேள்வி: உங்கள் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுனவின் வேட்பாளராக, உங்கள் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செய லருமான கோத்தபாய ராஜபக் ஷவையே தெரிவு செய்வார் என அவர்கள் சொல் கிறார்கள்? அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும்போது பிரதமர் வேட்பாளராக இருப்பீர்கள் என்று கூறியுள்ளீர்களா?

பதில்: மகிந்த ராஜபக் ஷ (சிரிக்கிறார்) ஆம், இல்லை. நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை (கோத்தபாய வேட்பாளராக இருப்பது குறித்து), ஆனால் மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என நினைக்கிறேன் (அது கோத்தபாயவாக இருக்க வேண்டும்).

கேள்வி: கடந்த முறை கூட நீங்கள் ஜனாதிபதியாகவும், உங்கள் சகோதரர்கள் அரசாங்கத்தில் சக்திவாய்ந்த பதவிகளிலும் இருந்த நிலையில், நீங்கள் ஒரு குடும்ப ஆட்சிக்கு செல்கிறீர்கள் என்று எதிர்க்கட்சி தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீங்கள் தோல்வியடைந்தபோது மக்கள் அதை ஏற்றுக் கொண்டதாகத் தோன்றியது. அது மீண்டும் நடக்காதா?

பதில்: அந்த குற்றச் சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை, உண்மையானவை அல்ல. குடும்ப ஆட்சி என்ற பேச்சு இனி பொருந்தாது, ஏனென்றால் மக்கள் அதை தங்கள் நலனுக்காக விரும்புகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்கள் அபிவிருத்தியை விரும்புகிறார்கள், அவர்களுக்கு வேலைகள் வேண்டும். நாங்கள் அதை வழங்குவோம்.

கோத்தபாய ஒரு மோசமான மனிதர் அல்ல, அவர் ஒரு செயல் மனிதர், அவர் பலவற்றைப் பேசிக் கொண்டிருப்பவர் அல்ல, அமைதியாக செயற்படுகிறார். அவர் ஜனாதிபதியாகவும், நான் பிரதமராகவும், இணைந்து,  மக்களுக்கு இப்போது தேவை யானதை வழங்க முடியும். மக்கள் அதை அறிந்திருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் இருந்தபோதிலும் இப்போது சட்டம் ஒழுங்கு இல்லை, ஜனநாயகம் இல்லை, மாகாண சபைகளுக்கு தேர்தல் இல்லை. தற்போதைய அரசாங்கம் துன்புறுத்தல்கள் மற்றும் வழக்குத் தொடருவதிலும், எனது அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களைப் பழிவாங்குவதிலும் மட்டுமே கவனமாக இருந்தது.

இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் அபிவி ருத்தியை நாங்கள் வழங்குவோம், மேலும் இந்தியாவுடன் நல்ல உறவை உறுதி செய் வோம் என்று புதுடெல்லிக்கு தெரியும்.

கேள்வி: முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கோத்தபாய காரணமா?

பதில்: அது அவர்களால் பரப்பப்பட்ட பொய். அவர்கள் முஸ்லிம் கிராமங்களைத் தாக்கி, ‘ராஜபக் ஷவுக்கு வாக்களியுங்கள்’ என்று சத்தமாகக் கூறுவார்கள், எனவே பழி எம்மீது இருக்கும். இது எங்களுக்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிட்ட பரப்புரை. ஆனால் இப்போது முஸ்லிம் மக்களுக்கு உண்மையில் யார் பொறுப்பு என்று தெரியும், அவர்கள் புத்திசாலிகள் மற்றும் படித்தவர்கள்.

கேள்வி:   கோத்தபாய மீது போர்க்குற்றச் சாட்டுகள் உள்ளன என்று?

பதில்: அவை எல்லாம் அரசியல் (குற்றச்சாட்டுகள்). உண்மையில் போரை வழிநடத்திய சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க முடிந்தால், அதனை அப்போது ஆதரித்த தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியுற்ற விதத்தைப் பார்த்து இப்போது எங்களை ஏன் ஆதரிக்க மாட்டார்கள்?

