Jump to content

சீமானும் கிராமப்பொருளாதாரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமானும் கிராமப்பொருளாதாரமும்

ஜெயமோகன்

see.jpg

 

அன்புள்ள  ஜெ,

சமீபமாக நான் மிகவும் கவனிப்பது சீமானின் பரப்புரைகளைத்தான்.தமிழ் அரசியல் மேடைகளில் முதன்முறையாக ஜெ.சி.குமரப்பாவின் கிராமப்புற காந்திய பொருளாதாரத்தை வலிய, உரக்க பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் தான்.

இது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. காந்தியத்தை அதிகம் எழுதிய நீங்கள் இதைக்கவனித்திருக்கிறார்களா?

அன்புடன்,

வா.ப.ஜெய்கணேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

கிராமியப்பொருளியல், விவசாயத்தின் அழிவு ஆகியவற்றை பேசும் ஏராளமான தன்னார்வ அமைப்புக்கள் இங்கே உள்ளன. அவற்றிலிருந்து சில வரிகள் சீமான் போன்றவர்களின் நாவுகளில் சென்றமைகின்றன. அவற்றை ஸ்டாலின் பேசமுடியாது, ஏனென்றால் அவர் உடனடியாக அரசாட்சிக்கு வரக்கூடும். ஒரு வகையான தன்னார்வலக் குறுங்குழுவாக இருப்பதனால் சீமான் அவற்றைப் பேசுகிறார்.

அவற்றை மக்களிடம் பேசும்போது அவர்கள் கவனிக்கிறார்கள். ஏனென்றால் அது அவர்கள் அறிந்த உண்மை நிலவரம். ஆகவே அதற்கு ஒரு மேடைமுக்கியத்துவம் உள்ளது. அதை ஓரு பரப்புரையாக நான் பார்ப்பதில்லை. ஒருவகையான பரபரப்புரையாகவே காண்கிறேன்.

காந்தியர்கள் பேசும் கிராமியப்பொருளியலுக்கும் இவர்கள் பேசுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. காந்தியர்கள் கிராமியப்பொருளியலின் அழிவென்பது உலகளாவ எழுந்துள்ள நுகர்விய – பெருந்தொழில்மய பொருளியலின் தவிர்க்கமுடியாத விளைவு என்று மதிப்பிடுகிறார்கள். இந்தப்பொருளியலின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு அதை நம்மால் முழுமையாக எதிர்க்க இயலாது என்பார்கள். ஆகவே கூடுமானவரை தாக்குப்பிடிக்கலாம் என்று கூறி அதற்கான திட்டத்தை முன்வைப்பார்கள். தாக்குப்பிடிக்கும் பொருளியல் வழியாகவே அவர்கள் கிராமியப் பொருயலுக்கான வழியை வகுக்கிறார்கள்.

இதில் எப்போதும் காந்தியர்கள் குற்றம்சாட்டுவது நம்மைத்தான். அதாவது தங்களையும் உள்ளடக்கிய மக்களை. நமது நுகர்வுமனநிலையை. நம் லாப வெறியை. நாம் ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்துடன் இல்லாமலிருப்பதை. மக்களிடம் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளும்படி, மறுபரிசீலனை செய்யும்படி சொல்கிறார்கள்.

அதை காந்தியர் மட்டுமே சொல்லமுடியும். ஏனென்றால் அதற்கான தார்மிகநிலை அவர்கள் தங்கள் வாழ்க்கையினூடாக ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்ஆனால் அதைக்கூட சற்றேனும் அறவுணர்வுள்ளவர்களே ஏற்கிறார்கள். மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. இங்கே காந்தியத்தின் எல்லை அது.

சீமான் போன்றவர்கள், பலவகையில் சூழியலழிவையும் கிராமப்பொருளியல் அழிவையும் பேசுபவகர்கள் கூடவே பலவகையான சதிக்கோட்பாடுகளை மிகைப்படுத்திப் பேசுவதைக் காணலாம். அதாவது நம் மீது பிழையே இல்லை, எல்லாமே எதிரியின் சதி. அவனை ஒழித்துவிட்டால் எல்லாம் சீராகிவிடும். எதிரி எவராகவும் இருக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் உள்ளூர் தெலுங்கர்கள் வரை.

இது பரப்பரசியலின் வழி. மெய்யான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு பொய்யான கவற்சியான தீர்வுகளை அளிப்பது. அவற்றை வாக்குறுதிகளாக அளித்து அதிகாரம் நோக்கிச் செல்வது. நேற்று மெய்யான பிரச்சினைகளை பரப்பியக்கமான திராவிட இயக்கம் பொய்யான திராவிடநாடு, தனித்தமிழ்நாடு போன்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் அணுகியது. வடவர் பார்ப்பனர் என பொய்யான எதிரிகளைச் சுட்டிக்காட்டியது. அதிகாரத்தை அடைந்தது. சீமானும் அந்தவழியிலேயே செல்கிறார்

மக்களுக்கு இதுதான் பிடிக்கும். எதிரியைச் சுட்டிக்காட்டு என்றுதான் அவர்கள் கோருகிறார்கள். எப்போதும் அன்னியருக்கு எதிரான போர்நிலையில் இருப்பது பழங்குடிகளின் இயல்பு. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழும் பழங்குடியை நோக்கி இவர்கள் பேசுகிறார்கள்.

