Jump to content
ampanai

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய சரியான முடிவே என்கிறாா் சரத் பொன்சேகா

Recommended Posts

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தமை சரியான தீர்மானமே என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டினுள் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் எனவும், மற்றையவர் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட வேட்பாளராக தென்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222162/ஜனாதிபதி-வேட்பாளர்-கோட்டாபய-சரியான-முடிவே-என்கிறாா்-சரத்-பொன்சேகா

Share this post


Link to post
Share on other sites

பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் ஒருவரையே தெரிவுசெய்ய வேண்டும்

நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா வலியுறுத்தினார்.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இலங்கை பொதுஜன பெரமுனையின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருப்பது அவர்களுடைய சரியான முடிவு என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் வேட்பாளர் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னரிமை அளிப்பவராக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐ.தே.கவின் தலைவர் எடுக்கும் முடிவுக்குத் தான் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், இருந்தபோதும் பொருத்தமற்ற ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மனசாட்சி இடமளிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சகல விடயங்களையும் மறந்துவிட்டு தற்பொழுது ஜனாதிபதி வேட்பாளர் பற்றியே பலரும் கலந்துரையாடுகின்றனர். எனினும், நாட்டின் பாதுகாப்பு பற்றியே மக்களின் அதிகமான அக்கறையுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலை அடிப்படையாக வைத்து பொதுஜன பெரமுனை தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவுசெய்துள்ளது. அவர்களின் முடிவு சரியானதாக அமைந்துள்ளது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது இன்னமும் உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கப்படவில்லை. எனினும் ஒருவர் தன்னைத் தானே வேட்பாளர் எனக் கூறி வருகின்றார். இது குறித்து கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

 

 
 

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னர் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக வாக்களிக்க முன்னர் தொலைநோக்குப் பார்வையொன்று வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். அண்மைய நாட்களில் இரண்டு கூட்டங்களை நாம் பார்த்திருந்தோம். இதில் உரையாற்றிய இரு நபர்களும் ஏற்கனவே கடந்தகால தேர்தல்களில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகளையே முன்வைத்துள்ளனர்.

நாட்டை அபிவிருத்தி செய்வது என்பது ஒரேநாளில் செய்துவிடக் கூடிய விடயமல்ல. அது மாத்திரமன்றி வேட்பாளர்களாக இருப்பவர்களுக்கு ஒழுக்கமொன்று இருக்க வேண்டும். இந்த இரண்டு கூட்டங்களும் கலந்துகொண்ட பிரதான நபர்களின் ஆடைகளைப் பார்த்தாலே அவர்களின் ஒழுக்கம் புரியும். நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் மக்களுக்கு முன்னுதாரணமானவராக இருக்க வேண்டும்.

வீடுகளைக் கட்டுக்கொடுத்தார் என்பதற்காக அவரை ஜனாதிபதியாக்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கே அதிக பணம் செலவிடப்படுகிறது. அதனடிப்படையில் பார்த்தால் கல்வி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட வேண்டும். அபிவிருத்தியென்ற பெயரில் பொது மக்களின் பணம் விளம்பரங்களுக்காக செலவுசெய்யப்படுகிறது.

தந்தையைப் போன்று சேவை செய்யப்போவதாக ஒருவர் கூறுகின்றார். அவருடைய தந்தையின் காலத்திலேயே எல்.ரி.ரி.ஈயினருக்கு ஆயுதம் வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரை அனுப்புவதற்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டபோதும் பின்னர் அவற்றைப் பயன்படுத்தியே எல்.ரி.ரி.ஈயினர் எம்முடன் யுத்தம் புரிந்தனர். அவருடைய தந்தையே 600 பொலிஸாரை எல்.ரி.ரி.ஈயினரிடம் சரணமடையுமாறு ஆலோசனை வழங்கினார். அவ்வாறு சரணடைந்த பொலிஸாரைக் கொன்றுகுவித்த கருணா அம்மான், கோட்டாபய ராஜபக்‌ஷவின் மேடையில் முன்வரிசையில் அமர்ந்துள்ளார். தந்தை செய்ததை தானும் செய்யப்போனால் அது மோசமானதாக அமைந்துவிடும்.

பாதுகாப்புத் தொடர்பில் அனுபவம் வாய்ந்த ஒருவராக நான் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றேன்.

