Sign in to follow this  
nunavilan

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

Recommended Posts

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நகர்வுகள் - அமெரிக்காவின் இரட்டை முகம்

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென மைத்திரியிடம் சஜித் வேண்டுதல்
 
 
main photo
 
இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதே தமது நோக்கமென அமைச்சர் ஹரின் பொர்ணான்டோ கூறியுள்ளார். பதுளைப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசவுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. 
 
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென கையெழுத்துப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுமென கட்சியின் பதுளைத் தொகுதி அமைப்பாளர் கூறியுள்ளார்.

 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான ஆதரவை வழங்குவது குறித்து அமெரிக்கத் தூதரகம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்டவர் என்ற அடிப்படையில், அமெரிக்கத் தூதரகம் கடந்த சில நாட்களாக மங்கள சமரவீரவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது

 

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளரென அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு விரைவில் முடிவெடுக்குமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளரென ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. பகிரங்கமாகவே எதிர்க்க ஆரம்பித்தனர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு ஆதரவான உறுப்பினர்களோடு சஜித் பிரேமதாச வெளியே வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துப் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்க விருப்பம் கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே சஜித் பிரேமதாசவுடன் பேசியிருந்தார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக வருமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டுமெனக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை. இதனால் சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராக நியமிக்கும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன தீவிரமாகச் செயற்படுவதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

 

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல்த் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா, வடக்குக் - கிழக்குத் தாயகக் கடற்பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனாலேயே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளது

 

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க விருப்பமில்லாத குமார் வெல்கம போன்ற உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் உள்ளனர். அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவோடு பேசியதாகக் கூறப்படுகின்றது.

ஆனாலும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதனை மைத்திரிபால சிறிசேன ஆதரிப்பாரா இல்லையா என்பது குறித்து முடிவுகள் இல்லை.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை வேட்பாளராக அறிவித்தால் அதனை ஏற்று ஆதரவு வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாச மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுள்ளாரென்றும் மற்றுமொரு உயர்மட்டத் தகவல் கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைய முடியும் எனவும் சஜித் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முடியுமென அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோடும் சென்ற ஞாயிற்றுக்கிழமை மங்கள சமரவீர பேசியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனும் மங்கள சமரவீர இது பற்றி உரையாடியுமுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முயற்சி எடுத்திருந்தது. ஆனால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் எந்தவொரு சந்திப்பையும் இதுவரை நடத்தவில்லை.

எனினும் கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ளக எதிர்ப்புகள் கடுமையாக நிலவியதால் கரு ஜயசூரியவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்கத் தூதுவர் பேசியிருந்தார்.

 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடிக்குமானால் சில சமயங்களில் ரணில் விக்கிரமசிங்கவையே வேட்பாளராக அறிவிக்கும் நிலையும் ஏற்படலாம். இது குறித்தும் மங்கள சமரவீர சஜித் பிரேமதாசவுடன் பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

கண்டி பௌத்த மகாநாயக்கத் தேரர்களின் அரசியல்ச் செல்வாக்கு இலங்கையில் அதிகளவு உள்ளதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா, பௌத்த தேரர்களின் விருப்பத்திற்குரிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றது.

அதனடிப்படையிலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கரு ஜயசூரியவை ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தார். இதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்புகளும் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அது குறித்தும் பரிசீலிக்க அமெரிக்கத் தூதரகம் தயாராகியுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்டவர் என்ற அடிப்படையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த சில நாட்களாக அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடிக்குமானால் சில சமயங்களில் ரணில் விக்கிரமசிங்கவையே வேட்பாளராக அறிவிக்கும் நிலையும் ஏற்படலாம். இது குறித்தும் மங்கள சமரவீர சஜித் பிரேமதாசவுடன் பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமெரிக்காவின் ஆதரவுடன் அமைப்பதில் அமைச்சர் மங்கள சமரவீர தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பகுதி உள்ளிட்ட கிழக்குக் கடற்பிரதேசங்களையும் திருகோணமலைத் துறைமுகத்தையும் கையகப்படுத்தும் நோக்கில் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு அமெரிக்கா கடந்த சில வருடங்களாக முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா தற்போது வடக்குக் - கிழக்குக் கடற் பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணத்தினாலேயே இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர் தெரிவு விடயத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1142&fbclid=IwAR0aXt6FaV7fRsQhZAnp8OjhKXfG_kc8_GRALVpklYlOyCfek7hOhO5rLJk

Share this post


Link to post
Share on other sites
On 8/13/2019 at 6:27 PM, nunavilan said:

அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பகுதி உள்ளிட்ட கிழக்குக் கடற்பிரதேசங்களையும் திருகோணமலைத் துறைமுகத்தையும் கையகப்படுத்தும் நோக்கில் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு அமெரிக்கா கடந்த சில வருடங்களாக முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா தற்போது வடக்குக் - கிழக்குக் கடற் பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இது ஒரு திறவுகோலாக அமைந்துவிட்டால்... 
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பொதுவாக ரணிலையும், மைத்தியையும் ஒப்பிட்டால் ரணில் நரிதான் அதில் சந்தேகமில்லை. ஆனால் மைத்திரியோ நரியைவிடப் பயங்கரமான ஓநாய். சனாதிபதியின் ஆதரவில்லாமல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெறச் சாத்தியமில்லை. அந்த இனவழிப்பு வேளையில் மகிந்தா பொறுப்புகளை மைத்திரியிடம் கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். முள்ளிவாய்காலில் தமிழர்களை மிகவும் கொடூரமாக அழித்தது கோத்தபாய என்று நாங்கள் சாடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் சனாதிபதிப் பொறுப்பிலிருந்த மைத்திரியின் ஆதரவும், அனுமதியும் இல்லாமல், கோத்தபாயவால் தமிழின அழிப்பை நடாத்தியிருக்க முடியாது.   
    • ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பின் பத்தரிகைத் துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன், நேற்று (21) காலமானார். நேற்று காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அவர் காலமாகியுள்ளார். கதிர்காமதம்பி வாமதேவன் 1980ஆம் ஆண்டு வீரகேசரி, சூடாமணி, தினபதி ஆகிய பத்திரிகைகளில் ஊடகப் பணியை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சரஷட-ஊடகவயலளர-கலமனர/73-241387
    • புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக அர்ச்சகர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் அரை மணி நேரம் போராடி ஸ்டீபனை வெளியே மீட்டனர். அவருக்கு சிறு, சிறு காயங்கள் இருந்ததால், முதல் உதவி சிகிச்சைக்கு பின் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் புதுக்கடை போலீசாரும்  வந்து விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஸ்டீபனிடம் போலீசார் கேட்ட போது, அவர் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததுடன், சிரிக்கவும் வைத்தது. அவர் போலீசில் கூறுகையில், இன்று அதிகாலை நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது 3 பேய்கள் என் கனவில் வந்தன. நீ எங்களுடன் வந்து விடு. நாங்கள் உன்னை விட மாட்டோம் என்றன. அந்த உருவங்களை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என கூறிக்கொண்டு ஓட தொடங்கினேன். அந்த பேய்கள் என்னை துரத்தின. கடைசியாக நான் கோயில் கிணற்றுக்குள் விழுந்தேன். கிணற்றில் விழுந்தது கனவு தான் என்று நினைத்தேன். தண்ணீருக்குள் விழுந்த பின் தான் உண்மையிலேயே கிணற்றுக்குள் விழுந்ததை நான் உணர்ந்தேன் என்றார்.  இதை கேட்டதும் போலீசாரும் சிரித்தனர். இதற்கிடையே ஸ்டீபன் கூறும் தகவல் நம்பும்படியாக இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் கூறி உள்ளனர். ஏற்கனவே இந்த கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி உள்ளது. எனவே  புதையல் எடுக்கும் நோக்கத்துடன் யாராவது ஸ்டீபனை கிணற்றுக்குள் விழ வைத்து இருப்பார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. https://www.ndtv.com/tamil?pfrom=home-header-globalnav
    • இந்த அமைச்சால் தான் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டு வந்தது. ரணில் - சஜித் அரசில் இருந்து இது மாறுபடுமா இல்லை தொடருமா.... 
    • மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மனிதர்களின் நுரையீரலையும், இதயத்தையும் பாதிக்கும் என்பது பொதுவான பிரச்சனை. காற்றில் உள்ள சிறிய தூசி துகள்களை நீண்ட காலமாக உள்ளிழுப்பதால் சுவாச பிரச்சினைகள், காற்றுப்பாதைகளின் எரிச்சல், ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சினைகள் போன்ற சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். சில நேரங்களில் அது புற்றுநோயையும் கூட ஏற்படுத்தும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது எடை அதிகரிப்பிற்கு கூட வழிவகுக்கும் என்று கூறுகிறது. உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, காற்று மாசுபாடு நமது எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து ஆய்வை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது கர்ப்பிணி எலிகள் மற்றும் அவற்றின் சந்ததிகளை ஒரு சில வாரங்களுக்கு தீவிரமாக மாசுபடுத்தப்பட்ட காற்று நிறைந்த பகுதியில் அடைத்து வைத்தனர். அதே நேரத்தில் மேலும் சில எலிகளின் குழுவை பிரெஷ்ஷான மற்றும் வடிகட்டப்பட்ட காற்றை சுவாசிக்க வைத்தனர் ஆராய்ச்சியாளர்கள். 19 நாட்களுக்குப் பிறகு, மாசுபட்ட காற்றுள்ள பகுதியில் அடைக்கப்பட்டிருந்த எலிகள் பின்வரும் சிக்கல்களை எதிர்கொண்டது கண்டறியப்பட்டது: * அவற்றின் நுரையீரல் வீக்கமடைந்து காணப்பட்டது * அவற்றின் எல்டிஎல் கொழுப்பின் அளவு 50 சதவீதம் அதிகரித்தது * இன்சுலின் எதிர்ப்பு அளவும் உயர்ந்தது இது தவிர, தீவிர மாசுபாடு காரணமாக குறிப்பிட்ட எலிகள் எட்டு வாரங்களுக்குப் பிறகு எடை அதிகரித்தன. எலிகளின் இரு குழுக்களுக்கும் ஒரே உணவை அளித்திருந்தாலும், காற்று மாசு சூழலில் அடைக்கப்பட்டிருந்த எலிகளின் எடை அதிகரித்திருந்தது. வீக்கம் காரணமாக எடை அதிகரிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டாலும், மனித ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகளை மறுக்க முடியாது. எனவே மாசுபட்ட காற்றை சுவாசித்தால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. https://www.polimernews.com/dnews/89823/மாசு-காற்றை-சுவாசித்தால்உடல்-எடைஅதிகரிக்குமா.?ஆய்வில்கிடைத்த-விடை