சீமான், தன்னார்வக்குழுவினர் போன்றவர்கள் பேசிய எல்லா சிக்கல்களும் எளிய வெறுப்பரசியல்களாக உருமாற்றப்பட்டு நீர்த்து இலக்கழிந்தது வரலாறு. அவர்கள் மக்களைக் கவர விழைகிறார்கள். மக்கள் எளிய வெறுப்புகளை நாடுகிறார்கள் சீமானுக்கு அவருடைய எளிய வெறுப்பரசியலுக்குரிய கருக்களாகவே இவை பயன்படுகின்றன.

மக்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வழிவகுக்காமல், அவர்களை விமர்சிக்காமல், அவர்களுக்கு பிடித்ததைப்பேசுபவர்கள் வெற்று அரசியல்வாதிகள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுபவர்கள், எதிர்மறை உணர்வுகளை வளர்ப்பவர்கள் அழிவையே கொண்டுவருவார்கள்

காந்தியம் சீரான நீண்ட போராட்டங்களையே முன்வைக்கும். எல்லா போராட்டங்களினூடாகவும் தன்னை மேம்படுத்திக்கொள்வதையே முதல் இலக்காகக் கொள்ளும். அதற்கு எதிர்க்கவேண்டிய தரப்பும் மாற்றிக்கொள்ளவேண்டிய கருத்துக்களும்தான் உண்டே ஒழிய  அனைத்துத்தீமைகளுக்கும் காரணமான எதிரிகள் இல்லை. ஆகவேதான் அது முதிராஉள்ளங்களை கவர்வதில்லை. அது விறுவிறுப்பற்றதாக அவர்களுக்குப் படுகிறது

ஆகவே இவர்கள் மெய்யான பிரச்சினைகளைப் பேசுகிறார்களே என மகிழவேண்டியதில்லை. இவர்கள் பேசுவதனாலேயே அவற்றின் உண்மையான தீவிரம் மழுங்கடிக்கப்பட்டு, பொய்யான களங்களுக்கு போராட்டம் திசைதிருப்பப் பட்டு அழியும் என அச்சமும் கவலையும்தான் கொள்ளவேண்டும்

ஜெ

 

 

https://www.jeyamohan.in/122259#.XVHPgC3TVR4

Link to comment
Share on other sites

மக்களுக்கு உள்ள பிரச்சனையையும் அதன் தீர்வையும் தான் ஒரு குடிமகன் பேச வேண்டும்.இது அமெரிக்காவுக்கும் பொருந்தும். எந்த ஜனநாயக நாட்டுக்கும் பொருந்தும். சீமானும் அதனை தான் செய்கிறார். அவர் பொய்யான பிரச்சனையை அவர் மக்களிடம் பேசவில்லையே. குற்றம் சாட்டுகிறார் என்பதிலும் பார்க்க யார் காரணம் என்பதையும் சொல்கிறார். மக்கள் முடிவெடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

"ஆகவே இவர்கள் மெய்யான பிரச்சினைகளைப் பேசுகிறார்களே என மகிழவேண்டியதில்லை. இவர்கள் பேசுவதனாலேயே அவற்றின் உண்மையான தீவிரம் மழுங்கடிக்கப்பட்டு, பொய்யான களங்களுக்கு போராட்டம் திசைதிருப்பப் பட்டு அழியும் என அச்சமும் கவலையும்தான் கொள்ளவேண்டும்"

மோடி கூட இவரின் கருத்தை அமுலாக்கி உள்ளாரே  🙂 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்வது செல்லாது, ஜெ.மோ சொன்னா சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அமெரிக்காவில் எங்கும் ஜிம்ஓ இல்லாத மரக்கறிகள் உணவு வகைகளை 
விற்கும் கடைகளின் கிளைகள்தான் திறக்க படுகின்றன 
அவைதான் லாபகரமாக ஓடுகிறது 
ஆர்கானிக் பழங்கள் காய்கறிகளை அதிக விலைக்கு வாங்குகிறார்கள் 

கண்டதையும் விற்று வந்த பாரிய சூப்பர் மார்க்கெட்டுக்கள் நஷடத்தில் போகின்றன 
சில இழுத்து மூடவும் படுகின்றது. 

ஆனாலும் ஜி எம் ஓ  விவாசாயம் குறையவில்லை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் 
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் சீனா இந்தியா போன்றவை இவர்களின் பெரும் இறக்குமதியாளர்கள்.

