Sign in to follow this  
ampanai

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

Recommended Posts

Posted (edited)

à®à®©à¯à®±à¯ நளà¯à®³à®¿à®°à®µà¯ à®®à¯à®¤à®²à¯ à®à®°à®¿à®ªà¯à®°à¯à®³à¯ வில௠à®à®¤à®¿à®à®°à®¿à®ªà¯à®ªà¯-Fuel Price Increased by Fuel Price Formula

இன்று நள்ளிரவு (14) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தம் (அதிகரிப்பு) செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஒட்டோ டீசல் விலை மாறாது எனவும், நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைத் திருத்தம் மாதாந்தம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும்,  இம்மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை என்பதாலும், மீதமுள்ள இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதாலும், இந்த விவகாரம் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

அந்த வகையில் நிதியமைச்சில் இன்று (13) கூடிய எரிபொருள் விலை சூத்திரக் குழுவினால் குறித்த விலைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 136 இலிருந்து ரூபா 138 ஆக ரூபா 2 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 159 இலிருந்து ரூபா 163 ஆக ரூபா 4 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 104 (மாற்றமில்லை) இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 131 இலிருந்து ரூபா 134 ஆக ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

https://www.thinakaran.lk/2019/08/13/உள்நாடு/38661/இன்று-நள்ளிரவு-முதல்-எரிபொருள்-விலை-அதிகரிப்பு

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

 

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சரிந்த உல்லாசத்துறை, சமுர்த்தி போன்ற இலவச திட்டங்கள், வேலையை அரசிடம் எதிர்பார்க்கும் பட்டதாரிகள், வரும் தேர்தல்களும் வாரி இறைக்கப்படும் வாக்குறுதிகளும் ....


கடைசியில் மக்களே இவற்றிற்கு பணம் செலுத்துபவர்களாக உள்ளனர்.  

உலக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கான அமெரிக்க டாலரில் 

Price of crude oil (West Texas Intermediate, dollars per barrel).  Source: FRED.

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • படம்: மனம் போல் மங்கல்யம்(1957) பாடியோர்: A.M.ராஜா & P.லீலா வரிகள்: சுரதா இசை: A.ராமாராவ்.... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்.. ... கொப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் கொப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணாம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய் சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு, மனசுக்குள்ளே நினைச்சிடுவார் மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பெண்களுக்கு அழகாகுமோ? ஸா ரி ஸ் ஸரிஸநி தபமப ஸரிஸரி மபடப மப ஸா ரிஸ ஸரிஸநி ஸரிஸநி தபமப ஸரிஸரி மபதப ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப தபம ரிக மகரிஸ நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்.. ... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்  
    • யாழ்ப்பாணத்தில் கிடைத்த சந்தர்ப்பங்கள் எனது வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று: பேராசிரியர் நிசான் கனகராஜா யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடைபெற்றவேளை பல கஷ்டங்கள் இருந்தபோதிலும் அங்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் தனது வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் யாழ் பரியோவான் கல்லூரியில் வளர்த்துக்கொண்ட ஆளுமை பிரித்தானியாவில் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லெஸிஷ்டர் பல்கலைக்கழகத்தின் துணையவேந்தராக பதவி ஏற்கவிருக்கும் பேராசிரியர் நிசான் கனகராஜா தெரிவித்திருக்கிறார். அவுஸ்திரேலியாவின் SBS தமிழ் ஒலிபரப்பு சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கும் பேராசிரியர் நிசான் கனகராஜா எதனை சாதிக்க நினைக்கிறீர்களோ அதனை ஒருபோதும் கைவிடாமல் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள், எல்லோருடனும் நன்றாக பழகுங்கள், மாறும் சூழ்நிலைமைக்குக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள பழகுங்கள் என்ற மூன்று அறிவுரைகளை வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூறியிருக்கிறார். பேராசிரியர் நிசான் கனகராஜா வழங்கிய நேர்காணலை கீழே கேட்கலாம் :   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-கிடைத்த/
    • விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019 ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நான்காயிரம் ஏக்கர் காணிகளை விட இன்னும் விடுவிக்கப்ட வேண்டிய பொது மக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பருத்தித்துறை தறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வும், சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நேற்று மாலை வரையில் சுமார் ஐந்து இலட்சம் பேர் நன்மை அடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து முன்னெடுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் கடந்த இரு தினங்களிலும் ஆயிரத்து 293 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் 15 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 30ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 400 நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் 23ம் திகதி முதல் நாளாந்தம் யாழ்.மாவட்டத்தில் மக்கள் விழிப்பூட்டப்பட்டு வருவதுடன் நடை முறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சுற்றாடல், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறுவர், மகளிர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்களும், தொழில் முயற்சிகள், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளும், வட மாகாணத்திற்கு ஏற்றவாறு மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கின்றது. கிராம சக்தி, ஸ்மாட் ஸ்ரீலங்கா, சுத்தமான குடிநீர், சிறுநீரக நோய் நிவாரணம் என்பன உட்பட விவசாய, மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்திகளுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் பாரிய பங்களிப்புக்களை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்) http://globaltamilnews.net/2019/129519/
    • எமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019 கோத்தாபயராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை.எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். ஞாயிற்றுக்கிழமை(25) கல்முனை பகுதியில் மாலை ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள் எங்களது உறவுகளை தொலைத்தவர்களில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ .இவரால் தான் இன்று வரை நாங்கள் தெருத்தருவாய் அலைந்து திரிகின்றோம். அவரே இதற்கு முக்கிய சாட்சியம் கூற வேண்டும். ஜனாதிபதியாக இவர் வந்தால் மீண்டும் எமது உறவுகள் காணாமலாக்கப்படலாம் .மீண்டும் ஒரு இன அழிப்பு உருவாகலாம் .அது மட்டுமன்றி எந்த அரசாங்கமும் பதவிக்கு வந்தால் யுத்த குற்றவாளிகள் என கூறப்படும் நபர்களை உயர்பதவிகளை வழங்கி அவர்களை அக்குற்றத்தில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாகவே எமக்கு ஐயப்பாடும் இருக்கிறது. எனவே இவ்வாறான யுத்த குற்றவாளிகள் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் தலையிட்டு எமது உறவுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.இந்த நாட்டில் சாதாரண குடிமகனுக்கு ஒரு சட்டமும் இனஅழிப்பு குற்றங்களை செய்தவர்களுக்கு இன்னொரு சட்டமும் இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் எந்த ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.எனவே சோகங்கள் ஒருபோதும் மறையப்போவதில்லை என்பதற்காகவே சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 30 திகதி வட கிழக்கில் பாரிய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் வர்த்தக சங்கங்கள் முச்சக்கர வண்டி சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டனர். #கோத்தாபய #காணாமல் ஆக்கப்பட்ட  #கல்முனை பாறுக் ஷிஹான்   http://globaltamilnews.net/2019/129487/