Sign in to follow this  
தமிழ் சிறி

சத்திரசிகிச்சையின் போது தொண்டையில் சிக்கிய செயற்கை பல் – மறதியால் நேர்ந்த அவலம்!

Recommended Posts

Posted (edited)

artificial-teeth-720x450.jpg

சத்திரசிகிச்சையின் போது தொண்டையில் சிக்கிய செயற்கை பல் – மறதியால் நேர்ந்த அவலம்!

சத்திரசிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுத்த 72 வயதான பிரித்தானியர் ஒருவர் தான் செயற்கை பல் அணிந்திருந்ததை மருத்துவர்களிடம் தெரிவிக்க மறந்தமையால் மீண்டும் ஒருமுறை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேர்ந்துள்ளது.

வயிற்றில் கட்டி ஒன்றை அகற்றுவதற்காக சந்திர சிகிச்சை செய்துகொண்ட குறித்த முதியவருக்கு ஆறு நாள்களுக்குப் பின்னர் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது.

வாயில் ரத்தம் வருவதாகவும், உணவை விழுங்கும்போது வலி ஏற்படுவதாகவும் உணவு உண்ண முடியாமல் அவதியுற்றதாகவும் தனக்கு சந்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடுமென நம்பிய மருத்துவர் அவருக்கு மருந்து கொடுத்து அனுப்பிவைத்தார்.

இரண்டு நாள்கள் கழிந்த பின்னர் மீண்டும் வலி பொறுக்க முடியாமலும், மூச்சுத் திணறல் காரணமாகவும் அவர் மருத்துவமனைக்குத் திரும்பினார் .

இம்முறை மருத்துவருக்கு சந்தேகம் ஏற்படவே, மூக்குத் துளை வழியாக நுண்ணிய கமராவை அனுப்பி பரிசோதனை செய்தார்.

மருத்துவர் சந்தேகப்பட்டது போன்றே குறித்த முதியவரின் தொண்டையில் செயற்கை பல் சிக்கி இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அரைவட்ட வடிவிலான தகடு ஒன்று, குரல்வளையில் சிக்கியிருந்ததை மருத்துவர் அவதானித்தார்.

வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்தபோது தனது செயற்கை பல் காணாமற்போனதை அவர் மருத்துவரிடம் தெரிவித்திருந்தார்.

செயற்கை பற்களைத் தாங்கிப் பிடிக்கும் மேல்தகடும், மூன்று முன்புற பற்களும் உடலுக்குள் சென்று சிக்கியிருப்பதை உணர்ந்தார்.

செயற்கை பல் அகற்றப்பட்டும் அதனால் ஏற்பட்ட காயங்களால் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறும் நிலை அவருக்கு ஏற்பட்டது.  ஆனால், இது மிக அரிதான சம்பவம் அல்ல என்று பிரித்தானிய மருத்துவ துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளில் இத்தகைய செயற்கை பல் விழுங்கப்பட்ட சம்பவங்கள் 83 முறை நடந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://athavannews.com/சத்திரசிகிச்சையின்-போது/

##############    ################   ############

அந்த முதியவர்.... 22 கரட்டிலை,  தங்கப் பல்  எல்லாம் பூட்டியிருந்ததை  பார்த்தும்,
வைத்தியர்களுக்கு...  அதனை செயற்கை பல் என்று கண்டு பிடிக்க முடியவில்லையா?

அதற்கிடையில்.... கிழவனுக்கு, ஆறு நாட்கள்  வரை பல்லு  காணாமல்  போனது தெரியாமல்...  சாப்பிட்டு இருக்கிறார். நல்ல கூத்தாக...  இருக்கு.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கூட்டமைப்பு யார்,, இந்தியாவின் நிகழ்சித்திட்டத்தை செயற்படுத்தும் அவர்களது கைக்கூலிகள் அவர்களது ஆயிரமாயிரம் வெளிவராத இரகசியங்கள் இந்தியாவிடம் இருக்கலாம் அதை வைத்து அவர்களை இந்தியா தங்களுக்குச் சாதகமான காரியத்தைச் சாதிக்கலாம். இந்தியாவைப் புறமொதுக்குதல் என்பது கூட்டமைப்பையும் சேர்த்தே புறமொதுக்குதல் என்பதாகும்.
    • தமிழர்களின் ஆதரவு இல்லாது அரசாங்கம் அமைக்க முயற்சி செய்யுங்கள் என்று இந்தியாவும் ஆலோசனை கொடுத்திருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. அந்த கிந்தியனின் கைப்பொம்மையாக இருந்து தன் இனத்தையே காவுகொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். தானும் அதற்குச் சார்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று அதற்குள் மூக்கை நுளைத்திருக்கிறது. கோத்தபாயாவுக்கு தமிழர்கள் மட்டுமல்ல அனேக சிங்கள மக்களும் வாக்களிக்கமாட்டார்கள் என்பது, இன்றும் சிங்களவரோடு பழகும் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை.
    • கொச்சியை  பற்றி நிறைய தகவல்கள்.....நன்றி கிருபன்.....!  👍
    • கூட்டமைப்பே இந்தியாவின் கைப்பொம்மையாக உள்ளது இதற்குள் இந்தியாவை புறந்தள்ளுதல் என்பது எப்படி நடக்கும்? 😀 நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், கூட்டமைப்பு சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொண்டால் இந்தியா தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச முன்வரலாம் என்று. சீனாவும் எம்மை அழித்த நாடு தான்.
    • அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் ,  இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் / அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் , இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் / உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் /  சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி /  இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா