Jump to content

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு


Recommended Posts

à®à®©à¯à®±à¯ நளà¯à®³à®¿à®°à®µà¯ à®®à¯à®¤à®²à¯ à®à®°à®¿à®ªà¯à®°à¯à®³à¯ வில௠à®à®¤à®¿à®à®°à®¿à®ªà¯à®ªà¯-Fuel Price Increased by Fuel Price Formula

இன்று நள்ளிரவு (14) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தம் (அதிகரிப்பு) செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலை மாறாது எனவும், நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைத் திருத்தம் மாதாந்தம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும்,  இம்மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை என்பதாலும், மீதமுள்ள இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதாலும், இந்த விவகாரம் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

அந்த வகையில் நிதியமைச்சில் இன்று (13) கூடிய எரிபொருள் விலை சூத்திரக் குழுவினால் குறித்த விலைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 136 இலிருந்து ரூபா 138 ஆக ரூபா 2 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 159 இலிருந்து ரூபா 163 ஆக ரூபா 4 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 131 இலிருந்து ரூபா 134 ஆக ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

https://www.thinakaran.lk/2019/08/13/உள்நாடு/38661/இன்று-நள்ளிரவு-முதல்-எரிபொருள்-விலை-அதிகரிப்பு

Link to comment
Share on other sites

 

 

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சரிந்த உல்லாசத்துறை, சமுர்த்தி போன்ற இலவச திட்டங்கள், வேலையை அரசிடம் எதிர்பார்க்கும் பட்டதாரிகள், வரும் தேர்தல்களும் வாரி இறைக்கப்படும் வாக்குறுதிகளும் ....


கடைசியில் மக்களே இவற்றிற்கு பணம் செலுத்துபவர்களாக உள்ளனர்.  

உலக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கான அமெரிக்க டாலரில் 

Price of crude oil (West Texas Intermediate, dollars per barrel).  Source: FRED.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.