• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

தனிமனித பொருளியல் : 5 கேள்விகள்/பதில்கள் : உழைக்காத வருமானம்; ..

Recommended Posts

பொருளியல் நிபுணர் கூறுவது இந்தியா சார்ந்து இருந்தாலும், அடிப்படை பொருளியல் தத்துவங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலும் பொருந்துவனவாக இருக்கும். 


குறிப்பு : பொதுவாக கிழமைக்கு சராசரியாக 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் நாங்கள் முதலீடுகள் பற்றி 4 நிமிடங்கள் கூட சிந்திப்பதில்லை 😞 

உழைக்காத வருமானம்; 

வாகன காப்புறுதி; 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

வங்கிக் கடனை சுமையின்றி நிர்வகிப்பது எப்படி?

கடன் வாங்குவது சுமையில்லை; மாறாக, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் கடன் உதவுகிறது என்று இந்தியர்களில் 50% பேர் குறிப்பிடுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய நகரங்களின் வசிக்கும் 2,571 பேரிடம், கடன் சார்ந்த பல கேள்விகள் கேட்டதில், பாதிப் பேர் மேலே சொன்ன விஷயங்களைச் சொன்னதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு அடுத்ததாக 12.5 சதவிகிதத்துடன் கார் கடனும், 12 சதவிகிதத்துடன் வீட்டுக்கடனும், 10.5 சதவிகிதத்துடன் நகைக்கடனும் இடம்பிடித்திருக்கின்றன. டிராவல் லோன், விவசாயக் கடன், கிரெடிட் கார்டு கடன், மெடிக்கல் லோன் ஆகியவை குறைந்த அளவில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடன் மேலாண்மை அவசியம்!

இப்படி, அலுவலக நண்பர்களிடம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் எனக் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கக் கடன், அவசியத் தேவைகளான சொந்த வீடு, வாகனம் வாங்கக் கடன் என நம் அனைத்துத் தேவைகளை கடன் வாயிலாகப் பூர்த்தி செய்து கொள்கிறோம். கடன் வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துதான் வாங்குகிறோம். ஆனால், அந்தக் கடன்களிலிருந்து வெளியே வரமுடியாதபடி மாட்டிக்கொள்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் கடன் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்யாததுதான்.

 

கடன் எங்கே தொடங்குகிறது?

நம் வாழ்க்கையில் கடன் என்கிற சமாசாரம் எங்கே தொடங்குகிறது என்பதை அறிவது முக்கியமான விஷயம். அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் தொடக்கப்புள்ளி என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.  

உயர் பதவியிலிருக்கும் நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் வாங்குவது அவசியம். இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் போதும். ஆனால், உங்கள் வருமான எல்லையைத் தாண்டி சொகுசு கார் வாங்குவது அநாவசியம். 

நம்மூரில் இருக்கும் டாப் கல்வி நிறுவனத்தில் உங்கள் பிள்ளைகள் மேற்படிப்புப் படிப்பதற்காக அவசியம் கடன் வாங்கலாம். ஆனால், வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்தப்போகிறோம்,  படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் யோசித்துப் பார்க்காமல் எக்கச்சக்கமாகக் கல்விக் கடன் வாங்கி வெளிநாட்டுக் கல்லூரியில் படிக்க வைப்பது என்பது அநாவசியம். இதற்காக, கடன் வாங்குவதே தவறு என்று சொல்ல வரவில்லை. கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காகப் பெருகி வளரும் என்கிற பட்சத்தில் வீட்டுக் கடன் வாங்குவது தவறே இல்லை.

பஸ்ஸில் ஏறி ஆபீஸுக்குப் போய் வர முடியவில்லை. அலுவலகத்தில் பெட்ரோல் செலவுக்குப் பணம் தருகிறார்கள். எனவே, வங்கியில் கடன் வாங்கி, அதை அடுத்த சில வருடங்களில் பெரிய கஷ்டம் ஏதும் இல்லாமல் திரும்பக் கட்ட முடியும் என்கிற நம்பிக்கையும் தெளிவான திட்டமும் இருக்கிறபோது, கார் அல்லது இருசக்கர வாகனக் கடனை வாங்குவது தவறே இல்லை.

 

 

யோசித்து கிரெடிட்கார்டு வாங்குங்கள்!

இன்றையத் தேதியில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மிடில் கிளாஸ் மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டித் தவிக்கிறார்கள். ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு தற்போதெல்லாம் கிரெடிட் கார்டு கடனைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இந்தக் கடனை வாங்கிவிடுகின்றனர்.

