Sign in to follow this  
கிருபன்

ஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது…

Recommended Posts

ஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது…

August 13, 2019

kong-kong-airport.jpg?resize=800%2C450ஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றைய தினம், விமான நிலையம் மூடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 200 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.

இந்தநிலையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு இணையானது என தெரிவித்துள்ள சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையம் திடிரென மூடப்பட்டதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/128716/

 

Share this post


Link to post
Share on other sites

ஹொங்கொங்கிற்கான சீன எல்லை நகரில் கவச வாகனங்கள் குவிப்பு

ஹொங்கொங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருவதை சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

அவை வெளியிட்ட படத்தில் ஷென்ஸென் நகரில் அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும், சில வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டன.

ஹொங்கொங்கில் பத்து வாரங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இராணுவப் பயிற்சிக்காக கவச வாகன அணிவகுப்பு ஷென்ஸென் நகரை நோக்கிச் செல்வதாக, பீப்பல்ஸ் டெய்லி நாளேடு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது.

ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள், சீனாவை சினமூட்டியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்செயல்கள் சிலவற்றைப் சீனா ‘பயங்கரவாதம்’ என்று கூறிச் சாடியது.

இம்மாதம் 6ஆம் திகதியன்று, சீன பாதுகாப்பு பிரிவின் 12 ஆயிரம் பேர் ஷென்ஸென் நகரில் கலகத் தடுப்புப் பயிற்சியில் பங்கேற்றனர். சமூக நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் காவல்துறையினரிடையே நம்பிக்கையை வலுப்படுத்தவும் அந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக ஷென்ஸென் நகரக் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.

கடந்த திங்களன்று விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன. விமானச் சேவைகள் நேற்று வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 
 

இதற்கிடையே ஹொங்கொங்கில் பொலிஸாரைத் தாக்க ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை சீனா கடுமையாகச் சாடியுள்ளது. ஹொங்கொங்கில் பயங்கரவாதம் உருவாவதற்கான முதல் அறிகுறி இது என்று சீனா எச்சரித்திருப்பதாக ஹொங்கொங் வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது.

ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் ஆரம்பமானது.

ஹொங்கொங் அரசு அந்த சட்டமூலத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்துவிட்டது. ஆனால், மக்கள் அந்த சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.

கடந்த பத்து வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹொங்கொங் மக்கள் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இதேவேளை ஹொங்காங் நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள் என்று போராட்டக்காரர்களிடம் ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கேட்டுக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங்கில் நடந்த கலவரம் குறித்து அந்நகர நிர்வாகத் தலைவர் கேரி லேம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது “ஹாங்கொங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தைப் பள்ளத்தில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹொங்கொங்கைப் பாதுகாப்பாகவும் மற்றும் சட்டம் ஒழுங்குடன் அமைதியாக வழிநடத்துவதே எனது பணியாகும்” என்றார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹொங்கொங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

https://www.thinakaran.lk/2019/08/14/வெளிநாடு/38668/ஹொங்கொங்கிற்கான-சீன-எல்லை-நகரில்-கவச-வாகனங்கள்-குவிப்பு