கேள்வி:  எனவே சிறுபான்மையினர் உங்க ளுக்கு வாக்களிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: ஆம், என்ன நடந்தது என் பதை தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். அமைச்சரவை யில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் குறைந்தபட்சம் ஏதாவது செய்கிறார்கள், ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்காக எதுவும் செய்ய வில்லை; அவர்கள் தங்களை மட் டுமே கவனித்துக் கொள்கிறார் கள். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் குறைந்தபட்சம் அரசாங் கத்தை எதிர்க்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  சம்பந்தன், சுமந்திரன் போன்ற தலைவர்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர், ஆனால், அவர்களால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கே அனைத்தையும் பெறுகிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு களுக்குள், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வேன்.

கேள்வி:  நரேந்திர மோடி அரசாங்கத்துட னான உங்கள் உறவுகள் எப்படி இருக்கின்றன, ஏனென்றால் 2015ஆம் ஆண்டில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருந்தீர்கள், அதிபர் தேர்தலில் உங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தியதற்காக இந்தியாவின் றோ மீது குற்றம்சாட்டினீர்கள்?

பதில்: கடந்த காலம் கடந்து விட்டது. நாங்கள் அதை மறந்து விட்டோம். முன்பை விட இப்போது நாம் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டுள்ளோம். இலங் கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் வழங்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொள்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான மோதல்களே, ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு ஒரு காரணம்.

மே மாதம் அவரை (மோடி) சந்திக்கச் சென்றேன். கடந்த காலத்தில் (2015), இரண்டு (சீன) நீர்மூழ்கிக் கப்பல்கள் இங்கு வந்து (கொழும்பு துறைமுகம்) திரும்பிச் சென்றதால் அவர்கள் கவலைப்பட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது?

அவர்கள் வந்து  இங்கு தங்கிவிட்டார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் சீனர்க ளுக்கு விற்கப்பட்டதில் இருந்து  பல சொத்துக்கள் மற்றும் திட்டங்கள் அவர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக நகரம் 200 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் (சீனர்கள்) இப்போது நிரந்தரமாக இங்கே இருக்கிறார்கள்.

கேள்வி:  நீங்கள் ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள இந்திய திட்டங்களுடன் ஒப்பிடும் போது சீன இருப்பு விகிதத்தை மாற்ற முடியுமா?

பதில்: இந்த விஷயங்கள் குறித்து நாங்கள் பேச்சு நடத்த வேண்டும்; நீங்க வேறொரு நாட்டுடன் உடன்பாட்டில் கையெழுத்திடும்போது நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம். ஆனால் பலாலி மற்றும் மத்தலவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் திருகோணமலையில் உள்ள எண் ணெய் தாங்கிகள் போன்றவற்றில் (ஈடு பாடு, முதலீடு) இந்தியா முன்னேற முடியும். நாங்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிரான வர்கள். இது எங்கள் கொள்கை.

கேள்வி: குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர், இந்தியா உங்களுக்கு ஒரு முக்கியமான நட்பு நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இந்தியா உங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கைகளை அனுப்பியிருந்தது, ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டனவா?

பதில்: இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியா மிக நெருக்கமான அண்டை நாடு, அவர்களின் செல்வாக்கு இங்கு மிகவும் உணரப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் சிறந்த நண்பன், மகிந்த ராஜபக் ஷவாகவே இருப்பார்.

ஆம், குண்டுவெடிப்பு ஆபத்து குறித்து இந்தியா எங்களை எச்சரித்தது, ஆனால் அவர்கள் (ஜனாதிபதி மைத்திரிபால மற் றும் பிரதமர் ரணில்) தங்களுக்குள் சண் டையிட்டுக் கொண்டிருந்ததால் அது கவனிக்கப்படாமல் போனது. ஒரு நாட்டை இரண்டு அதிகார மையங்களால் திறம்பட இயக்க முடியாது.

கேள்வி: காஷ்மீரின் நிலைமை மற்றும் மோடி அரசு எடுத்த நடவடிக்கை ஆகிய வற்றை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அங்கு என்ன நடந்தது என்பது,  இந்தியாவின் உள் விவகாரம் இல்லையா?