தவிர, கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதும் இன்றைக்குச் சர்வ சாதாரணமாகிவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் திடீர் ஆசையை நிறைவேற்ற கிரெடிட் கார்டை தேய்ப்பதுதான் மிடில் கிளாஸ்வாசிகளின் ஒரே வழியாக இருக்கிறது. ஆனால், இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான். கிரெடிட் கார்டு தரும் கெடு நாள்களுக்குள் நீங்கள் வாங்கிய பொருள்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம். அப்படிச் செலுத்த முடியாது என உங்களுக்கு நன்கு தெரியும்பட்சத்தில் கிரெடிட் கார்டு கடனை வாங்காமல் தவிர்த்துவிடுவதே புத்திசாலித்தனம்.

 

கடனை முன்கூட்டியே கட்டி முடியுங்கள்!

ஜாமீன், அடமானம் எதுவும் இல்லாமல் இருப்பதால் நம்மவர்கள் கல்யாணம் தொடங்கிக் காதுகுத்து வரை எதற்கெடுத்தாலும் தனிநபர் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள். பொதுவாக, தனிநபர் கடன் பெறுபவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், ‘எதிர்பார்க்கும் ஒரு தொகை வந்துவிடும். அந்தப் பணத்தைக் கட்டி, பர்சனல் லோனிலிருந்து வெளியே வந்துவிடலாம்’ என்கிற நம்பிக்கையில் கடன் வாங்குகிறார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் அசல்கூட கட்ட முடியாமல் போகும்போது, வட்டி குட்டி போட்டு ‘நாணயம் தவறிய கடன்தாரர்’ என நம் போட்டோ போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது.

கடன் பெறுவதில் சில சலுகைகளை அரசாங்கம் நமக்கு வழங்குகிறது. உதாரணத்துக்கு வீட்டுக்கடனுக்கு வரிச்சலுகை பெற முடியும். இப்படி நமக்குச் சலுகைகள் தரக்கூடிய கடன்களைத் தவிர, இதர கடன்களை போனஸ் தொகை சேமிப்புத்தொகையைக் கொண்டு முன்கூட்டியே முடிப்பது நல்லது. கடனைக் கட்டி முடிப்பது சேமிப்புக்கு ஈடான ஒரு விஷயம்.

 

தேவையான கடனை மட்டுமே பெறுங்கள்!

தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் பிற்பாடு நம் கழுத்தை நெரிக்கத்தான் செய்யும். எந்தக் காரணத்துக்காக நீங்கள் கடனை வாங்கப்போவதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வகை கடன் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அந்தக் கடனையே வாங்குவது அவசியம். காரணம், கடன் வகைக்கேற்ப வட்டி விகிதமும் மாறுபடும். மேலும் கடன் எதற்காக வாங்குகிறோம், வட்டி எத்தனை சதவிகிதம், எவ்வளவு காலத்துக்குள் திரும்பக் கட்ட முடியும் ஆகியவற்றையெல்லாம் யோசித்து வாங்கினால், கடன் சிக்கலில் நாம் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