கட்சித் தலைமை என்னை வேட்பாளராகத் தீர்மானிக்குமாயின் அதனை ஏற்றுக் கொள்ளவும் தயாராகவிருக்கின்றேன். எதுவாகவிருந்தாலும் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு ஆதரவளிக்குமளவுக்கு தான் வங்குரோத்து நிலைக்கு வரவில்லையென்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

https://www.thinakaran.lk/2019/08/14/உள்நாடு/38686/பாதுகாப்புக்கு-முன்னுரிமை-வழங்கும்-ஒருவரையே-தெரிவுசெய்ய-வேண்டும்

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, ampanai said:

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இலங்கை பொதுஜன பெரமுனையின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருப்பது அவர்களுடைய சரியான முடிவு என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் வேட்பாளர் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னரிமை அளிப்பவராக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கை அப்பிடி இங்கை இப்பிடி என்டு கொலைகாரர்கள் கொலைக்குற்றங்களில் இருந்து தப்ப ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு போகவேண்டிய நிர்பந்தம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எதிரிணியின் வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐ.தே.க வேட்பாளரை தீர்மானிக்காது - சஜித் 

எதிரிணி ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை தீர்மானிக்காது. மாறாக நிலையான கொள்கை மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களை மையப்படுத்தியே எமது தெரிவு அமையும் என கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரவித்தார். 

sajithi.jpg

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.  இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த போதே அமைச்சர்  சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.  

கேள்வி : பாராளுமன்ற  உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளாரே ? 

பதில் : எமது நாட்டில் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும் நிலைப்பாடுகளை  வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் உள்ளது. ஜனநாயக முறைமையில்  தனக்கு நம்பிக்கையான நிலைப்பாட்டில் இருப்பதற்கான உரிமையும் சகலருக்கும் உள்ளது. 

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலானவர்கள் உங்களை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும்  என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். இவ்வாறானவொரு நிலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏன் உங்களை வேட்பாளராக களமிறக்க ஆதரவு வழங்க மறுத்து வருகிறார்கள்? 

பதில் : உண்மை என்றாவது வெல்லும். 

கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சி அடையாளம் காண்டுள்ளதா? 

பதில் : அது தொடர்பான சகல விடயங்களும்  எதிர்காலத்தில் வெளியாகும். 

கேள்வி : உங்களை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு இடமளிக்கா விட்டால் தனித்து செயற்படுவோம் என்றே நிலைப்பாட்டிலேயே கட்சியில்  அனேகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ? 

பதில் : நான் எதனையும் எதிர்மறையாக சிந்தித்து செயற்பட விரும்புவதில்லை. நேர்மையானமுறையில் செயற்பட்டு எதிர்காலத்தை நோக்கி  பயணிப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.  நேர்மறையான சிந்தனைகளை  முறையாக  கடைப்பிடிகப்பவனாக இருந்து வருகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/62623

Share this post


Link to post
Share on other sites

அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா

 

sarath-fonseka-300x200.jpg

ஐக்கிய தேசியக் கட்சி  தலைமையிலான கூட்டணியினால், தனது  பெயர் முன்மொழியப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜேவிபி போன்ற மற்றொரு கட்சியிலிருந்து வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்தக் கட்சியில் தான் உறுப்பினராக இல்லை என்றும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.

“பொதுஜன பெரமுன தனது அதிபர் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை, சரியாகவே தெரிவு செய்துள்ளது.

மக்கள் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுன அதில் கவனம் செலுத்தியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச அடுத்த அதிபராக வருவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று நான் கூறவில்லை, ஆனால் மக்களின் மனதைப் புரிந்து கொண்டு, பொதுஜன பெரமுன சரியான தேர்வைச் செய்துள்ளது.

அண்மையில் நடந்த பேரணிகளில், அதிபர் பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாக இரண்டு பேர் கூறினர்.

ஒருவர் தனது தந்தையின் பெயரை தேர்தல் மேடையில் பயன்படுத்த முயற்சிக்கிறார்.  உண்மை என்னவென்றால், அவரது தந்தை கொடுத்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே, புலிகள் சிறிலங்கா இராணுவத்தைத் தாக்கினர்.

600 காவல்துறை அதிகாரிகளை விடுதலைப் புலிகளிடம் மற்றும் கருணாவிடம் சரணடைய உத்தரவிட்டது அவரது தந்தை தான்.

அந்த காவல்துறை அதிகாரிகளை கொன்றவர் மற்ற அரசியல் முகாமில், ஒரு மலர் மொட்டை கையில் ஏந்தியபடி இருந்தார்.