ஆனால், அணுசக்தி வல்லமை கொண் டதாகவும், அண்டை நாடுகளாகவும் இருப் பதால், அவர்கள் (இந்தியாவும் பாகிஸ் தானும்) ஒன்றாக அமர்ந்து பேசலாம் என்று நான் கூறுவேன். இருவரால் நம்பப்படும், ஐ.நா. பொதுச்செயலாளர் போன்ற ஒரு மூன்றாம் தரப்பு அவர்கள் இருவரையும் மேசைக்கு கொண்டு வரக்கூடும்.

https://www.virakesari.lk/article/62454

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ampanai said:

கேள்வி:   கோத்தபாய மீது போர்க்குற்றச் சாட்டுகள் உள்ளன என்று?

பதில்: அவை எல்லாம் அரசியல் (குற்றச்சாட்டுகள்). உண்மையில் போரை வழிநடத்திய சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க முடிந்தால், அதனை அப்போது ஆதரித்த தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியுற்ற விதத்தைப் பார்த்து இப்போது எங்களை ஏன் ஆதரிக்க மாட்டார்கள்?

இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கேட்டுள்ளார். அவர் இது பற்றி தொடர் கேள்வியை கேட்கவில்லை. அத்துடன் மகிந்த "நீங்கள் தான் அதற்கு உதவி செய்தீர்கள்? என கேட்டுவிட்டால் என்ற பயமாக இருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ampanai said:

கேள்வி:  எனவே சிறுபான்மையினர் உங்க ளுக்கு வாக்களிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: ஆம், என்ன நடந்தது என் பதை தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். அமைச்சரவை யில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் குறைந்தபட்சம் ஏதாவது செய்கிறார்கள், ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்காக எதுவும் செய்ய வில்லை; அவர்கள் தங்களை மட் டுமே கவனித்துக் கொள்கிறார் கள். முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் குறைந்தபட்சம் அரசாங் கத்தை எதிர்க்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  சம்பந்தன், சுமந்திரன் போன்ற தலைவர்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர், ஆனால், அவர்களால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் தங்களுக்கே அனைத்தையும் பெறுகிறார்கள்.

அண்மைக்காலமாக கூட்டமைப்புக்கு தொடர்ந்து அடி விழுது. 😂

Share this post


Link to post
Share on other sites

நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த ( இந்திய ஊடகவியலாளரிடம் )  

நானேசீனாவின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த  ( சீன  ஊடகவியலாளரிடம் )  

நானே அமெரிக்காவின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த  ( அமெரிக்க  ஊடகவியலாளரிடம் )  
 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Lara said:

அண்மைக்காலமாக கூட்டமைப்புக்கு தொடர்ந்து அடி விழுது. 😂

கூத்தமைப்புக்கு ரோசம் மானம் வரும் எண்டுறியள்??????😎

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ampanai said:

நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த ( இந்திய ஊடகவியலாளரிடம் )  

நானேசீனாவின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த  ( சீன  ஊடகவியலாளரிடம் )  

நானே அமெரிக்காவின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த  ( அமெரிக்க  ஊடகவியலாளரிடம் )  
 