https://www.vikatan.com/business/banking/loan-management-tips

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பததை கோரியுள்ளோம் எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்தர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழருக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் வேண்டும். விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புககளும், தன்டனைகளும், எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தன. சட்டக்கோவையை படித்தவர்ககளுக்கு நன்கு தெரியும். அரச காணி என்றபேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும், பூர்வீக காணிகளும் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. வேடுவ மக்களுடைய வெம்பு பூமி என்று சொல்லக்கூடிய அவர்களின் வாழ்வாதார நிலங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. காணி அபகரிப்பு சட்டத்தின் கீழ் சிறீலங்கா சுதந்திர கட்சியால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்று வரை தமிழ் மக்களுக்கோ, சிறுபான்மை மக்களுக்கோ வழங்கப்படாமல் இன்று வரை கபடத்தனமாக மண் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இன்று பலர் நீதியரசர் என்றும் சட்டத்தரணிகள் என்றும் வந்தாலும் கூட அவர்கள் இந்த காணி அபகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும் இல்லை அதனை முறியடித்ததும் இல்லை. அவ்வாறானவர்களின் அரசியல் போராட்டம் ஜனநாயக ரீதியாக மக்களுடைய அங்கீகாரத்தை ஏமாற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இதுவரை எந்த சாதனையைதான் செய்திருக்கிறார்கள். எந்த சட்டத்தைதான் உடைத்திருக்கிறார்கள் அதனை நிரூபித்து காட்டட்டும் பார்ப்போம். இவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் வாக்களித்து தெரிவு செய்வதற்கு நாங்கள் கொத்தடிமைகள் அல்ல. அவர்கள் சரியான ஒரு தலைமையை முன்வைப்பார்களே ஆனால் விக்னேஸ்வரன் அல்ல செயற்திறன் உள்ள தலைமையை முன்வைத்தால் எமது கட்சி ஆதரவளிக்கதான் போகிறோம்.</p> உறதியானதும் பற்றுதியுமான, நேர்மையுமான செயற்திறன் உள்ள ஒருவரை வேட்பாளராக நியமியுங்கள் என தமிழரசுகட்சியிடம் நான் கூறியிருந்தேன். அது மாத்திரமின்றி எங்களுடைய கட்சியின் தலைவர் கருணா அம்மான் ஒருவரிற்கு சந்தர்ப்பம் தாருங்கள் எனவும் கூறியிருந்தோம். அவ்வாறு அவருக்கு சந்தர்ப்பம் தந்தால் பின்புலமாக இருந்து நாமும் செயற்பட்டு 22 அல்லது 25 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட்ட பகுதிகளில் பெறுவதற்கு .முயற்சிப்போம். ஆனால் அந்த தலைக்கணமிக்க, பிரபுத்துவம் உள்ள சிந்தனை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை வழி நடத்திக்கொண்டிக்கிறவர்கள் இன்று வரை இறங்கி வந்ததாக இல்லை. ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இன்றும் எம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/76008
    • முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக&nbsp; தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சை படுதினால் அவருக்கு எதிராக போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துல்லனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டுறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் சுகந்தி ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்டாவது, நீதியரசர் விக்னேஸ்வரன்&nbsp; வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாழ்வதாக அண்மையில் கூறியதனூடாக&nbsp; எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி சாயாம் பூசி சிறிலங்கா அரசின் ஓஎம்பிக்குள் முடக்க எத்தனிக்கிறாரா? தமிழர்களை காணாமலாக்கிய ஒட்டுக்குழுக்களை ஒன்றாக்கி ஒட்டுக்குழுக்களின் கூட்டணி அமைத்திருக்கும் விக்கினேஸ்வரனுக்கு எம்மையும், எமது போராட்டத்தையும் எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்.விக்கினேஸ்வரன் நீதியரசர் என்ற பெயரை வைத்துக்கொண்டு நீதிக்கும் ,நேர்மைக்கும் உண்மைக்கும் எதிரான கருத்தை வெளிகொண்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். எமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாழ்கின்றார் என்றால் அதற்கான ஆதாரங்களை விக்கினேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும். எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி&nbsp; நீதி வேண்டி போராடி வருகின்றது ஓ.எம்.பியை வெளியேறக்கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். எமது அமைப்பு கடந்த பிப்ரவரி 4 திகதி அன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்பு கொடிகளை தாங்கி போராடி எமது எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறு தூய்மையான போராட்ட அமைப்பின் மீது அரசியல் சாயத்தை பூசி அதை இல்லாமல் ஒழிக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? எனவும் கனகரஞ்சினி உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் ஓ.எம்.பி யை ஆதரித்து அவர்களுடன் பல தடவை ரகசிய பேச்சுக்களை நடத்தி யாழில் ஓ.எம்.பியைத் திறக்க வழி கோலிவிட்டு இலங்கை அரசாங்கத்திடம் நீதியை கோரி வருகின்றனர். அரசிடம் நீதியை கோருகின்ற தரப்புக்கு விக்கினேஸ்வரன் ஆதரவா?என்ற கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஐ.நா பாதுகாப்புச்சபை ஊடாக நீதியை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனை அரசியல் சாயத்தை பூசி இல்லாமல் ஒழித்து கோத்தா அரசை பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா? எனவும் நாம் ஓ.எம்.பியை வெளியேற கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு இன்றுடன் 162 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் திரு விக்கினேஸ்வரன் இது வரைக்கும் எமது போராட்ட கொட்டகைக்கு வந்து ஏன் இதில் இருக்கிறீங்கள்?எதற்க்காக இருக்கிறீர்கள் ? என்று கூட கேட்காத விக்னேஸ்வரன் தனது கட்சி லாபத்திற்காக வாக்கு வேட்டைக்காக எமது தூய்மையான போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கிறார். காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை இலங்கை அரசு பிரித்தாழ்கிறது என்பது விக்கினேஸ்வரனுக்குத் தெரியாத விடயமல்ல ?அல்லது தெரியாது போல் நடிக்கிறாரா? தமிழின அழிப்பிற்கான நீதியை சொகுசான வாழ்க்கைக்காகவும்,தமது அரசியல் இருப்பிற்காகவும் விலைபேசி விற்ற கூட்டமைப்புப் போன்று கூட்டணி அமைத்து கும்மாளம் போட்டு தமிழர் தேசத்தை கூறுபோடும் விக்கினேஸ்வரனின் உண்மை முகம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இனிவரும் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை வேண்டி உறவுகளின் வலி சுமந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிந்தால் வரலாம் இல்லையேல் எமது போராட்டம் பற்றி வாய் திறக்கக்கூடாது.இல்லை கதைப்பேன் என நினைத்து எம்மைச் சீண்டினால் நீதியரசருக்கெதிராகவும் எமது போராட்டம் திரும்பும்.என்பதினை அறியத்தருகின்றோம் எனவும் காட்டமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/75996           
    • 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு என, அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அந்த பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/30-1-தரமனததல-இரநத-வலக-அரசஙகம-தரமனம/150-245789