Sign in to follow this  
ampanai

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு

Recommended Posts

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,  

“தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சர்வஜன-வாக்கெடுப்பை-நடத்தி-இனப்பிரச்சினைக்கு-தீர்வு/175-236698

Share this post

Link to post
Share on other sites

கூட்டமைப்புக்கு ஒரு கோரிக்கை!

  • சில வெளிநாடுகளில் செய்வது போன்று இரண்டு கடசிகளின் பிரதான வேட்ப்பாளர்களையும் ஒரே மேடையில் அமர்த்துங்கள்.
  • நேரடி ஒளி பரப்பை செய்யுங்கள்.
  • இரண்டு கட்சிகளையும் ஒரு சில முக்கியமான கேள்விகளை கேளுங்கள்
  • மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்.

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த விதி முறையானது ஐ.நா. சரத்துக்களுக்கு அமைவானது. இது பற்றி நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட முன்னர் கூறி இருந்தனர்.

இவ்வாறு கூறி சிங்களம் ஏமாற்றும். எனவே, இதை ஐ. நா. வுடன் சம்பந்தரின் சாணக்கியம் இணைத்துவிட்டால்......

Share this post

Link to post
Share on other sites

13 வது சரத்தின் ஊடாகவோ அல்லது ஒரு சமஸ்டி ரீதியிலானா தீர்வின் அடிப்படையில் இந்த சர்வசன வாக்கெடுப்பு சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டால் நன்று .இதற்கு மேலாக நமது அனைத்து தமிழர் கட்சியும் ஒன்று இணைந்து 
இதை அரசியல் சாணக்கியதோடு அணுகவேண்டும் .இருந்தும் இதுகும் ஒரு சிங்கள இராசதந்திரத்தின் ஒரு ஏமாத்து வேலையோ என்றும் எண்ண தோன்றுகின்றது .

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

வரலாற்றில் சந்தர்ப்பங்களை நழுவ விட்டவர்கள் நாங்கள்.

வரும் காலங்களில் சந்தர்ப்பங்களுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாமலே போய்விடும். 

எம்மில் சிலர் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என  விரும்பலாம், அதற்கு தீர்வையும் நிராகரிப்பார்கள். அதில் நியாயமும் உள்ளது. வேறு எந்த தீர்வையும் ஏற்பவர்களை 'துரோகிகள்' எனவும் பார்க்கப்படுவார்கள்.

ஆனால், கள; பூகோள அரசியல் நிலைகளை பார்த்து கடலில் தத்தளிக்கும் மக்களுக்காக ஒரு தற்காலிக தீர்வாக இது  அமையலாம். 
  
Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

தமிழர்களுக்கான தீர்வை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவர்கள் அல்ல.

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

எல்லாவற்றிலும் அந்தப் பிராந்திய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர.. மற்றவர்கள் அல்ல. 

அதென்ன சிங்கள அரசியல்வாதிகள் தான் இப்படி சனநாயக முரணாக சிந்திக்கின்றனர்..?! இது ஒன்றே போதும் சொறீலங்கா ஒரு சனநாயக நாடு அல்ல என்பதை இனங்காட்ட. 

Edited by nedukkalapoovan
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

எல்லாவற்றிலும் அந்தப் பிராந்திய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர.. மற்றவர்கள் அல்ல. 

அவர்களுக்கு உள்ள தன் மக்களை ஏமாற்றாத, சாணக்கிய அரசியல் தலைமைகள் எங்களிடம் இல்லாதது தான் காரணமா?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

அவர்களுக்கு உள்ள தன் மக்களை ஏமாற்றாத, சாணக்கிய அரசியல் தலைமைகள் எங்களிடம் இல்லாதது தான் காரணமா?

அதேதான் காரணம். வேறு ஒரு காரணமும் இல்லை.
எமது தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் வியாபாரிகள்.
விபச்சாரம் செய்பவர்களுக்கு சமமானவர்கள்.

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கர் சரியாக சொன்னார் அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியும் அவர்கள் விரும்புவதுபோன்று சிங்கள மக்களையும் உள்ளடக்கிய சர்வஜன வாக்கெடுப்பில் எந்த தமிழரின் தீர்வுத்திட்டமும் தோற்கடிக்கப்படும் எனவே மக்கள் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாகி காலாதி காலத்துக்கு நாங்களும் அடிமையாக காலத்தை ஓட்டணும். இதுபோன்ற நரிகளின் தந்திரத்தை மக்கள்முன் போட்டுடைக்க தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிசெய்வதில்லை.