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • முப்பது வருட போரில் இழந்தவற்றை ஒரு இனக்கொலையின் பின்னர் எதிரியிடமிருந்து இராஜதந்திர அழுத்தங்களால் மட்டும் பெறுவது என்பது இலகுவான கலையல்ல. இனக்கொலையின் கையறு நிலையில் ஆரம்பித்த எங்களிடம் அதற்கான வல்லவர்களோ வளங்களோ குறைவு. போராட்டத்தால் நிமிர்ந்த புலம்பெயர் சமூகத்தின் உண்மையான பங்களிப்பு குறைவு. புலம்பெய்ர்ந்த நாடுகளில் படுபாவிகளான கொள்ளையர் குடும்பங்களால் அமுக்கபட்ட தமிழர் இரத்தமும் சாபங்களும் தோய்ந்த பணத்தை மீட்டு போரில் ஈடுபட்ட பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஏழைக் கிரமங்களுக்கு திருப்பிவிடுவதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு ரீதியாக அக்கறை  காட்டவில்லை. அமைப்புக்குள்ளும் சம்பந்தர்போல செயல்படுகிறவர்களை அதிகம் காணமுடியவில்லை. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு  சம்பந்தரை மதிப்பீடு செய்ய முடியுமா?  
  • சவேந்திர சில்வா பற்றியும் அவர் செய்த கொலைகளை பட்டியல் இட்டதும்  ஹான்சட்டில் இதை பதிந்தன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு தார்மீக கடமையை செய்துள்ளார். 
  • நல்லது பொடியா நான் இங்கு ஓர் சிறிய அரச வேலையில் இருக்கிறன் நான் சும்மா பகிடிக்கு கேட்டது வரவா என முந்தய காலத்தில் ஐரோப்பா வருகிற ஐடியா இருந்தது திருமணம் ஆன பிறகு இல்லை நான் இங்கே இருக்க விரும்புகிறேன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் 🙏   தற்போது இல்லை பையா நன்றிடா
  • 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 10:00   இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடுவித்தமையானது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாகவிருக்கும் நீர் ஒப்பந்தத்தை மீறும் இந்தியாவின் முயற்சியொன்றின் அங்கமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இராஜதந்திர ரீதியாக இந்தியா பாகிஸ்தான தனிமைப்படுத்த முயல்வதாகவும், பொருளாதாரத்தை சிதைக்க முயல்வதாகவும், நீர் வளங்களை சிதைக்க முயல்வதாகவும் தெரிவித்த பாகிஸ்தானின் நீர் மற்றும் சக்தி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் முஸம்மில் ஹுஸைன், பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனத்தில் நீர் தாக்கம் செலுத்துவதாகக் கூறியுள்ளார். இந்தியாவுக்கு, பாகிஸ்தானும் உரிமை கோரும் காஷ்மிர் பிராந்தியத்தின் தமது பகுதியிலுள்ள பிராந்தியத்தின் சிறப்புரிமையை நீக்கும் இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து ஏற்கெனவே கொதிகளமாகவுள்ள அயல் நாடுகளான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இந்தியாவின் முடிவுக்கு கோபமாகப் பதிலளித்த பாகிஸ்தான், போக்குவரத்து, வர்த்தகத் தொடர்புகளைத் துண்டித்ததுடன், இந்தியாவின் தூதுவரையும் வெளியேற்றிருந்தது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இந்தியாவும்-பாகிஸ்தானும்-முரண்படுகின்றன/50-237075   விமானி அபிநந்தனை சித்ரவதை செய்த பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொலை! ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில், பிப்ரவரி 14-ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில், இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழே விழுந்துள்ளது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்தது. அப்போது, விமானி அபிநந்தனிடம் பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான் விசாரணை நடத்தினார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு வகையில் அவரை சித்ரவதை செய்தனர். இதையடுத்து, உலக நாடுகளின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விமானி அபிநந்தனை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்த நிலையில், அபிநந்தனை சித்ரவதைசெய்த பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான், இந்திய ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லபட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டிய நாக்யால் என்ற பகுதிக்குள் ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். பாகிஸ்தான் வசம் இந்திய விமானி அபிநந்தன் சிக்கிக்கொண்டபோது, புகைப்படம் ஒன்று வெளியானது. அதில், அபிநந்தனுக்குப் பின்புறமாக அவர் நின்றுகொண்டிருந்தார். https://www.vikatan.com/news/india/pakistani-commando-who-captured-and-tortured-abhinandan-killed-by-indian-army-along-loc   காஷ்மீர் விஷயத்தில் அடங்காத பாகிஸ்தான்! இந்தியாவுக்கு எதிராக அடுத்த நடவடிக்கையில் இறங்கியது   இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்யும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. இந்தியா | Edited by Musthak (with inputs from Reuters) | Updated: August 20, 2019 21:57 IST   ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அப்செட்டில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீர் தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு நாசம் செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தது. அத்துடன் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி தொந்தரவும் கொடுத்தது. இந்த நிலையில் கடந்த 5-ம்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், அதனை காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக அமைக்கவும் அறிவிப்பு செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐ.நா. சபையில் இந்த விவகாரத்தை கொண்டு சென்றது. அங்கு பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்தியா காப்பாற்றி வருகிறது. இதைப் போன்று சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ndtv.com/tamil/kashmir-issue-pakistan-to-approach-world-court-against-indias-move-on-kashmir-reports-2087978?pfrom=home-topscroll   காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வுக்கு கொண்டு சென்ற பாகிஸ்தானுக்கு அங்கு மூக்குடைப்பே மிஞ்சியது. இந்நிலையில், இந்த விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்தில், முறையிட போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2348941
  • டென்மார்க் மறுத்தால் கனடா பக்கம் உள்ள சில தீவுகளை வாங்கலாம் என்கிற யோசனையும் உள்ளதாம்  🙂  கூட்டமைப்பினரும் தமிழீழத்தில் உள்ள தீவை எடுத்துக்கொண்டு .... என ஒரு 'டீலை' போட்டு பார்க்கலாம் 🙄