ஐதேக கூட்டணியின் அதிபர் வேட்பாளராக, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டால், கட்சியின் அந்த முடிவுக்கு இணங்குவேன். நான் ஒரு ஒழுக்கமான நபர், கட்சி மற்றும் அதன் தலைவரின் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன். ”என்றும் அவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/08/14/news/39547

Share this post


Link to post
Share on other sites

பொன்சேகாவின் கருத்துக்கு சஜித் பதில்

 

c4352d9ba14884488387fd90223faaf7_L

நாட்டில் இருக்கும் ஜனநாயக முறைமை காரணமாக எந்தவொரு நபருக்கும் எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் கிராமமட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் இதன்போது அனைத்து அமைப்புக்களையும் ஒன்றினைத்து அதற்கான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

http://www.dailyceylon.com/187878/

Share this post


Link to post
Share on other sites
On 8/14/2019 at 8:37 AM, Rajesh said:

அங்கை அப்பிடி இங்கை இப்பிடி என்டு கொலைகாரர்கள் கொலைக்குற்றங்களில் இருந்து தப்ப ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு போகவேண்டிய நிர்பந்தம்.

 

2 hours ago, nunavilan said:

அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா

 

 

37 minutes ago, nunavilan said:

பொன்சேகாவின் கருத்துக்கு சஜித் பதில்

 Ãhnliches Foto Bildergebnis für fonseka in velikada jail

சரத் பொன்சேகா....  ஏன், "சேம்  சைட் கோல்" அடிக்கின்றார்?
அவர்... சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளாராக வருவதை,  ஏன் விரும்பவில்லை?

பொன்சேகா... போட்டியிட்டால், வெல்லலாம் என்று, 
அவரை...  "பப்பா  மரத்தில், ஏற்றி  விட்டது  யார்".?

அவரை... கக்கூஸ் வாளியுடன், வெலிக்கடை சிறையில் எடுத்த படங்கள் வந்தபின்பும்....
சிங்கள மக்கள் அவருக்கு வாக்குபி போட்டு, ஜனாதிபதி ஆக்குவார்களா? :grin:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

அவரை... கக்கூஸ் வாளியுடன், வெலிக்கடை சிறையில் எடுத்த படங்கள் வந்தபின்பும்....
சிங்கள மக்கள் அவருக்கு வாக்குபி போட்டு, ஜனாதிபதி ஆக்குவார்களா? :grin:

நெல்சன் மண்டேலாவும் தானே சிறையில் இருந்தவர் ?

Image result for nelson mandela in jail

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, ampanai said:

நெல்சன் மண்டேலாவும் தானே சிறையில் இருந்தவர் ?

Image result for nelson mandela in jail

ஒரு இனத்தைக் கருவறுக்கத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை, தனது மக்கள் விடுதலைபெற்று வாழ்வதற்காக சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவது மிக மிகத் தவறானது அம்பனை அவர்களே.! 😭

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, Paanch said:

ஒரு இனத்தைக் கருவறுக்கத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை, தனது மக்கள் விடுதலைபெற்று வாழ்வதற்காக சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவது மிக மிகத் தவறானது அம்பனை அவர்களே.! 😭

சிங்களவர்களுக்கு சரத் பொன்சேகா கதாநாயகன் தானே?

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, Paanch said:

ஒரு இனத்தைக் கருவறுக்கத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை, தனது மக்கள் விடுதலைபெற்று வாழ்வதற்காக சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவது மிக மிகத் தவறானது அம்பனை அவர்களே.! 😭

ஒரு தமிழனாக நான் உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன். நெல்சன் மண்டேலா, காந்தி போன்றவர்கள் மிகப்பெரிய அகிம்சை போராளிகள். அவர்கள் போராடியதும் மனிதம் கொண்ட அடக்குமுறையாளரகளுக்கு  எதிராக. எமது இனத்தை அழிப்பவர்களை அப்படி பார்க்க முடியவில்லை. காரணம், அவர்கள் அவ்வாறானவர்களாக இருந்திருந்தால் தந்தை செல்வா அந்த காந்தி, மண்டேலா பட்டியலில் இடம்  பிடித்திருப்பார்.

ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் பொன்சேகா, கோத்தபாய, மகிந்தா ஆகியோர் 'வீரர்களாக'  பார்க்கப்படுகிறார்கள். அதற்கு பெரும்பான்மை சிங்கள தலைவர்களும் புத்தகுருமாரும் புத்தி சீவிகளும் ஆதரவு  தருகிறார்கள். என்ன செய்யலாம்? 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...