தமிழரின் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக நிற்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை அள்ளிவீசி தமிழ் மக்களை குளப்பி வாக்குகளை சிதறடிப்பது இவர்களின் நோக்கம். தமிழர் கட்சிகளுக்கு ஏற்ற வேலைத்திட்டங்களை பிரித்து வழங்குவதற்கு ஒரு நடுநிலையான துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய மத்திய கொள்கை வகுப்பு குழு ஒன்று அத்தியாவசியம். தீர்வுத்திட்டங்களில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய கருப்பொருள்களை சம்பந்தன் சுமந்திரன் உட்பட எமது அரசியல்வாதிகள் சரியாக புரிந்துவைத்திருக்கிறார்களா என்பதில் நீண்டகாலமாக எனக்கு சந்தேகமுண்டு.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, nedukkalapoovan said:

தமிழர்களுக்கான தீர்வை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவர்கள் அல்ல.

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

நீங்கள் சொல்வது தமிழர்கள்  பிரிந்து தனி நாடு உருவாக்குவதா இல்லையா என்று முடிவெடுப்பது பற்றி.

12 hours ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அவர் சொல்வது தமிழர்கள் பிரியாமல் இருப்பதை சிங்களவர்கள் விரும்புவதால் அதற்காக அவர்கள் தர விரும்பும் தீர்வு பற்றி. அதை அவர்கள் தானே சொல்ல வேண்டும்?

5 hours ago, vanangaamudi said:

நெடுக்கர் சரியாக சொன்னார் அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியும் அவர்கள் விரும்புவதுபோன்று சிங்கள மக்களையும் உள்ளடக்கிய சர்வஜன வாக்கெடுப்பில் 

அவர் “உள்ளடக்கிய” என்றோ அல்லது அப்படி கருத்து படவோ சொல்லவில்லை.

12 hours ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  

இது வித்தியாசமான கருத்து.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, Jude said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  

தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி சிங்களவர்களில் எத்தனை பேருக்கு நடுநிலமையான, சரியான விளக்கம் இருக்கிறதென்பதின் அடிப்படையிலேயே தமிழருக்குத் தரக்கூடிய தீர்வு என்னவென்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பது தங்கியிருக்கிறது. இது கொலையாளியிடம் போய், உனக்கு என்ன தண்டனை தரவேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் என்று கேட்பதற்குச் சமனானது. 

இதுவரையில் சாதாரண சிங்களவருக்கோ அல்லது சிங்களத் தலைவர்களுக்கோ தமிழர் பிரச்சினை தொடர்பில் தெளிவான சிந்தனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. பெரும்பான்மையினருக்கு தமிழர்கள் சிங்கள நாட்டைப் பிரித்துத் தனிநாடாக மாற்ற முயலும் பிரிவினைவாதிகள். இன்னும் சிலருக்கு, தமிழருக்குப் பிரச்சினையில்லை, இருந்ததெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினையே, அதையும் அழித்தாயிற்று, ஆகவே இனிப் பிரச்சினையென்று எதுவுமில்லை, ஆகவே இல்லாத பிரச்சினைக்கு ஏன் தீர்வு தரவேண்டும்? இன்னும் கொஞ்சப் பேருக்கு தமிழர்கள் வடக்குக் கிழக்கு மட்டுமல்லாமல், முழு இலங்கையையுமே கைப்பற்றி, இந்தியாவின் தமிழ்நாட்டுடன் சேர்த்துவிடப் போராடுகிறார்கள். வெகு சொற்பப் பேருக்குத்தான், தமிழர்கள் உண்மையாகவே அடக்கப்படுகிறார்கள், அவர்களுக்குப் பிரியாத நாட்டிற்குள் நியாயமான தீர்வொன்று தேவை என்கிற எண்ணம் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் சிங்களவரிடம் மட்டுமோ அல்லது சிங்களவர் உள்ளடக்கியோ சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது எந்தவிதத்திலும் எமக்குச் சார்பாக முடியப்போவதில்லை.  இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காட்டி எந்தத் தீர்விற்கும் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டிக் கொண்டு காலம் கடத்துவதுபோல, இந்த சர்வஜன வாக்கெடுப்பையும் சிங்களம் இன்னும் பல தசாப்த்தங்களுக்கு சாட்டாக வைத்து தீர்வொன்றைத் தருவதைத் தட்டிக் கழிக்கலாம்.

