Jump to content

"எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை; ஒற்­று­மையும் சர்­வ­தேச ஆத­ர­வுமே எமக்கு இன்றுள்ள பலம்": சுமந்திரன்


Recommended Posts

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் தெளி­வாக இருக்­கி­றார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்­று­மையைவிட கூடு­த­லாக தற்­போது ஒற்­றுமை இருக்­கி­றது. எங்­க­ளுக்கு இருப்­பது இரண்டு பலங்கள். ஒன்று எங்­க­ளது ஒற்­றுமை. மற்­றை­யது சர்­வ­தேசம். ஆகவே இவை இரண்­டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தமிழ் மக்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து சம­கால அர­சியல் நிலை­வரம் தொடர்­பாக விழிப்­பு­ணர்­வூட்டும் மக்கள் சந்­திப்பும் கருத்­த­ரங்கும் மட்­டக்­க­ளப்பு  களு­வாஞ்­சிக்­குடி இரா­ச­மா­ணிக்கம் மண்­ட­பத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது.



sumanthiran.jpg

அங்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட சுமார் 35 இற்கு மேற்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து தொடர்ந்து உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், 

சில மாதங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பா­ணத்­திலும் சாவ­கச்­சே­ரி­யிலும் இவ்­வா­றான மக்­களின் சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்து புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தும் நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­தி­ருந்தோம்.

இத்­த­கைய கருத்­த­ரங்­கு­க­ளுக்கு கட்சி ஆத­ர­வா­ளர்­களைவிட கட்­சியை விமர்­சிப்­ப­வர்­க­ளைத்தான் அழைத்­தி­ருந்தோம். ஏனென்றால் கட்­சியை விமர்­சிப்­ப­வர்­களின் கருத்தும் முக்­கியம் என்­பதால் நாம் அவ்­வாறு செய்தோம்.

இன்­றைய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாகச் செயற்­பட்­டதன் மூல­மாக அடைந்­தது என்ன என்ற கேள்­வி­களே அங்கும் பர­வ­லாக எழுந்­தன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை சீர்­கு­லைந்­தி­ருந்தால் செய்யக்கூடி­ய­தாக இருந்த விட­யங்­களைக் கூட செய்­வ­தற்கு முடி­யா­தி­ருந்­தி­ருக்கும் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும்.

இந்த ஒற்­று­மை­யா­வது இருந்­தி­ருக்­கா­விட்டால் இது­வ­ரைக்கும் நாங்கள் செய்­தி­ருப்­பதைக்கூட செய்­தி­ருக்க முடி­யாமற் போயி­ருக்கும். எங்­க­ளுக்கு இருப்­பது இரண்டு பலங்கள். ஒன்று எங்­க­ளது ஒற்­றுமை. மற்­றை­யது சர்­வ­தேசம். ஆகவே இவை இரண்­டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதனைக் கொண்­டுதான் விடிவை நோக்கி நகர முடியும். சமா­தானச் சூழ்­நி­லை­யிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடி­யாது என்று வரை­யறை இருக்­கின்­றது.

அதே­போன்­றுதான் ஜன­நா­யக முறை­யிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்யக்கூடாது என்ற வரை­யறை இருக்­கின்­றது. தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மீது இப்­பொ­ழுதும் தடை இருக்­கின்­றது.

நி­யா­ய­மான வேண்­டு­கோள்­களை நாங்கள் விடுக்­க­வில்லை. அவர்­க­ளுக்­கு­ரி­யதை நாங்கள் கேட்­க­வில்லை. எங்­க­ளுக்­கு­ரி­ய­தைத்தான் நாங்கள் கேட்­கின்றோம். இது நியா­ய­மா­னது. ஜன­நா­யக முறை­யிலே சர்­வ­தே­சத்தின் ஆத­ர­வையும் பெற்று அவர்­க­ளது நாட்­டிலும் இருக்கும் ஆட்சி முறை­மைகள் பற்றி அதில் நியா­ய­மா­னதைப் பற்­றித்தான் கேட்­கின்றோம்.

பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களை எதிர்ப்­பதைவிட அந்த சமூ­கத்­தி­லுள்ள முற்­போக்கு சக்­தி­களின் ஆத­ரவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். சிங்­கள மக்கள் மத்­தி­யிலே நாங்கள் சரி­யாகப் பிர­சாரம் செய்­ய­வில்லை என்ற கருத்து பரப்­பப்­ப­டு­கி­றது. அது தவ­றா­னது. சிங்­கள மக்கள் மத்­தி­யிலே இருக்­கின்ற முற்­போக்கு சக்­தி­க­ளோடு இணைந்து நாங்கள் பணி­யாற்­றியி­ருக்­கின்றோம்.

சோபித தேரரின் முத­லா­வது கூட்­டத்­திலும் நாங்கள் பங்­கு­பற்றி நாட்டில் பெரும்­பான்மை மக்கள் மத்­தி­யில் எமது நியா­ய­மான விட­யங்­களை எடுத்துக் கூறு­வதில் முன்­னின்று உழைத்தோம்.

இணக்­கப்­பாட்டு அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் சோபித தேரர் எடுத்த முன்­னெ­டுப்பு மிகவும் காத்­தி­ர­மாக இருந்­தது. எமது உரிமைப் போராட்ட வர­லாற்றில் தனி­நாட்டுக் கோரிக்கை முன்­வைத்­த­போது சிங்­கள மக்கள் எதிர்த்­தார்கள்.

ஆனால் நியா­ய­மான அதி­காரப் பகிர்­வோடு ஆட்­சி­ய­தி­கா­ரங்களைக் கோர முடியும். இதற்கு சர்­வ­தேச ஆத­ரவும் இருக்கும். தன்­னு­டைய சட்­டங்­களை தானே அமுல்­ப­டுத்­து­கிற சுயா­தீனம் ஒரு நாட்­டுக்கு இருக்­கி­றது. 13 ஆவது திருத்­தத்­தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்தி அதற்கு அப்­பாலும் சென்று அர்த்­த­முள்­ள­தாக மாற்றுவேன் என்றார் மஹிந்த ராஜ­பக் ஷ. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/62532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ampanai said:

இன்­றைய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாகச் செயற்­பட்­டதன் மூல­மாக அடைந்­தது என்ன என்ற கேள்­வி­களே அங்கும் பர­வ­லாக எழுந்­தன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை சீர்­கு­லைந்­தி­ருந்தால் செய்யக்கூடி­ய­தாக இருந்த விட­யங்­களைக் கூட செய்­வ­தற்கு முடி­யா­தி­ருந்­தி­ருக்கும் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும்.

இந்த ஒற்­று­மை­யா­வது இருந்­தி­ருக்­கா­விட்டால் இது­வ­ரைக்கும் நாங்கள் செய்­தி­ருப்­பதைக்கூட செய்­தி­ருக்க முடி­யாமற் போயி­ருக்கும்.

அவை யாவை

என ஒன்றிலிருந்து பத்து வரை ஒரு பட்டியல் தர முடியுமா திரு . சுமந்திரன் அவர்களே

Link to comment
Share on other sites

முட்டுக் கொடுப்பதையே கடமையாக் கொண்ட சுமந்திரன் தான் முட்டுகுடுக்கிறதில்ல என்டு ரில்விடுறது, கல்முனைல அடி வாங்கிட்டு கொழும்புக்கு தலைதெறிக்க ஓடிப்போய் ரணில் பக்கத்துல நின்டுகொண்டு அடி நான் வாங்கேலை என்டு சொல்ற மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டுக்குடுக்கவும் முதுகெலும்பு வேணுமெல்லே! இது நக்கி பிழைக்கிறதெல்லோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.