Jump to content

நீங்கள் கோத்தபாயவை பாதுகாக்கின்றீர்கள் - லசந்தவின் மகள் ரணிலிற்கு கடிதம்


Recommended Posts

கடந்த நான்கு வருடங்களாக  கோத்தபாய ராஜபக்சவை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வந்துள்ளார் என படுகொலை செய்யப்பட்ட  சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க  குற்றம்சாட்டியுள்ளார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும்  அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் அகிம்சா விக்கிரமதுங்க  இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

நீங்கள் உங்கள் அரசியல் உரையில் எனது தந்தையும் உங்கள் நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்க குறித்து சுட்டிக்காட்டியிருந்தீர்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கான கடிதத்தில் அகிம்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோத்தபாய ராஜபக்ச  தெரிவி;த்துள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே நீங்கள் எனது தந்தை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்,என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க எனது தந்தையினது கொலைக்காவும் ஏனைய ஈவிரக்கமற்ற கலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்ச  மன்னிப்பு கோருவாரா என கேட்டிருந்தீர்கள் எனவும்  தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்கு ஒருபோதும் மன்னி;ப்பு கோரமாட்டார் என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க கடந்த பத்துவருடங்களாக தொலைக்காட்சி பேட்டிகளில் எனது தந்தையின் கொலை குறித்து தான் மகிழ்ச்சியடைவதை கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என தீர்மானித்துவிட்டார்  என அகிம்சா தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க  இன்று தான் கொலையாளி என வர்ணிக்கும் அந்த நபரை கடந்த நான்கு வருடங்களாக பாதுகாத்து நன்கு கவனித்து வந்துள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அகிம்சா விக்கிரமதுங்க அதற்காக ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோருவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனது தந்தை இறந்த நாள் முதல் அவரது பெயரை நீங்கள் வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளீர்கள்  பிரதமரிற்கான தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க எனது தந்தையின் படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பிரச்சாரம் செய்தே நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கியதேசிய கட்சியையும் ஆட்சியில் அமர்த்தினீர்கள் என தெரிவித்துள்ளார்.

ahimsa_august_13.jpg

ஆனால் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் முன்னுரிமைகள் மாறிவிட்டன, 2015 இல் அலரிமாளிகையில் எனது தந்தையின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோருவதற்காக உங்களை நான் சந்தித்தவேளை நீங்கள் வேறு முன்னுரிமைக்குரிய விடயங்கள் உள்ளன,நீதி என்பது லசந்தவுடன் மாத்திரம் தொடர்புடையது இல்லை என நீங்கள் தெரிவித்தீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அவரை படுகொலையாளி என கூறும் அதேவேளை உங்கள் குடும்பத்தவர்களும் உங்கள் சிரேஸ்ட அதிகாரிகளும் கோத்தபாய ராஜபக்சவுடன் நட்பை தொடர்ந்தும் பேணி வருகின்றனர்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக வந்தாலும் இதுவரை காலமும் கோத்தபாய ராஜபக்சவிற்கு  சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலை தடையின்றி தொடரும் என நிச்சயமாக நம்புகின்றேன் எனவும் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

எனது தந்தையின் மரணம் குறித்து பெருமிதத்துடன் தம்பட்டம் அடித்த நபர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகியுள்ள நிலையில் துணிச்சலான நேர்மையான அரசியல்வாதியொருவரே அவரை எதிர்க்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் எழுதியுள்ள கடிதத்தில் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/62568

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.