தமிழருக்குத் தேவையான தீர்வு என்னவென்பதை தமிழர்களைத்தவிர வேறு எவராலும் சரியாகக் கூறிவிட முடியாது. அத்தீர்வு பிரியாத நாட்டிற்குள் (இப்போதைக்கு தனிநாடெல்லாம் சாத்தியப்படாது) சுயநிர்ணய உரிமையுடனோ அல்லது சமஷ்ட்டி அடிப்படையிலோ சுதந்திரமாக வாழ தமிழருக்கு வழிசமைத்துக் கொடுத்தாலே போதுமானது.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

"13வது திருத்தத்திலுள்ள அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்"

அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்று கொடுக்கப்பட வேண்டும். அதற்கமைய 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 13 ஆம் திருத்தசட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் என்பன தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிங்கள மக்களின் பெரும்பான்மையான விருப்பத்தை பெற முடியும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222171/13வது-திருத்தத்திலுள்ள-அனைத்து-உரிமைகளும்-தமிழ்-மக்களுக்கு-வழங்க-வேண்டும்

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
6 hours ago, ரஞ்சித் said:

தமிழருக்குத் தேவையான தீர்வு என்னவென்பதை தமிழர்களைத்தவிர வேறு எவராலும் சரியாகக் கூறிவிட முடியாது. அத்தீர்வு பிரியாத நாட்டிற்குள் (இப்போதைக்கு தனிநாடெல்லாம் சாத்தியப்படாது) சுயநிர்ணய உரிமையுடனோ அல்லது சமஷ்ட்டி அடிப்படையிலோ சுதந்திரமாக வாழ தமிழருக்கு வழிசமைத்துக் கொடுத்தாலே போதுமானது.

யார் வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் சிங்கள பெரும்பான்மையே அன்றி வேறு எவருமல்லர்.

6 hours ago, ரஞ்சித் said:

இந்த லட்சணத்தில் சிங்களவரிடம் மட்டுமோ அல்லது சிங்களவர் உள்ளடக்கியோ சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது எந்தவிதத்திலும் எமக்குச் சார்பாக முடியப்போவதில்லை.  இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காட்டி எந்தத் தீர்விற்கும் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டிக் கொண்டு காலம் கடத்துவதுபோல, இந்த சர்வஜன வாக்கெடுப்பையும் சிங்களம் இன்னும் பல தசாப்த்தங்களுக்கு சாட்டாக வைத்து தீர்வொன்றைத் தருவதைத் தட்டிக் கழிக்கலாம்.

எப்படி அதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்? இந்த சிங்களவருக்கான சர்வஜன வாக்கெடுப்பு எந்த தீர்வை வழங்குவது பற்றியது. ஆகவே வாக்கெடுப்பில் அவர்கள் தர தயாராக இருக்கும் ஏதோ ஒன்று தெரிவு செய்யப்படும்.  அது தவிர வேறு எதுவும் தமிழருக்கு கிடைக்காது. அதை வேண்டாம் என்றால் தனிநாடே கேட்கலாம். கிடைக்காததை கேட்பதாக இருந்தால் எதையும் கேட்கலாம் தானே?

6 hours ago, ரஞ்சித் said:

தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி சிங்களவர்களில் எத்தனை பேருக்கு நடுநிலமையான, சரியான விளக்கம் இருக்கிறதென்பதின் அடிப்படையிலேயே தமிழருக்குத் தரக்கூடிய தீர்வு என்னவென்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பது தங்கியிருக்கிறது.

அந்த விளக்கத்தை கொடுப்பதற்கு ஒரு பெரிய சந்தர்ப்பம் இவ்வாறான  சிங்களவருக்கான சர்வஜன வாக்கெடுப்பு. சிங்களம் சரளமாக பேசும் சுமேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் போன்றவர்கள் சிங்களவர்களுக்கு நாடு முழுவதும் போய் சிங்களத்தில் தமிழருக்கு என்ன பிரச்சினை, என்ன தேவை, அதனால் சிங்கவருக்கு என்ன நன்மை, என்ன பாதகம் என்பது பற்றி விளக்கி வாக்கு கேட்க இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இந்த வாக்குகள் மட்டும் தான் தமிழருக்கு தீர்வு தர முடியும். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, இந்தியா, சர்வதேச நீதி மன்றம் எல்லாம் இலங்கை அரசையும் இராணுவத்தையும் மீறி எதுவும் செய்ய முடியாது.

Edited by Jude

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this