அமெரிக்கர்கள் முன்னேறுகிறோம் என்று ஓடித்திரிந்து இப்போ 50-60 வருடம் முன்பு 
இருந்த இடத்துக்கு திரும்பி வந்து இருக்கிறார்கள் .
நாங்கள் இதை ஒரு அனுபவ பாடமாக எடுத்து ஏன் ஓட்டம் ஆர்ப்படடம் இல்லாமல் நிம்மதியாக 
இதே இடத்தில் இருக்க கூடாது? 
2050இல் உலக சனத்தொகை 10 பில்லியன்களாகும் என்று கணிப்பிட படுகிறது அப்போ பாரிய உணவு தட்டுப்பாடு உலவும் என்பதில் ஐயம் இல்லை ...... அதனால்தான் பிற நாடுகளில் திட்டமிட்டு விவாசாய நிலங்கள்  அழிக்கபடுகின்றன நீர்ப்பாசன ஆறுகள் குளங்களை உள்ளூர் பொறுக்கி அரசியல் வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து  பன்னாட்டு நிறுவனங்கள் கையப்படுத்த்துகின்றன ..... இரசாயன கலப்பு உணவு தயாரிப்புக்கு  இப்போதே பலமான அத்திவாரம் இடப்படுகிறது. 

இவை எல்லாம் சீமான் வாயால் வருவதால் மட்டுமே ....... பலர் எதிர்க்கிறார்கள் 
சொந்த காசில் சூனியம் செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை கூட புரியாமல் இருக்கிறார்கள்.
இருக்கும் அரசியல்வாதிகள் இவற்றை நடைமுறை படுத்தினால் மக்கள் ஏன் சீமானுக்கு வாக்குப்போட போகிறார்கள்? 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

இவை எல்லாம் சீமான் வாயால் வருவதால் மட்டுமே ....... பலர் எதிர்க்கிறார்கள் 
சொந்த காசில் சூனியம் செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை கூட புரியாமல் இருக்கிறார்கள்.
இருக்கும் அரசியல்வாதிகள் இவற்றை நடைமுறை படுத்தினால் மக்கள் ஏன் சீமானுக்கு வாக்குப்போட போகிறார்கள்? 

சீமான் வழமையாக கூறுவது, "எனது தம்பி தங்கைச்சிமார் புரிந்து கொள்ளவேண்டும்... " என்று. காரணம், அவரின் நம்பிக்கை அடுத்த .தலைமுறையில் தான் .

இந்த தலைமுறை பணம் வாங்கி வாக்கு வங்கிகளை நிரப்புகின்றது !  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்க சார் அவர் ரஜனி படத்துக்கு வசனம் எழுதிவிட்டு இருக்கும் நேரத்தில் இப்படி ஏதாவது உளறுவார் யாரோ குடிச்சிட்டு மிச்சம் வைச்சதை எடுத்து அடிச்சிட்டார்போல. 

 

சின்ன வயசில எங்களுக்கு மூத்தவங்க சொல்லுவாங்கள் நாட்டில் கம்யூனிசம் வந்ததெண்டால் சம உடமை ஆகிவிடும் எங்களிட்டை இருக்கிறதெல்லாத்தையும் அரசாங்கம் புடுங்கிப்போடும் பிறகு அது என்ன தருகுதோ அதைத்தான் நாங்கள் வாங்கிச் சாப்பிடவேண்டும் என அதைக்கேட்டு நான் பயந்த்ததுண்டு ஆனால் பயப்பிட ஒரு காரணமும் இல்லை ஏனெண்டால் எங்களிடம் இருந்தது என்னமோ ஒண்ணேகல் பரப்புக்காணியும் பங்குக்கிணறும்  (பாத்தீங்களா அப்பவே கிணறு விசையத்தில நாங்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்திருக்கிறம்) அதுக்குள்ள ஒரு சின்ன வீடும் (?)தான். அதையும் பறிச்சுப்போடுவாங்களோ என அவங்கள் இந்தக்கதையைச் சொன்ன ஓரிரு நாளாய் இரவுபகலாகத் தூக்கமில்லாமல் பிரண்டுபடுத்திருக்கிறன். இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தவீட்டையும் கம்யூனிசியம் பேசாத, எனது அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை சீதனம் எனும் பெயரில புடுங்கிப்போட்டார் ஆனால் அப்பவெல்லாம் அதைபத்தி யோசிக்காமல் குறட்டைவிட்டு நல்லா நித்திரைகொண்டனான். இப்படித்தான் ஒருநாள் முதுகுக்கு வெயில் பட எழும்புவம் எனப் படுத்துக்கிடக்கேக்க எல்லாரையும் வீட்டைவிட்டுக் கலைச்சுப்போட்டார். பிறகென்ன வாடகை வீடும் ஒண்டிக்குடித்தனமும்தான்.

இயந்திரன் 2,0 எடுக்கிறன்பேர்வளி என சங்கர் லைக்காவிடம் புடுங்கின காசில் ஏராளமாக ஜெயமோகனுக்கும் சுவறியிருக்கும்தானே அதுதான் ருசிகண்ட பூனை சீமான் தரவளி யாராவது வருமாப்போல் தப்புத்தண்டா ஏதாவது வந்தால் முதலில் சொன்ன கமுனிசியக்காரன் கதைதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.