maxresdefault.jpg

நானே ஸீ லாந்தின் மிகச்சிறந்த நண்பன் - மஹிந்த ( ஸீ லாந்து ஊடகவியலாளரிடம் ) .. ☺️

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • " நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - என்பதை பல தமிழ் கட்சிகள் வெளிப்படையாக கூறும் ஒரு கருத்து. அதைக்கூறித்தான் ஆகவேண்டும்.  அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது. முதல் எதிரி மகிந்த அணிதான் என்றும் அது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது என்றால், நாளை சம்பந்தரையும் மீறி மகிந்த அணி ஆட்சியை பிடித்துவிட்டால் சம்பந்தரால் அதற்கு என்ன மாற்று வழி? என்பதையும் அவர் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்றாலும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.  
  • ஏன் பிரான்ஸ் நாட்டில் காட் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் , காட் இல்லா உற‌வுக‌ளுக்கு அவ‌ர்க‌ளின் காட்டில் வேலை எடுத்து குடுத்துட்டு வார‌ ச‌ம்ப‌ள‌த்தில் காட் வைச்சு இருக்கிர‌ ஆட்க‌ளுக்கு மாச‌ க‌ட‌சியில் காசு குடுக்க‌னும் / எங்க‌டைய‌ளின் ந‌ரி புத்தியை பார்த்திங்க‌ளா 😉 /  த‌னி காட்டு ராஜா எம் நாட்டுக்கு வ‌ந்தா , அந்த‌ உற‌வை எப்ப‌டி வ‌ழி ந‌ட‌த்த‌னும் இந்த‌ நாட்டு அனுகுமுறையை சொல்லி குடுத்து ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்க‌ வைக்க‌லாம் ந‌ல்ல‌ வேலையோட‌  👏/ அசூல் அடிச்சு போட்டு ,  க‌ள‌வாய் வேலையில் இற‌ங்க‌ வேண்டிய‌து தான் , அசூல் காசும் வ‌ரும் , வேலைக் காசு மாச‌க் க‌ட‌சியில் கையில் கிடைக்கும் , இப்ப‌டி ஒரு 4வ‌ருட‌ம் செய்தாலே , வ‌ந்த‌ க‌ட‌ன் ஒரு வ‌ருட‌த்தில் முடிந்துடும் , மீத‌ம் உழைச்சு எடுக்கிர‌ காசை கொண்டு போய் ஊரில் குடும்ப‌த்தோட‌ வாழுற‌து 👏/ திற‌மை இருந்தா எதையும் செய்ய‌லாம் /  க‌ள‌வாய் வேலை குடுக்கும் போது ஒரு சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு , அத‌ன் ப‌டி செய்தா ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை வேலை செய்த‌ மாதிரியும் இருக்கும் காசு ச‌ம்பாதிச்ச‌ மாதிரியும் இருக்கும் 👏 /
  • ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார். சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடித்தை அதிபர் செர்ஜியோ மெட்டரில்லாவிடம் அளித்தார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2348340
  • எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம்.   குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வோகிக். வேட்டைக்காரர்களின் குண்டுகள் அந்தப் பறவையின் சிறகுகளில் ஆழமாகத் துளைத்திருந்தது. எனவே, அந்தப் பறவையால் இனி பறக்க முடியாது. பறவையின் காயத்துக்கு மருந்து வைத்த வோகிக், அதைப் பறவைகள் மீட்பு குழுவிடம் கொடுத்துவிடலாம் என நினைத்தார். ஆனால், பறக்க முடியாத நிலையில் இருக்கும் அந்த நாரையைக் கொடுக்க வோகிக்கு மனம் வரவில்லை. தன் வீட்டிலேயே வைத்து வளர்க்க முடிவெடுத்தார். அந்த நாரைக்கு மலேனா என்று பெயர் வைத்தார். தன் வீட்டின் கூரையின் மீது இரண்டு விதமான கூடுகள் அமைத்தார். ஒன்று கோடைக்காலத்துக்கு மற்றொன்று பனிக்காலத்துக்கு. இப்படி தான் மலேனா வோகிக்கின் வாழ்வில் வந்தது. மலேனாவுக்காக வோகிக் மீன்கள் பிடித்து வருவார். இலை தழைகளைக் கொண்டு வருவார். தன் 4 பிள்ளைகளைவிடவும் பாசமாகப் பார்த்துக்கொண்டார். 