Jump to content

கருணாவை பிரித்து புலிகளை தோற்கடித்த ரணிலுக்கு, கோத்தாபயவை வெற்றிகொள்வது இலகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
August 12, 2019
Gota-Maithripala-and-Ranil-.jpg?zoom=1.1
 

விடுதலை புலிகள் இயக்கம் வலுவிழக்க கர்ணாவின் பிரிவே பிரதான காரணமாகியது. இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே செயற்பட்டார். இதனால் கிடைத்த வெற்றியை இன்று ராஜபக்ஸ குடும் உரிமை கோருவதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய  ராஜபக்ஸவை இலகுவாக தோற்கடிக்க முடியும்  என்றும்  குறிப்பிட்டார்.

 

கண்டி – குண்டசாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அதேபோன்று கோத்தபாயவை தோற்கடிக்க கூடிய ஒரு வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/128688/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜித் பிரேமதாசவை... ஜனாதிபதி வேட்பாளராக.... 
ரணில்,  முன் நிறுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

ரணில்... தான்தான்,  ஜனாதிபதி என  கனவு கண்டால்.... 
கோத்தபாயா... ஜனாதிபதி ஆவதை, தவிர்க்க முடியாது.   

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அஜித் பிரேமதாசவை... ஜனாதிபதி வேட்பாளராக.... 
ரணில்,  முன் நிறுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

 

நீங்கள் நடிகர் அஜித் தின் பரம ரசிகராக இருப்பதற்காக அவரை (அஜித்தை) எல்லாம் சனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாது சிறி.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிழலி said:

நீங்கள் நடிகர் அஜித் தின் பரம ரசிகராக இருப்பதற்காக அவரை (அஜித்தை) எல்லாம் சனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாது சிறி.. 😂

Ranil-sajith.jpg?resize=800%2C480

அடப்பாவி...  நிழலி,  விடுமுறையில் நான் வீட்டில்,  மரம் வெட்டிக் கொண்டு நின்ற களைப்பில்...
இரண்டு பியரை, அடித்து விட்டு... கருத்து எழுதும் போது...
"ரங்கு"
 ( நாக்கு...) ஸ்லிப் பண்ணி, சஜித்துக்கு... அஜித்  என்று வந்து விட்டது. 
"ஆத்தை படும் பாட்டுக்குள்ளை...  குத்தியன், பிழை பிடிக்க நிக்கிறான்.  :grin:

அதை... இப்பிடி "பப்ளிக் குட்டியாக" சொல்லி, மானத்தை வாங்குவதை, 
மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.  😎

சரி... போகுது, நான் எழுதிய கருத்தை,  ஒருத்தனாவது  உன்னிப்பாக... வாசித்தான்,  
என்று பெருமைப் படுகின்றேன்.  🤣

டிஸ்கி: தவறை சுட்டிக் காட்டியமைக்கு... நன்றி,  நியானி.  :grin: 🤣

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

 

 

டிஸ்கி: தவறை சுட்டிக் காட்டியமைக்கு... நன்றி,  நியானி.  :grin: 🤣

இப்படி சொன்னால் நியானி ஆர் என்று சொல்லுவேனாக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

இப்படி சொன்னால் நியானி ஆர் என்று சொல்லுவேனாக்கும்....

 

நீங்கள் சொல்லாட்டியும்.... யாழ். உலகம் அறிந்த, பரம ரகசியம் தானே....
"ரொம் & ஜெறி"   மாதிரி.... இதுகும், இனிமையான விளையாட்டு, தொடருங்கள்.. பிழம்பு. :grin:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் போன்ற குள்ள நரிகளை கொண்ட ஜ.தே.கட்சி ஆட் சிக்கு வரக்  கூடாது....அது ரணிலாயிருந்தாலும் சரி,சஜித்தாயிருந்தாலும் சரி ...கோத்தா ஜனாதிபதியாய் வரணும்...மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து கொஞ்ச காலத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து விட்டு நாட்டை தன்ட  கையில் வைத்திருக்கலாம் 

தற்போது உலகை ஆள்பவர்கள் கோமாளிகள்...அந்த வகையில் இவரையும் வரவேற்போம்...கோத்தா வாறது தான் தமிழருக்கு நல்லது...அபிவிருத்தி சார்ந்த விடயம் என்றாலும் சரி , முஸ்லீம்களை அடக்குவது என்றாலும் சரி அவர் தான் பொருத்தமானவர் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.