10 ஆண்டுகள் இப்படியாகக் கழிந்தன. ஒரு நாள் காலை வோகிக் தன் வீட்டின் கூரையின் மீது வேறொரு நாரையைப் பார்த்தார். அந்த நாரை தொடர்ந்து வந்து வந்து செல்வதைப் பார்த்த வோகிக்கு விஷயம் புரிந்துவிட்டது. மலேனாவை நோக்கி காதல் அம்புகள் விட்டுக்கொண்டிருந்த அந்த நாரைக்கும் மீன்கள் வைத்தார். சில நாள்கள் ஓகே சொல்லாமல் அலைக்கழித்த மலேனா, பின்னர் அந்த நாரையை தன் கூட்டுக்குள் அனுமதித்தது. வோகிக்கு தாங்க முடியாதா சந்தோஷம். பறக்க முடியாத தன் மலேனாவுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.   மலேனாவுடன் காதல் கொண்ட அந்த நாரைக்கு க்லெப்டன் என்று பேர் வைத்தார். க்லெப்டன் திடீரென ஒருநாள் மலேனாவை விட்டு எங்கோ சென்றுவிட்டது. வோகிக் மனமுடைந்துப் போனார். ஆனால், மலேனா எந்த வித தவிப்புமின்றி இருந்தது. இப்படியாக சில காலம் கடந்தது. பனிக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியது. மலேனாவின் கூட்டில் இருந்து கீச் கீச் ஒலி வழக்கத்தைவிட உற்சாகமாகக் கேட்டது. க்லெப்டன் இஸ் பேக். ஆம் க்லெப்டன் கூடுத் திரும்பிவிட்டது. அப்போதுதான் வோகிக் புரிந்துகொண்டார். பனிக்காலம் முழுவதும் க்லெப்டன் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிடும். வெயில் காலம் தொடங்கியதும் தன் அன்பு காதலி மலேனாவின் கூடுக்கு வந்துவிடும். ஒவ்வொரு முறையும் கோடைக்காலம் தொடங்கியதும், க்லெப்டன் வரும் வரை வோகிக் பதற்றத்துடனேயே இருப்பார். காரணம், 5,000 மைல்கள் தாண்டி வரும் க்லெப்டன் வழியில் வேடர்களின் குண்டுகளுக்கு இறையாகிவிடக் கூடாது என்ற அச்சம். ஒரு கோடையின்போது வேறு ஏதோ ஆண் நாரை மலேனாவின் கூட்டுக்குள் வந்துவிட்டது. அவ்வளவுதான் கோவத்தில் மலேனா தன் கூட்டுக்குள் இருந்த அத்தனை உணவையும் எட்டி உதைத்து நாசம் செய்து அந்த நாரையை துரத்திவிட்டது. சில நாள்களுக்கு பின் க்லெப்டன் மீண்டும் வந்த பின்புதான் மலேனா இயல்பு நிலைக்குத் திரும்பியது. இவர்களின் ரியூனியனை பார்க்கவே ஒவ்வொரு கோடைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவை காதலர்கள் வோகிக்கின் வீட்டுக்கு வந்து செல்கின்றனர். 15 வருட காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இதுவரை 62 குஞ்சிகளை ஈன்றெடுத்துள்ளது மலேனா. ஒவ்வொரு குஞ்சும் சற்று வளர்ந்தவுடன் சுதந்திரமாக வானத்தில் பறக்க கிளம்பிவிடும். இன்றையளவில் மலேனாவும் க்லெப்டனும் குரோசியாவில் செலிபிரிட்டி Couple. இவர்களை பற்றிய அப்டேட்ஸ்க்காகவே வோகிக்கை பலர் முகநூலில் பின் தொடர்கின்றனர். பறக்க முடியாத காதலியைப் பார்க்க கடந்த 15 ஆண்டுகளாக, தன் உயிரைப் பணயம் வைத்து 5,000 மைல்கள் தாண்டி வருகிறது ஒரு பறவை. காதலால் அன்றி வேறு எந்த சக்தியாலும் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியாது. https://www.vikatan.com/living-things/animals/rescued-stork-malenas-love-story
  • சரி மதம் ஒரு திசை மாறக்கூடிய ஒரு விவாதப்பொருள்.  எங்கள் பலமான கல்விக்கு செல்வோம். ஒரு நடக்கும் திட்டத்தை எடுத்து அமுல்படுத்தலாம், அதன் மூலம் அடுத்த தலைமுறையை தாமாக சிந்தித்து தமது காலில் தமக்காக நிற்கும் சமூகமாக மாற்றலாமா?  - சகல தமிழ் குழந்தைகளும் ஆரம்ப கல்வியை, அதாவது ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடிக்க வேண்டும்  - அதற்கு என்ன தேவை ? என்ன செய்யலாம்? இவ்வரசு செய்யலாம்? .....  - இல்லை சகல பெண்களும் பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்று முடிக்க  என்ன செய்யலாம்?